Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அசல் அசல்தான் நகல் நகல்தான்


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
அசல் அசல்தான் நகல் நகல்தான்
Permalink   
 


ஒரு வெங்காய வியாபாரி சந்தை தேடினான். வெங்காயத்தின் வாசனையே அறியாத ஒரு தீவில் தன் கப்பலை கரை ஒதுக்கினான். அந்த தீவின் அரசனுக்கு மண்டியிட்டு அறிமுகப் படுத்தினான் வெங்காயத்தை.

கொஞ்சநாளில் வெங்காயப் பைத்தியம் பிடித்து விட்டது அரசனுக்கு. வெங்காய சாம்பார், வெங்காய தோசை, வெங்காயவடை என்று அரண்மனையை வெங்காயம் ஆக்கிரமித்துவிட்டது.

அரசன் வியாபாரியை அழைத்தான். "உன் ஆயிரம் மூட்டை வெங்காயத்தையும் இறக்கி விட்டுப்போ. இதோ இந்த ஐந்து மூட்டை தங்கத்தை எடுத்துக் கொண்டுபோ."

வியாபாரி வீடு திரும்பினான். வெங்காய வியாபாரியின் வெற்றியை அறிந்து ஒரு வெள்ளைப்பூண்டு வியாபாரி அதே தீவுக்குத் தன் கப்பலைச் செலுத்தினான்.

இப்போது அரண்மனையை வெள்ளைப் பூண்டு வியாபித்துவிட்டது.
வெள்ளைப் பூண்டில் மங்கிய அரசன் "என்ன வேண்டும்; கேள்" என்றான்.

"உங்கள் தீவிலேயே உயர்ந்ததாகக் கருதும் பரிசைக் கொடுங்கள்"

அரசன் யோசித்து உத்தரவிட்டான்.

"அமைச்சரே! இவனுக்கு ஐந்து மூட்டை வெங்காயம் கொடுத்தனுப்புங்கள்!"

அசல் அசல்தான்; நகல் நகல்தான்

-வைரமுத்து


உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ha...ha...super...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Paeraasai perum nashtam..!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

காப்பியடிச்சா வேலைக்காவாது

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 97
Date:
Permalink   
 

suya puthi thevai

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard