Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ♥♥♥சிப்பிக்குள் முத்து (புதைக்கப்பட்ட என் காதல்)-6♥♥♥


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
♥♥♥சிப்பிக்குள் முத்து (புதைக்கப்பட்ட என் காதல்)-6♥♥♥
Permalink   
 


1.jpg

சக்தி தன் காதலை ழாய்னுவிடம் சொன்ன இரண்டு நாட்கள் கழித்து........

டேவிட் ழாய்னுவின் ரூமிர்க்கு வந்தான். ழாய்னு , இந்த கவரில், ஷாம் முகவரிலாம் எழுதி பார்சல் பண்ணி கொடுடா, போய் கொரியர்ல அனுப்பிவிட்டு வருகிறேன் என்றான் டேவிட்.

நீ, இன்னும் அனுப்பவே இல்லையா, என்று சொல்லி டேவிட்டை முறைத்துக்கொண்டே எழுதி கொடுத்தான், அந்த கவரில் அனுப்புனர் முகவரியில் டேவிட் பெயரை எழுதி, அதில் டேவிட் மொபைல் நம்பரையும் எழுதினான்.

ழாய்னு அந்த கவரில் தன் மொபைல் எண்ணை எழுதி இருப்பதை , டேவிட் கடைசி வரை பார்க்காமல் போஸ்டும் செய்துவிட்டான். அதை போஸ்ட் செய்துவிட்டு மறுபடியும் ழாய்னுவை பார்க்க வந்தான்.
உட்கார்ந்திருந்த ழாய்னுவை பார்த்து , சக்தி சொன்னதுக்கு என்ன முடிவு எடுத்து இருக்கிறாய் என்று கேட்டான் டேவிட்.
அது வந்து, எனக்கு ஒன்னும் புரியலைடா என்றான் ழாய்னு.....
இதில் என்ன புரியல, ஓகே சொல்லு என்றான் டேவிட்.
டேவிட், என்னை பற்றி எல்லாம் தெரிந்த நீயே இப்படி சொன்னால் எப்படி. ஒரு முறை அவசர அவசரமாய் எடுத்த முடிவால் நான் பட்ட காயமே இன்னும் என் மனதை விட்டு மறையவில்லை. அப்படி இருக்கும் போது புதுசாக இன்னொன்றை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அதனால் தான் இன்று வரை நான் அமைதியாகவே இருக்கிறேன் என்றான் ழாய்னு .
சரி ழாய்னு , நீ சொல்வது எனக்கு புரிகிறது, ஆனால் நீ இப்போது நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்...... "நிர்மல் எற்படுத்திய காயத்திற்காக, இனிமேல் நீ தேடிய தேடல், உன் காதலனை தேடாமல் நிறுத்தி விட போகிறாயா?" என்றான் டேவிட்.

அது எப்படி, நான் நிச்சயம் தேடுவேன், எனக்கு நான் எதிர்பார்க்கும் வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது .
சரி நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன், உன்னை தேடி வரும் சக்தியை ஏன் வேண்டாம் என்கிறாய், கல்யாணம் ஆனவர் அதனாலா , இல்லை ஒரு குழந்தை இருக்கிறது என்பதாலா , வயது அதிகம், அல்லது அவரே உன்னை தேடி வருவதால் , உனக்கு பிடிக்கவில்லையா என்று கேட்டான் டேவிட்.

டேவிட், நான் அவரை பிடிக்கவில்லைன்னு சொல்லவே இல்லை, ஆனாலும் , எனக்கு சொல்ல தெரியவில்லை ,ஏதோ ஒரு பயம் இருக்கவே செய்கிறது. அது என்ன, எதற்கு என்று என்னாலே புரிந்து கொள்ள முடியவில்லை என்றான் ழாய்னு.
இதற்கு மேல் நான் ஏதும் பேச விரும்பவில்லை, நீ தேடும் வாழ்க்கை உன் அருகிலேயே இருக்கிறது, அதை மட்டும் தான் நான் இப்போது சொல்வேன் என்று சொல்லி அமைதி ஆனான் டேவிட்.
ழாய்னுவும் அமைதியாய் நின்றிருந்தான்.

அப்போது, "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்" என்று பாடிக்கொண்டே டேவிட்டின் மொபைல் அழைப்பு வந்தது. மொபைலை எடுத்து பார்த்தான் டேவிட், ஆம் அழைப்பு வந்திருப்பது சக்தியிடம் இருந்து தான். யெஹ்!!! ழாய்னு சக்தியிடம் இருந்து தான் அழைப்பு, இரு லவுட் ஸ்பிக்கர் வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு லவுட் ஸ்பிக்கரில் வைத்தான்.
ஹலோ!!! சொல்லுங்க சக்தி எப்படி இருக்கீங்க....
ம் இருக்கேன்.... "ழாய் " எப்படி இருக்கான்.
ம் நல்லாவே இருக்கான்.... அது என்ன "ழாய் "
அதுவா... செல்லமா "ழாய் " நல்லா இருக்கா ...
காதலில் எல்லாமே அழகு தான் என்று சொல்லி சிரித்தான் டேவிட்.
எங்கே? உன் நண்பர் தான் என்னிடம் இருந்து விலகியே இருக்கிறார் என்று சொல்லி கவலை பட்டான்.
இதற்கு பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தான் டேவிட்.
ழாய் மனநிலை எனக்கு புரிகிறது. எந்த முடிவையும் சீக்கிரம் எடுத்துவிட்டு பிறகு வருத்தப்பட கூடாது என்று நினைக்கிறார். ஆனால் , அவருக்கு என் மேல் நம்பிக்கை இல்லையே என்று நினைக்கும் போது தான் கவலையாக இருக்கிறது. நீங்க கூட நினைக்கலாம், ஒரு திருமணமானவன், ஒரு குழந்தைக்கு தந்தை இவன் இப்படி ஒருவனுக்காக ஏங்குகிறானே என்று நினைக்கலாம் என்றான் சக்தி.
அய்யோ ! அப்படியெல்லாம் நான் நினைக்கவில்லை என்றான் டேவிட்.
சக்தி பேச ஆரம்பித்தான், எனக்கும் அதற்கு பதில் இதுவரை கிடைக்கவே இல்லை. எனக்கு இந்த கே வாழ்க்கையில் , திருமணம், உறவு இதெல்லாம் இருக்கிறது என்பதும்,
இது வெறும் உடல் சம்மந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல, உள்ளம் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதை ழாய்னு அன்று பேசும் போது , அவன் வார்த்தைகளில் இருந்த தெளிவும், தைரியமும், அவன் கண்ணீரும் தான் எனக்கு புரிய வைத்தது, புரிந்து கொண்டேன். அன்று அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் என் மனத்திரையில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

""நான் உங்கள் அன்பைத்தேடி வந்தவன்...இந்த அற்ப சுகத்துக்காக இல்லை ...... ""

♥♥♥எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது உன் கருத்து, இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது என் முடிவு. உன் விருப்பத்தை என் மீது திணிக்காதிர்கள் ♥♥♥

இப்படி அவன் பேசிய இந்த வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சை கிழித்துக்கொண்டே இருக்கிறது. அன்று கூட நான் வந்தது , நிர்மல் ஒரு confidence மீட்டிங் இருக்கு என்று சொல்லி தான் என்னை அங்கு அழைத்து வந்தான். நான் 1 வருடம் என் மனைவியை இழந்த வேதனையில் இருந்ததால் அதை சரி செய்ய என்று சொன்னான்.
இப்பவும் சொல்கிறேன் நான் சொன்னதற்கு ழாய் சம்மதித்தால், நானும் சந்தோஷமாய் இருப்பேன் அவனுக்கும் சந்தோஷத்தையே தருவேன். நான் எப்படி என் மகள் நிலாவை குழந்தையாய் பார்க்கிறேனோ, அது போல் தான் , கொஞ்சம் வளர்ந்த குழந்தையாய் தான் ழாய்னுவை பார்ப்பேன். இப்போது ழாய்னு அடம்பிடிப்பது, நிலா அடம்பிடிப்பதை போல் தான் பார்க்கிறேன்.கோபம் வரவில்லை, பாசம் தான் அதிகரிக்கிறது என்று சொன்னான் சக்தி.
சக்தி பேசுவதை எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தான் டேவிட். ழாய்னுவும் தான்.
டேவிட் நீங்கள் நினைக்கலாம் , இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறிர்கள் என்று, இந்த நிமிடம் வரைக்கும் ழாய்னு நம்பும் , நேசிக்கும் ஒரே ஜீவன் நீ மட்டும் தான் என்று எனக்கு தெரியும். அதனால் தான் , நீங்கள் பேசினால் அவன் கொஞ்சம் என்னை பற்றி யோசிப்பான். அதற்காக வற்புறுத்த வேண்டாம் என்று சொன்னான் சக்தி.
அமைதியாய் ழாய்னுவையே பார்த்தான் டேவிட். டேவிட் அருகில் வந்த ழாய்னு , மொபைலை டேவிட்டிடம் இருந்து வாங்கினான்.

ஹலோ!!! என்றான் ழாய்னு .

யெஹ்!!! ழாய் எப்படி இருக்க, நீ என்னிடம் பேசினதே ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று சொன்னான் சக்தி.

நான் ஹலோ!! சொன்ன ஒரு வார்த்தையில் எப்படி
நான் தான் என்று கண்டு பிடித்தாய் என்றான் ழாய்னு.

♥♥♥தேன் உள்ள மலரை எப்படி ஒரு வண்டு சரியாக தேடி போகிறதோ அது போல், சூரியன் உதிக்கும் அடுத்த நொடியே எப்படி சூரியகாந்தி தலை நிமிர்கிறதோ அது போல் , நான் உன்னை நேசிக்கிறேன், சுவாசிக்கிறேன். அதனால் நீ விடும் மூச்சு காற்றை கூட உணர்ந்துவிடுவேன்♥♥♥ என்று சொல்லி சிரித்தான் சக்தி.
ம்.. நல்லா தான் பேசுறிங்க.... உங்களுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும் என்பதை இப்போது தான் உணர்ந்தேன் .இதுவரை, நான் துரதிஷ்டசாலி என்று நினைத்தேன், ஆனால் இப்போது சொல்கிறேன் நான் அதிஷ்டசாலி. I LOVE YOU சக்தி என்றான் ழாய்னு.

ழாய்னு எனக்கு இப்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

என்ன சொல்லனும்னு தெரியலையா ,
♥♥♥I LOVE YOU♥♥♥ திருப்பி சொல்லுங்க எனக்கு, என்று சொன்னான் ழாய்னு.

♥♥♥I LOVE YOU.... I LOVE YOU.... I LOVE YOU.......♥♥♥ என்றான் சக்தி.

"ழாய்னு என்கிற இந்த தூத்துக்குடி முத்து எனக்கு கிடைக்காமலே போய்விடுமோ என்று வருத்தப்பட்டேன்.
ஆம், எல்லா சிப்பிக்குள்ளும் முத்து இருக்காது. ஒரு சில சிப்பிக்குள் மட்டும் தான் முத்து இருக்கும்.நான் முத்து இல்லாத சிப்பியாய் ஆகி விடுவேனோ என்று பயந்தேன்.ஆனால் நீ சிப்பிக்குள் முத்தாய் எனக்குள் வந்தது எனக்கு பெருமையாய் இருக்கிறது.
நான் இந்த சக்தி சிப்பி......♥♥♥
நீ ழாய்னு முத்து.........♥♥♥
நாம் இருவரும் சிப்பிக்குள் முத்து....... சிப்பிக்குள் முத்து♥♥♥...... என்று சொல்லி சிரித்தான் சக்தி."

ழாய்னுவும் ஒரு முறை சொல்லி பார்த்தான் ♥♥♥சிப்பிக்குள் முத்து♥♥♥ அவனும் சிரித்தான் .......
வெகு நேரம் இருவரும் பேசினார்கள். பிறகு மொபைல் அணைக்கப்பட்டது.
ஓடிவந்து ழாய்னுவுக்கு கை குலுக்கி வாழ்த்து சொன்னான் டேவிட். உங்கள் இருவரின் வாழ்க்கையும் நீங்கள் சொன்னது போல் சிப்பிக்குள் முத்து போல் இருக்க என் வாழ்த்துகள் என்றான் டேவிட்.

அதன் பின் பலமுறை இருவரும் பேசி தங்கள் காதலை ஆழப்படுத்திக் கொண்டனர். ழாய்னுவுக்குள் இப்போது முழுமையாய் சக்தி வந்து புகுந்தான். அவன் காதலும் வெளிப்பட்டது. இப்போது ழாய்னுவின் , சக்தி மேல் உண்டான காதல் மட்டும் வெளிவரவில்லை, ழாய்னுவின் ஆழ் மனதில் , சக்தியின் மீது இருந்த பொசசிவ்னெஸ் கூடவே வளர்ந்தது. ழாய்னுவுக்கு சக்தி மேல் இருந்த பொசசிவ்னெஸ் , இதனால் யாராரை இழக்கிறான், யாரார் அவனை வெறுக்கிறார்கள் , அவனின் வாழ்க்கை பொசசிவ்னெஸ் -ஆல் "நிலா" திசை மாறி போவதையெல்லாம் அவனோடு பயணித்தே பார்ப்போம்.

ஒரு நாள் "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்" என்று பாடிக்கொண்டே டேவிட்டின் மொபைல் அழைப்பு வந்தது. அதை எடுத்து பார்த்த டேவிட், புது எண்ணாக இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டே, on செய்து ,

♥♥♥ஹலோ!!! என்றான்......♥♥♥(எதிர்புறத்தில் இருந்து)

♥♥♥ஹலோ!!! நான் ஷாம் பெர்னாண்டஸ் ........♥♥♥

(தொடரும்)



Attachments
__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
RE: ♥♥♥சிப்பிக்குள் முத்து (புதைக்கப்பட்ட என் காதல்)-6♥♥♥
Permalink   
 


next chapter ?

__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

konjam konjam puriuthu pa

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

s cute........

thank u

 

enna RAJSPR story pidikkalaya???????



__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

pidikatti padipayna?
In the story somthing missing

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

what that........

i dont know



__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

You're such a beautiful explainer...! Waiting for the next one...!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u butterfly



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

oru jodi serthaachu, adutha jodiyayum serthidunga.....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u vijay.........

 



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

Good narration. Waiting for Shyam!!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u chathero



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

சக்தியின் மீது இருந்த பொசசிவ்னெஸ் கூடவே வளர்ந்தது. ழாய்னுவுக்கு சக்தி மேல் இருந்த பொசசிவ்னெஸ் , இதனால் யாராரை இழக்கிறான், யாரார் அவனை வெறுக்கிறார்கள் , why this nareshji....கதை நல்லா போகுது சந்தோசமா அவங்கள இருக்க விடுங்க please...usually a gay in India is missing the love of a child...but they got it...so give all the happiness to them...waiting for the david's love story......

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

samram thank u for ur critisism.........

aanaal ondru naan solla vandha kadhayin maiya kadhaye zhaainuvin posasiveness , adhil dhaan irukkiradhu........

kandippaaga indha mudivum ungalukku pidikkum.........

nambungal..........

thank u



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

what happen nareshji...long gap in writing...waiting ji...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

sorry samram.......

ippodhu indha kadhayai thodarum mana nilayil naan illai.........

ennai mannikkavum........



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ippodhu indha kadhayai thodarum mana nilayil naan illai.........what nareshji...you got a good style of writing then why are wasting your talents...share ur bad things in life through any of the character...then the comments give you a energy...avatarla hand lifting vinai shows what? you can...usually i think abt u...pls try waiting........

__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

super mappu continue the story

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u rajspr



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

next chapter dude ??

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

soon



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard