பொதுவாக எந்த பிரச்னையையும் பெரிதுபடுத்திப் பார்க்கும் பூதக் கண்ணாடி மனநிலைமையை கைவிட்டுவிடவேண்டும்.
பிரச்சனைகளை எளிமைப்படுத்திப் பார்க்கப் பழகிக்கொள்ளும்போது நமக்கு நேர்ந்த பிரச்னையை விட, இந்த உலகில் எவ்வளவோ பிரச்ச னைகள் எப்படியெல்லாமோ தீர்க்கப்பட்டுவிடுகின்றது என்பதை எண்ணிப்பார்க்கும்போது அவற்றையெல்லாம் விட நமது பிரச்னை ஒன்றுமே இல்லை என்று நினைக்கும் மனோபாவத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
அப்போது தான் நமது பிரச்னைக்கு உரிய தீர்வை தெளிவாக யோசிக்க முடியும். ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடு கிறது. எனவே, முடிந்தவரை அன்றைய பிரச்னையை அன்றே தீர்க்க முயற்சிப்பது நல்லது. இல்லாவிடில், நேற்றைய பிரச்னை, நாளைய பிரச்னை என அனைத்தும் சேர்ந்து நம்மை வலுவிழக்கச் செய்துவிடும்.
தேவையில்லாமல் பிறரது பிரச்னைகளையும் நம்மீது சுமையாக ஏற்றிக் கொள்ளக்கூடாது. நமது பிரச்சனைகளுக்கு தீர்வு தேவைப்படும் போது, அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.