அன்பு ஓடி வந்து அந்த இடத்தில் பார்த்தான்.......... அங்கு மகி கீழே விழுந்து கிடந்தான், இரு சக்கர வாகனம் இடித்து அவன் கீழே விழுந்து கிடந்தான். ஓடி வந்த அன்பு மகியை தூக்கினான், அந்த இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவனை திட்டிக்கொண்டே அடிக்க சென்றான்.... இரு சக்கர காரனோ, யோவ்! என்ன ஏன்யா அடிக்க வர! அவன் எங்கேயோ வேடிக்கை பாத்துகிட்டே என் வண்டியில் வந்து விழுந்ததே அவன் தான் அவனையே என்ன நடந்ததுனு கேளு என்று திட்டினான் .அன்புவோ மகியை பார்த்தான், மகி அமைதியாய் தலையை குனிந்தான். அப்போது அன்புவுக்கே புரிந்தது, மகியின் தவறுதான் இது என்று அமைதியானான் அன்பு.
மகிக்கு இதை எல்லாம் பார்க்கும் போது மிகவும் சந்தோஷம். அன்பு தான் அடிபட்டு இருப்பதை பார்த்து துடி துடித்து போனதையும், தனக்காக சண்டை போடுவதையும் பார்த்து இன்பக்கடலில் மூழ்கிப்போனான். இங்கு நடப்பதெல்லாம் காதலின் , அன்பு தன் மீது வைத்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடு என்று நித்தமும் மகிழ்ச்சியில் நீந்திக்கொண்டு இருந்தான் மகி. ஆனால் மகியை இரு சக்கர வாகனத்தில் இடித்தவனிடம், அன்பு சண்டை போட்டதற்கு வேறு காரணம் இருக்கிறது. அது?????????(சஸ்பென்ஸ் , ), அந்த ஒரு விஷயம் தான் அன்புவின் உண்மையான முகத்தை , மகி புரிந்து கொள்ள இருக்கும் துருப்பு சீட்டு .
இந்த விபத்தில் பெரிதாக மகிக்கு காயம் எதுவும் இல்லை, காலில் கொஞ்சம் தோல் மட்டும் வழுட்டிக்கொண்டது . அன்பு மகியை தாங்களாக டீ கடைக்கு அழைத்து போனான். அந்த நிமிடத்திலும் அன்புவின் கைகள், மகியின் இடுப்பில் அழுத்துவது, அவன் பின் புஜத்தை அழுத்துவது என்று சில்மிஷம் செய்தது. இதை எல்லாம் ஒரு காமத்தோடே செய்தான் அன்பு. ஆனால் நம் அப்பாவி நாயகன் மகியோ , அப்போது காதல் என்னும் இருட்டில் குருடனாய் இருந்ததால், அன்பு செய்யும் அனைத்தையும் காதலின் வெளிப்பாடாய் பார்த்தான். அன்பு அவன் பக்கத்தில் இருந்தவனை அறிமுக படுத்தினான், மகி இவன் என் சித்தப்பா மகன், என் தம்பி அசோக் என்று அறிமுக படுத்தினான். ஓஹ ! நாம் அவன் தம்பியை தான் தவறாக நினைத்தோமோ என்று வருந்தினான் மகி. ஆம் இந்த அசோக் தான் அரை மணி நேரத்திற்கு முன் அன்பு ,டீ கடையில் சில்மிஷம் செய்து கொண்டிருந்தவன். ஓ இவர்கள் செய்வதை பார்த்து தான் மகி நிலை குலைந்து போனது, ஆனால் , அன்பு அசோக் தன் தம்பி என்று சொன்ன ஒரு வார்த்தையில் , மகி அவர்கள் முன்பு இருந்த கோலத்தை எல்லாம் மறந்து போனான். மகி, அன்புவின் நட்பு மகியை பொறுத்த வரைக்கும் நன்றாகவே போனது. மகி, அன்பு இருவருக்கும் அன்று கடைசி தேர்வும் முடிந்தது. அனைத்து தேர்வும் முடிந்த சந்தோஷத்தில் சினிமாவிற்கு நண்பர்கள் அனைவரும் சென்றனர். அதில் அன்பு, மகியும் இருந்தனர். சக மாணவர்கள் இருந்த இடத்திலும், மற்ற மாணவர்களுக்கு தெரியாத விதத்தில் மகியிடம் தன் சீண்டலை செய்து கொண்டிருந்தான் அன்பு. அதன் பின்பு ஒரு மாத விடுமுறை இருந்தது. அதில் மகி தனக்கே தெரியாமல் அன்புவிடம் அவனுக்கு இருந்த காதலிலும், அன்புவிடம் தன்னையும், தன் மனதையும் இழந்து கொண்டிருந்தான். அன்பு இந்த ஒரு மாத விடுமுறையில் மகியிடம் பல முறை தன் தேவையை பூர்த்தி செய்து கொண்டான். அப்படி பட்ட நேரத்தில் மட்டும் அன்பு தன் சுய ரூபத்தை காட்டுவான். ஆம் அந்த நேரத்தில் மட்டும், மகி,
"வெறி கொண்ட சிங்கத்திடம் சிக்கிய மானாய் துடிப்பான்".
இவை எதையுமே புரிந்து கொள்ள முடியாத, காதல் என்னும் போதையில் தெளியாமால் இருந்தான் மகி. கொஞ்சம் கொஞ்சமாக மகிக்கு அன்புவின் மீது சந்தேகம் வந்தது, அன்புவை தன் முன்னால் நிறுத்தி கேள்வி கேட்கவும் ஆரம்பித்தான் மகி. ஆம் , மகியிடம் சொல்லாமல் எங்கேயாவது போய் விடுவான் அன்பு. ஒரு நாள், இரண்டு நாள் கழித்து தான் மகியை பார்க்க வருவான் அன்பு. மகி இரண்டு நாட்கள் எங்கு சென்றாய் என்று கேட்டால் அதற்கு சரியான பதில் இருக்காது, நம்பும்படியான பதிலும் இருக்காது. இப்படியே சண்டை அடிக்கடி இருவருக்குள்ளும் வரும், மகி, அன்பு இருவரும் பேசாமல் சென்று விடுவர். இப்படி பேசாமல் இருக்கும் போது முழு தவறும் அன்புவின் மீது தான் இருக்கும். அப்படி இருந்தும் எவ்வளவு நாள் ஆனாலும் அன்பு வந்து பேச மாட்டான். மகியாக தான் போய் பேசவேண்டும். இப்படித்தான் மகி அன்பு மீது இருக்கும் காதல் ,மின்கம்பி மீது செய்யும் பயணமாய் போய்க்கொண்டு இருந்தது. 12th தேர்வு முடிவுகள் வெளியானது. மகி, அன்பு இருவருமே நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, மகி, அன்பு இருவருக்கும் தற்காலிக பிரிவும் ஏற்பட்டது. ஆம் மகி கோயம்புத்துரிலே , ஒரு பிரைவேட் கல்லூரியில் B .SC (MATHEMATICS ) சேர்ந்தான். ஆனால் அன்புவோ , கொஞ்சம் வசதி படைத்தவன், அதனால் சென்னையில் ஒரு பிரபல கல்லூரியில் B .COM சேர்ந்தான். அங்கேயே ஹாஸ்டலில் தங்கி படித்தான். இந்த தற்காலிக பிரிவு அன்புவை பாதிக்கவில்லை. ஆனால் மகிக்கோ ஒரு பெரிய இடியே தன் வாழ்வில் விழுந்ததை போல் சோகத்தில் உறைந்தான். அன்புவை கோயம்புத்தூர் பஸ் நிலையம் சென்று வழி அனுப்பியது மகி தான். அப்போது மகியின் கண்ணீல் கண்ணீர் துளிகள் வழிந்து கொண்டிருந்தது. மகி அழுவதை பார்த்து , அன்பு என்ன நினைத்தானோ அவனுக்குள் ஏதோ ஒரு சிறு சலனம், இந்த அழுகைக்கு தான் உகந்தவனா என்று தான் நினைத்திருப்பான் .அன்பு ஏறிய சென்னை பேருந்து பின்னோக்கி சென்று கொண்டிருப்பதையே மகி பார்த்துக்கொண்டு இருந்தான். அப்போது மகியிடமும், அன்புவிடமும் மொபைல் எதுவும் இல்லை. அதனால் அவர்கள் தொடர்பிலும் இருக்க முடியவில்லை. அன்பு போகும் போது மட்டும் மகியிடம் சொன்னான், நான் மாதம் ஒரு முறை நிச்சயம் ஊருக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு சென்றான், ஆனால் இதுவரை அவன் சென்று நான்கு மாதம் ஆகிறது, இது வரை அவன் ஊருக்கு ஒரு முறை கூட வரவே இல்லை. அன்புவை பார்க்காமல், ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் ரொம்பவும் கலங்கி போனான் மகி. மகி , அன்புவிடம் பேச நினைத்த வார்த்தைகளை எல்லாம், எழுத்துக்களாய் எழுத ஆரம்பித்தான்.
என் தலைவனே"♥""♥""♥" அன்று"♥""♥""♥" நீ என் அருகில் இருக்கும் போது"♥""♥""♥" என் சுமைகளும் சுகமானது"♥""♥""♥" நான் உன் தோளில் சுகமாய் சாயந்திருந்ததால்"♥""♥""♥" இன்று"♥""♥""♥" என் சுகங்களும் சுமையானது"♥""♥""♥" நீ என் அருகில் இல்லாததால்"♥""♥""♥"
மகி தன் மனதையும், தனக்குள் உள்ள காதலையும், அதனினும் மேலாக தன் தேகத்தையும் பரிசுத்தமாய் வைத்துக்கொண்டு அன்புவின் வருகைக்காக காத்திருந்தான் மகி. ஆம் முதல் செமஸ்டர் முடிந்து ஊருக்கு அன்பு வருகிறான் என்று கேள்வி பட்டதும் , தன் ஆறு மாத காத்திருப்பின் கேள்விக்குண்டான விடை கிடைக்க போகிறது என்று தெரிந்ததும், தன் ஒற்றைக் காலால் எகிறி குதித்து நடனம் ஆடவே முயற்சி செய்தான்.. ஆறு மாத காலம் தன் காதலை மகி போற்றி பாதுகாத்தது பெரிய விஷயம் தான், ஆனால் அதனினும் பெரியது மகிக்குள் ஒளிந்து இருந்த உணர்ச்சிகளை கிளரியவனும்,வெளிப்படுத்தியவனுமாகிய அன்புக்காகவே , இத்தனை நாள் தன் உணர்சிகளையும் பரிசுத்தமாய் பாதுகாத்து வந்தான் மகி. "" எங்கோ ஒரு புத்தகத்தில் படித்தது, எவன் ஒருவன் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறானோ , அவன் தான் உண்மையான மனிதன், ஞானியும் கூட " என்பது.. ஆம் , மகி நல்ல , உண்மையான காதலனாகவும், நல்ல மனிதனாகவும் காத்திருந்தான் அன்புவின் வருகைக்காக மகி. அன்றைய நாள்; தான் மகியின் வாழ்கையை மாற்றியது. அன்று மகியிடம் அன்பு பேசிய வார்த்தைகளும், அவன் ஏற்படுத்திய காயங்களும் தான் மகியின் மனதை இன்று "நாணலாய்" மாற்றியிருக்கிறது. ஆமாம், ஜோ ........... அவனால் தான் இன்று என் மனது "நாணல்" ஆனது என்று ஜோவிடம் சொல்லி மௌனம் ஆனான் மகி.
மகி-ஜோ, மகி-அன்பு.... யாரோட சேர்த்து வைக்க போறீங்க?..... அன்பு அவ்வளவுதானா?.... நிகழ்காலம் வந்தாச்சு, இன்னும் என்னென்ன திருப்பங்கள் வைக்க போரிங்கனு தெரியல....