Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நாணல்-7


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
நாணல்-7
Permalink   
 


அன்று காலை சுமார் 11.30 மணி இருக்கும் , பிரைவேட் நீல நிற பேருந்து கோயம்புத்தூர் பேருந்து நிலையம் வந்தடைந்தது. அந்த பேருந்துலிருந்து கையில் டூரிஸ்ட் பேக்குடன் அன்பு இறங்கினான். அன்பு இறங்கியதும், அவன் கண்ணை யாரோ பொத்தி கன்னாமூச்சி ஆட ஆரம்பித்தனர். ஆனால் அதை விரும்பாமல் அன்பு, யாரது சொல்லுங்கள் என்று கோவமாக கேட்டான். கையை அன்புவின் கண்ணில் இருந்து எடுத்துவிட்டு , அன்புவின் முன்னால் வந்து நின்றான் மகி.
அன்பு ஆச்சரியமாய், என்ன டா நீ எங்க இங்க என்று கேட்டான் அன்பு. அன்பு , நீ வருவன்னு தெரிஞ்சி தான், இன்று காலை 8மணியில் இருந்து உனக்காக காத்திருக்கிறேன் என்றான் மகி. அதற்கோ அன்பு சொன்னான், டேய்!!! மகி நீ காலையிலிருந்து எனக்காக காத்திருக்கிறாய் என்பதை , என்னை நம்ப சொல்கிறாயா என்றான் சிரித்துக்கொண்டே. மகி கோவமாக, அன்பு நீ நம்பலனா பரவாயில்லை, நான் காத்திருந்தது எனக்கும், மேலே இருக்கும் அந்த கடவுளுக்கும் தெரியும் அது போதும் என்றான் ஒரு வித விரக்தியோடு மகி. மகி கோவமானதை புரிந்து கொண்ட அன்பு சரி விடு என்று, அப்படியே கொஞ்ச தூரம் நடந்து சென்றனர். அப்போது மகி நடப்பதை பார்த்து விட்டு அன்பு கேட்டான், " என்ன மகி இப்ப நீ நடக்கும் போது, முன்பை விட ரொம்பவும் தாங்கி தாங்கி நடக்கிராயே, உன்னுடைய தாங்கலும் , ஊனமும் இப்போது அதிகமாக தெரிகிறது என்றான்," எந்த ஒரு மன கலக்கமும் இல்லாமல் சொன்னான் அன்பு. இதற்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தான் மகி. அன்பு நீ சென்னை போனதுக்கு பிறகு இன்னும் அழகாகிட்டு இருக்க என்றான் மகி. thank u மகி என்றான் அன்பு. அப்போது மொபைல் ஒலிக்கும் சத்தம் கேட்டது. ஆம் அந்த மொபைல் வேறு யாருடையதும் இல்லை, அன்புவுடையது தான். அன்பு தன் மொபைலை எடுத்தான், "ஹாய் டியர் " பிளிஸ் வெயிட் பார் சம் டைம், ஐ கால் யூ லேட்டர் என்று சொல்லி விட்டு வைத்து விட்டான் அன்பு . இதை பார்த்து மகிக்கு ஒன்றுமே புரியவில்லை, மெதுவாக அன்புவிடம் கேட்க ஆரம்பித்தான் மகி. அன்பு இந்த மொபைல் யாருடையது என்றான் மகி, அன்பு சிரித்துக்கொண்டே என்னுடையது தான், வாங்கி இரண்டு மாதம் ஆகிறது என்றான். எதற்கு என்னிடம் சொல்லவில்லை, நம்பரும் தரவில்லை என்றான் மகி. அதற்கு அன்பு சொன்ன பதில் தான் மகிக்கு கிடைத்த முதல் அதிர்ச்சி, "" ஏய்! நான் மொபைல் வாங்கினதை, நான் உன்னிடம் சொல்லியே ஆகணுமா, அது தேவையும் இல்லை, அப்படியே இருந்தாலும் உன்னிடம் எப்படி நான் நம்பர் தருவது, நீ என்ன மொபைல் வெச்சிருக்கியா, இல்லையே அப்புறம் என்ன, உண்மையை சொல்லனும்னா, எனக்கு உன்னிடம் மொபைல் வாங்கினதை சொல்லனும்னோ , நம்பர் குடுக்கனும்னோ நியாபகமே இல்லை, "", சரி அதை விட்டு தள்ளு என்று முழுவதையும் அன்புவே பேசி முடித்தான், அதுவரை மகி அமைதியாகவே இருந்தான். யெஹ் ! மகி இப்ப நான் பாட்டி வீட்டுக்கு போறேன், இன்னைக்கு மாலை வீட்டுக்கு வா என்று சொல்லிவிட்டு கிளம்பினான் அன்பு.அன்பு சென்ற திசையையே பார்த்து கொண்டிருந்தான் மகி. மகிக்கு இங்கு நடந்தது எல்லாம் கனவா நினைவா என்றே புரியவில்லை. மகி அவனுக்குள்ளே கேட்டு கொண்ட கேள்வி, அன்பு மொபைல் வாங்கியதையும், நம்பரையும் எதுக்கு கொடுக்கனும்னு கேக்குறான், நியாபகமே இல்லை என்கிறான், ஒரு வேளை அவனுக்கு என்னையே நியாபகம் இல்லையா, நியாபகம் இருந்திருந்தால் நான் உனக்காக காத்திருக்கிறேன் என்று சொன்னதும் அதை நம்பி இருப்பான்,கடைசியாய் இப்போது கிளம்பும் போது கூட நீ எப்படி போவாய் என்று அவன் கேட்கவே இல்லையே , ஆறு மாத தனிமையில் இருந்த என்னை இப்போதும் பஸ் ஸ்டாண்டில் அனாதையாய் விட்டு விட்டு சென்று விட்டானே என்று வருந்தினான்.மகி இப்படி தனக்குள்ளே பல கேள்விகள் கேட்டுக்கொண்டு தன் வீட்டை வந்தடைந்தான் மகி. அப்போது மகியின் வீட்டில் மகியின் அக்காவும், மாமாவும் வந்திருந்தனர்.மகியின் அக்காவிற்கோ மகியின் மீது அவ்வளவு பாசம். மகி வீட்டுக்குள் நுழைந்ததை பார்த்ததும், கீழே உட்கார்ந்திருந்தவள் ஓடி வந்து மகியை பிடித்துக்கொண்டு மகி எப்படிடா இருக்கா , நல்லா இருக்கியா, காலேஜ் எப்படி போகுது , நல்லா சாப்டுடா, என்று தன் பாச மழையை மூச்சி விடாமல் பேசி முடித்தாள் மகியின் அக்கா. மகியின் மாமாவும் அன்பானவரே, மேஸ்திரி வேலை செய்பவர், இத்தனை வருடமும் மகியின் அக்காவை நன்றாகவே பார்த்துக்கொண்டு இருப்பவர். மகியின் அக்காவிற்கு திருமணத்தின் போது போட்டு அனுப்பிய நகையை விட இப்போது அதிகமாகவே வைத்திருக்கிறாள். அது எல்லாம் தன் மாமாவின் உழைப்பு.அப்போது மகியின் வீட்டில் மகி, மகியின் அம்மா, அப்பா, மகியின் அக்கா மாமா என்று அனைவரும் இருந்தனர். அப்போது அக்கா பேச ஆரம்பித்தால் அம்மா இப்போ தம்பி முன்பை விட நன்றாகவே நடக்கிறான் இல்ல, இப்ப மகியோடைய தாங்கள் அதிகமா தெரியலா , எல்லாத்துக்கும் அம்மனின் கருணை தான் காரணம் என்று ஆசையாய் தன் தம்பி மகியின் கன்னத்தை ஆசையாய் வருடி கொடுத்தால் மகியின் அக்கா.
அப்போது தான் மகிக்கு நியாபகம் வந்தது, தன் தாங்கள் நடை சரியாகிவிட்டதாக தன் அக்கா சொல்லுவதும், அங்கு அன்பு தன் தாங்கள் அதிகமாக இருப்பதாகவும், அதை ஊனம் என்று சொன்னதையும் சம்மந்தபடுத்தி பார்த்தான். என் அக்காவின் வார்த்தையில் தெரிவது என் மீது உள்ள அன்பு, என் ஊனம் என்கின்ற குறை என் மனதை பாதிக்க கூடாது என்று அவள் நினைக்கும் தாய்மையான பரிவு, ஆனால் அன்புவிடம் என்று யோசிக்கும் போதே மகியின் கண்ணில் ஒரு துளி நீர் எட்டி பார்த்தது , அதை பார்த்த மகியின் அம்மா அப்பா, அக்கா மாமா என்னடா ஆச்சி என்று பதறினார். அதலாம் ஒன்னும் இல்ல சின்ன தூசி விழுந்துடுச்சி அவ்வளவு தான் என்று சமாளித்தான் மகி . சரி சொல்லுக்கா என்ன எதுவோ சொல்ல வந்த என்று தன் அக்காவை பார்த்து கேட்டான் மகி. மகியின் அக்கா சிரித்துக்கொண்டே சொன்னார், நான் உங்களுக்கு செலவு வைப்பதற்கு தான் இங்கு வந்திருக்கிறேன் என்றார். என்னக்கா முழுசா சொல்லு என்றான் மகி.மகியின் அக்கா , அவளின் கணவனை பார்க்க, மகியின் மாமா பேச ஆரம்பித்தார், மச்சான் நம்ம "துர்கா" பெரிய பொண்ணா ஆகிட்டா , அவளுக்கு சடங்கு பண்ணனும் , அடுத்த வாரம் வெச்சிருக்கோம் , மகியின் மாமா சிரித்துக்கொண்டே "தாய் மாமன்" நீங்க கண்டிப்பா வந்துடுங்க என்றார். மகி சிரித்துக்கொண்டே சின்ன பொண்ணு 13 வயசு தான் என்ன அதிசயமா இருக்கு, என்று மகியின் அக்காவை பார்த்து சிரித்தான் மகி. மகியின் மாமா கொஞ்சம் அல்ல அதிகமே தத்துவம் பேசுவார், , ஆமாம் மகி "இந்த வாழ்க்கை பல அதிசயங்களும், கனவுகளும், மகிழ்ச்சியும், ஏமாற்றங்களும், மாற்றங்களும் நிறைந்தது " இவை அனைத்தையும் நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே, மகியின் அக்கா போதும் போதும் உங்க புராணத்தையும் உங்க திரு வாயையும் கொஞ்சம் அடக்குங்க என்றார் மகியின் அக்கா. ஏண்டி! என்ன அசிங்க படுத்த நீ ஒருத்தி போதும், என்று மகியின் மாமா சொல்லும் போது அங்கு அனைவரின் முகமும் சிரிப்பில் மிதந்தது. அனைவரும் சாப்பிட்டனர், கிளம்பும் போதும் மகியின் அக்கா மகியின் தலையை அழகாய் வருடிக்கொடுத்து அம்மா, அப்பாவை பாத்துக்கோடா , உன் உடம்பையும் பாத்துக்கோ என்று சொல்லி மகியின் கையில் "ஒரு 500 ருபாய் நோட்டை திணித்தார், வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் அக்காவின் வற்புறுத்தலால் மகியை வாங்கிக்கொள்ள வைத்தது. பிறகு மகி தன் பேன்ட் பாக்கட்டில் , தயாராக வைத்திருந்த, அதுவும் அவன் சேர்த்து வைத்திருந்த 10 ருபாய் 20 ருபாய் நோட்டுக்கள் அடங்கிய 300 ரூபாயை மகி தன் அக்காவிடம் கொடுத்து இந்தா வெச்சிக்க, அக்கா என்று கொடுத்தான் மகி. ஒரு அழுகை கலந்த சந்தோஷத்தோடு மகி கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு, சென்னை சைதாபேட்டை நம்ம வீட்லயே தான் function சீக்கிரமா வந்துட பாருங்க என்று சொல்லிவிட்டு கிளம்பினார் மகியின் அக்காவும் மாமாவும்.

அவர்கள் எல்லாம் கிளம்பிய பிறகு, மாலை 5 மணி அன்பு , அவனின் பாட்டி வீட்டுக்கு வரச் சொன்னனே என்று ஆசை ஆசையாய் கிளம்பினான். அன்புவின் பாட்டி வீட்டையும் நெருங்கினான் மகி. அந்த வீடு அழகான ஓட்டு வீடு. அங்கு சென்று மகி கதவை தட்டி அன்பு..... அன்பு....என்றான் , கதவு திறக்க பட்டது, மகி சீக்கிரம் உள்ளே வா என்றான்.
உள்ளே நுழைந்த மகிக்கு பேரதிர்ச்சி, ஆம் அங்கு ஒருவன் மாநிறம், நல்ல உயரம், மீடியமான வயதுடன் ஒருவன் இருந்தான். அதுவும் அவன் அரை நிர்வாணமாய், ஜட்டி மட்டும் போட்டுக்கொண்டு நின்றிருந்தான். அவனோ மகியை பார்த்து சிரித்தான். மகி மௌனமாய் தலையை கீழே குனிந்து கொண்டான். கீழே குனிந்து கொண்டு யோசிக்க ஆரம்பித்தான். இந்த ஆளை நாம் எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான் மகி.அப்படி யோசித்தவாரே மீண்டும் அந்த ஆளை நிமிர்ந்து பார்த்தான் மகி. மகிக்கு யார் இவன் எங்கு பார்த்தோம் என்பது மட்டும் மகிக்கு நியாபகம் வரவே இல்லை. அப்போது அன்பு பேச ஆரம்பித்தான், என்ன மகி இவரை எங்கேயோ பார்த்த நியாபகம் வருகிறதா, ஆம் இவரை முன்னரே நீ பார்த்திருக்கிறாய் என்றான் அன்பு. மகிக்கு மீண்டு குழப்பமாகி எப்படி? என்ற பார்வையோடு கோபமாக அன்புவை பார்த்தான் மகி. உனக்கு நியாபகம் இருக்கா, 12th எக்ஸாம் , இங்கிலீஷ் 1 பேப்பர் எழுதிட்டு வரும் போது உன்னை ஒருத்தர் பைக்கை கொண்டு காலில் எற்றிவிட்டரே அவர் தான் இவர். அப்போது தான் மகிக்கு நியாபகம் வந்தது, அதிர்ச்சியும் தான். அடுத்தடுத்து பல அதிர்சிகளை மகிக்கு தந்து கொண்டே இருந்தான் அன்பு.. ஆம் அது, இவர் பெயர் சிவா , இவரை நான் ரொம்ப நாளாக பார்த்துக்கொண்டே இருந்தேன் , ஆனால் எப்படி பேசுவது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன். நான் உன் மூலயமாக தான் பேசினேன், ஆம் உன்னை இவர் accident செய்ததை பயன்படுத்தி தான் இவரிடம் சண்டை போடுவது போல் நடித்து , எனக்கு இவருடைய நட்பு கிடைத்தது என்று சொல்லி முடிப்பதற்குள், யெஹ் அன்பு ப்ளாஷ் பாக் (flash back ) அப்புறம் சொல்லிக்கலாம், இப்ப வந்த வேலையை பார்ப்போம் வா என்றான் சிவா. சிவா , அவன் மேல் ஒட்டி இருந்த ஜட்டியையும் கழட்டி விட்டு பிறந்த மேனியாய் நின்றான் , அன்புவும் பிறந்த மேனியாய் நின்றான். அந்த நிமிடம் இருவரையும் பிறந்த மேனியாய் பார்க்கும் போதும், இத்தனை நாள் தன் காதலனாய், தன் தலைவனாய் தன் மன சிம்மாசனத்தில் உட்கார வைத்திருந்த அன்புவை அந்த கோலத்தில் இன்னொருத்தனுடன் பார்க்கும் போது , அனல் தெறிக்க எறியும் தீ குழியில் நிற்பதை போல் புழுவாய் மகியின் மனதும், உடம்பும் துடித்தது. அன்பு அடுத்ததாய் செய்த காரியம் தான் மகியின் கோபத்தின் உச்சம் . அது" யெஹ் மகி சீக்கிரம் நீயும் உன் ஆடையை எல்லாம் கழட்டி விட்டு வா, உன்னை நான் **** பண்ணனும் என்றான் அன்பு. அப்படி சொல்லிக்கொண்டே அன்பு ஆணுறையை எடுத்து மாட்டிக்கொண்டு தயாரானான் அன்புவும் , சிவாவும் . மகி ஆணுறையை பற்றி 12th biology -ல் படித்திருக்கிறான், ஆனால் இப்போது தான் முதல் முறையாய் அதை நேரில் பார்க்கிறான். மகி ஆணுரையே பார்ப்பதை பார்த்து அன்பு சொன்னான், டேய்!!! மகி இப்போதெல்லாம் safety ரொம்ப முக்கியம். உன்னை நான் பார்த்தே ஆறு மாதம் ஆகிறது, நீ யாரருடன் எப்படி இருந்தாய், நான் எப்படி இருந்தேன் என்று உனக்கு தெரியாது அப்புறம் என்ன என்றான் அன்பு. நீயே சொல்லு இந்த ஆறு மாதத்தில் நீ எத்தன பேரு கூட போயிருப்ப என்று சொல்லி அன்பு வாயை மூடுவதற்குள் ,மகியின் நெஞ்சம் இதை கேட்டது குமுறியது, தன ஆறு மாத மனவலிமையையும், உணர்ச்சி காத்திருப்பையும் அசிங்கப்படுத்தும் போது , மகியின் மனதும், உடலும் எரிமலையாய் வெடித்து சிதறியது, டேய்!!! என்னடா சொன்ன என்று கத்திக்கொண்டு வந்து அன்புவின் கழுத்தை எட்டிப் பிடித்தான் மகி......... அப்போது அங்கு வெளியில் டக்.... டக்..... என்று கதவு தட்டப்பட்டது.........

(நாணல் வளையும்)


__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

இருதயம் பலஹீனமானவர்களால் இக்கதையை படிக்க முடியாது இக்கதையை படித்தவர் இருதயம் பலஹீனமாவதை தடுக்க முடியாது

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

rajspr thank u for ur wonderful comment..............

unngaludaya indha karuththu ennai innum indha kadhayai suvarasiyamaaga kondu poga udhavum mikka nandri...........

thank u very much....



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

எதுக்குத்தான் இப்படி வார்த்தைகளை விஷமா பயன்படுத்துராங்களோ.

__________________



கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

ingu en thalaivan porukku thayaar paduththi vaiththulla pattai thiittiya vaalai avan vaarthaikal ennai nilai kulaya vaikkiradhu/////////////////////////

 

neththu kuda enakku ippadi onnu nadandhuchi.............. en vazhvil oruvan endru ninaiththavanaal.............

 

ovvoru naalum ovvouru yugamaai selgiradhu..................

 

en vasandham eppodhu en vasam aagum.................



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 93
Date:
Permalink   
 

I DONT KNOW WHY THIS FIELD GUYS NOT TRUSTING FOR EACH OTHER.



__________________
nada


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

adhu dhaan indru varai namakku puriyaadha pudhiraai irukkiradhu



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

நாம் மிகவும் நேசிக்கும் ஒருவரிடத்தில் அப்படிப்பட்ட வார்த்தைகள் வருவதை நிச்சயம் தாங்கிக்கொள்ள முடியாது..... உலகிலேயே கொடிய ஆயுதம், நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள்தான்.... பெயருக்கும், குணத்திற்கும் சம்மந்தமே இல்லாத கயவனின் பெயர் "அன்பு"..... பாவம் மகி....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

anbu endra peyar appadi oru charecterku vechadhukku kaaranam aduththa partil ungal anaivarukkum.......

pala per indha kadhayil ketkum  ore kelvi idhu dhaan..... andha charecterku yedhukku andha name(anbu) vechingannudhaan.........

thank u for ur compliment vijay........



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard