Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புதுக்கவிதையில் வள்ளுவம்..( அதிகாரம் 1 - 2 )


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
புதுக்கவிதையில் வள்ளுவம்..( அதிகாரம் 1 - 2 )
Permalink   
 


வணக்கம் நண்பர்களே..

இது ஒரு புது முயற்சி..

திருக்குறளை புதுக்கவிதை வடிவத்தில் இயற்ற முயற்சித்துள்ளேன்..

அதன்  தொடக்கமாக முதல் அதிகாரத்தை வடித்துள்ளேன்..

விமர்சனங்களுக்கு செவி சாய்க்கிறேன்..

பாராட்டுக்களுக்கு தலை வணங்குகிறேன்.. 

அதிகாரம் 1 : கடவுள் வாழ்த்து.

குறள் 1:

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு. 

 புதுக்கவிதை நடையில்..

உன் தொடக்கம்

பெற்றோரே - அவர் 

கோல் தொடக்கம் 

அகரமே.. 

எண் தொடக்கம் 

ஒன்றே - அனைத்தின் 

முன் தொடக்கம் 

இறையே..!!

****

குறள் 2:

    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.


 புதுக்கவிதை நடையில்..

எண்ணால் எழுத்தால் - ஏனைய

பட்டறிவால் உயர்ந்தென்ன 

உன்னிலும் கற்றவன் - தாள் 

வணங்காதபோது...

****

குறள் 3:

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.

 புதுக்கவிதை நடையில்..

கட + உள்

உள்ளத்தைக் கடந்தவனது  

தாளில் பணிக்கும்  

மலரிலும் உள்ளவன்  

இறைவன்.. 

அவனை  

உள்ளத்தில் வடித்து - தினம் 

தொழும் மனம் 

பூவுலகிலும்  மூவுலகிலும்  

நீண்டு வாழும்...!! 

****

குறள் 4:

    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.

 புதுக்கவிதை நடையில்..

எக்காலத்தும் துறத்தும்  

பிறவித் துன்பங்களை  

அகற்ற..

விழைதலும் வெறுத்தலும் இலா 

முக்காலமும் துறந்த - இறைதாளைப்  

பற்று..!

****

குறள் 5:

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

 புதுக்கவிதை நடையில்..

இறை புகழை

அகத்தில் பதித்தால் - தனக்கு 

அகிலத்தில் அறியாமை ஊட்டும் 

இருவினையாம் - நல்வினையும் 

தீவினையும் தீண்டாது...!

**** 

குறள் 6:

    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.

 புதுக்கவிதை நடையில்..

ஐம்புலன் வேட்க்கை அழித்து - பரம்பொருளின் 

பொய்யற்ற நெறியில் 

வாழ்பவன் - மாண்டாலும் 

மண்ணுள்ளவரை வாழ்வான்...!

****

குறள் 7:

    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது.

 புதுக்கவிதை நடையில்..

நீங்காது மனக்கவலை - உன்னை 

படைத்த பரம்பொருளைப்  

பற்றாதிருந்தால்..!

**** 

குறள் 8:

    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது.

 புதுக்கவிதை நடையில்..

பரம்பொருளைப் பற்றித்  

துணை கொண்டோர்  

நீந்திக் கடப்பர் - பிறவிப் 

பெருங்கடல்..!

****

குறள் 9:

    கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை.

 புதுக்கவிதை நடையில்..

முடமுற்ற ஐம்பொறிகளின் பயனெதுவோ  

பொருளதுவே - தன்னை 

படைத்த பரம்பொருளை வணங்கா 

தலைக்கும்..!

**** 

குறள் 10:

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.

 புதுக்கவிதை நடையில்..

வாழ்கைச் சுழலில் சிக்கித் 

தவிப்பர் - பரம்பொருளைப்  

பற்றாதவர்.. 

நீந்திக் கடப்பர் - உள்ளத்தைக் 

கடந்தவனை - உள்ளத்தில்

கொண்டவர்..!!

****

பிழைகளுக்கு மன்னிக்கவும்..
தொடரலாமா வேண்டாமா என்ற உங்கள் கருத்துக்களையும் பதியவும்..

*** நன்றி ***

 

 



-- Edited by Manikandan on Monday 18th of March 2013 05:43:37 PM



-- Edited by Manikandan on Monday 15th of April 2013 11:27:30 AM

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



புதியவர்

Status: Offline
Posts: 48
Date:
RE: புதுக்கவிதையில் வள்ளுவம்..
Permalink   
 


superb chance e illa
contu

__________________

its me praveen



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Really you're gifted..! And a preciouse gift to our forum..!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

நன்றி... நன்றி..!! Mr.Butterfly and Mr. Praveen

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

அருமை மணிகண்டன்....ரொம்ப எளிமையான வார்த்தைகளில் நல்ல முயற்சி...

*ஐம்புலன் வேட்க்கை அழித்து - பரம்பொருளின்

பொய்யற்ற நெறியில்

வாழ்பவன் - மாண்டாலும்

மண்ணுள்ளவரை வாழ்வான்...!
*எக்காலத்தும் துறத்தும்

பிறவித் துன்பங்களை

அகற்ற..

விழைதலும் வெறுத்தலும் இலா

முக்காலமும் துறந்த - இறைதாளைப்

பற்று..!----இரண்டும் மிகவும் அருமையாக இருக்கிறது....as butterfly says you are gifted with the talents...and we are gifted for having u...waiting for next...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

மிக்க நன்றி Mr. Samram..

நன்றி..!! நன்றி..!!!

பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் தலைவணங்குகிறேன்...

அடுத்த அதிகாரம் வரும் திங்கள்கிழமை மாலை பதிவு செய்கிறேன்...

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
Permalink   
 

Nalla muyarchi! Arumaiyaga ullathu Thangal pani sirakka en prathanaigalum vazhthukalum. . . .

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


எழுத்தாளர்

Status: Offline
Posts: 97
Date:
Permalink   
 

ரொம்ப அருமையாக உள்ளது, நல்ல முயற்சி நண்பா ,தங்கள் அரும்பணி தொடர வாழ்த்துகிறேன்

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

fantastic

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

அதிகாரம் 2 : வான்சிறப்பு

குறள் 11:

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

புதுக்கவிதை நடையில்..


மண்ணில் விதைக்கு
விண்ணில் அறுவடை
மழை..!
மண்ணில் உயிர்வாழ - மும்மாரி
பொழியும் மழை
அமுது..!!


****


குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

புதுக்கவிதை நடையில்..


விதைத்தாய்
விதைக்காய்
விழுந்தேன் - விதைத்தவர்க்கு
விதையொடு மழையும்
தேன்..!

 

****


குறள் 13:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

புதுக்கவிதை நடையில்..


மும்மாரி தவறினால்
மூவேளை உணவேது - பாரில்
பசித்தவர் புசிப்பதேது..?

****

 

குறள் 14:

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

புதுக்கவிதை நடையில்..

பொய்த்த மழையால்
மண்ணும் கல்லாகும் - கல்லில்
ஏரோடும் - கலப்பையும்
வரப்பு தேடும்..!!

 

****


குறள் 15:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

புதுக்கவிதை நடையில்..


பொழியாமல் பொய்க்கும் - விதைத்தவன்
விழுந்தபின்
எழப் பொழியும்
மழை..!!

 

****


குறள் 16:


விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

புதுக்கவிதை நடையில்..


புதரொடு எழும்
புல்லுக்கும்
புலரும்
மழை..!

****

 

குறள் 17:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.


புதுக்கவிதை நடையில்..

கடல் துள்ளும்
அலையும்
வான் பொழிந்த
மழையாம்..!

 

****


குறள் 18:

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

புதுக்கவிதை நடையில்..


படைத்தவனுக்கும்
படையலில்லை
பருவம் தவறிய
பசுமழையால்..!

 

****


குறள் 19:

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

புதுக்கவிதை நடையில்..


விண் கருணை
மண்ணில் பாய்ந்தால்
மனிதன் கருணை
மானுடத்துள் பாயும்..!!

****


குறள் 20:

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

புதுக்கவிதை நடையில்..


அன்னவர் அகம் செழிக்க
மலை வளம் பெருகி
நதிகளாய் ஆறுகளாய் - ஏனைய
நீரொழுக்கமாய் நிற்பதன் வேர்
மழை..!

****



__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
RE: புதுக்கவிதையில் வள்ளுவம்..( அதிகாரம் 1 - 2 )
Permalink   
 


Thanks for ur Support frnds.... :)

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

No words to explain..! Simply awesome..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

விதைத்தாய்
விதைக்காய்
விழுந்தேன் - விதைத்தவர்க்கு
விதையொடு மழையும்
தேன்..!

அன்னவர் அகம் செழிக்க
மலை வளம் பெருகி
நதிகளாய் ஆறுகளாய் - ஏனைய
நீரொழுக்கமாய் நிற்பதன் வேர்
மழை..!.... .இரண்டும் ரொம்ப நல்லாருக்கு...proud of u manikandan...உங்கள் படைப்புகளில் உங்கள் திறமை & உழைப்பு(வார்த்தை தேடல்) பிரமிக்க வைக்கிறது...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

தேனெடுக்கும்
பட்டாம்பூச்சியல்ல - உன்
ஊக்கத்தால் இரைஊட்டும்
தாய்ப் பறவை..!!

Thanks Mr. Butterfly....!!




__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

பாசுரம் பாடினாலும்
பா சுரம் புரிந்து
பாராட்டினால் - பல
பா சரம் தொடுக்கலாம்
சுரம் பிரித்து
சுவை சேர்க்கும்
பா வேந்தர்
உனக்காகவே..!!

Thanks Mr. Samram...!!!

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

பா வேந்தர்
உனக்காகவே..!!
(நான் போகிறேன் மேலே மேலே)...யார் அங்கெ இந்த கவிஞர்க்கு 10000 பொற்காசுகள் கொடுங்கள்...ha ha just for joke ...enjoyed ur reply mani...thnks for it

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

என்னாச்சு butterfly...சிவன் பாட்டு இங்கு எதற்கு...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Topic maariduchu sam..! I'm sorry..! :(

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

@Samram... Nandri... Nandri...!! :) :)

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

like it lot nanba @Manikandan

__________________

Your lovely friend.....

                              Prabhu



புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink   
 

**படைத்தவனுக்கும்
படையலில்லை
பருவம் தவறிய
பசுமழையால்..!**



**விண் கருணை
மண்ணில் பாய்ந்தால்
மனிதன் கருணை
மானுடத்துள் பாயும்..!!**

migavum rasitha varigal... Superb work :)

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard