என்னவனின் முகம் நோக்கியே... என் திசையை தீர்மானிக்கும்... மங்கல திலகமிட்ட...
சூரியகாந்தியாகிய நான்...... என் மீது என்னவனின் ஒளி பட்டால் தான், என் முகம் மலர்கிறது,
பிரகாசிக்கிறது!!! என்னவனின் ஒளி மறையும் பிரிவால்,,, என் முகமும் வலுவிழந்து , நீயில்லாமல்,
நிலைகுலைந்து தலை சுருண்டு விழும் சூரியகாந்தியாய் நான்...... சூரியனின்,
என்னவனின் மறு வருகையில் தான்... நான் ,
உன்னால் தான் தலை நிமிர்ந்து சிரிக்கிறேன், உன் திசை பார்த்து.......
கதிரவனே....... என் பெயரிலும் நீ........ என் வீழ்ச்சியும் நீ....... என் எழுச்சியும் நீ.......
என்றுமே உன் திசையை நோக்கி நான்..... சூரியனாய், சூரியகாந்தியாய் நாம்........
இது என் நண்பன் RAJSPR- க்கு அவன் கேட்ட கவிதையை , நான் ( நரேஷ்ஜி), என் நண்பனுக்கு பரிசாய் (இந்த வரிகள் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்) தருகிறேன். நன்றி........
என் எதிர் பார்ப்பு பொய்க்கவில்லை இது தான் புரிதல் என்னவனை கானும் போது ஏற்படும் சந்தோஷம் பட படப்பு இக் கவிதையை படிக்கும் போதும் ஏற்படுகிறது அப்படியே பகலவனின் பார்வைக்காக ஒற்றைக் காலில் தவமிருக்கும் சூரியகாந்தி படத்தையும் இனைத்திடுங்கள் நன்றி நன்றி நன்றி
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
ஆஹா எத்தனைப் பொருத்தமான வரிகள் எத்தனை நிறங்கள் பசிக்குத் தானே நரேஷ் உணவு கேட்டேன் ரூசிக்கு விருந்தே வைத்து விட்டாயே என் காதலுக்கென்றே அளவெடுத்துச் செய்தாயோ வரிகள் நன்றி
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
என்னவனின் முகம் நோக்கியே... என் திசையை தீர்மானிக்கும்... மங்கல திலகமிட்ட...
சூரியகாந்தியாகிய நான்...... என் மீது என்னவனின் ஒளி பட்டால் தான், என் முகம் மலர்கிறது,
பிரகாசிக்கிறது!!! என்னவனின் ஒளி மறையும் பிரிவால்,,, என் முகமும் வலுவிழந்து , நீயில்லாமல்,
நிலைகுலைந்து தலை சுருண்டு விழும் சூரியகாந்தியாய் நான்...... சூரியனின்,
என்னவனின் மறு வருகையில் தான்... நான் ,
உன்னால் தான் தலை நிமிர்ந்து சிரிக்கிறேன், உன் திசை பார்த்து.......
கதிரவனே....... என் பெயரிலும் நீ........ என் வீழ்ச்சியும் நீ....... என் எழுச்சியும் நீ.......
என்றுமே உன் திசையை நோக்கி நான்..... சூரியனாய், சூரியகாந்தியாய் நாம்........
இது என் நண்பன் RAJSPR- க்கு அவன் கேட்ட கவிதையை , நான் ( நரேஷ்ஜி), என் நண்பனுக்கு பரிசாய் (இந்த வரிகள் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்) தருகிறேன். நன்றி........
என் உயிர் உருகி உடல் பூரித்து முகம் பொலிவாகி பூப்பூத்து நிற்கிறேன்
உன்னை பார்த்தே என் வாழ்க்கை செல்ல என்னை எவனோ என விட்டு செல்ல கண்களும் ஏனோ பூத்தது மெல்ல இறுதியில் நானும் ஆலைச் செக்குக்குள் கொள்ள எண்ணையாய் மெல்ல திரிந்தேன் நானே உணவாய் மெல்ல சென்றேன் வீணே இருந்தும் கொழுப்பாய் இந்த அற்ப உடல் வழி உன் சூடு காண்பேன் கண்ணே
விதை விதைத்திலிருந்து துளித் துளியாய் கரையும் வரை நீ மட்டும்தான்
ஆனாலும் நீ என்னை கவனிப்பதில்லை
அனிச்சையாய் உன் பக்கம் திருப்பினாய் ஆசையாய் என் மேலே உமிழ்கிறாய் இச்சை எனக்குள் மூண்டதோ- உன்னை ஈந்து என் உடல் வளர்ந்ததோ-மனம் ஊஞ்சல் ஆடுதோ
என் காதல் நீ புரிய என்செய்வேன் நான்
உன் மீது நான் கொண்ட காதல் ஒன்று சேர்த்து அனுப்பிடவா புவியீர்ப்பு விசை தாண்டி உந்தி தள்ளிடவா முன்னிரண்டு கிரகம் முட்டி உன்னிடம் ஊதி தள்ளிடவா
பிரிவு ஒன்றே நிரந்தரமானாலும் என் காதல் சிலர்(RAJSPR, NARESH) அறிவர் அவர்கள் என் காதலை உலகறியச் செய்வர்
அழகான கவிதை காதல் வந்து தாக்கும் போது தோழமையின் தோளில் சாய்ந்து கொண்டேன் என் ஆசையை பூர்த்தி செய்ய இனிய கவி இயற்றிய ராம்நவ் என்றெனும் ஒரு நாள் என் காதல் கைகூடும். அந்த நாள் உன் கவிதை என் வரவேற்பறையை அலங்கரிக்கும். நன்றி தோழா
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
எத்தனை வலிமையான வார்த்தைகள் ராம்நவ் நிச்சயமாக ஒன்று கூறுகிறேன் நீ எழுதியது கவிதை அல்ல உணர்ச்சிப் பிளம்பு கோடு தானே போட்டேன் கோட்டையே கட்டி விட்டாயே பாராட்ட எனக்கு வார்த்தை சிக்கவில்லை நண்பா
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
நீங்கள் புகழும் அளவுக்கு நான் பெரியவன் அல்ல விக்கி, நரேஷ், RAJSPR உடன் ஒப்பிடும் தகுதி எனக்கில்ல என்றும் நான் சாதாரணமானவன் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் கீழ்படிதலுக்குட்படுபவன் கவிதைகளின் ரசிகன் நான்
நீண்ட தயக்கத்திற்கு பின்னரே பதிகிறேன், ஏனென்றால் மிகப்பெரிய கவிஞர்களுக்கு மத்தியில் பதிய ஒரு சிறு தயக்கம் தான், தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும், திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.
கதிரவனே! ஒன்றும் தெரியாமல்தான் பிறந்தேன் வளர்ந்தேன். என்று மலர்ந்தேனோ அன்றுமுதல் இன்றுவரை உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். உனக்கும் எனக்கும் பெயரொற்றுமை இருந்தும் கருத்தொற்றுமை இல்லை போலும் அதனால்தான் இரவு முழுவதும் உன்னை பிரிய வேண்டியிருக்கிறது. பகல்பொழுது முழுவதும் நீ என் கூட இருப்பதால் மிகவும் மகிஷ்ச்சியாக இருக்கிறேன் அனைவரும் என்னை விரும்புகின்றனர். நீ இல்லாத போழ்து நான் மிகவும் வாட்டமாகிறேன் இதனால் அவர்களுக்கு ஏமாற்றம்! இதிலிருந்து உனக்குத் தெரியவில்லையா? நீயும் நானும் சேர்ந்து இருப்பதையே இந்த உலகம் விரும்புகிறது என்று!