Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மாணவர் போராட்டங்கள்.... புரட்சியை நோக்கி....


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
மாணவர் போராட்டங்கள்.... புரட்சியை நோக்கி....
Permalink   
 


யாரும் கனவிலும் எதிர்பார்த்திராத மாணவர் புரட்சி நடந்துகொண்டு இருக்கிறது.... ஈழத்து உறவுகளுக்காக, அவர்களின் உரிமைகளுக்காக வீதிக்கு வந்து போராடும் மாணவர்களை காணும்போது “நானும் தமிழன்” என்று சொல்லிக்கொள்வதில் ரொம்பவே பெருமையா இருக்கு... இத்தனை நாட்கள் போராட்டங்களிலும் ஒரு சிறு வன்முறை கூட இல்லாமல், தங்கள் இலக்கை நோக்கி உண்மையான சாத்வீக முறையில் போராடுகிறார்கள்...

மாவீரன் பிரபாகரனின் வேகமும், தியாக சுடர் திலீபனின் பொறுமையும் இணைந்த உருவத்தை ஒவ்வொரு மாணவரின் உருவத்திலும் காணமுடிகிறது.... தெலுங்கானா போராட்டத்தில் “உஸ்மானியா” பல்கலைக்கழக மாணவர்களின் ஒருநாள் போராட்டம் கலவரமாக முடிந்தது நினைவிருக்கலாம்... இத்தனை நாட்கள் ஈழப்போராட்டத்திலும் மாணவர்களால் ஒரு சிறு வன்முறை கூட நிகழ்த்தப்படாதது வரலாற்றின் உதாரணம்.... வகுப்புகளை புறக்கணித்தார்கள், மத்திய அலுவலகங்களை முற்றுகை இட்டார்கள், உண்ணாவிரதம் இருந்து தங்களையே வருத்திக்கொண்டார்கள், சாலை மறியல் செய்தார்கள்.... அரசியல் கட்சிகளை சரியான தூரத்தில் ஒதுக்கி வைத்திருந்தார்கள்...

முன்பெல்லாம் ஈழம் பற்றி தொலைக்காட்சிகளில் நேர்காணல்களில் பேசும் நபர்களின் வயது ஐம்பது வயதாகி இருக்கும்... இப்போது இருபதுகளில் வயதை கொண்ட நபர்கள் “வட்டுக்கோட்டை தீர்மானம் முதல் ராஜீவ்-ஜெயவர்தனா ஒப்பந்தம் வரை” எல்லாமும் பேசுவதை காணும்போது, என்றாவது ஈழம் மலரும் என்ற உறுதியான நம்பிக்கையை மனதிற்குள் விதைக்கிறார்கள்...

மாணவர் போராட்ட வாசகங்களில் என்னை ரொம்பவும் கவர்ந்த வாசகங்கள் இரண்டு.... “பிரபாகரன் உயிர் கொடுத்தது ஒரு பாலச்சந்திரனுக்கு, அந்த பாலச்சந்திரன் உயிர்கொடுத்தது லட்சக்கணக்கான பிரபாகரன்’களுக்கு”, “எங்கள் போராட்டத்தின் முடிவு என்பது இலங்கையின் வரைபடம் மாறுவது மட்டுமே.... மாறுவது இலங்கையின் வரைபடமா, இந்தியாவின் வரைபடமா? என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும்..”...

மாணவர்களின் போராட்டம் என்பது இனிதான் இன்னும் அதிகமாக இருக்கவேண்டும்... இம்மாத இறுதிவரை மத்திய அரசுக்கு கெடு விதித்திருக்கும் மாணவ அமைப்புகள், தங்கள் கோரிக்கைகளை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கவேண்டும்....

·        இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தைஇந்தியா புறக்கணிக்க வேண்டும் (ஏற்கனவே கனடா நாடு புறக்கணிக்கும் முடிவை எடுத்துவிட்டது, பிரித்தானியாவும் பரிசீலனையில் இருக்கிறது),

·        ஆசிய போட்டிகள் மட்டுமல்லாமல், இலங்கை வீரர்கள் பங்குகொள்ளும் எந்த விளையாட்டும் இங்கு நடக்க கூடாது.... ஐபிஎல் அணிகளில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கப்படவேண்டும்....

·        இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும்....

இந்த மூன்று கோரிக்கைகளும் பிரதானமாக இருக்க வேண்டும்.... இதுநாள் வரை நமக்கு எதிரியாக காங்கிரசை மட்டும் நினைத்தோம்.... இலங்கைக்கு எதிராக நம் நாடாளுமன்றத்தில் தீர்மானம் இயற்றுவது தொடர்பாக நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், இந்த தீர்மானத்துக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் முதலில் பேசியது நாம் அதிகம் நம்பிய பாரதிய ஜனதா கட்சிதான்... அங்கு பேசிய சுஸ்மா சுவராஜ் அம்மையார், “இலங்கை நமது நட்பு நாடு, அவர்களுக்கு எதிராக தீர்மானம் நம் நாடாளுமன்றத்தில் இயற்றக்கூடாது” என்றார்... இந்த பேச்சுக்கு மாணவர் ஒருவர் விடுத்த கருத்து எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.... “இலங்கை உங்களுக்கு நட்புநாடு என்றால், தமிழ்நாடு உங்களுக்கு பகை நாடா?” என்பதுதான் அது.... பாஜக மட்டுமல்ல முலாயம் சிங்’இன் சமாஜ்வாதி, மதச்சார்பற்ற ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் என்று எல்லா கட்சிகளுமே நம் கோரிக்கைகளுக்கு எதிராகத்தான் இருக்கிறது....

அதனால் நமக்கு எதிரிகள் சத்தியமூர்த்தி பவனில் இருப்பவர்கள் மட்டுமல்ல, “கமலாலயத்தில்” இருப்பவர்களும் தான்....

நம் மாநில கட்சிகள் இந்த விஷயத்தில் நமக்கு ஆதரவாக இருப்பது மட்டுமே ஒரே ஆறுதல்... நம் சார்பாக நம் மாநிலத்தை சார்ந்த “முப்பது” நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே நம் குரலாக நாடாளுமன்றத்தில் தங்கள் குரல்களை பதிவுசெய்ய முடியும்.... இங்கிருக்கும் காங்கிரஸ் உறுப்பினர்களை நான் அந்த பட்டியலில் சேர்க்கவில்லை....

மாணவர் போராட்டம் நிச்சயம் நல்ல பலனை தரும்.... இந்த போராட்டம் மட்டுமே மத்தியில் ஆளும் அரசை அசைத்துப்பார்க்கும் போராட்டம்.... இதுவரை எத்தனையோ உரிமைகளை இழந்தோம்... காவிரி விவகாரம், முல்லை பெரியாறு, கூடங்குளம் என்று நாம் இழந்தது தான் நிறைய... இனி நாம் இருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும், இழந்ததை மீட்கவும் இந்த போராட்டங்கள் நல்லதொரு பாதையை வடித்துக்கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.... மாணவர் போராட்டம் ஓங்குக.... மாணவர் போராட்டங்களுக்கு பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகிகள், பொதுமக்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் என்று அனைத்து தரப்பினரும் ஆதரவு நல்கி, நம் உறவுகளை காப்போம்... இப்போது விட்டுவிட்டால், உறவுகளை கைவிட்ட பழி பாவத்திற்கு காலத்திற்கும் நாம் ஆட்பட்டுவிடுவோம்.....

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்,

நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்,

பாரில் தமிழ்மண் வீரம் படைக்கும்,

பகைவர் ஓடும் சேதி கிடைக்கும்”

-          உணர்ச்சி கவிஞர் காசி அனந்தன் எழுதிய இந்த வரிகளுக்கு விரைவில் உயிர்கிடைக்க இறுதி வரை போராடுவோம்....



__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

I'm really so proud to be a part in this freedom fight..!

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

சிறப்பாக உரைத்தீர்கள் விஜய்..
ஒவ்வொரு தமிழனும் போராட்டத்தில் பங்கு கொள்வதோடு மட்டுமல்லாமல், தமிழீலத்திற்கான முயற்சிகளை மேற்க்கொள்ள வேண்டும்..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ஈழத்து உறவுகளுக்காக, அவர்களின் உரிமைகளுக்காக வீதிக்கு வந்து போராடும் மாணவர்களை காணும்போது “நானும் தமிழன்” என்று சொல்லிக்கொள்வதில் ரொம்பவே பெருமையா இருக்கு... இத்தனை நாட்கள் போராட்டங்களிலும் ஒரு சிறு வன்முறை கூட இல்லாமல், தங்கள் இலக்கை நோக்கி உண்மையான சாத்வீக முறையில் போராடுகிறார்கள்...அனைவரும் இதை உணர்த்து அவர்களுக்கு உதவி செய்வோம்

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
Permalink   
 

Nan oru thamizh manavan yeandru solli kolvathil megavum pearumai adaikirean! Ilainargal yeandral meathana pokku udaiyavargal, samuga akkaraiatravargal yeandru kuriyavargalin vayai adaikum vannam nam thozhargalin porattam ullathu ithai porattam yeandru sollvathai vida Puthu yuga vidiyalukkana puratchi yeandru solvathu salasiranthathu. Manavargal ninaithal yeathai veandumanalum seiya mudiyum yeanpatharku ithu sawndru. Gandhiya vazhiyil eelathirkkaga uzhaikum nanbargaluku pothumakkalidam irunthum ippothu atharavu kidaithirupathu manathirku migavum makkilchiyaga ullathu. Thamizh eela udhayathai avaludan yeathir parkirean. . . . .

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard