Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அடையாளம் தொலைத்தவன்..


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
அடையாளம் தொலைத்தவன்..
Permalink   
 


மாலைப் பொழுதில்

கருமேகங்களின் ஏவுகணையிலிருந்து 

தப்பிக்க - நுழைந்தேன் 

தேநீர் விடுதிக்குள் - முதன்முதலில்

கண்டேன் அவனை..!

 

                                  இருவிரல் இடையிலோர்

                                  வெள்ளைக் கோல் - அதன்

                                  வெளிப்புறம் சிறு 

                                  கதிரவன் போல் - நெருப்புக்

                                  கங்கு புகை மண்டலத்துடன்..!

 

ராமன் வளைத்த வில்

உடயாதிருந்தால் - திருந்தச்

செய்த இரு  புருவம்...

நீள் வட்ட முக உருவம்..!!

 

                                 இரு கயல் முத்தமிடுவது 

                                 பொறுக்காமல் தடுத்த - மலைமுடிவு

                                 மூக்கு..

                                 இரு கயலாய் விழிகள்..!!

 

தேனமுது சுவைத்த போதும்

தேர்ந்த மது குடித்தபோதும்

சுகமில்லை...

தேநீர் குடித்து - புகை 

இழுக்கும் அவன் 

செவ்விதழ் காணும் வரை..!

 

                                மூவிரல் ஓடும் முன்நெற்றியின் மேல்

                                கருநாணலாய் விளைந்திருக்கும் 

                                மயிர்க்காடு - அவை

                                காற்றடிக்கும் திசயிலாடும்

                                நர்த்தன நங்கைகள்..!

 

மலைப்ப்ரதேச வளைவுச்சாலையா..?

மலையில் தோன்றும் சுனை வாயிலா..?

இன்றுவரை புரியவில்லை - அவன்

செவியழகு இன்னதென்று..!!

 

                              மழை முடிவில் மரக்கிளையி

                              லாடும் நீர்முத்துக்களைப்போல் - வெள்ளி

                              கொலுசில் காணும் சீர் முத்துக்களைப்போல்

                              வெண்பற்கள் - அவை

                              வைரம் கொண்டு அழகாய் அறுத்த

                              வைரக்கற்கள்..!!

 

அகன்ற மார்பின் - இரு

தோளில் தொங்கும் கரங்கள்

தொங்கும் தோட்டங்கள்..!!

 

                           நதி கடலிடை கலப்பதுபோல்

                          குறுகி விரிந்த இடை..

                          அலையெனப் பிரிந்தோடும் 

                          இரு கடல் - கால்கள்..!

                          தேசிய வரைபடத்தை 

                          தலைகீழாய்க் கண்டதுபோல்

                          உணர்ந்தேன் - அவன்

                          இருகால் அழகை..!!

 

சிலமுறை உலுக்கி - என்

கையில் திணித்தான்

தேநீர் கோப்பையை

"சார் டீ.." - என்று

பலமுறை அலறிய 

கடைப் பையன்..!!

 

                        அங்கு தொலைத்தேன் 

                        முதன் முதலில் - என்

                        அடையாளத்தை...!!

 



-- Edited by Manikandan on Monday 1st of April 2013 12:03:08 PM

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Wow..! Fantastic..! Ungaloda karpanaiyil kandavarai naanum sila nodigal rasithatharkku mannikkavum..!

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

எப்படிப் பாராட்டுரதுன்னே தெரியல நண்பா
,மிக அருமை...............தஙள் கவிதை மழையில் நனைய காத்திருக்கிறோம்

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

very nice...different way of thinking... அங்கு தொலைத்தேன்

முதன் முதலில் - என்

அடையாளத்தை...!! ending gives the feel of that man...



__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

அருமை உங்கள் திறமைக்கு நான் தலைவணங்குகிறேன்
உங்கள் கவிதைக்கு நான் அடிபணிகிறேன் உணர்வுகள் ஊட்டிய வார்த்தைக் கூட்டுக்குள் என்னை அடக்கம் செய்யத் துணிகிறேன்
நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

நன்றி நண்பர்களே...!!

எண்ணிய வார்த்தைகள்
உங்களிடை அங்கீகாரம் பெற - நான்
புண்ணியம் செய்தவன் தான்...!!

மிக்க நன்றி அன்பர்களே...!!!

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



எழுத்தாளர்

Status: Offline
Posts: 97
Date:
Permalink   
 

மிக அருமை நண்பா

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

அப்பப்பா....
>கருமேகங்களின் ஏவுகணைகளிடமிருந்து தப்பிக்க>
மழையை இதைவிட நறுக்கென்று வர்ணிக்க முடியுமா என்ன..(நோட் பண்ணுங்கப்பா, நோட் பண்ணுங்கப்பா)
தொடக்கமே அருமை..
..
பெண்களை இன்ச் இன்ச் ஆக வர்ணித்து படித்திருக்கிறேன்..
ஒரு ஆணை இன்ச் இன்ச் ஆக மயிர் கூச்செரியும் அளவிற்க்கு வர்ணித்ததை இப்போதுதான் படிக்கிறேன்..
..
பட்டர்ஃபளை யுடன் சேர்ந்து நானும் ரசித்து விட்டேன் அவனை..
..
கலக்குறீங்க மணி

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

நன்றி நன்றி நன்றி...!! Mr.Jo and Mr.HotGuru...!!
:)

-- Edited by Manikandan on Sunday 14th of April 2013 11:18:56 AM

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



புதியவர்

Status: Offline
Posts: 48
Date:
Permalink   
 

superb wat a lines great


__________________

its me praveen

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard