மேளம் கொட்டி..! மின்னல் வெட்டி..! காற்றாய் வந்தென் கதவு தட்டி..! கரு நிறத்தழகியர் புடை சூழ..! இயற்கையெனும் நாயகன் என்னை வரவேற்கின்றான்..! கட்டி வைத்த ஆசைகள் காவல் மீறிப் போக..! 'சல்'லென என் முதுகில் 'சில்'லென்ற முத்தமிட்டான்..! கண்மூடி, மெய் மறந்து காதலன் அனைப்பில் கிடந்த போது..! 'சட்'டென விட்டுச் சென்றான்..! அவன் தொட்டு சென்ற தடயம் மட்டும்..!
கோவையில் என் வீட்டின் மொட்டை மாடியில் வானம் பார்த்து ஏங்கிய என் மனதில் தோன்றியது
சிறுபுல் வளர கூதல்மழை குறுங்காளான் முளைக்க குறுமழை வறுக்கும் வெப்பமகல வாடைமழை கொதிக்கும் கோளடங்க கொடைமழை சட்டென்று உடல்நனைக்க சாரல்மழை துண்டுக்கு வேலைவைக்கும் தூரல்மழை கனத்த நீர்பசியடங்க கனமழை ஆனந்த கண்ணீர்சுரக்க ஆசைமழை வறட்சி பூமியில் இரைச்சல் செய்யும் இசைமழை
இது கிட்டுமென காத்திருந்த எனக்கு வெறும் கானல்மழை
இங்கே ஒவ்வொருவருக்கும் ஓர் விருப்பம் நான் புலம்பும் இவ்வேளையில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் கவிதை
கறுமேகக்கூட்டங்களின் அடி இருட்டில் வெண் மின்னல் கீற்றின் வைர ஒளியில் கொஞ்சும் குளிர் ஊற்றின் வாடைக் காற்றில் ஓர் வண்ணத்துப்பூச்சி சிறகடித்துக் கவி பாடுகிறது அது காதல் சூடு உருகி காமக்குளிர் பரப்புகிறது.
சிறுபுல் வளர கூதல்மழை குறுங்காளான் முளைக்க குறுமழை வறுக்கும் வெப்பமகல வாடைமழை கொதிக்கும் கோளடங்க கொடைமழை சட்டென்று உடல்நனைக்க சாரல்மழை துண்டுக்கு வேலைவைக்கும் தூரல்மழை கனத்த நீர்பசியடங்க கனமழை ஆனந்த கண்ணீர்சுரக்க ஆசைமழை வறட்சி பூமியில் இரைச்சல் செய்யும் இசைமழை....really very nice ramnav...different name for the rain in different situtation...nice and different thinking...u are rocking man