கூகுள் பிளஸ், ட்விட்டர் போன்றவைகளின் போட்டியை சமாளிக்க பேஸ்புக் அடிக்கடி புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் வந்துள்ள புது வசதி தான் ஒரு குறிப்பிட்ட நபர்அல்லது பேஸ்புக்க பேஜ்களின் அனைத்து போஸ்ட்களையும் Notification-இல் பெறுவது. சில நபர்கள் அல்லது பேஸ்புக் பக்க பகிர்வுகள் நமக்கு முக்கியமானதாக இருக்கக்கூடும். நமக்கு அதிகமான நண்பர்கள் இருப்பின் குறிப்பிட்ட பதிவுகளை நாம் கவனிக்க மறந்து விடுவோம், இதுவே அந்த புதிய பதிவுகள் Notification - இல் வந்தால் நாம் கண்டிப்பாக பார்ப்போம். அதற்கு உதவுவது தான் இந்த வசதி. எப்படி என்று பார்ப்போம்.
நண்பர்களின் பதிவுகளை Notification - இல் பெற:
முதலில் குறிப்பிட்ட நண்பரின் Profile பக்கத்துக்கு செல்லுங்கள். இப்போது Friends என்பதை கிளிக் செய்தால் "Get Notifications" என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது அவர் புதியதாக போஸ்ட், போட்டோ எதைப் பகிர்ந்தாலும் உங்களுக்கு Notifications வரும்.
பேஸ்புக் பேஜ்களின் பதிவுகளை Notification - இல் பெற:
முதலில் குறிப்பிட்ட பேஸ்புக் பக்கத்துக்கு செல்லுங்கள். இப்போது Liked என்பதை கிளிக் செய்தால் "Get Notifications" என்பதை கிளிக் செய்யுங்கள்.
இனி ஒவ்வொரு புதிய பகிர்வும் உங்களுக்கு Notification ஆக வரும்.