மேகங்கள் இருள் சூழ்ந்து குளிர் காற்று மனம் வருடி மழைச் சாரல் முகத்தில் முத்தமிட்டு மலர்கள் முகம் கழுவி காற்றில் அசைந்த - மரங்கள் தலைதுவட்டி - தெருக்கடலில் கவிழ்ந்த கப்பல்களுக்கு நடுவில் - நாம் இதமாய் நடை போட ஒரு குடையை இருவர் பிடித்து குடைக்கம்பியில் கன்னம் பதித்து என் இடை நீ தழுவி - உன் இடை நான் அணைக்க - நம் நெருக்கம் அதிகரித்து மனப் புழுக்கம் நீங்கிய - இந்த மாலைப் பொழுதிலாவது - என்னிடம் சொல்லிவிடு - உன் காதலை..!!
****
இரு விழி மூடிக் காண்பது கனவென்றால் - நம் இருவர் விழி மூடிக் காணும் ஒரு காட்சிக்குப் பெயரெதுவோ..??
****
ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறேன் எனக்காக - கடலாக ஓரிடத்தில் - நீ இருப்பாயென்று..!!
****
ஒன்றாய் கைகோர்த்து மௌனித்திருந்த பொழுதுகளிலும் - நம் மனங்கள் உரையாடிக்கொண்டன...!!
wow feel the beach in first and esp that word jo quoted is different .... ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறேன் எனக்காக - கடலாக ஓரிடத்தில் - நீ இருப்பாயென்று..!!....write more like this...very interesting to read