வீட்ல பொண்ணு பாக்கனும்னு பேச்சு வந்தப்போ, முதல்ல நான் போட்ட ஒரே கண்டிஷன் "அந்த பெண் பொன்னியின் செல்வன் படிச்சிருக்கணும்"" என்பதுதான்... நான் தமிழ் அறிவிற்கான அளவுகோலாக வைத்திருப்பதே பொன்னியின் செல்வன்தான்..... கட்டாயம் படிங்க, படிச்சுட்டு வாங்க, நிறைய பேசலாம்....
நிச்சயமா சொல்றேன், நீங்க நினைக்குற அளவுக்கு அது கடினமல்லாம் இல்ல... ஆரம்ப அத்தியாயங்களில், சில பெயர்களை நியாபகம் வைத்துக்கொள்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கலாம்... ஆனால் போகப்போக, நீங்கள் வந்தியத்தேவனுடன் உறையூர் வீதிகளை வலம் வர தொடங்குவீங்க, குந்தவையுடன் ஒன்றாக ஜோதிடரை பார்க்க செல்வீர்கள், பூங்குழலியுடன் படகில் சவாரி செய்வீர்கள், அருண்மொழி வர்மனுடன் யானையில் பயணம் செய்வீர்கள், நந்தினியுடன் ரகசியம் பேசுவீர்கள், பழுவேட்டரையர்களை பார்த்து அஞ்சுவீர்கள்..... இன்னும் என்னென்னமோ, அதை பற்றி தட்டச்சு செய்யும்போதே ஆயிரம் காட்சிகள் என் மனக்கண்ணில் படமாய் ஓடுது....
இல்லை அண்ணா.. நீங்க முழுசா படிச்சு முடிக்காததால தான் அப்படி தோணுது.. கடைசி பாகம் படிக்கும்போது கண்டிப்பா நீங்க இப்படி உணர மாட்டீங்க.. கட்டாயம் முழுதும் படிச்சு முடிங்க...