சொல்லுங்கள் மகி சொல்லுங்கள்....... சொல்லுங்கள் மகி சொல்லுங்கள் என்றான் ஜோ. மகி சிரித்துக்கொண்டே ஹோட்டல் ரூமில் இருந்த டிவியை பார்த்தான் , அதில் ஆதித்யா சேனலில் -- "டாடி எனக்கொரு டவுட் ? " ஓடிக்கொண்டு இருந்தது, மகி, ஜோ இருவருமே சிரித்துவிட்டனர். வெகு நேர சிரிப்பிற்கு பிறகு, சரி ஜோ டைம் இரவு 9 மணி ஆகப்போகிறது, ஹோட்டலில், நாம் புக் பண்ண டைம் முடியுது , கிளம்பலாமா என்றான் மகி. சரி ஓகே கிளம்பலாம் என்றான் ஜோவும். மகி, ஜோ இருவரும் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு கீழே வந்தனர்.படிக்கட்டில் இருந்து கீழே இறங்கும் போதே, அய்யோ !!! மகி நான் நல்ல மாட்டினேன், என்று பயந்து மகியின் பின்னால் ஒளிந்தான் ஜோ. யெஹ்! என்னடா ஆச்சி என்றான், அதற்கு ஜோ என் கிளாஸ் மெட் விஜய் அங்கே சாப்பிட்டு கொண்டு இருக்கிறான் என்றான் ஜோ. ஜோவை பார்த்து மகி சிரித்துவிட்டு, சரி வா போகலாம் என்று ஜோவை அழைத்துக்கொண்டு மகி வெளியில் வந்தான்.
மகி கொஞ்சம் நில்லுங்கள், எதுக்கு என்னை பார்த்து சிரித்தீர்கள், என்று கேட்டான் ஜோ. இல்ல ஜோ தவறாக நினைக்காதே, நீ என்னுடன் வருவதை உன் கிளாஸ் மெட் பார்த்தால் தவறாக இருக்கும் என்று நினைக்கிறாயே, அப்புறம் எப்படி ஒருவனுடன் வாழ்கையில் இணைவதை எல்லாம் பற்றி நீ யோசிக்கிறாய் என்று தான் எனக்கு புரியவில்லை. ஜோ எங்கோ ஒரு புத்தகத்தில் படித்தது," எதை நீ அடைய விரும்புகிறாயோ, அதற்கு உன்னை தயார் படுத்திக்கொள் ", நான் உனக்கு இப்படி சொல்வதற்கு காரணம்,உனக்கு வயசு இருக்கிறது, என் வாழ்கையில் நான் செய்த தவறுகளை நீ செய்யக்கூடாது என்பதற்காக தான்.ஜோ, உனக்கு என்ன தேவை என்பதை நன்கு யோசித்து முடிவு செய், முடிவு செய்த ஒன்றிற்காக உன்னை தயார் படுத்திகொள் அது தான் நல்லது.
இதை எல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக நின்றிருந்தான் ஜோ. என்ன ஜோ யோசிக்கிறாய் என்று கேட்டான் மகி. ஜோ தயங்கி தயங்கி, அன்புவை விட்டு பிரிந்ததற்கு பிறகு என்ன நடந்ததுனு சொல்லவே இல்லையே என்றான் ஜோ. மகி சிரித்துக்கொண்டு டேய்!!!!!!!! உன்ன அடிக்க போறேன் பாரு என்று லேசாக ஜோ முதுகில் தட்டியவாறே , இப்பவே மணி 9.15 ஆகுது, நீ வீட்டுக்கு போடா, நாளைக்கு சண்டே தானே, நீ நாளைக்கு கோடம்பாக்கம் வா , அங்க நிறைய பேசலாம் என்றான் , ஜோவும் சரி என்றான், இருவரும் வண்டியை எடுக்க வெளியில் வந்தனர், ஜோ தன் பல்சர் வண்டியை எடுத்தான், மகியும் அவனுடைய "honda activa " வண்டியை எடுத்தான். அப்போது திடிரென்று ஜோ அவன் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு, அருகில் மகி அவன் வண்டியில் ஏறி அமர்ந்து இருவரும் வண்டியை முன்னோக்கி செலுத்த தயாரான போது , எட்டி ஜோ தன் இதழை மகியின் கன்னத்தில் பதித்தான். மகி இதை சற்றும் எதிர் பார்க்காததால் அதிர்ச்சியில் உறைந்து போனான். ஜோ முத்தத்தை கொடுத்து விட்டு, மகி என்ன சொல்வானோ என்ற பயத்தில் அங்கிருந்து சிட்டாய் பறந்து போனான் ஜோ.
ஹோட்டலின் வெளியில் இருந்த வாட்ச்மென் அங்கேயே நின்று கொண்டிருந்த மகியை ஒரு மாதிரி பார்த்தான். மகி , ஜோ தன்னிடம் நடந்து கொண்டதை சுதாரித்துக்கொண்டு, அங்கிருந்து அவன் வீடு நோக்கி கிளம்பினான் மகி.
மறுநாள் காலை சண்டே , கோடம்பாக்கம் அதிக இரைச்சல்களோடு ஆரம்பித்தது. அப்போது மணி காலை 8.45 கஷடப்பட்டு கண் விழித்தான் மகி. மகி அவனின் காலை கடன்களை முடித்துவிட்டு, குளித்து முடித்து அவன் அறைக்கு வரும்போது மணி 10 ஆகி இருந்தது. அப்போது "யார் அது?... யார் யார் அது?....... சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது....." என்று மகியின் தொலைபேசி ஒலித்தது.ஜோவின் அழைப்பு மணி தான் அது, ஹாய்! சொல்லு ஜோ எங்க இருக்க என்றான் மகி. கோடம்பாக்கம் நாம் இருவரும் முதன் முதலில் சந்தித்த அதே பார்க்கில் தான் இருக்கிறேன் என்றான் ஜோ. ஒஹ் , சரிடா ஜோ, இரண்டாவது மாடி , பிளாட் நம்பர் 24B , வாடா என்று சொல்லிவிட்டு மொபைலை அணைத்தான் மகி.அடுத்த மூன்றே நிமிடத்தில்,"டிக்..டிக்..." காலிங் பெல் மேலும் கீழும் அழுத்தப்பட்டது. மகி உள்ளே இருந்து வருவதற்குள் மூன்று நான்கு முறை காலிங் பெல் அழுத்தப்பட்டது, மகி ஓடிவந்து கதவை திறந்து அடிங்க குட்டி நாயே!! கொழுப்பு அதிகம்டா உனக்கு , அது என் வீட்டு காலிங் பெல் தாண்டா,என்னுடைய வேற எதுவோன்னு நெனச்சி அத்தன முறை அழுத்துறியா???? .இளம் ரத்தம் அடங்காதோ, சூடான இளம் ரத்தத்தின் வேகத்தை தான் நேற்றே பார்த்தேனே, என்று நேற்று ஜோ கொடுத்த முத்தத்தை பொடி வைத்து பேசினான் மகி. முதல் முறையாய் மகி இந்த மாதிரி தன்னிடம் பேசியதை நினைத்து ஜோவுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி. நேற்று தான் கொடுத்த முத்தம் மகியை இப்படி பேச வைக்கிறது என்று வழக்கம் போல், தன் மனதுக்குள் மனக்கோட்டை கட்ட ஆரம்பித்துவிட்டான்,ஜோ. ஜோ ஆச்சரியமாய் மகியின் வீட்டையே பார்த்தான், அழகான , மீடியமான ஒரு பிளாட், அதில் அழகழகான அலங்கார பொம்மைகள், மேலும் அந்த வீட்டை அழகு படுத்தியது , நூலால் செய்த மாலைகள், பொம்மைகள், ஓயர்களால் செய்த கூடைகள், வாத்து, குருவி, பொம்மை இப்படி அதிகமான கைவினைப் பொருட்கள் அந்த வீட்டை அலங்கரித்தது.
யெஹ்!! மகி இதெல்லாம் யார் செஞ்சது என்று கேட்டான் ஜோ. ம்ம் ரொம்ப முக்கியம்?????????எதுவும் சொல்லாமல் ,யெஹ் ! ஜோ சாப்டியா என்றான் மகி. ஜோ ,ம்ம் சாப்டேன் என்று கீழும் மேலுமாக தலையை ஆட்டினான். ம்கும்???... நீ தலை ஆட்டுகிற ஸ்டைலை பார்த்தாலே தெரியுது நீ சாப்பிடலன்னு, அங்க போய் கை கழுவிட்டு வா சாப்டலாம் என்றான் மகி. டிவி பட்டனை அழுத்திவிட்டு இருவரும் டிவி முன்னாடி அமர்ந்து டிபன் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். இருவரும் சாப்பிட்டு முடித்து மறுபடியும் டிவி முன் வந்து அமர்ந்தனர். என்ன மகி வீட்டில் யாரும் இல்லையா என்று கேள்வி எழுப்பினான் ஜோ. அம்மாலாம் பக்கத்து இருக்க ஹாஸ்பிட்டல் போய் இருக்காங்க என்றான் மகி. ஜோ மறுபடியும் அமைதியானான், என்னடா ஜோ அமைதியா இருக்க, நேத்து தந்த முத்தத்த பத்தி நினைக்கிறியா.... டேய் கவித... கவித..."நேத்து தந்த முத்தத்த பத்தி " என்று சொல்லிவிட்டு சிரித்தான் மகி. ஓகே டா ஜோ, அன்பு பிரிவிற்கு பிறகு என்ன நடந்தது அது தானே உனக்கு தெரியனும் சொல்றேன் ஜோ என்று பேச ஆரம்பித்தான் மகி.
அன்புவிடம் உன்னை விட்டு பிரிகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தாலும், எனக்கு எப்போதும் அவன் நினைப்பாகவே இருந்தது. அவனை மறக்க என்ன செய்வது என்பதை பற்றி யோசித்தே நான் அரை பைத்தியமானேன். மெல்ல மெல்ல தேற்றிக்கொண்டு என் இயற்கையான வாழ்க்கைக்கு திரும்பினேன். பின் என் தேடல் தொடங்கியது. அப்போது எங்கள் ஊரிலேயே இரண்டு வருட கால கல்லூரி படிப்பை முடித்தேன். அதுவரை எங்கள் ஊரிலேயே என் தேடலை தேடினேன், ஆனால் என் அன்பை யாரும் ஏற்கவே இல்லை, காதலை தந்தால் அது வேண்டாம் காமம் போதும் என்கின்றனர். ஆம் நான் பார்த்தவர்களில் ஒரு சிலர் காதல் வேண்டாம், உன்னிடமிருந்து காமம் மட்டும் போதும் என்று மறை முகமாக சொன்னனர், ஆனால் ஒரு சிலரோ அன்புவை போல், நேரடியாகவே எனக்கு இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் வேண்டாம், என் தேவையை நீ பூர்த்தி செய், உன் தேவையை நான் பூர்த்தி செய்கிறேன் என்று ஒரு சிலர் நேரடியாகவே சொன்னனர்.இப்படித்தான் பல முகங்களை சந்தித்தேன் இரண்டு வருடமாய். ஒரு வழியாய் டிகிரி முடித்து , வேலைக்காக சென்னை சென்றேன். எனக்கு அக்கௌன்டன்ட் வேலை சென்னை எக்மூரில் இருக்கும் பிரபல நிறுவனம் அது. நான் வந்த மூன்றே மாதத்தில் என் உயர் அதிகாரி அவர் தனக்கு இருந்த பிளாட்டை விற்கப்போவதாக சொன்னார். என் அக்காவின் ஆலோசனையின் பேரில் அதை நானே வாங்குவது என்று முடிவு செய்தேன். அப்போது தான் எங்கள் ஊரில் இருந்த உழவு நிலத்தை விலைக்கு கேட்டு , பிளாட் போட்டு விற்கும் ரியல் எஸ்டேட் காரர்கள் வந்தனர். இவர்கள் இப்படி செய்வது எனக்கு துளியும் பிடிக்காது. ஆம் இன்று இவர்களால் தான் கிராமப்புறம் இருக்கும் விவசாயமும் அழிந்து கொண்டு வருகிறது.
"நமக்கு ஒரு விஷயம் பிடிக்கவே இல்லை, அடியோடு அதை வெறுக்கிறோம். அப்படி இருந்தும் ஒரு சில காரணங்களால் நம் உறவினர்கள், நம்மை சுற்றி இருப்பவர்களால் அதை ஏற்றுக்கொள்கிறோம்".
அப்படித்தான் நானும் அக்காவின் வற்புறுத்தல், அப்போதைய பிளாட் வாங்கும் என் தேவை, அது மட்டும் இல்லாமல் எங்கள் நிலத்தை சுற்றி அனைவரும் அவரவர் நிலத்தை "விவசாய அழிவுக்கு விலை பேசிவிட்டனர்" நான் மட்டும் நடுவில் என் நிலத்தை மட்டும் வைத்து விவசாயம் பண்ண முடியாது. அதனால் நானும் விவசாய அழிவுக்கு விலை போனேன். அந்த பணத்தை கொண்டு இந்த பிளாட்டையும் வாங்கினேன்.அம்மாவும், அப்பாவும் என்னுடனேயே வந்து விட்டனர்.
பிறகு சென்னையில் என் தேடலை தேடினேன். அலுவலகம் போகும் வழியிலேயே ஒரு நண்பன் கிடைத்தான் . அவன் பெயர் ஷாம் . அவனை call boy என்று சொல்லிவிட முடியாது, ஆனால் அவன் நடந்து கொள்ளும் விதம் அப்படித்தான் இருக்கும். ஆம், பீச் , தி நகர் , இப்படி பிரபலமான காமத்தை தேடும் இடத்தில் போய் நிற்பான் ,அவனை காமப்பொருளாக காட்டிக்கொள்வான் , அவனுக்கு அவனே விலை பேசிக்கொள்வான் . ஆனால் என்னிடம் மட்டும் நல்ல நண்பனாகவே இருந்தான். ஷாமின் ஆலோசனையோடு , பீச் போன்று பிரபலமான ஏரியாக்களுக்கு என் காதலனை தேடி போனேன்.
என் தேடலில் நானும் அன்பே தேடுகிறேன் என்று ஒரு சிலர் வந்தனர். அந்த நாட்களில் என் தலைவன் கிடைத்து விட்டான் என்று சந்தோஷ கடலில் மூழ்கினேன். ஆனால் 10 நாள், 20 நாள் இருப்பார்கள் அவர்களின் தேவை முடிந்ததும் ஒரு காரணமும் சொல்லாமல் மறைந்து போவார்கள். ஜோ, உன்னைப்போல் தான் நானும், ஒரு 5 நிமிடம் என்னிடம் நன்றாக பேசினால் அவனிடம் என் முழு மனதையும் பரி கொடுத்து விடுவேன். அவனும் மற்றவர்கள் போலவே சில நாட்கள் என்னிடம் பேசி இருந்துவிட்டு மறைந்து விடுவான். இப்படித்தான் நான் அன்புவை பிரிந்து 5 வருடங்கள் எனக்கு வலிகளோடும், வேதனைகளோடும் கழிந்தது. இப்படி அடிப்பட்டு அடிப்பட்டு என் மனது மரத்து போனது. என் மனது மரத்து போன பிறகு, யார் வந்து என் காதலை ஏற்று கொள்கிறேன் என்று சொன்னாலும், நானும் சரி என்பேன். அவர்கள் காட்டும் அன்பில் நினைவேனே தவிர ஊரிப்போகமாட்டேன்.இது எத்தனை நாளைக்கு இருக்குமோ என்ற சிறிய வருத்ததோடு புதியதாக வந்த காதலனோடு அப்போதைய நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்பேன். அவன் சிறிது நாள் கழித்து பிரியும் போது வலி இருக்கும். ஆனால் இந்த வலி நான் எதிர் பார்த்தது, அதனால் என்னை அவ்வளவாக பாதிக்கவில்லை. ஆம், இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக என் மனதை "நாணலாய்" மாற்றிக்கொண்டேன். அதன் பிறகு எத்தனை மனிதர்கள் என் வாழ்வில் சூரவளியாய் வந்து,சுனாமியாய் என்னை விட்டு வெளியே சென்றனர். அப்படி எப்பேர்பட்ட சூராவளி , சுனாமி வந்தாலும் "அந்த நிமிடம் கீழே விழுந்தாலும் அடுத்த நிமிடம் நாணலாய் மேலே எழுந்தேன் ".இன்று என் இதயத்தை தொட்டு சொல்வேன் என் மனது "நாணல்". இந்த நாணல் எத்தனை முறை வீழ்ந்து எழுந்தாலும், இந்த நாணலுக்கும் வலி என்பது உண்டு என்பதை யாருமே புரிந்து கொள்ளவில்லை, அது தான் என் துரதிஷ்டம்.
இதை கேட்டு ஜோவின் கண்கள் கலங்கின.
இப்படி வலிகளோடு கடந்த என் வாழ்க்கை , என் அம்மாவின் எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற அவர்களுடைய முடிவு , சுனாமியாய், புயலாய் என் நாணல் மனதை பலமாகவே ஆட்டம் காண வைத்தது.
அதற்குள் முடிவா?..... நிறைவான முடிவாக இருக்குமா?.....
ஆதித்யா டிவியின் "டவுட்" நிகழ்ச்சி நல்ல இயல்பா இருந்துச்சு.... கொடுத்த முத்தம், அழுத்திய அழைப்பு மணி, வாட்ச்மேன் பார்வை எல்லாமே நல்லா இருக்கு.... இறுதி காட்சிக்கு காத்திருக்கேன்...
"அந்த நிமிடம் கீழே விழுந்தாலும் அடுத்த நிமிடம் நாணலாய் மேலே எழுந்தேன் "----இந்த நாணலுக்கும் வலி என்பது உண்டு என்பதை யாருமே புரிந்து கொள்ளவில்லை---- ரொம்ப அழகான வரிகள்...சோகத்தை நன்றாக வெளிப்படுத்தும் வரிகள்...முடிவுக்கு காத்திருக்கிறேன்