உலகம் கெட்டுக் கிடக்கு பஞ்சம் சுத்தி இருக்கு இத்துப் போன செல்வத்துக்கு தினம் தினம் செத்துக்கிடக்கு இதப் பாத்த பின்னும் மக்களுக்கு போகலையே பணப் பித்து கிறுக்கு
வேண்டும் ஒரு தலைவன் தான் உன்னைப்போல் ஒரு இளைஞன் தான் நெஞ்சிலே வீறு கொண்ட வீர தீர சூரன் தான் குத்தம் குறை கூற வந்த தபால்காரன் நானே தான்
திட்டம் தீட்டி திருடுறாக
அவிகள வட்டியோடு தீர்த்துவிடு
பணம் சேர்க்கும் பண்டாரங்க
அவிகள பிணமாக விட்டுவிடு
கவுர்மண்டு கோட்டைக்குள்ள கம்பீர ஆஃபீசருக என் தாள எடம்மாத்த காந்தித்தாள் கேக்குறாக
செடி கொடி மரம் எல்லாம் செத்துக்கிட்டே இருக்குதுக மழத்தண்ணி பொழியாம மாதம் தள்ளிப் போகுதுக பாளம் பாளமா வெடிச்சு பல்லிளிச்சு நிக்குது நிலம் காலங் காலமா திரிஞ்சு போயிடுச்சு மக்க மனம் இருந்தும் உழுதுக்கிட்டே இருக்குதிந்த பாவ ஜனம் ஆனாலும் செயற்கை உரம் மட்டும் செஞ்சுக்கிட்டே இருக்குறாக
அவிகள விந்துப் பையை வெட்டியறிஞ்சு (அவன்) வாய் சந்துக்குள்ள அடக்கிவச்சு எட்டுத் துண்டா பிரிச்சுப்புட்டு எட்டுத் திக்கும் வீசிவிடு very powerful words but all true words....ramnav... வீதியில் எறிந்தாலும் வீணைக்கு இசை உண்டு...if u like this topic write
மனித உடம்புக்குள்ளே எங்கயோ இருக்குதய்யா அறிய வழியுமில்ல எதுவோ விதச்சதய்யா வெளிப்படும் நேரத்தையோ எவனும் அறியலய்யா வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு அதிலே ஊறுமய்யா
திறமைக்கு மதிப்புமில்ல மதிப்பவன் வாழ்க்கையில இனிமையோ இருப்பதில்ல ஆனாலும் முயன்றவர்கள் தாழ்ந்து போவதில்ல
விடாது பயிற்சி கொள் அதற்காக முயற்சி கொள் வெற்றியின் புகழை தவிர்த்து விடு அது வாழ்வின் சூத்திரம் அறியாத கையேடு தோல்வி பெற தயங்கும் மனத் தயக்கத்தை அழித்துவிடு பாடம் பல புகட்டும் இந்த பழக்கத்தை புகுத்திவிடு
கடின உழைப்புக்கு என்றுமே மதிப்புண்டு மதிப்புள்ள செயலுக்கு பின் நல்லதொரு திறமையுண்டு அழியாத திறமைக்கு அழகான கவியுமுண்டு வீதியில் எறிந்தாலும் வீணைக்கு இசையுண்டு
very nice...உங்கள் திறமையை கண்டு வியக்கிறேன்....நண்பா...எனக்கு பிடித்த வரிகள் விடாது பயிற்சி கொள் அதற்காக முயற்சி கொள் வெற்றியின் புகழை தவிர்த்து விடு அது வாழ்வின் சூத்திரம் அறியாத கையேடு தோல்வி பெற தயங்கும் மனத் தயக்கத்தை அழித்துவிடு பாடம் பல புகட்டும் இந்த பழக்கத்தை புகுத்திவிடு....bcaz all the words are full of positive thoughts....
அழியாத திறமைக்கு அழகான கவியுமுண்டு வீதியில் எறிந்தாலும் வீணைக்கு இசையுண்டு.....இந்த வார்த்தை எனக்கு பிடித்ததற்கு காரணம் நம்மை போன்றவர்களின் திறமையை மதிக்காதவர்களை பார்க்கும்போது...in my mind I got the same feeling...no words very happy...I read this several times... pls write more like this......
மூத்தகுடி நம்குடி என சொல்வதிங்கு பல சுவடி பரந்துகிடக்குது நம்குடி அதன் பெருமை நாம் அறியாதபடி பார்த்துக்கொள்வது நம் தேசமடி
நமக்கு மட்டும் இங்கே ஏனோ ஓர் அவலநிலை அதை மட்டும் இங்கே மாற்ற ஏனோ மனமுமில்லை தமிழ் பற்று கொண்டு இருக்கும் சிலரின் நிலை அவர்களும் பற்றை ஊட்ட மறக்கவில்லை மாற்றங்கள் பெரிதாய் எதுவும் நிகழவில்லை இதுதான் விழலுக்கு இறைத்த நீரின் நிலை
தமிழன் வகைப்படுத்திய தொழில்கள் ஐந்துவகை குறிஞ்சி மருதம் நெய்தல் முல்லை பாலை புறத்தில் பாலை மட்டும் இங்கே இருந்ததில்லை அகத்தில் பாலை இன்றி மக்கள் நெஞ்சமில்லை காரணம் ஏதுமின்றி சாகும் தமிழனுக்கு ஏனோ இன்றுவரை கொஞ்சமும் பஞ்சமில்லை
கடற்கரையோரமாக பெரும்படை உள்ளதய்யா மீனின் வம்சம் வந்த மச்ச வீரனய்யா கடல்தான் இவர்களுக்கு என்றுமே விடியல் அய்யா கடல்தான் இவர்களுக்கு என்றுமே முடியல் அய்யா இவர்களின் நிலையுமிப்ப ரொம்பவே மோசமய்யா எடுத்து சொல்ல போறேன் பொறுமையா கேளுமய்யா
கடற்கரை வாசலிலே காத்து நிக்கும் அவன் குடும்பம் மீன் பிடிக்க போனவனோ மீளவில்ல இக்கணம் வரைக்கும் சத்தமிட்டு ஓலமிடுவாள் சர்க்கார் செவி சாய்க்கும் வரைக்கும் பேச்சில் இருக்கும் வேகம் செயலில் சேராதிருக்கும் ஏனோ கடல் தமிழனுக்கு சாவே துணை இருக்கும்
இக்கரையில் தான் இப்புடியுன்னா அக்கரையின் நிலை மோசம் அண்ணா
கடற்கரை வாசலிலே காத்து நிக்கும் அவன் குடும்பம் மீன் பிடிக்க போனவனோ மீளவில்ல இக்கணம் வரைக்கும்....
இக்கரையில் தான் இப்புடியுன்னா அக்கரையின் நிலை மோசம் அண்ணா.... படிக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...அவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்...நிச்சயம் ஒரு விடியல் வரும்