Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிப்பிக்குள் முத்து(புதைக்கப்பட்ட என் காதல்)-7


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
சிப்பிக்குள் முத்து(புதைக்கப்பட்ட என் காதல்)-7
Permalink   
 




ஷாம் பெர்னாண்டஸ் -ஹ , அப்படி யாரையும் எனக்கு தெரியாதே என்றான் டேவிட்.

அய்யோ வெளங்கிடும்..... சுத்தமா மறந்திட்டிங்களா ....நீங்க தானே நான் தொலைந்தது என்று நினைத்த என் பாஸ்போட்டை எல்லாம் கொரியரில் அனுப்பியது என்று கேட்டான் ஷாம் .

ஓஹ ! சாரி இப்ப தான் நியாபகம் வருது, கொரியர் வந்துடுச்சிங்களா என்று கேட்டான் டேவிட்.

என்னங்க! காமெடி பன்றிங்களா , கொரியர் வந்து சேர்ந்த பிறகு தான் உங்களுக்கு கால் செய்தேன் என்றான் ஷாம்.

ஓகே ஓகே என்று ஒரு வித தயக்கத்தோடு , என் மொபைல் எண் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்டான் டேவிட்.

என்னங்க தூங்கிட்டு இருக்கிங்களா, சொல்லுங்க வேணும்னா நான் பிறகு பேசுகிறேன், அதற்கு முன் , இவ்வளவு பெரிய உதவி செய்ததற்கு மிகவும் நன்றி. அதோடு நீங்கள் என் பாஸ்போர்ட் கொரியர் அனுப்பிய கவரில் உங்கள் மொபைல் எண்ணையும் எழுதி இருந்திர்கள் என்று கொஞ்சம் சத்தமான குரலில் சொன்னான் ஷாம். இப்படி பேசும் போது ஷாமின் குரலில் ஒரு தயக்கம், நட்பு, கொஞ்சம் வெறுப்பும் தெரிந்தது.

ஷாம் அனைத்தையும் சொன்ன பிறகு தான், டேவிட்டிற்கு உண்மை புரிந்தது. ழாய்னு கொரியர் கவரில் தனது மொபைல் எண்ணையும் எழுதி அனுப்பி இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டான் டேவிட்.
சாரி !! என்னை மன்னிக்கவும் கொஞ்சம் "மிஸ் அண்டெர்ஸ் ஸ்டான்டிங் "  ஆயிடிச்சி என்றான் டேவிட்.

அதற்கு ஷாம் கொஞ்சம் இல்லைங்க , அதிகமாகவே "மிஸ் அண்டெர்ஸ் ஸ்டான்டிங் "  ஆகிவிட்டது என்று சொல்லி சிரித்தான் . டேவிட்டும் பதிலுக்கு ஒரு புன்னகையை உதித்தான்.

இனி நாம் நல்ல நண்பர்களாக இருப்போம் என்று ,சொன்னான் டேவிட் . இதில் எந்த ஒரு உள் அர்த்தமும் இல்லாமல் தான் சொன்னான் டேவிட்.

அது என்ன நல்ல நண்பர்கள், நண்பர்கள் என்றாலே நல்லவர்கள் தான் என்று சொல்லி சிரித்தான் ஷாம். அப்போது டேவிட், அய்யோ இந்த மாதிரி மொக்க ஜோக் எல்லாம் போடுரான்னே, டேய்!! ழாய்னு நம்பர் கொடுத்த உன்னை வந்து உதைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே, ஷாமை மனதுக்குள் திட்டிக்கொண்டான்.

சரிங்க, நானே பேசிட்டு இருக்கேன், முதலில் என்னை பற்றி சொல்லிவிடுகிறேன். என் பெயர் "ஷாம் பெர்னாண்டஸ்".27 வயதே ஆன சென்னை மன்மதன். என்ன நானே என்னை மன்மதன்னு சொல்லிகிறேன்னு பாக்குறிங்கள, யாரும் சொல்ல மாட்டேங்குறாங்க அதான் நானே சொல்லிக்கிறேன் என்று ஷாம்  சொல்லும் போது  , தன்னையே அறியாமல் உரக்க சிரித்தான் டேவிட். அப்புறம் IT -ல வொர்க் பண்றேன், family அம்மா நான் மட்டும் தான். அம்மாவிற்கு வயது 45.அளவான குடும்பம். அம்மா பற்றி சொல்ல வேண்டும் என்றால் பெரிய கதையே இருக்கு. அதையெல்லாம் விடுத்து ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் , அம்மா ஒரு சமூக சேவகி.பெண் உரிமை, மனித உரிமைகள் என்று போராடுபவர். அம்மாவின் மன நிறைவிற்காக , அம்மா ஒரு முதியோர் இல்லம் வைத்து நடத்துகிறார். இது தான் நான், என் குடும்பம் என்று சொல்லி அமைதி ஆனான் ஷாம்.

சரிங்க ரொம்ப பேசி பேசி  மூச்சி வாங்குது, போய் தண்ணீர் எடுத்து குடிங்க, என்று சொல்லி சிரித்தான் டேவிட்.

ஏங்க! நான் எவ்ளோ சுவாரசியமா ரசிச்சி ரசிச்சி சொல்றேன் , நீங்க என்னை கலாய்கிரிங்களா என்று அப்பாவியாய் கேட்டான் ஷாம்.

சும்மா சொன்னேன், நீங்க ரொம்ப நல்லா பேசுறிங்க, என்றான் டேவிட்.

ஆமாம் முதலில் எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள், பிறகு அவர்கள் நம்மை காயப்படுத்திவிட்டு தான் சொல்கிறார்கள், சரி அதை விடுங்க, உங்களுடன் பேசும் இந்த நிமிடம் தான் கொஞ்சம் மனம் லேசானது என்று சொல்லும் போது அவன் குரலில் ஏதோ வெறுமை தோன்றியது. அப்புறம் உங்களை பற்றி சொல்லவே இல்லையே என்று பழைய நிலைமைக்கு திரும்பினான் ஷாம்.

என்னை பற்றி சொல்ல பெரிதாய் ஒன்றும் இல்லை, என் பெயர் டேவிட்.  வயது 21. BE இரண்டாமாண்டு படிக்கிறேன் , ஊர் தூத்துக்குடி . அப்பா, அம்மா, அண்ணன், அக்கா , கடைசி நான் தான் . இது தான் நானும் என் குடும்பமும் என்றான் டேவிட்.

ஓஹ ! நீங்க தூத்துக்குடி "முத்தா" என்று கேட்டான் ஷாம், அதற்கு டேவிட் சொன்னான், நீங்க நல்ல பேசவும் செய்கிறிர்கள், நல்லா காமெடியும் பண்றிங்க என்று சொல்லி சிரித்தான்.

ஹலோ பாஸ், நான் ரொம்ப அமைதியானவன்னும் சொல்ல முடியாது, அதிகம் பேசுவேன் என்றும் சொல்ல முடியாது. நண்பர்களிடம் மட்டும் தான் நான் பேசுவேனே, அதுவும் ரொம்ப நாள் தெரிந்த நண்பர்களிடம் மட்டுமே பேசுவேன். ஆனால் உன்னிடம் மட்டும், எனக்கே தெரியாமல் ஒரு பிணைப்பு ஏற்பட்டு இருப்பது, அதுவும் முதல் பேச்சிலேயே என்று நினைக்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது என்று சொல்லி, தன்  மனதில் இருந்த உணர்சிகளை கொட்டினான் ஷாம்.

அதன் பிறகு ஷாமும், டேவிட்டும் வெகு நேரம் பேசிக்கொண்டனர். இருவரும் தங்களுக்கு பிடித்தது, பிடிக்காதது இப்படி பல பரிமாணங்களில் இருவரின்  உரையாடலும் இருந்தது. இருவர் பேச்சிலும் அதிகம் இருந்தது "அதுக்கப்புறம்" "THEN " என்ற இந்த ஒரு வார்த்தை தான் அதிகம் இருந்தது. இது காதலர்கள் பேசும் வார்த்தை என்பது இருவருக்கும் புரிந்தது ஒரு தயக்கமும், ஒரு நெருடலும், ஒரு எதிர்பார்ப்பும்  "அதுக்கப்புறம்" "THEN " என்ற வார்த்தையில் இருந்தது ஷாம், டேவிட் இருவருமே உணர்ந்தனர். ஒரு வழியாக இருவரின் உரையாடலும் நல்ல நண்பர்கள் என்ற புரிதலோடு அழைப்பை துண்டித்தனர்.

கடல் அலை கரையை வந்தடைவது போல், டேவிட் ழாய்னுவை தேடி வந்தான். ழாய்னு அவன் அறையில் அமர்ந்திருந்தான், ஓடி வந்து ழாய்னுவை கட்டிப்பிடித்து, "THANK U " என்றான் டேவிட். நடந்தது ஒன்றும்  தெரியாமல் எதுக்குடா என்று கேட்டான் ழாய்னு .

ஷாம் பெர்னாண்டஸ் என்னிடம் பேசினார் என்றான் டேவிட். ஷாம் பெர்னாண்டஸ் யார் என்பதை புரிந்து கொண்ட ழாய்னு , "பேசினார்.... பேசினார் " அது என்ன பேசினார், அவருக்கு என்ன அவ்வளவு மரியாதை என்றான் ழாய்னு .

ழாய்னு கேட்டதும், குழந்தை போல் குழைந்தான் டேவிட். பின் ரொம்ப நல்ல டைப் , ரொம்ப பிரெண்ட்லி என்று விளக்கம் தந்தான் டேவிட். 

ஓகே ஓகே என் நண்பன் டேவிட் ஒருவனுக்கு நல்லவன் என்று சான்றிதழ் தருகிறான் என்றால் அவன் உண்மையிலேயே நல்லவனாக தான் இருப்பான். ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை, யாரையுமே நம்பாமல் எடுத்தெறிந்து பேசும் நீ, இவனை மட்டும் புகழ்கிராயே எப்படி என்று கேட்டான் ழாய்னு .

அது தான் எப்படின்னு எனக்கே தெரியலை ழாய்னு . ஆனால் , ஒன்று மட்டும் சொல்ல வேண்டும் , எதற்கு எனக்கு இப்படி தோன்றுகிறது என்று கூட  தெரியவில்லை, நான் இப்போது மிகவும் சந்தோஷமாக ,, சந்தோஷத்தின் உச்சியிலேயே இருப்பது போல் உணர்கிறேன் என்று சொல்லி தன்  இரு பக்க புஜங்களையும் குலுக்கினான் டேவிட்.
ரொம்ப சந்தோஷம் டேவிட் உனக்கும் ஒரு நல்ல காதலன் கிடைத்தான் என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம் என்றான் ழாய்னு . டேய்! ழாய்னு அவன் நல்ல நண்பன் அவ்வளவு தான் , நீ பெரிதாய் ஏதும் கற்பனை செய்யாதே, அவன் ஓரினசேர்க்கை  உடையவனாக இருப்பானா  என்று கூட தெரியாது என்று சொல்லி அந்த பேச்சை அப்படியே முடித்தனர் .

சக்தி, ழாய்னுவின் காதல் நன்றாக போய்க் கொண்டு இருந்தது. காதலர்களுக்குள் இருக்கும் சண்டை அடிக்கடி வருவதும், சமாதானம் ஆவதும் என்று நன்றாகவே போய்க் கொண்டு இருந்தது. இவர்களுக்குள் ஏற்படும் சண்டையில் தவறு ழாய்னு மேல் இருந்தாலும் , சமாதானம், விட்டுக்கொடுத்தல் என்று வந்தால், அது சக்தியிடம் மட்டுமே இருந்தது. ழாய்னுவிற்கு சக்தி மேல் இருந்த காதல் அதிகமாகிக் கொண்டே இருந்தது.  சக்தி மேல் உள்ள காதலால் எதையும் விட்டுக்கொடுக்க ழாய்னு தயாராக இல்லை. ஒரு முறை டேவிட்டிடம் அதிகப்படியான காமம், நிச்சயம் மன உளைச்சலைத் தான் தரும் என்று பேசிய ழாய்னுவிற்கு , ஒருவர் மீது அதிகப்படியான , தன்  மனக்கட்டுப்பாட்டை மீறிய காதலும் மன உளைச்சலை தரும் என்பதை ழாய்னு அறிந்திருக்கவில்லை.

மறுபுறம் டேவிட்டும், ஷாமும் இருவரின் நட்பையும் பலப்படுத்திக்கொண்டனர். ஒரு நாள் மாலை கல்லூரியில் இருந்து வந்ததும் , மொபைலை எடுத்து, ஷாமிற்கு குறுஞ்செய்தி அனுப்பினான், அது......
gud eve ..... என்று அனுப்பினான். அதற்கு பதில்  அனுப்பினான்......
ge .......... அதற்கு பதிலாக டேவிட் அனுப்பினான்
so  sad ... அதற்க்கு ஷாம் அனுப்பினான்..........
அய்யோ தப்பா நினைக்காதிங்க நான் gud eve தான் ஷாட்டா  அனுப்பினேன் என்று சொல்லி சாரி கேட்டான்.
டேவிட் ஒன்றும் புரியாமல், gud eve ஷாட்டா அனுப்பியதற்கு இவரு எதற்கு சாரி கேட்கிறார் என்று யோசித்துக்கொண்டே , ஷாம் அனுப்பிய குறுஞ்செய்தியை மறுமுறை பார்த்தான், gud eve இதை  அவன் ge என்று அனுப்பி இருந்தான். ge என்றால் "கே ", இப்போது தான் டேவிட்டிற்கு புரிந்தது அதன் உள் அர்த்தம். மனதுக்குள்ளும், வாய்விட்டும் , கத்தியும் சிரித்தான் டேவிட். இந்த சிரிப்பு எதற்கு என்று டேவிட் தனக்குள் கேட்டுக்கொண்டான், அதன் விடை வெறும் வெறுமையே மிஞ்சியது.

மொபைலில் ஷாம், டேவிட் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது, டேவிட் தனக்கு பிடித்த இடம், தான் சந்தோஷமாக இருக்கும் போதும், கொஞ்சம் கவலை இருக்கும் போதும் சாந்தோம் சர்ச் போவேன் என்று சொன்னான். அடுத்த நிமிடமே வரும் சண்டே நாம் இருவரும் சாந்தோம் சர்ச் போகிறோம் என்றான் ஷாம்.காற்றில் பேசிய உரையாடல்களை சேர்த்து வைத்து நேரில் பேச தயாரானான் டேவிட்.

டேவிட் ழாய்னுவிடம் வந்து வரும் சண்டே , ஷாமை சந்திக்க போவதாகவும், நீ வர வேண்டும் என்று சொன்னான். அதற்கு ழாய்னு , சாரி டேவிட் அன்று தான், நான் முதல் முறையாய் சக்தியின் வீட்டிற்கு செல்லப் போகிறேன் என்றான். சரி விடு, நல்லபடியாய் போய் விட்டு வா என்றான் டேவிட். இருவரும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

மறுநாள் சண்டே காலை 8 மணி, சக்தி தன் பைக்கில் காலேஜ் வாசலிற்கே  வந்து ழாய்னுவை அழைத்துப் போனான். டேவிட்டை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு தன் வீடு நோக்கி ழாய்னுவை அழைத்துக்கொண்டு பயணித்தான் சக்தி.
வீட்டின் உள்ளே சென்றதும் , சக்தி தன்  அம்மாவிற்கு ழாய்னுவை அறிமுகப்படுத்தி வைத்தான்.ழாய்னுவும் "வணக்கம்" அம்மா என்றான். சக்தி நிலாவை அழைத்து வந்து ழாய்னுவிடம் அறிமுகப்படுத்தினான். நிலாவை பார்த்ததும் குழந்தையாய் மாறிப்போனான். நிலாவை தூக்கி கொஞ்சுவதும், முத்தமிடவதும், இனி உன் அப்பா உனக்கு எப்படியோ அப்படியே நானும் என்று சில இடங்களில் தன்  உணர்வுகளையும் , நிலாவிடம் கொட்டினான்.

நிலாவும் வெகு சீக்கிரத்தில் ழாய்னுவிடம் இணைந்து விட்டாள் . அப்போது சக்தியின் அம்மா நிலாவை அழைத்துக்கொண்டு பக்கத்து தெருவிற்கு சென்றிருந்தால். அப்போது இருவரும் மனம் விட்டு பேசிக்கொண்டு இருந்தனர் . ழாய்னு சொன்னான், கடைசி வரை உன்னோடும், நிலாவோடும் கடைசி வரை நான் வாழவேண்டும் என்ற ஆசை எனக்கு இப்போது அதிகமாய் இருக்கிறது என்றான். கண்டிப்பாக அது நடக்கும் என்று சொல்லி ழாய்னுவின் கைகளை இறுக்கமாக பிடித்து , ழாய்ணுவின் கரங்களில் இதழ் பதித்தான் . சட்டென்று ழாய்னுவின் கரங்களை விட்டுவிட்டான் சக்தி , சக்தி தன் கையை விட்டதின் காரணத்தை ழாய்னு புரிந்து கொண்டான். ஆம் நான் எதாவது தவறாக நினைத்துக் கொள்வேனோ என்ற அச்சத்தில் தான் இருக்கிறான் என்பதை உணர்ந்தான் ழாய்னு .
ழாய்னு நடக்கும் போது பெட்டில் இடித்துக் கொண்டான். அதனால் அவன் கால் சுண்டு விரலில் கொஞ்சம் ரத்தம் கசிந்தது. அதற்கே துடித்துப் போனான் சக்தி. சக்தி தனக்காக துடிப்பதை பார்க்கும் போது , இன்னும் பெரிதாய் கூட அடிப்பட்டு இருக்கலாமே என்று நினைத்தான்.

1.jpg

 

ழாய்னுவின் காலில் ரத்தம் நின்றிருந்தது, ஆனால் வலி மட்டும் அவன் முகத்தில் இருப்பதை உணர்ந்த சக்தி, ரத்தம் வந்த காலில் தன்  இதழ் பதித்தான் சக்தி. இதை சற்றும் எதிர்  பார்க்காத ழாய்னு சிலாகித்து போனான். மறுபடியும் ழாய்னு என்ன நினைப்பானோ என்ற தயக்கத்தில் சக்தி இருந்தான். அதை புரிந்து கொண்ட ழாய்னு , தன்  மொபைலில் இருந்து சக்திக்கு கால் செய்தான், அது ஒலித்தது , "உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே........ஒரு பூ எடுத்து ஒரு மாலை இடு........" சக்தி சிரித்துக்கொண்டே ழாய்னுவின் சம்மதத்தை உணர்ந்து, அப்படியே ழாய்னுவின் மீது படர்ந்தான். இங்கு காதல் தோற்க்கவும் இல்லை, காமம் ஜெயிக்கவும் இல்லை. இரண்டும் சங்கமம் ஆனது இருவராலும்.எல்லாம் முடிந்து இருவரும் குளித்து முடித்து வெளியில் வந்தனர். அப்போது சக்தியின் மொபைல் ஒலித்தது.

நடக்கப் போகும் விபரித்தத்தை அறியாமல், சக்தி, தன்னுடைய மொபைலை ழாய்னுவை எடுக்கச் சொன்னான். சக்திக்கு வந்திருந்த அழைப்பை பார்த்ததும் ழாய்னு , சக்தியை எரித்துவிடுவது போல் பார்த்து முறைத்துவிட்டு, ஏதும் பேசாமல் ,சக்தியின் வீட்டில் இருந்து , சக்தி பேசுவதை  கூட காது கொடுத்து கேட்காமல், கிளம்பினான் ழாய்னு .

சாந்தோம் சர்ச்சில் ஷாமிற்காக காத்துக்கொண்டு இருந்தான் டேவிட். காலை 11 மணி அளவில், ஷாம் காரில் வந்து இறங்கினான். ஷாமை பார்த்ததும் ஒரு நிமிடம் பிரமித்து போனான் டேவிட். ஆம் , "உன்னை வெள்ளாவி வெச்சி தான் வெளுத்தாங்கள, இல்ல வெயிலுக்கே காட்டமா வளத்தாங்கள" என்று தனுஷ் பாடியது போல், சுண்டினால் ரத்தம் வரும் என்பார்களே அப்படி ஒரு நிறம், அவன், உடை, நடை இதில் எல்லாம் பணக்கார பையன் என்பதை எழுதி ஒட்டி இருந்தது. அவனை பார்த்ததுமே தன்னுடைய ஓட்டு வீடும், விவசாய அப்பா, கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கும் அண்ணன், அம்மா, அக்கா , அதோடு  தான் பேங்கில் education லோனில் படிப்பது எல்லாம் கண் முன் வந்து நிழலாடியது. அது ஏன் என்றும் டேவிட்டிற்கு தெரியவில்லை.

எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல், ஷாம் டேவிட்டின் பக்கத்தில் வந்து , டேவிட்டிற்கு கை கொடுத்தான். டேவிட்டின் தோளில் கை போட்டுக்கொண்டே சர்ச்சின் உள்ளே நுழைந்தான்.அங்கு ஷாம் மட்டுமே பிரேயர் செய்தான். டேவிட்டால் பிரேயர் செய்ய முடியவில்லை. மணிக்கு ஒருமுறை ஷாமையே பார்த்துக்கொண்டு இருந்தான். டேவிட் தன்னையே பார்ப்பதை ஷாமும் பார்த்தான். ஆனால் அதை பார்க்காதது போலவே காட்டிக்கொண்டான்.

மதியம் 1 மணி ஆனது, இருவரும் சர்ச்சில் இருந்து வெளியில் வந்தனர். என்ன டேவிட் , மொபைலில் நன்றாக பேசினீர்கள், ஆனால் நேரில் நாம் பார்த்து 2 மணி நேரம் ஆகிறது ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று கேட்டான் ஷாம். அதற்கும் அமைதியாகவே இருந்தான் டேவிட். ஏன் என்னை பிடிக்கலையா ? என்று கேட்டான் ஷாம்.

என்ன காமெடி பன்றிங்களா , நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, கொஞ்சம் தயக்கத்தோடு சொன்னான், நீங்க பணக்காரரா இருக்கீங்க உங்களுடைய நட்பு எனக்கு சரி வருமா என்று தான் யோசிக்கிறேன் என்றான் டேவிட்.

ஷாம் இதை கேட்டு சிரித்து விட்டு, யெஹ்! டேவிட் அப்படியெல்லாம் நினைக்காதே, எனக்கு உன்னுடைய இந்த மாநிறம், உன் வயதிற்கும் உன் உயரத்திற்கும் ஏற்ற இந்த டேவிட்டை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. என்ன ஒரு வருத்தம் நீ இன்னும் கொஞ்சம் கருப்பா இருந்திருந்தா எனக்கு இன்னும் ரொம்ப பிடிச்சிருக்கும் என்று சொல்லி சிரித்தான்.
இப்போது தான் டேவிட்டின் முகத்திலும் சிரிப்பு வந்தது. ஆமாம் டேவிட், கருப்பா இருக்கிறவர்களுக்கு சிவப்பா இருக்குறவங்களையும், சிவப்பா  இருக்கிறவர்களுக்கு கருப்ப  இருக்குறவங்களையும், பிடிக்கிறது தானே இயற்கை என்று சொல்லி சிரித்தான். இப்படி பேசியதும், எந்த ஒரு பந்தாவும், தற்பெருமையும் இல்லாமல் ஷாம் நடந்து கொள்வதை பார்த்து இன்னும் உருகிப்போனான் டேவிட்.

மதிய உணவிற்காக ஹோட்டல் தேடிச் சென்றனர் இருவரும். அப்போது ஷாம் டேவிட்டிடம், இந்த முறை ஒரு சின்ன ஹோட்டலுக்கே போகலாம். அப்போது தான் நீ தயக்கம் ஏதும் இல்லாமல் சகஜமாய் இருப்பாய் என்றான் ஷாம். ஷாமின் தன்னை பற்றிய புரிதலை உணர்ந்த படியே தலையசைத்தான் டேவிட்.  ஒரு சாதாரண ஹோட்டலின் உள்ளே நுழைந்தனர். இருவரும் எதிர் எதிர் சீட்டில் அமர்ந்தனர். எதாவது பேசு டேவிட் என்றான் ஷாம். டேவிட் தயங்கியவாறே, நீங்க எப்படி இவ்வளவு கலரா இருக்கீங்க, நீங்க தமிழா என்றான். ஷாம் சிரித்துக்கொண்டே நான் "கேரளா பையன்" பாலக்காடு என்றான்.

ஓஹ !! எனக்கு கதகளி எப்ப ஆடிக் காட்டுவிங்க என்று கேட்டான் டேவிட். அப்போது  ஷாமின் முகம் மாறியது, அவன் கோபமாய் இருக்கிறான் என்பது மட்டும் ஷாமின் கண்களில் தெரிந்தது. டேவிட் சூழ்நிலையை புரிந்து கொண்டு என்ன தலை ஏதாவது வலிக்குதா ஷாம் என்று கேட்டான்.

டேவிட் பேசும் எதையும் காதில் வாங்காமல் ஓடிச்சென்று தன் எதிர்புற சீட்டில் அமர்ந்திருந்த ஒருவனை இழுத்து போட்டு தன்  வெறிக்கும் அடித்தான் ஷாம். அடி வாங்குபவனோ எதுவும் பேசாமல் , கையை தடுத்தவாறே அடி வாங்கிக் கொண்டு இருந்தான்.டேவிட் ஒன்று புரியாமல் ஓடிச்சென்று ஷாமை தடுத்தான், இதான் சமயம் என்று அடி வாங்கிய வலியோடு, அழுதுக்கொண்டே அந்த இடத்தை விட்டு ஓடினான் அடி வாங்கிய வாலிபன்.
2.jpg

ஷாமை அழைத்து வந்து சீட்டில் உட்கார வைத்தான் டேவிட் .சிறிது நேரம் அமைதியாய் இருந்துவிட்டு அவன் யார்? அவனை எதற்கு அப்படி ஒரு வெறியோடு தாக்கினீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டான் டேவிட். டேவிட் இவ்வளவு பக்குவமாய் கேட்பதற்கே , நம் மனதிற்குள் உள்ள குமுறல்களை டேவிட்டிடம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தான் ஷாம்.

அவன் பெயர் கார்த்திக். ஒரு வழியில் பார்த்தால் அவனால் தான் எனக்கு உன்னை தெரியும். அவன் தான் என்னுடைய "புதைக்கப்பட்ட என் காதல்". இவ்வளவு நாள் உன்னிடம் நான் சொல்லாத விஷயம். இவன் தான் நான் காதலித்தது.  இவனை போன்றவர்களால் ஒரு சமூகத்திற்கே கலங்கம் ஏற்படுகிறது. ஆம் இது எஎன்னுடைய "புதைக்கப்பட்ட என் காதல்".

ஷாம் ஒரு கே என்பதை மட்டும் தெரிந்து கொண்டான் டேவிட் . திரும்ப திரும்ப என்னுடைய "புதைக்கப்பட்ட என் காதல்".என்று சொல்லிக்கொண்டு இருந்த ஷாமையே ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தான் டேவிட்.

(தொடரும்)



Attachments
__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: சிப்பிக்குள் முத்து(புதைக்கப்பட்ட என் காதல்)-7
Permalink   
 


Wow..! Superb..! Simply awesome..!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u BUTTERFLY



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

புதைக்கப்பட்ட என் காதல்...படிக்க சந்தோஷமா இருக்கு நரேஷ்...கதைக்கு அந்த படங்கள் ரொம்ப பொருத்தமாக...நன்றாக இருக்கு...nice twist in the end...waiting nareshji...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u samram



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
Permalink   
 

Nare superb! Manathing yeannagalaiyum unarchigalaiyum apadiyea thathrubamaga ungal varthaigalil kondu varum vitham azhagu! Sakthi Lainu life vara pora antha prob yeanna? Athu yeantha mathiri vilaivugala yearpadutha poguthunu ninachalea konjam kalakkama irukku and David Sham lifela nalla padiya searanumnu asaiya irukku!

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u basher......... sugam



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

good continue

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink   
 

story romba nala iruku sekiram next part update panuinga plz

__________________

 

 I-Feel.jpg



கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

kk



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard