Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Ram navன் கவிதை தொகுப்பு


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Ram navன் கவிதை தொகுப்பு
Permalink   
 


வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்
மனிதா...
வானம் கூட வசமாகி விடும் இனிதா...
உன் உணர்வுகளை கொட்டித்தீர்
கதையாய்...
பொன் கற்பனைகளை புகுத்துவீர்
கவிதையாய்...
உலக வாழ்க்கைகளை செதுக்குவீர்
நாடகமாய்...
நானும் உம்மை ஆதரிப்பேன்
துணிவாய்...
பின்பும் நீ இருப்பாய் பணிவாய்...
நன்றி...
உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

என்னை யாருன்னே தெரியாம,எனக்காக பிரார்த்திக்கிறார், ரொம்ப நல்லவரா இருப்பாரோ.........

__________________



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

என்னவன் காதலைக் கொட்டினான்

இன்னலை மட்டும் நான் காட்டினேன்

விலையில்லா அன்பை ஊட்டினான்

விரகம் தான் வாழ்வென சாடினேன்

எனக்குள் மகிழ்ச்சித் தேன் ஊற்றினேன்

அவனுக்குள் காமத் தீ ஏற்றினேன்

உடல் கூடல் செய்தே
என்னை தூய்மை செய்தான்

உயிர் ரணம் ஆகமட்டும் அவனை அழவே செய்தேன்

நான் நல்லவன் அல்ல
நவீனோ எனக்கில்ல
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா
உயிர் போனபின் உடல் பொருள்படுமா
இவன் வாழ்ந்தே சாக வேண்டியவன்
செத்தே வாழ வேண்டியவன்

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 


என்னவன் காதலைக் கொட்டினான்

இன்னலை மட்டும் நான் காட்டினேன்

விலையில்லா அன்பை ஊட்டினான்

விரகம் தான் வாழ்வென சாடினேன்

எனக்குள் மகிழ்ச்சித் தேன் ஊற்றினேன்

அவனுக்குள் காமத் தீ ஏற்றினேன்

உடல் கூடல் செய்தே
என்னை தூய்மை செய்தான்

உயிர் ரணம் ஆகமட்டும் அவனை அழவே செய்தேன்

நான் நல்லவன் அல்ல
நவீனோ எனக்கில்ல
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா
உயிர் போனபின் உடல் பொருள்படுமா
இவன் வாழ்ந்தே சாக வேண்டியவன்
செத்தே வாழ வேண்டியவன்

நன்றி...
//ரொம்ப அருமையா இருக்கு நண்பா,தொடர்ந்து எழுதுங்க

__________________



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

புகழ்ச்சி கண்டு மயங்காதே
இகழ்ச்சி கண்டு அஞ்சாதே
துன்பம் உன்னை நெருங்காதே
இன்பம் உன்னை விலக்காதே
மிகவும் நன்றி @ ராம்நவ்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

நான் பத்து பக்கம் எழுதினாலும் உங்கள் பத்து வரி அதன் கருத்தை சொல்லிடுதே

இரத்தினச் சுருக்கமாய் உங்கள் கவி அழகு சேர்த்திடுதே

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

உலகம் கெட்டுக் கிடக்கு
பஞ்சம் சுத்தி இருக்கு
இத்துப் போன செல்வத்துக்கு
தினம் தினம் செத்துக்கிடக்கு
இதப் பாத்த பின்னும் மக்களுக்கு
போகலையே பணப் பித்து கிறுக்கு

வேண்டும் ஒரு தலைவன் தான்
உன்னைப்போல் ஒரு இளைஞன் தான்
நெஞ்சிலே வீறு கொண்ட வீர தீர சூரன் தான்
குத்தம் குறை கூற வந்த தபால்காரன் நானே தான்

திட்டம் தீட்டி திருடுறாக

அவிகள
வட்டியோடு தீர்த்துவிடு

பணம் சேர்க்கும் பண்டாரங்க

அவிகள
பிணமாக விட்டுவிடு

கவுர்மண்டு கோட்டைக்குள்ள
கம்பீர ஆஃபீசருக
என் தாள எடம்மாத்த
காந்தித்தாள் கேக்குறாக

அவிகள
கரண்டு சவத்துக்குள்ள
சத்தமின்றி அடக்கிவச்சு
மிச்சமின்றி அழிச்சுப்புடு

செடி கொடி மரம் எல்லாம்
செத்துக்கிட்டே இருக்குதுக
மழத்தண்ணி பொழியாம
மாதம் தள்ளிப் போகுதுக
பாளம் பாளமா வெடிச்சு பல்லிளிச்சு நிக்குது நிலம்
காலங் காலமா திரிஞ்சு போயிடுச்சு மக்க மனம்
இருந்தும் உழுதுக்கிட்டே இருக்குதிந்த பாவ ஜனம்
ஆனாலும் செயற்கை உரம் மட்டும் செஞ்சுக்கிட்டே இருக்குறாக

அவிகள
வெண்ணியா ஆகிப்போகும்
தண்ணியில்லா பாலவனத்தில்
கண்ணிவெடிக் காட்டுக்குள்ள
கதக்களி ஆடவிடு

குடும்பக் கூட்டுக்குள்ள
குத்துவிளக்குத் திலகங்கள
சத்தமின்றி கடத்திவந்து
காமப் பசியாத்தி
கற்ப சூறயாடி
கலஞ்ச தேகத்தயும்
கண்டமா ஆக்குறானுக

அவிகள
விந்துப் பையை வெட்டியறிஞ்சு
(அவன்)
வாய் சந்துக்குள்ள அடக்கிவச்சு
எட்டுத் துண்டா பிரிச்சுப்புட்டு
எட்டுத் திக்கும் வீசிவிடு

அரசியல் ஆட்சிக்குள்ள
அழுக்கு மூட்டை போல
கறைகளா சேக்குறாக
கண்டபடி கழிக்குறாக
மூச்சு முட்டுனாலும்
பேச்சுல திட்டுனாலும்
திருந்த போவதில்ல
மக்கள திருந்தவும் விடுறதில்ல

அவிகள
ஆத்தங்கர சப்பக் கல்லுல
அழகாத் தண்ணி தொளிச்சு
மெதுவா அலசி விட்டு
ஓங்கி அடிக்கும் அடி ஊரெல்ல தாண்ட வேணும்
அழுக்குக் கறயெல்லாம் அரை நொடியில ஓட வேணும்

அத்தோட விட்டுடாத
அவசரமுன்னு ஓடிடாத

சுடச்சுட வெள்ளாவியோ
காத்திருக்கு பக்கத்துல

ஆசன அடி வெளுக்கும் வரை எடுத்திடாத அந்த பாவிகள...




நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

super super ram nav

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

மேற்கொண்டு எழுத ஏதேனும் ஒரு தலைப்பு தாருங்கள் நண்பர்களே

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

அவிகள
விந்துப் பையை வெட்டியறிஞ்சு
(அவன்)
வாய் சந்துக்குள்ள அடக்கிவச்சு
எட்டுத் துண்டா பிரிச்சுப்புட்டு
எட்டுத் திக்கும் வீசிவிடு
very powerful words but all true words....ramnav...
வீதியில் எறிந்தாலும் வீணைக்கு இசை உண்டு...if u like this topic write

__________________


புதியவர்

Status: Offline
Posts: 48
Date:
Permalink   
 

அரசியல் ஆட்சிக்குள்ள
அழுக்கு மூட்டை போல
கறைகளா சேக்குறாக
கண்டபடி கழிக்குறாக
மூச்சு முட்டுனாலும்
பேச்சுல திட்டுனாலும்
திருந்த போவதில்ல
மக்கள திருந்தவும் விடுறதில்ல

அவிகள
ஆத்தங்கர சப்பக் கல்லுல
அழகாத் தண்ணி தொளிச்சு
மெதுவா அலசி விட்டு
ஓங்கி அடிக்கும் அடி ஊரெல்ல தாண்ட வேணும்
அழுக்குக் கறயெல்லாம் அரை நொடியில ஓட வேணும்
///
true words superb kavithai

__________________

its me praveen



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

திறமை

மனிதனின் திறமை

மனித உடம்புக்குள்ளே எங்கயோ இருக்குதய்யா
அறிய வழியுமில்ல
எதுவோ விதச்சதய்யா
வெளிப்படும் நேரத்தையோ எவனும் அறியலய்யா
வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு அதிலே ஊறுமய்யா

திறமைக்கு மதிப்புமில்ல
மதிப்பவன் வாழ்க்கையில இனிமையோ இருப்பதில்ல
ஆனாலும் முயன்றவர்கள் தாழ்ந்து போவதில்ல

விடாது பயிற்சி கொள்
அதற்காக முயற்சி கொள்
வெற்றியின் புகழை தவிர்த்து விடு
அது வாழ்வின் சூத்திரம் அறியாத கையேடு
தோல்வி பெற தயங்கும் மனத் தயக்கத்தை அழித்துவிடு
பாடம் பல புகட்டும் இந்த பழக்கத்தை புகுத்திவிடு

கடின உழைப்புக்கு என்றுமே மதிப்புண்டு
மதிப்புள்ள செயலுக்கு பின் நல்லதொரு திறமையுண்டு
அழியாத திறமைக்கு அழகான கவியுமுண்டு
வீதியில் எறிந்தாலும் வீணைக்கு இசையுண்டு

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...


__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

very nice...உங்கள் திறமையை கண்டு வியக்கிறேன்....நண்பா...எனக்கு பிடித்த வரிகள்
விடாது பயிற்சி கொள்
அதற்காக முயற்சி கொள்
வெற்றியின் புகழை தவிர்த்து விடு
அது வாழ்வின் சூத்திரம் அறியாத கையேடு
தோல்வி பெற தயங்கும் மனத் தயக்கத்தை அழித்துவிடு
பாடம் பல புகட்டும் இந்த பழக்கத்தை புகுத்திவிடு....bcaz all the words are full of positive thoughts....


அழியாத திறமைக்கு அழகான கவியுமுண்டு
வீதியில் எறிந்தாலும் வீணைக்கு இசையுண்டு.....இந்த வார்த்தை எனக்கு பிடித்ததற்கு காரணம்
நம்மை போன்றவர்களின் திறமையை மதிக்காதவர்களை பார்க்கும்போது...in my mind I got the same feeling...no words very happy...I read this several times...
pls write more like this......

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

Marupadiyum ethavathu sollunga nanba,
muyarchikiren. Bt the abv kavithaiyai paaraattum alavuku ethuvum irupathaka enaku thondravillai. Bcz athil enaku thirupthiyum illai. Nan en uzhaippai athikamaga pota villai.
நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

தமிழன்

மூத்தகுடி நம்குடி
என சொல்வதிங்கு பல சுவடி
பரந்துகிடக்குது நம்குடி அதன் பெருமை நாம் அறியாதபடி
பார்த்துக்கொள்வது நம் தேசமடி

நமக்கு மட்டும் இங்கே
ஏனோ ஓர் அவலநிலை
அதை மட்டும் இங்கே
மாற்ற ஏனோ மனமுமில்லை
தமிழ் பற்று கொண்டு இருக்கும் சிலரின் நிலை
அவர்களும் பற்றை ஊட்ட மறக்கவில்லை
மாற்றங்கள் பெரிதாய் எதுவும் நிகழவில்லை
இதுதான் விழலுக்கு இறைத்த நீரின் நிலை

தமிழன் வகைப்படுத்திய தொழில்கள் ஐந்துவகை
குறிஞ்சி மருதம் நெய்தல் முல்லை பாலை
புறத்தில் பாலை மட்டும் இங்கே இருந்ததில்லை
அகத்தில் பாலை இன்றி மக்கள் நெஞ்சமில்லை
காரணம் ஏதுமின்றி
சாகும் தமிழனுக்கு
ஏனோ இன்றுவரை
கொஞ்சமும் பஞ்சமில்லை

இதன் தொடர்ச்சி அடுத்த பதிப்பில் போடுகிறேன்

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: Ram nav2925 2921212420 2422292320252023
Permalink   
 


True and hurtful quote..!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
RE: Ram navன் கவிதை தொகுப்பு
Permalink   
 


@butterfly
Athai melum eduthu solla vanthen. Karuthu veliyitatharku nandri

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

தொடர்ச்சி

கடற்கரையோரமாக
பெரும்படை உள்ளதய்யா
மீனின் வம்சம் வந்த மச்ச வீரனய்யா
கடல்தான் இவர்களுக்கு என்றுமே விடியல் அய்யா
கடல்தான் இவர்களுக்கு என்றுமே முடியல் அய்யா
இவர்களின் நிலையுமிப்ப
ரொம்பவே மோசமய்யா
எடுத்து சொல்ல போறேன்
பொறுமையா கேளுமய்யா

காலையில குடிசைவிட்டு
கரைகடந்து கடலைத்தொட்டு
கனநீரில் திலகமிட்டு
கதிரவன வணங்கிப்புட்டு
கட்ட,கம்பில் செஞ்சதொரு
கட்டுமரக் கலத்தினிலே
கம்பீர பயணமிட்டு
கடலின் அலைகளையோ
கொஞ்சமாய் கடக்கவிட்டு
கனமான மீன்தேடி
கூடுமொரு கூட்டமய்யா

அரசாங்க எல்லக்குள்ள
அமைதியா வலைவிரிச்சு
காத்திருக்கும் வேளையில
எரச்சல் அலபரப்பி
எதிர் உள்ள திசையிருந்து
எந்திர கப்பல் ஒன்னு
எல்லதாண்டி வருகுதய்யா

கரயான் புத்துமேல
கல்லுமோட்டார் கவிழ்ந்திடுச்சோ
ஈச்ச மரத்துமேல
இடி மின்னல்
விழுந்திடுச்சோ
குண்டுமீன் பிடிக்கயில
குண்டு மழை பொழிஞ்சிடுச்சோ
சம்பந்தம் ஏதுமின்றி
மொத்தமா சிறபிடிச்சு
சுத்தமா அழிச்சிடுச்சோ
கொழுத்தவன் பசிக்குமிங்கே
இளச்சவன்
பலி ஆயிடுச்சோ

இதன் தொடர்ச்சி அடுத்த பதிப்பில் பதிவிடுகிறேன்

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: Ram nav2925 2921212420 2422292320252023
Permalink   
 


Anaithu thamizhargalin manakumural..!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
RE: Ram navன் கவிதை தொகுப்பு
Permalink   
 


@butterfly
mudinthavarai nadanthathai ezhuthukiren. Matram irukumenil marumozhiyil thiruthukiren.
ungalin karuthirku en manamarntha nandri

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

very nice ram
very nice

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

தொடர்ச்சி

கடற்கரை வாசலிலே
காத்து நிக்கும் அவன் குடும்பம்
மீன் பிடிக்க போனவனோ
மீளவில்ல இக்கணம் வரைக்கும்
சத்தமிட்டு ஓலமிடுவாள்
சர்க்கார் செவி சாய்க்கும் வரைக்கும்
பேச்சில் இருக்கும்
வேகம்
செயலில் சேராதிருக்கும்
ஏனோ கடல் தமிழனுக்கு
சாவே துணை இருக்கும்

இக்கரையில் தான் இப்புடியுன்னா
அக்கரையின் நிலை
மோசம் அண்ணா

இதன் தொடர்ச்சி அடுத்த பதிப்பில் பதிவிடுகிறேன்

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

கடற்கரை வாசலிலே
காத்து நிக்கும் அவன் குடும்பம்
மீன் பிடிக்க போனவனோ
மீளவில்ல இக்கணம் வரைக்கும்....


இக்கரையில் தான் இப்புடியுன்னா
அக்கரையின் நிலை
மோசம் அண்ணா.... படிக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...அவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்...நிச்சயம் ஒரு விடியல் வரும்

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

"வெள்ள பருந்துபோல
விமான பேருந்தொன்னு வானவீதி பறக்கையில
வெடித்துச் சிதறுமொரு
வெடிகுண்டு வீசுதய்யா
வெண்ணிற புகைசூழ்ந்து
வெள்ளந்தி மக்களோட
பொன்சிரிப்பு அழிஞ்சதய்யா"

really a touching lines..! Hats off..!

-- Edited by Butterfly on Tuesday 26th of March 2013 03:42:25 PM

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

@rajspr
nice illa nanba, nam nilayai enni parkanum, atharku puthiya vazhi onnu kandu, athan vazhi sella venum.
karuthu veliyitatharku en manamarntha nandri

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

@samram
prarthanai pothum nanba!
nammal iyandra udhavikalai seiya vendumenil pirinthirukum unnaviratha poraattathirku valu serpom. ondru seruvom, nam pakkathu veetukaranukaga naam ondru kooduvom.

நன்றி...

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட உள்ளங்கள் சளைக்காமல் துணிந்து போராடும் வல்லமை தரவேண்டி பிரார்த்திக்கிறேன்...



__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

தொடர்ச்சி

பத்துதலை வீரனிவன்
பத்தினியை கவர்ந்திங்கு
பக்குவமா சிறையும் வச்சான்

பத்திலொரு அவதாரமவன்
பத்தினியை மீட்க அங்கே
பாலமொன்னு இடையில் வச்சான்

பாலம் வழிதானோ
பழந்தமிழனும் இடம்பெயர்ந்தனோ
பாவம் நடக்குறது
முன்ஜென்மப் பயன்தானோ
பாதம் பின்தொடர்ந்து
வரும் உயிர்பலிதானோ

தருமருக்கு கோவமய்யா
தமிழன பிடிச்சுவாயா
தந்திரமா நடக்குதய்யா
தருமஅடி கிடக்குதய்யா

கடல் சூழ்ந்த நிலத்துக்கு
உடல் பலி ஆகுதய்யா
நாட்டு மக்கள் அங்கு
நரபலி கொடுக்குதய்யா

மல்லிகை வாசத்திலே
மங்கையவள் காக்கையிலே
மன்னவன் வருகையிலே
மறந்து நிக்கையிலே
மயங்கி சொக்கும் ஒரு
மையிருட்டு வேளையிலே
மறத்தமிழன் அவன் வாழும் பகுதியிலே
மயான நிசப்தமய்யா

வெள்ள பருந்துபோல
விமான பேருந்தொன்னு வானவீதி பறக்கையில
வெடித்துச் சிதறுமொரு
வெடிகுண்டு வீசுதய்யா
வெண்ணிற புகைசூழ்ந்து
வெள்ளந்தி மக்களோட
பொன்சிரிப்பு அழிஞ்சதய்யா

இதன் தொடர்ச்சி அடுத்த பதிப்பில் பதிவிடுகிறேன்

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

@butterfly
thangalin karuthirku nandri.
நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
Permalink   
 

Samuga prachanaigalai azhaga solli irukenga nanba romba arumai!

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

@basher
samoogam patri pesum neram ithu. Ezhunthu nirka pokum tharuvayil thoondukol ondru venum. Ethirthu seyal padukirarkal, avarkuladan naamum inaiya vendum.
நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard