Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காயும் நிலவு..!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
காயும் நிலவு..!
Permalink   
 


நீ
சிந்திய புன்னகைகளை
ஒன்றாக கோர்த்தேன்..
நிலவானது..!

எஞ்சியவைகள்  
நட்சத்திரங்களாய் மிளிர்கின்றன...

உலகம் முழுவதும்
உன் புன்னகையால் - ஒளி
பெறுகிறது..!

விண்ணைப் பார்க்கும்போதெல்லாம்
உன் - நினைவுகள்
என் இதயத்தை
வருடுகின்றன...!!

****

எண்ணியதோ
என் முகத்தைப் பார்க்க..

கண்டதோ
உன் முகம்..

நினைவுகளின் பிம்பம்
நிலவு..!!

****

நிலவில் தோன்றும்
சில நட்சத்திரங்களைக்
கண்டேன்...!

மழையில் நனைந்த
உன்
முகத்தில்..!!

****

நிலவைக் காணும்போதெல்லாம்
நிலை மறந்துபோகிறேன்
உன்
நினைவுகளில்...!!

****

உன் நினைவுகளைச் சுமக்கும்
என் இதயம்
இன்று
தனிமையில் காயும் நிலவானது...!

****

என்னவன் நினைவுகளில் - என்
மனம் காய்வதால்
காயமும் காய்கிறது..

நான் காய்வதால் தான் - நிலவே
நீயும் காய்கிறாயோ..??

நீ தேய்வதைப் பார்கும்பொழுதாவது
என் நிலை உணர்வானா??

****

 

***************

என் பித்தான பிதற்றல்களில் சிலவற்றைப் பதிந்துள்ளேன்..
பிழைகளுக்கு மன்னிக்கவும்..

***************



__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

Arumai, sila idangalil kavithaiyin vadivam ennai vekuvaka eerthathu.
நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

நன்றி.. Mr. RamNav..
உங்கள் கவிதைகள் அனைத்தும் படித்திருக்கிறேன்..

நீங்கள் வடித்ததை
நான் படித்ததில்
சிதறிய துளிகள் இவை...!!

" புல்லுக்குத் தான்
பனித்துளியின் கனம் தெரியும்..! "

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி...!!!


__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



புதியவர்

Status: Offline
Posts: 48
Date:
Permalink   
 

superb ya


__________________

its me praveen



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

Thank You Mr. Praveen...



__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

அப்பப்பா... முதல் கவிதை அருமை..
இரண்டாவது கவிதை(replied to ramnav) அதைவிட அருமை..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

வைணிகன் கை பட்டால்
மரக்கட்டையும்
வீணையாகும்...!

உன் கவியிலும்
நனைந்த விழிகள் எனது..

அதில் சிந்திய
சிறு துளியே - "காயும் நிலவு"..

பாராட்டுக்கு நன்றி Mr. Jo..
மிக்க நன்றி.......!!


__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Ungal kavidhai ovvondrum ullathai varudugiradhu mayiliragaaga..!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

Un kavithai arumai. Thani thokuppai podu un kavithai anaithaiyum. Enake en thozhar rajspr thaan thani thokupai uruvakinar. Un kavithai ennai ithamai varudukirathu.
Melum melum vazhvil uyara vazhthukal.
நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

நிச்சயம் தொகுத்துத் தருகிறேன் Mr.Ramnav..

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி...

உங்கள் தோழர் Mr. Rajspr - க்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கவும்...

நன்றி தோழரே..!!

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

great fren

__________________

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard