உன்னைக் கண்ட நொடி என்னை மறந்தேன் - இனி வாழ்வெலாம் வசந்தமென்று திரிந்தேன்..!!
பூவாசத்திலும் உன் வாசம் கண்டேன் - நீ பதித்த நேசத்தால்..!!
உன் கோபத்தில் அன்பு கண்டேன்.. மௌனத்திலும் நெருக்கம் கண்டேன்..!!
நீ மழையில் நனைந்தபோதும் கண்நீர்த்துளியைக் கண்டுகொள்வேன்..!
கலங்கிய போது தோள் கொடுத்தேன் - கலங்காதிருக்க என் உயிரும் கொடுப்பேன்..!!
காதலில் ஊடல் ஊடலின் உச்சம் - உன் பிரிவு..!!
என் நிழலைப் பார்க்கவும் வருந்துகிறேன் - உன் நிழல் சேராமல்..!!
என் பார்வைகள் நேரயின - திரும்பினால் இமைகளும் உன்னைத் தேடுதே..!!
உன் பிரிவு நிஜமென்று மூளைக்கு தெரிகிறது - உன்னைச் சுமந்த - இதயச்சூளைக்குத் தெரியவில்லை உணர்வுக்குக் குவியலுக்குத் தெரியவில்லை கை விரல்களுக்குத் தெரியவில்லை - உன் வியர்வை துடைத்த நகங்களுக்கும் தெரியவில்லை - நாம் நெருங்கி நடந்த சாலைகளுக்கும் தடம் பதித்த பாதங்களுக்கும் தெரியவில்லை..
தெரியாமலே துவண்டுவிடும் - நிஜம் புரியாமலே மாண்டுவிடும் இறுதிவரை நீ இருக்கிறாய் என்று நம்பி..!!
வாழ்க்கை ஒரு வட்டமென்றால் யுகங்கள் தோறும் காத்திருப்பேன் உன்னை சந்தித்த அந்த நொடிக்காக....!!