type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
மாலைப் பொழுதில்
கருமேகங்களின் ஏவுகணையிலிருந்து
தப்பிக்க - நுழைந்தேன்
தேநீர் விடுதிக்குள் - முதன்முதலில்
கண்டேன் அவனை..!
இருவிரல் இடையிலோர்
வெள்ளைக் கோல் - அதன்
வெளிப்புறம் சிறு
கதிரவன் போல் - நெருப்புக்
கங்கு புகை மண்டலத்துடன்..!
ராமன் வளைத்த வில்
உடயாதிருந்தால் - திருந்தச்
செய்த இரு புருவம்...
நீள் வட்ட முக உருவம்..!!
இரு கயல் முத்தமிடுவது
பொறுக்காமல் தடுத்த - மலைமுடிவு
மூக்கு..
இரு கயலாய் விழிகள்..!!
தேனமுது சுவைத்த போதும்
தேர்ந்த மது குடித்தபோதும்
சுகமில்லை...
தேநீர் குடித்து - புகை
இழுக்கும் அவன்
செவ்விதழ் காணும் வரை..!
மூவிரல் ஓடும் முன்நெற்றியின் மேல்
கருநாணலாய் விளைந்திருக்கும்
மயிர்க்காடு - அவை
காற்றடிக்கும் திசயிலாடும்
நர்த்தன நங்கைகள்..!
மலைப்ப்ரதேச வளைவுச்சாலையா..?
மலையில் தோன்றும் சுனை வாயிலா..?
இன்றுவரை புரியவில்லை - அவன்
செவியழகு இன்னதென்று..!!
மழை முடிவில் மரக்கிளையி
லாடும் நீர்முத்துக்களைப்போல் - வெள்ளி
கொலுசில் காணும் சீர் முத்துக்களைப்போல்
வெண்பற்கள் - அவை
வைரம் கொண்டு அழகாய் அறுத்த
வைரக்கற்கள்..!!
அகன்ற மார்பின் - இரு
தோளில் தொங்கும் கரங்கள்
தொங்கும் தோட்டங்கள்..!!
நதி கடலிடை கலப்பதுபோல்
குறுகி விரிந்த இடை..
அலையெனப் பிரிந்தோடும்
இரு கடல் - கால்கள்..!
தேசிய வரைபடத்தை
தலைகீழாய்க் கண்டதுபோல்
உணர்ந்தேன் - அவன்
இருகால் அழகை..!!
சிலமுறை உலுக்கி - என்
கையில் திணித்தான்
தேநீர் கோப்பையை
"சார் டீ.." - என்று
பலமுறை அலறிய
கடைப் பையன்..!!
அங்கு தொலைத்தேன்
முதன் முதலில் - என்
அடையாளத்தை...!!
*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***
its me praveen