Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மதுரை 10


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
மதுரை 10
Permalink   
 


பாண்டியர் குதிரை குழம்படியும்;


தூள் பறக்கும் இளையர் சிலம்படியும்;


மதி தோண்டிய புலவர் சொல்லடியும்;


இளம் தோகை மார்தம் மெல்லடியும்;

மயங்கி ஒலித்த மாமதுரை;

இது மாலையில் மல்லிகைப்பூ மதுரை


-வைரமுத்து

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

மதுரை 09

நீண்டு கிடக்கும் வீதிகளும்;


வான் நிமிர்ந்து முட்டும் கோபுரமும்;


ஆண்ட பரம்பரைச் சின்னங்களும்;


தமிழ் அழுந்தப் பதிந்த சுவடுகளும்;


காணக்கிடைக்கும் பழமதுரை;


தன் கட்டுக்கோப்பால் இளமதுரை.


-வைரமுத்து


நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

மதுரை 08



தென்னவன் நீதி பிழைத்ததனால்;


அது தெரிந்து மரணம் அழைத்ததனால்;


கண்ணகி திரிகி எரிந்ததனால்;


அவள் கந்தக முலையில் எரிந்ததனால்;


நீதிக்கஞ்சிய தென்மதுரை;


இன்று ஜாதிக்கஞ்சும் தொன்மதுரை.


-வைரமுத்து

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

மதுரை 07



தமிழைக் குடித்த கடலோடு


நான் தழுவேன் என்றே சபதமிட்டே


அமிர்தம் பரப்பும் வையை நதி


நீர் ஆழி கலப்பது தவிர்ப்பதனால்


மானம் எழுதிய மாமதுரை


இது மரபுகள் மாறா வேல்மதுரை



-வைரமுத்து

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

மதுரை 06



மதுரை தாமரைப் பூவென்றும்


அதன் மலர்ந்த இதழே தெருவென்றும்


இதழில் ஒட்டிய தாதுக்கள்
அவை எம் குடிமக்கள் திரள் என்றும்


பரிபாடல் பாடிய மால்மதுரை


வடமதுராபுரியினும் மேல்மதுரை



-வைரமுத்து


நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

மதுரை 05


மீசை வளர்த்த பாண்டியரும்


பின் களப்பிரர் பல்லவர் சோழர்களும்


மண்ணாசை வளர்த்த அந்நியரும்


அந்த அந்நியரில் சில கண்ணியரும்


ஆட்சி புரிந்த தென்மதுரை

மீனாட்சியினால் இது பெண்மதுரை


-வைரமுத்து


நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

மதுரை 04


மண்ணைத் திருட வந்தவரை

தம் வயிற்றுப் பசிக்கு வந்தவரை

செம்பொண்ணைத் திருட வந்தவரை

ஊர் பொசுக்கிப் போக வந்தவரை

தன் சேயாய் மாற்றிய தாய்மதுரை

அவர் தாயாய் வணங்கிய தூய்மதுரை


-வைரமுத்து


நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

மதுரை 03

அரபுநாட்டுச் சுண்ணாம்பில்

கரும்பு அரைத்துப் பிழிந்த சாறூற்றி

மரபுக் கவிதை படைத்தற்போல்

ஒரு மண்டபம் திருமலை கட்டியதால்

கண்கள் மயங்கும் கலைமதுரை

இது கவிதைத் தமிழின் தலைமதுரை

-வைரமுத்து

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

மதுரை 02

வையைக் கரையின் சோலைகளும்

அங்கு வரிக்குயில் பாடிய பாடல்களும்

மெய்யைச் சொன்ன புலவர்களும்

தம்மேனி கறுத்த மறவர்களும்

மிச்சமிருக்கும் தொன்மதுரை

தமிழ் மெச்சி முடிக்கும் தென்மதுரை


-வைரமுத்து

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

மதுரை 01

போட்டி வளர்க்கும் மன்றங்களும்

எழும் பூசைவழிகளின் ஓசைகளும்

இசை நீட்டி முழங்கும் பேச்சொலியும்

நெஞ்சை நிறுத்திப் போகும் வலை ஒலியும்

தொடர்ந்து கேட்கும் எழில்மதுரை

கண் தூங்காதிருக்கும் தொழில்மதுரை

-வைரமுத்து

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
RE: 2424232620 10
Permalink   
 


2424232620


282828252423 212723252923 2023292429202825

21202520 282926252923292029 24292429202825

202825242425 20212020292529 21282524232625

2824212520 2029252920 2023292529232925 29222325292429202825

24232924252420 2520282524 242324232424232620

20202025 2424242524212825 212020232425 2024212424232620

-212026242324252423

2829252721...

27292925292029 202126202625242524212925292127292925...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
RE: மதுரை 10
Permalink   
 


!...Wow...!
Its superb.....

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

very nice to read...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

@mani, @samram
Thank you frds

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard