ஒரு வெங்காய வியாபாரி சந்தை தேடினான். வெங்காயத்தின் வாசனையே அறியாத ஒரு தீவில் தன் கப்பலை கரை ஒதுக்கினான். அந்த தீவின் அரசனுக்கு மண்டியிட்டு அறிமுகப் படுத்தினான் வெங்காயத்தை.
கொஞ்சநாளில் வெங்காயப் பைத்தியம் பிடித்து விட்டது அரசனுக்கு. வெங்காய சாம்பார், வெங்காய தோசை, வெங்காயவடை என்று அரண்மனையை வெங்காயம் ஆக்கிரமித்துவிட்டது.
அரசன் வியாபாரியை அழைத்தான். "உன் ஆயிரம் மூட்டை வெங்காயத்தையும் இறக்கி விட்டுப்போ. இதோ இந்த ஐந்து மூட்டை தங்கத்தை எடுத்துக் கொண்டுபோ."
வியாபாரி வீடு திரும்பினான். வெங்காய வியாபாரியின் வெற்றியை அறிந்து ஒரு வெள்ளைப்பூண்டு வியாபாரி அதே தீவுக்குத் தன் கப்பலைச் செலுத்தினான்.
இப்போது அரண்மனையை வெள்ளைப் பூண்டு வியாபித்துவிட்டது. வெள்ளைப் பூண்டில் மங்கிய அரசன் "என்ன வேண்டும்; கேள்" என்றான்.