Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Write a poem following headline


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Write a poem following headline
Permalink   
 



சூரியன் என்னவன் சூரியகாந்தி நான் இந்தக் காதலை விளக்கும் கவிதை இங்கே எனக்காக பதியுங்கள்


நரேஷ் மற்றும் ராம்நவ்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
சூரியனாய், சூரியகாந்தியாய்.....
Permalink   
 


கதிரவனாய் !!!
செம்மஞ்சள் சூரியனாய்!!!

என்னவன்....
என்றென்றும்...

என்னவனின் முகம்  நோக்கியே...
என் திசையை தீர்மானிக்கும்...
மங்கல திலகமிட்ட...

சூரியகாந்தியாகிய நான்......
என் மீது என்னவனின் ஒளி பட்டால் தான்,
என் முகம் மலர்கிறது,

பிரகாசிக்கிறது!!!
என்னவனின் ஒளி மறையும் பிரிவால்,,,
என் முகமும் வலுவிழந்து ,
நீயில்லாமல்,

நிலைகுலைந்து தலை சுருண்டு விழும்
சூரியகாந்தியாய் நான்......
சூரியனின்,

என்னவனின் மறு வருகையில் தான்...
நான் ,

உன்னால் தான் தலை நிமிர்ந்து சிரிக்கிறேன்,
உன் திசை பார்த்து.......

கதிரவனே.......
என் பெயரிலும் நீ........
என் வீழ்ச்சியும் நீ.......
என் எழுச்சியும் நீ.......

என்றுமே உன் திசையை நோக்கி நான்.....
சூரியனாய், சூரியகாந்தியாய் நாம்........

இது என் நண்பன் RAJSPR- க்கு அவன் கேட்ட கவிதையை  , நான் ( நரேஷ்ஜி), என் நண்பனுக்கு பரிசாய் (இந்த வரிகள் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்)   தருகிறேன். நன்றி........



__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
RE: Write a poem following headline
Permalink   
 


RAJSPR un karuththukkaaga kaaththirukkum naan.......



__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 


என் எதிர் பார்ப்பு பொய்க்கவில்லை இது தான் புரிதல் என்னவனை கானும் போது ஏற்படும் சந்தோஷம் பட படப்பு இக் கவிதையை படிக்கும் போதும் ஏற்படுகிறது அப்படியே பகலவனின் பார்வைக்காக ஒற்றைக் காலில் தவமிருக்கும் சூரியகாந்தி படத்தையும் இனைத்திடுங்கள் நன்றி நன்றி நன்றி

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 


ஆஹா எத்தனைப் பொருத்தமான வரிகள் எத்தனை நிறங்கள் பசிக்குத் தானே நரேஷ் உணவு கேட்டேன் ரூசிக்கு விருந்தே வைத்து விட்டாயே என் காதலுக்கென்றே அளவெடுத்துச் செய்தாயோ வரிகள் நன்றி

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
சூரியனாய், சூரியகாந்தியாய்
Permalink   
 


1.jpg 

கதிரவனாய் !!!
செம்மஞ்சள் சூரியனாய்!!!

என்னவன்....
என்றென்றும்...

என்னவனின் முகம்  நோக்கியே...
என் திசையை தீர்மானிக்கும்...
மங்கல திலகமிட்ட...

சூரியகாந்தியாகிய நான்......
என் மீது என்னவனின் ஒளி பட்டால் தான்,
என் முகம் மலர்கிறது,

பிரகாசிக்கிறது!!!
என்னவனின் ஒளி மறையும் பிரிவால்,,,
என் முகமும் வலுவிழந்து ,
நீயில்லாமல்,

நிலைகுலைந்து தலை சுருண்டு விழும்
சூரியகாந்தியாய் நான்......
சூரியனின்,

என்னவனின் மறு வருகையில் தான்...
நான் ,

உன்னால் தான் தலை நிமிர்ந்து சிரிக்கிறேன்,
உன் திசை பார்த்து.......

கதிரவனே.......
என் பெயரிலும் நீ........
என் வீழ்ச்சியும் நீ.......
என் எழுச்சியும் நீ.......

என்றுமே உன் திசையை நோக்கி நான்.....
சூரியனாய், சூரியகாந்தியாய் நாம்........

இது என் நண்பன் RAJSPR- க்கு அவன் கேட்ட கவிதையை  , நான் ( நரேஷ்ஜி), என் நண்பனுக்கு பரிசாய் (இந்த வரிகள் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்)   தருகிறேன். நன்றி........



__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
RE: Write a poem following headline
Permalink   
 


thank u rajspr......... nanbenda........ indha madhiri pudhusa yosikka vaiththadhukku unakku dhaan nandri solla vendum,,,,,,,, thank u.....



__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

nice picture

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

HMM



__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

சூரியனாக அவன்
அதில் மலரும் பூவாய் நான்

அவன் என் மேல் உமிழும் ஒவ்வொரு கதிரும்

என் உயிர் உருகி
உடல் பூரித்து
முகம் பொலிவாகி பூப்பூத்து நிற்கிறேன்

உன்னை பார்த்தே என் வாழ்க்கை செல்ல
என்னை எவனோ என விட்டு செல்ல
கண்களும் ஏனோ பூத்தது மெல்ல
இறுதியில் நானும் ஆலைச் செக்குக்குள் கொள்ள
எண்ணையாய் மெல்ல திரிந்தேன் நானே
உணவாய் மெல்ல சென்றேன் வீணே
இருந்தும் கொழுப்பாய் இந்த அற்ப உடல் வழி உன் சூடு காண்பேன் கண்ணே

விதை விதைத்திலிருந்து துளித் துளியாய் கரையும் வரை நீ மட்டும்தான்

ஆனாலும் நீ என்னை கவனிப்பதில்லை

அனிச்சையாய் உன் பக்கம் திருப்பினாய்
ஆசையாய் என் மேலே உமிழ்கிறாய்
இச்சை எனக்குள் மூண்டதோ- உன்னை
ஈந்து என்
உடல் வளர்ந்ததோ-மனம் ஊஞ்சல் ஆடுதோ

என் காதல் நீ புரிய
என்செய்வேன் நான்

உன் மீது நான் கொண்ட காதல் ஒன்று சேர்த்து அனுப்பிடவா
புவியீர்ப்பு விசை தாண்டி உந்தி தள்ளிடவா
முன்னிரண்டு கிரகம் முட்டி உன்னிடம் ஊதி தள்ளிடவா

பிரிவு ஒன்றே நிரந்தரமானாலும் என் காதல் சிலர்(RAJSPR, NARESH) அறிவர்
அவர்கள் என் காதலை உலகறியச் செய்வர்

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...





__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 


அழகான கவிதை காதல் வந்து தாக்கும் போது தோழமையின் தோளில் சாய்ந்து கொண்டேன் என் ஆசையை பூர்த்தி செய்ய இனிய கவி இயற்றிய ராம்நவ் என்றெனும் ஒரு நாள் என் காதல் கைகூடும். அந்த நாள் உன் கவிதை என் வரவேற்பறையை அலங்கரிக்கும். நன்றி தோழா

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 


எத்தனை வலிமையான வார்த்தைகள் ராம்நவ் நிச்சயமாக ஒன்று கூறுகிறேன் நீ எழுதியது கவிதை அல்ல உணர்ச்சிப் பிளம்பு கோடு தானே போட்டேன் கோட்டையே கட்டி விட்டாயே பாராட்ட எனக்கு வார்த்தை சிக்கவில்லை நண்பா

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

நீங்கள் புகழும் அளவுக்கு நான் பெரியவன் அல்ல
விக்கி, நரேஷ், RAJSPR உடன் ஒப்பிடும் தகுதி எனக்கில்ல
என்றும் நான் சாதாரணமானவன்
உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் கீழ்படிதலுக்குட்படுபவன்
கவிதைகளின் ரசிகன் நான்

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

really nice kavithai......... kavithayil avaravar ennangal azhagaai velipattirukkiradhu...... Mr.Ramnav...... really super



__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 


கிழக்கே தோன்றும் சூரியன் போல் என்னவன்

அவன் பார்வையில் மலரும் சூரிய காந்தி மலர் போல் நான்

பாசம் காட்டா பகலவன் அவன்

அவன் உக்கிரமும் ரசிக்கும் காதலன் நான்

என்னவன் தோன்றாத போதெல்லாம் நான் வாடிக்கிடப்பதை அவனறிய வாய்பில்லையே

அவனை பார்த்து ரசிப்பது என் வாடிக்கை

என்னை காக்க வைப்பது அவன் வேடிக்கை

என்னவன் அறிவானோ என் மனதை (என)

அறியாமல் தவிக்கிறேன் நான்

உலகத்தையே வெளிச்சமாக்கும் பகலவன் (என்)

பாசத்தை புரிந்து கொள்வானா பாஸ்கரன் (என்)

காதலை ஏற்று என் வாழ்வில் விடியலை ஏற்றுவானா கதிரவன் (என)

நித்தமும் தவமிருப்பேன் நான்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

மிக மிக அருமை நண்பா
ஆயிரம்தான் இருந்தாலும் உங்கள் கவிதைக்கு நிகராகாது என் கவிதை

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 


தவறு நண்பா உருவம் பார்த்து சித்திரம் தீட்டுவதற்கும்

கற்பனையில் உருவகப்படுத்தி சித்திரம் தீட்டுவதற்கும் வித்யாசம் நிறைய உண்டே நண்பா

எனது காதலை கவிதையாக நான் எழுதியதற்கும்

நீங்கள் எழுதியதற்கும்
ஆயிரம் ஆயிரம் வித்யாசம் உண்டு தோழா


ஒரு முடியை வைத்து உருவம் முழு தீட்டிய ஒவியரை கதையில் கண்டுள்ளேன்



ஒரு சிறு காதல் கருவை இப்படி முழுமையான கவிதையாக வடித்த பெருமை உங்களையே

(நரேஷ் & ராம்நவ்)

ஆகிய உங்களையே சாரும்



உங்களின் திறமையை புரிந்து கொண்டதே எனது சிறப்பு சரி தானே

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

கவிஞர்களே....ரொம்ப நல்லா இருக்கு....உங்கள் திறமை வியப்படைய வைக்கிறது...

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 97
Date:
Permalink   
 

 நீண்ட தயக்கத்திற்கு பின்னரே பதிகிறேன், ஏனென்றால் மிகப்பெரிய கவிஞர்களுக்கு மத்தியில் பதிய ஒரு சிறு தயக்கம் தான், தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும், திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.

கதிரவனே!
ஒன்றும் தெரியாமல்தான் பிறந்தேன்
வளர்ந்தேன்.
என்று மலர்ந்தேனோ அன்றுமுதல்
இன்றுவரை உன்னையே
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
உனக்கும் எனக்கும் பெயரொற்றுமை
இருந்தும்
கருத்தொற்றுமை இல்லை போலும்
அதனால்தான் இரவு முழுவதும் உன்னை
பிரிய வேண்டியிருக்கிறது.
பகல்பொழுது முழுவதும் நீ என் கூட இருப்பதால்
மிகவும் மகிஷ்ச்சியாக இருக்கிறேன்
அனைவரும் என்னை விரும்புகின்றனர்.
நீ இல்லாத போழ்து
நான் மிகவும் வாட்டமாகிறேன்
இதனால் அவர்களுக்கு ஏமாற்றம்!
இதிலிருந்து
உனக்குத் தெரியவில்லையா?
நீயும் நானும் சேர்ந்து இருப்பதையே
இந்த உலகம் விரும்புகிறது என்று!



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அருமை திரு hot guru அவர்களே

__________________



கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

reaaly nice hotguru..........



__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 


எதுகை, மோனை தேவை. சற்றே திருத்தினால் அழகாய் இருக்கும் உங்கள் கவிதை. முயன்று பாருங்கள் hot guru

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard