Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: You Are Cordially Invited


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 15
Permalink   
 


நானும் கிச்சாவும் ஹாலில் அமர்ந்து “ஹிண்டு” பாத்துண்டிருந்த ஒரு காலை கேட் திறக்கும் சத்தம் கேட்டது.. 

“ஹே ராகினி.. என்ன இது.. புதுக்கோலம்.. என்ன விசேஷம்.. உள்ள வா..”

பின்னால் எட்டிப் பார்த்து.. “ஹை தீனா.. வா.. வா.. எப்படிடா இருக்கே..?”

கிச்சா சிரிப்புடன் வரவேற்றான்.. 

அவள் அதீத அழகுடன் இருந்தாள்.. கறுப்பு தாவணி, புதுவித வேலைப்பாடு நிறைந்த ஜாக்கெட், பாவாடையில் கலக்கலாக இருந்தாள்.. ரெட்டை ஜடை out of fashion போலிருந்தாலும் பாந்தமாக இருந்தது..

“யாரிவன்” என்பது போல என்னைப் பார்த்தபடியே உள்ளே வந்தாள்.. 

“என்ன கிருஷ்ணா.. அக்கா வீட்டு நினைப்பேயில்லையா.. இந்த பக்கமே ஆளக் காணோம்.. எப்படி இருக்கீங்க..?” அவனுக்கான கேள்வியானாலும் பார்வை என்னவோ என் மீதே.. 

நிலைமை அறிந்து அவனே.. “சின்னா.. இது ராகினி.. நம்ம தெரு தான்.. நாலு வீடு தள்ளி...  சுப்பராயலு BE-ன்னு போர்ட் பாத்திருப்பியே... அந்த வீடு தான்.. உன்ன மாதிரியே +2 ரிசல்ட்க்காக வெயிட் பண்றா.. இது தீனா.. ராகினியோட தம்பி.. அடுத்த வருஷம் board exam எழுதப் போறான்.. என்ன கரெக்டாடா..” அவனிடம் கேட்டுக் கொண்டான்.. 

“பை தி வே.. ராகினி.. திஸ் இஸ் ஸ்ரீநிவாஸ்..  உன் செட் தான்.. எங்க அத்திம்பேரோட தம்பி.. ” 

பரஸ்பரம் முகமன் கூறிக் கொண்டோம்.. 

அது வேற ஒண்ணுமில்ல.. கிச்சா ஒரு வருஷம் முழுக்க இம்ப்ரூவ்மெண்ட் எழுதறேன் பேர்வழின்னு.. நெய்வாசலுக்கும் தஞ்சாவூருக்கும் ஷண்டிங் அடிச்சதால இங்க எல்லாரையும் அவனுக்கு ரொம்பவே பரிச்சயம்.. 

“ஆமா.. என்ன ஆச்சு ராகினி... ஹாஃப் சாரி-ல? டேய் நீ.. இதெல்லாம் கேட்க மாட்டியா..” தீனாவை பார்த்து கண்ணடித்தான்..

“கிருஷ்ணா ப்ளீஸ்.. வாராத... இன்னிக்கு யுகாதி.. அதான் அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காம தாவணி போட சொன்னாங்க” 

“அபத்தம் செப்தாவா...? இல்லண்ணா.. இவளே தான் தாவணிய மாட்டிக்கிட்டு வந்தா... அடம் புடிச்சு ரெட்டை ஜடை வேற”

அங்கு என்னைத்தவிர எல்லோரும் சிரித்து வைத்தார்கள்..

எனக்குத்தான் எப்படி ரியாக்ட் செய்வதென்றே தெரியாமல் ஒப்புக்கு புன்னகை சிந்தினேன்.. அவள் என்னைக் கண்டு ரொம்பவே வெட்கப்பட்டதாய் தோணினது.. லேசாய் எரிச்சலானேன்.. மறுப்பதற்கில்லை...!

கையிலிருந்த தட்டின் மூடியை நீக்கி.. “எடுத்துக்கோங்க.. யுகாதிப் பச்சடி” கிச்சாவின் பக்கமாய் நீட்டினாள்..

கலர் கலராய்.. அது என்னவோ தெரியலை..  

அவன் கொஞ்சம் எடுத்து என்னிடம் நீட்டினான்..

ரெண்டு விரலால்.. எடுத்தேன்.. பச்சையாய் இருந்தது..  

வாயில் போட்டதும்..

“தூத்தூ..”

பேசின் பக்கமாய் ஓடினேன்.. பின்னாலேயே கிச்சா ஓடி வந்தான்.. !



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 17
Permalink   
 


அந்த இரவு மனது ரொம்பவே சஞ்சலப்பட்டது..!

பாய் விரித்து அவன் உட்கார, அவன் மடி மீது தலை வைத்துப் படுத்துக் கொண்டேன்.. தலை கோதினான்...

என் அவஸ்தை புரியாமல் “மானச சஞ்சரரே..” பாடினான்..

நன்றாகத் தான் பாடினான்.. என்னை ஏனோ அது கொல்லாமல் கொன்றது..

கன்னத்தை வருடினான்.. என் கண்ணீர் தட்டுப் பட்டிருக்க வேண்டும்.. பாட்டை நிறுத்தாமல்.. துடைத்து விட்டான்.. 

பாடி முடித்ததும்.. தன்னைத் விடுவித்து அருகில் படுத்துக் கொண்டான்..

தன் பக்கமாக இழுத்தான்.. நான் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டேன்..

“குழந்தடா நீ.. எதுக்கு அழறதுன்னு விவஸ்தையே இல்லாம.. பாவம்டா.. அவா ரெண்டு பேரும் ரொம்ப நன்னா படிப்பாத் தெரியுமோ.. அதுலயும் அந்த தீனதயாளன் இருக்கானே.. ரொம்ப சுட்டிடா.. அகடெமிக்ஸ், கோ கரிக்குலர், எக்ஸ்ட்ரா கரிக்குலர்னு ஆல் ரௌண்டர்டா.. நல்ல ஃபேமிலி.. அத்திம்பேர் இல்லாத நேரங்கள்ல உன் மன்னிக்கு ரொம்பவே ஒத்தாசையா இருப்பா.. அவா புது வருஷம் அதுவுமா நீ தூத்தூன்னு ஓடினது நேக்கென்னவோ அச்சான்யமாபட்டது... பாவம் அதுகள்.. ஒண்ணு +2 ரிசல்ட் எதிர்பாத்துண்டிருக்கு.. ஒண்ணு டென்த் போறது.. அதான் கொஞ்சம் டென்ஷனாயிட்டேன்.. மத்தபடி ஒண்ணுமில்ல.. ”

நான் பதிலேதும் சொல்லவில்லை..

“நோக்கு இன்னும் கோபம் தீரலன்னா.. என் கன்னத்துல அறஞ்சுடு..” என் கையை இழுத்து அறைய முற்பட்டான்.. நான் கையை விடுவித்து அவனை இன்னும் இறுக்கிக் கொண்டேன்..

என்னுள்ளேயே மருகினேன்.. “ஐயோ.. கிச்சா.. உன் வார்த்தைகள், உன் பாட்டு, உன் தொடுதல், நீ அவா மேல காட்ற கரிசனை.. என் மேல நீ காட்ற அன்பு.. எல்லாமே.. சந்தேகத்துக்கு இடமில்லாம.. நிதர்சனமான உண்மை.. ஆனா.. நோக்கு நான் எப்படின்னு புரிய வைப்பேன்..”

“ஏண்டா எதுவும் பேச மாட்ற.. இன்னும் ஆத்திரம் அடங்கலையா..?”

நான் முகத்தைத் தூக்கி இல்லையென்பதாய்.. தலையசைத்தேன்.. அவன் குனிந்து என் உதடுகளைக் கவ்வினான்..

அன்றைய இரவில்... கனவில்.. National Geographic Channel-இல் பார்த்த இரு walrus-கள் ஜோடியை அடைய ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன.. walrus-களுள் ஒன்று நான், மற்றொன்று ராகினி!



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 18
Permalink   
 


அடுத்த வாரத்தில் ஒரு நாள் காலை, ஹாலில் நகம் வெட்டிக் கொண்டிருந்தேன்..

கிச்சா ஏதோ வாங்கி வருவதாக சொல்லி வெளியே சென்றிருந்தான்.. போன சிறிது நேரத்திலேயே.. மூச்சிறைக்க ஓடி வந்தான்.. வந்தவன் வேகமாக நுழைந்து ஸோஃபாவில் இடிக்க.. ஓரத்து நகத்தை கையால் பிய்த்துக் கொண்டிருந்த எனக்கு அது ரத்தத்தோடு வந்தது..

“எரும.. கண்ண எங்கடா வச்சிட்டு வர்ற.. இப்படியா தடால் புடால்னு”

அவன் சட்டையே செய்யாமல் ஒரு மாதிரியாக அருகில் வந்தான்.. திடீரென்று என் மேல் விழுந்து ஸோஃபாவோடு வைத்து அணைத்து..முத்தமிட்டான்..

“டேய்.. டேய்.. பொறுக்கி படவா.. கதவு திறந்திருக்குடா.. என்னடா ஆச்சு..”

“ரிசல்ட் வந்துடுத்து.. நீ 1124 எடுத்திருக்கே..”

“என்னடா சொல்ற.. நோக்கு எப்படிடாத் தெரியும்..”

“நேத்தே உன் நம்பர எங்க செண்டர்ல குடுத்து வச்சிருந்தேன்.. கடைப் பக்கம் போனப்ப எல்லாரும் பேசிண்டிருந்தா.. செண்டருக்கு ஃபோன் பண்ணி கேட்டேன்.. அவா தான் சொன்னா..”

“சரியா பாத்தாளா.. என் நம்பர் தானா?”

“உன் நம்பரே தான்.. வெரிஃபை பண்ணிண்டேன்.. அச்சச்சோ.. அவசரத்துல அத்திம்பேருக்கு சொல்ல மறந்துட்டேனே.. நான் போய் சொல்லிட்டு வந்துடறேன்..”

“டேய் .. டேய்.. இருடா.. நானும் வர்றேன்.. ஏன் இப்படி மாரத்தான் ஓடிண்டிருக்கே”

“நோக்குத் தெரியாது.. டுடே.. கிச்சா இஸ் வெரி வெரி ஹேப்பி..”

 

அண்ணாச்சி கடையிலிருந்து அண்ணாவை அழைத்தோம்.. கிச்சா தான் பேசினான்.. பேசியவாறெ என்னைப் பார்த்தான்..

“நீயே பேசு” - சைகை செய்தேன்..

“அத்திம்பேர்.. அவனுக்கு வெட்கம் போல.. நீங்க நேர்லயே வந்து பேசிக்கோங்கோ..” ரிசீவரை வைத்ததும்.. நடக்க எத்தனித்தோம்..

“ஏ.. என்ன கிளம்பிட்ட..?” அண்ணாச்சி அதட்டினார்..

“ஃபோனுக்கான காச தான் முதல்லயே கொடுத்துட்டேனே..”

“ஏ .. அத யாரு கேட்டா.. ஆயிரத்து நூத்தி சில்லறைன்னு மார்க்குன்னு சொன்னல்லா.. முட்டாய குடு..” அண்ணாச்சி வாயெல்லாம் பல்லானார்..

“அது நாயில்ல அண்ணாச்சி.. இவன்”

“அதுக்கெதுக்கு நாயில்ல.. நரியில்லங்கா.. ஏ.. யாரு எடுத்தா.. என்னடே..? நீ முட்டாய குடுத்துட்டு போ.. என்ன நாஞ் சொல்லுறது..?”

கிச்சா.. கையில் ஒரு ரூபாய் மட்டும் தான் மிச்சம் இருந்தது.. அதை அவரிடம் கொடுத்து.. “ஏ.. அண்ணாச்சி.. இந்தா.. இங்கன இத்தன பாட்டில் இருக்குல்லா.. நீங்களே.. ஒண்ண எடுத்து இவன் பேர சொல்லி சாப்டுருங்க.. என்ன நாஞ் சொல்றது..?” 

அவரைப் போலவே இமிட்டேட் செய்ததும்.. அவர் குலுங்கி குலுங்கி சிரித்தார்.. 

நாங்களும் சிரித்தபடியே வீடு வந்தோம்.. உள்ளே நுழைந்தது தான் தாமதம்.. என்னை இழுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.. 

“டேய்.. விட்றா.. என்னடா.. இது.. பட்டப்பகல்ல... நீ தான் ஏதோ பகல்ல இதெல்லாம் கூடாதுன்னு.....?”

“அதெல்லாம் பேசாத.. Law makers are the Law breakers.. இன்னிக்கு ஒரு நாள் matinee show.. தான்..”

எனக்கு வெட்கமாக இருந்தது.. அவன் என் முகத்தைத் தூக்கி.. அருகே வந்தான்.. 

ஒரு மணி நேரமாவது முத்தமிட்டிருப்போம்.. அதிகம் என் கீழுதட்டை உறிஞ்சினான்.. வலித்தது.. ஏதோ வித்தியாசமான சுவை நாவில் பட்டது.. “ஐயோ..என் ரத்தம்”.. நான் அவனைத் தள்ள முற்பட்டேன்.. அவன் பிடிவாதமாக இருந்தான்..  என் எல்லா முயற்சிகளும் வீணானது.. அவன் என் உதடுகளை விடுவிக்கவேயில்லை.. 

“தட்... தட்.. தட்..”

கதவு தட்டும் சத்தம் கேட்டுத் தான் வாயைப் பிரித்தான்.. அவசர அவசரமாக கீழே இறங்கினோம்..

“யார்ரா கரடி மாதிரி..” கிச்சா எரிச்சலுடன் கதவைத் திறந்தான்..

அங்கே..!

(தொடரும்)



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
RE: You Are Cordially Invited
Permalink   
 


very realistic and nice narration of the story...thnks for ur understanding...really I proud of u all for having good talents in writing...keep it up

__________________


புதியவர்

Status: Offline
Posts: 0
Date:
Permalink   
 

hmm maybe athu rakiniya irukum vry intrsting

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

@சாம்....
இது அண்ணாச்சியோட முதல் கதை நண்பா... இதன் சென்சார் செய்யப்படாத வெர்ஷன் இன்னும் பயங்கர "கிளுகிளுப்பா" இருக்கும்... ஒரு வாசகனாக நான் சொன்ன ஒரு கருத்தை ஏற்று இப்போவரை அவர் "காமம்" கலக்காத கதைகளை எழுதிட்டு இருக்கார்.... ரொம்ப பெருமையான விஷயம் அது....
விரைவில் ஒரு மீன் பெயரில் அண்ணன் எழுதி வெளிவர இருக்கும் ஒரு கதையில், அவரோட இன்னொரு முகத்தை(?) நீங்க பார்ப்பிங்க....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

@விஜய்

//அவரோட இன்னொரு முகத்தை(?) நீங்க பார்ப்பிங்க....//

அண்ணனுக்கு மொத்தம் எத்தன முகம் நண்பா

__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
நன்றி!
Permalink   
 


anbaithedimsvijaykavithansamram

கருத்துப் பதிந்த உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

msvijay - உங்க அக்கப்போருக்கு ஒரு அளவில்லையா?? no

@  kavithan - உங்கட கணிப்பு மெத்தவும் சரி..! smile

 



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 19
Permalink   
 


ஹை கிருஷ்ணா..” உற்சாகமாய் ராகினி..  அவளைப் பார்த்ததும் ஏனோ தெரியலை... நேக்கு டாப் டூ பாட்டம் பத்திண்டு வந்தது!

“ஹை ராகினி.. உள்ள வா.. என்ன நீயும் ரிசல்ட் பாத்துட்டு வர்றியா..”

“நீயும்னா.. வேற யாரு பாத்தது..?”

“மறந்துட்டியா.. எங்க சின்னாவும் +2 தாம்மா.. 1124 ஸ்கோர் பண்ணிருக்கான்..”

“ஓ.. ஆமால்ல.. அன்னிக்கு சொன்னீங்க...”

என்னிடமாய்.. “கங்கிராட்ஸ்” என்றபடியே வந்தவள்.. அருகே வந்ததும் பதறினாள்.. 

“என்ன இது உதட்டுல ரத்தம்.. என்ன ஆச்சு..?”

“அ.. து.. உதட்ட கடிச்சிக்கிட்டேன்..” நான்..

“இடிச்சுகிட்டான்..” கிச்சா..

ஒரு சேர பதில் தந்தோம்.. 

அவள்.. குழப்பத்துடன் பார்த்தாள்.. கடிச்சதா?.. இடிச்சதா?.. ஆர் யூ கைஸ் ஓகே?”

“அத விடு ராகினி.. எவ்வளவு ஸ்கோர் பண்ணே..” கிச்சா உதவினான்..

“போய்.. மருந்து எதாவது போடுங்க ஸ்ரீநிவாஸ்..”

சரியென்பதாய் ஆமோதித்து பெட்ரூம் நோக்கி நகர்ந்தேன்..

“உங்க சின்னாவ விட 12 மார்க் ஜாஸ்தி.. 1136.. இந்தாங்க.. லட்டு..” எனக்கும் கேட்கும்படியாக சற்று உரக்கவே சொன்னாள்.

“என்ன ராகினி.. லட்டு”

“பின்ன.. கேக் கொடுத்தா.. முட்டை இருக்குமே.. அது இருக்குமே.. இது இருக்குமேன்னு கடுப்பேத்துவீங்க... அதான்.. உங்க வீட்டுக்கு மட்டும் லட்டு..”

“ஐயோ.. நான் அப்படி மீன் பண்ணல.. சாக்லேட் தந்திருக்கலாமே... இது கொஞ்சம் அன்கன்வென்ஷனலா இருக்கேன்னு கேட்டேன்..”

“நீங்க மீனும் பண்ண வேணாம்.. சிக்கனும் பண்ண வேணாம்.. புடிங்க பாக்ஸ.. நான் என் ஃபிரண்ட்ஸ் வீட்டுக்கு போகணும்..” கூவியபடியே பறந்தாள்..

நான் வாயை ஒத்திக் கொண்டே ஹாலுக்கு வந்தேன்.. 

லட்டு பாக்ஸை டீபாயில் வைத்தவன்.. என்னை கையைப் பிடித்து இழுத்தான்.. 

“இதிலெல்லாம்.. மிச்ச மீதி வைக்கப்படாது.. வா”

மீண்டும் விட்ட இடத்தில் ஆரம்பித்தோம்.. முத்தமிட நெருங்கினான்.. 

“போறுண்டாபா.. மானமே போயிருக்கும்.. நல்ல காரியம் பண்ணினே.. நோக்கேன்.. எப்பவும் ரத்த வெறி”

வாயில் விரல் வைத்து “உஷ்” என்றவன்.. படுக்கையில் தள்ளினான்.. 

அவனுக்குப் பிரியமான பழத்தோட்டத்தில் சந்தோஷமாக உலாவியதில்...

படுக்கை விரிப்பு... அலைக்கழிந்து... கசங்கியது...

 

கட்டில் கால் பக்கவாத்தியம் வாசிக்க... கச்சேரி இனிதே முடிந்தது..

அன்று மாலையே.. அண்ணா வீடு வந்தான்.. முகத்தில் சந்தோஷம் கொண்டிருந்தான்..

உள்ளே வந்ததும்..

“சின்னா.. கங்கிராட்ஸ்டா.. நல்ல ஸ்கோர்டா.. ஆமா என்ன உதடு வெடிச்சிருக்கு.. வெயில்ல சுத்துனியா..?”

“இல்லயேண்ணா..” கிச்சாவை முறைத்தபடியே.. சமாளித்தேன்..

கிச்சா மட்டும் கேட்கும்படி முணுமுணுத்தேன்.. “வெயில்ல சுத்தல.. ஒரு வெறிநாயோடு சுத்தினேன்.. கடிச்சுடுத்து...”

“இதென்னடா.. பாக்ஸ்.. ஸ்வீட்ஸா.. வாங்கினேளா..?”

“இல்ல அத்திம்பேர்.. இது நம்ம ராகினி இல்ல.. அவ கொடுத்தது.. 1136 எடுத்திருக்கா..”

“அப்ப உன் ட்ரீட் எங்கடா..” என்னை பார்த்து கேட்டான்.. “அட்லீஸ்ட் கிச்சாவுக்காவது ட்ரீட் வச்சியா இல்லையா..”

நான் இல்லை என்று வாயெடுப்பதற்குள்.. கிச்சா முந்திக் கொண்டான்.. “ஓ.. வச்சானே.. செர்ரீஸ், பனானா, மெலன்ஸ், ஒரஞ்ச், ஆப்பிள்..”

ஐயோ.. மாபாவி..” எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது..

அண்ணா திட்டுக்கிட்டான்.. “ஃப்ரூட்ஸ் சாலட் வாங்கி கொடுத்தானா..?”

ஆமா.. அத்திம்பேர்.. ஹோல்சேலா எல்லாம் ஒரே இடத்துலயே கிடைக்கிறது..”

“அப்படி ஒரு கடை தஞ்சாவூர்லயா.. நானிது வரைக்கும் வாங்கினதில்லயே.. எங்க இருக்கு..?”

“மாடி....” கிச்சா இழுத்தான்..

“மாடியிலயா..?” அண்ணா..

நான் அவசரமாக குறுக்கிட்டு.. மாடி இல்லன்னா.. maddy fruits stall..” ஒருவாறு சமாளித்தேன்.. 

“நீ மேல வாடி.. நோக்கிருக்கு..” கருவினேன்..

அவன் அண்ணாவுக்குத் தெரியாமல்..கண்ணடித்தான்..!



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 20
Permalink   
 


அடுத்த நாள் நானும் அண்ணாவும் நெய்வாசல் சென்றோம்.. கம்ப்யூட்டர் கிளாஸ் காரணமாக கிச்சா வரவில்லை.. மன்னி வீட்டில் தட புடல் கவனிப்பு.. 

“சே.. இவ்வளவு நல்ல மனுஷாளா இருக்கா.. இவாள போய் நம்மாத்துல பகைச்சுண்டிருக்காளே..” நான் உள்ளுக்குள் குமுறினேன்..

மாமாவையும், மாமியையும் நமஸ்காரம் பண்ணிண்டேன்.. 

“அடுத்து என்ன படிக்கறதா இருந்தாலும் மார்க்கெட் டிரெண்ட் பாத்து பண்ணுடா..” அக்கறையாய் மாமா சொன்னார்..

மன்னி ரொம்ப சந்தோஷப்பட்டாள்.. மதியம்.. விருந்துண்டு.. மாலையில் மதுக்கூர் புறப்பட்டோம்.. 

 

எம்புள்ள நல்ல மார்க் எடுத்தத என்னண்ட சொல்ல வர்றவன்.. முதல்ல நம்மாத்துக்கு தானே வந்திருக்கணும்..” அம்மா பிலு பிலுவென அண்ணாவைப் பிடித்துக் கொண்டாள்.. 

எரிச்சலானேன்..

“I just can't help it .. இவாள திருத்தவே முடியாது.. சாரி அண்ணா.. எண்ணிக் கொண்டேன்.

மாலதியக்கா.. விவஸ்தையேயில்லாமல்.. கிச்சாவின் மார்க்கை நினைவுபடுத்தி அண்ணாவிடம் பேசினாள்.. எனக்கு ஆத்திரமாக வந்தது..

“முட்டாள் மாலதி.. கிச்சா.. உன்ன விட.. என்ன விட.. ஏன்.. நம்மெல்லாத்தையுமே விட கெட்டிக்காரன்.. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.. சே.. இவள ஏன் இப்படி உள்ளூர்லயே கல்யாணம் பண்ணி கொடுத்தா.. அசாம், அருணாச்சல்னு பார்டர்ல வேலை செய்றவருக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கணும்”

“இருடா.. அக்காரவடிசல் பண்றேன்..”

“இல்லக்கா.. நான் நெய்வாசல்லயே சாப்டுண்டேன்..”

“அப்போ சரி.. நீயும் எங்கள மறந்துட்டியாக்கும்..”

எனக்கு போதும் போதும் என்றானது.. “என்ன ஜென்மாக்கள் இதுகள்.. அண்ணா.. பாவம்டா நீ..” மாலதி குழந்தையைக் கொஞ்சி விட்டு.. அத்திம்பேர்.. வரும் வரை காத்திராமல்.. எங்களாத்துக்கு வந்தேன்..

அண்ணா.. “சின்னா.. எதாவது சொல்லி சமாளிடா.. நான் தஞ்சாவூர் போகணும்.. அடுத்து டூட்டி போறதுக்குள்ள நெய்வாசல் போய் ரமாவ பாக்கணுண்டா..” கெஞ்சினான்..

அவன் மட்டும் எஸ்கேப் ஆகலாமென்று பார்த்தான்.. நான் அம்மவிடம் ஏதேதோ சாக்கு சொல்லி அவனோடவே அடுத்த நாள் புறப்பட்டு விட்டேன்..

வழியெல்லாம் அண்ணா கிச்சா புராணம் பாடினான்.. he is a gem, such a nice guy, வயதுக்கு மீறின maturity.. பரோபகாரி.. ஆபத்பாந்தவன்.. இப்படி நிறைய..

எனக்குப் புரிந்தது.. அண்ணாவின் மனதில் கல்மிஷமில்லை.. மச்சினன் மீது நல்ல அபிப்பிராயம்.. அவ்வளவே..!

 

தஞ்சாவூர் வந்து சேர மணி 4.30.. இறங்கு வெயில் அவ்வளவு படுத்தியது.. வீட்டில் கிச்சா இல்லை.. கிளாஸ் போயிருக்க வேண்டும்.. கட்டிலில் விகடன் இருந்தது.. 

நானிருந்தால்.. மேலே வராது.. என்னோடு இருக்கும் போது இதைப் படிக்கக் கூடாதென்று கண்டிப்பாக சொல்லி விட்டேன்.. இல்லையானால்... நான் பேச.. அவன் இதிலேயே மூழ்கி.. மறுபடி சொல்லு.. மறுபடி சொல்லு என்று படுத்துவான்..

கீழே வைக்கலாம் என்று எடுத்தேன்.. உள்ளேயிருந்து.. மடிக்கப்பட்ட பேப்பர் ஒன்று விழுந்தது.. What is your reply for my query? - Ragini என்று மட்டும் அதில் எழுதியிருந்தது.. எனக்கு அடிவயிற்றில் அமிலம் சுரந்தது.. 

“என்ன எழவு க்வெரியா இருக்கும்?” மனது கண்டபடி கற்பனை செய்து வெறுப்பேற்றியது.

அவன் வீடு திரும்பும் வரை இருப்புக் கொள்ளவில்லை..

கிச்சா வந்தான்.. ஒப்புக்கு புன்னகைத்தான்.. வழக்கமான கிச்சாவாக அவனில்லை..

நான் ரொம்பவே சோர்ந்து போனேன்..!

(தொடரும்)



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
RE: You Are Cordially Invited
Permalink   
 


அண்ணனுக்கு மொத்தம் எத்தன முகம் நண்பா
/////

அது இருக்கு நண்பா நிறைய.... டவுன் பஸ் நிக்குற இடத்திலெல்லாம் அண்ணாச்சி ஒரு காலத்துல "வீடு" கட்டியவர்..... (சின்ன வீடா?னு நீங்க கேட்கக்கூடாது)... அந்த அளவுக்கு அவர் பெரிய பில்டிங் காண்ட்ராக்டர்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 21
Permalink   
 


வருத்தமும் குழப்பமுமாக மேலே வந்து கட்டிலில் படுத்தேன்.. அவன் பின்னாக வந்து.. என்னருகே படிக்காமல் கட்டிலினருகே பாய் விரித்து.. பில்லோ எடுத்துக் கொண்டான்.. எனக்குக் கண்ணீர் முட்டியது.

நான் சுவற்றுப் பக்கம் திரும்பிக் கொண்டேன்.. அவனாக லெட்டர் விஷயத்தை ஆரம்பிப்பானென்று எதிர்பார்த்திருந்த எனக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்தான்.. நானும் கேட்பதாக இல்லை.. “என் ஆத்துவா ரத்தம் தானே என்னிலும் ஓடும்.. எல்லாம் சரி.. நான் இப்படி இருப்பது இயல்பு.. இவனுக்கு என்ன ஆயிடுத்து.. சரி அவனா வரட்டும்.. பாத்துக்கலாம்..”

அன்று.. தூங்கினேனா.. தெரியவில்லை.. கண்ணை மூடி படுத்திருந்தேன்.. அவ்வளவு தான்..!

 

காலையில் மீண்டும் அண்ணா நெய்வாசல் புறப்பட்டான்.. 

“சின்னா.. நான் அப்படியே.. அங்கேர்ந்தே வேலைக்குப் போய்டுவேண்டா.. எதுவாணா ஃபோன் பண்ணுங்கோ.. என்ன கிச்சா.. முகமே சரியில்ல.. ஜுரமா..?”

“இல்ல அத்திம்பேர்.. ஆனா ஜுரம் வரும் போல இருக்கு..” சாடைமாடையான ஒரு பதில்... அண்ணாவுக்கு புரிய வாய்ப்பேயில்லை.. எனக்குப் புரிந்தது..

“சாப்டதும் பாரசெட்டமால் போட்டுக்கோ.. பெட்ரூம்ல கப்போர்ட்ல இருக்கு.. எதுக்கும் தள்ளித் தள்ளி படுங்கோடா.. ஒட்டிடப் போறது.. அடிக்கற வெயிலுக்கு சாதா ஜுரமா.. வேற எதுவுமான்னு தெரியாது..”

“நீ கொஞ்சம் வாய மூடிக்கறயா.. ஏற்கனவே நாங்க தள்ளித் தள்ளி தான் படுத்துண்டிருக்கோம்..” நேக்கு கத்த வேண்டும் போல் தோணித்து..

“பைடா.. யூ கைஸ் டேக் கேர்..”

உள்ளே வந்தோம்.. அன்றைக்கெல்லாம் அவன் பேசவில்லை.. நானாக பேசினாலும்.. அவன் பதில் தந்தி போலும் ஒரிரு சொற்களோடே சரி.. 

“இஸ் ஹி இன் லவ் வித் ராகினி?” ஒன்றுமே புரியவில்லை.. குழப்பமாக இருந்தது!

பிற்பகல் அவன் கிளாஸ் புறப்பட்டதும்.. வாசலை அடைக்க எத்தனிக்கையில்.. இவன் வருகையை எதிர்பார்த்து ராகினி.. தெருவில் இறங்குவது தெரிந்தது.. எனக்கு எரிச்சலாக இருந்தது.. அவளிடம் ஏதோ சொல்லிவிட்டு இவன் நகர்வதும் தெரிந்தது..!

அடுத்து வந்த நாட்கள் எந்திரமாக நகர்ந்தன.. பேச்சு வார்த்தை அடியோடு நின்று போனது.. சண்டையில்லை.. அதற்காக சமாதானமுமில்லை.. Tussauds museum மெழுகுச் சிலை போல் அந்த வீட்டிலிருந்தோம்..

ராகினிக்கு திருநெல்வேலியில் மெடிக்கல் சீட் கிடைத்த விஷயத்தை சொல்ல வந்தாள்.. ஏதோ கண்ஜாடை காட்டுவதாய்ப் படவும் நான் அவர்களை ஹாலில் விட்டு விட்டு வீட்டினுள் வந்தேன்.. ரொம்பவே வலித்தது.. 

என் அபிஷ்டு அண்ணா.. இஞ்சினயரிங் கௌன்சலிங்.. எங்களிருவரையும் சேர்ந்து போக சொன்னான்.. போன இடத்தில் தஞ்சாவூரிலேயே B.Tech Bioinformatics எடுத்தேன்.. இந்த பிரகஸ்பதி ஒப்புக்கு கூட வாய் திறக்கவில்லை.. 

மறுவாரம் கிச்சாவுக்கு DMLT வகுப்புகள் ஆரம்பமாயின.. காலேஜ் விட்டு கம்ப்யூட்டர் கிளாஸ் முடித்து வருவான்... தனிமையில் பொழுதைக் கழித்தேன்.. ஒரு நாளும் அழவில்லை.. ஆனாலும் பிரசவ வைராக்கியம் போல எங்கள் இருவருக்குமே இருந்தது.. 

 

 ஒரு ஞாயிறு காலை தீனதயாளன் வந்தான்.. 

“கிருஷ்ணாண்ணா.. இன்னிக்கு சாயந்தரம் ராகினி திருநெல்வேலி புறப்பட்றா.. நைனாவும் அம்மாவும் ஒரு துக்கம் விசாரிக்க நேத்தே அவசரமா மதுரை புறப்பட்டுப் போய்ட்டாங்க.. அங்கயிருந்தே திருநெல்வேலி போறதா சொல்லிட்டாங்க... சோ.. நான் தான் வழியனுப்பனும்.. நீங்க ரெண்டும் பேரும் கொஞ்சம் வர முடியுமான்னு அக்கா கேக்க சொன்னா..”

“என்னால முடியுமான்னு தெரியல.. ஸ்ரீநிவாஸ் வருவார் தீனா..”

“அதென்ன ஸ்ரீநிவாஸ் வருவார்னு நீ சொல்றது.. லூஸாடா நீ.. உன் கேர்ள்ஃபிரண்ட்.. உன்ன விட்டு ஊருக்குப் போறத தாங்கிக்க உனக்கு முடியலனா.. அதுக்கு நான் தான் கிடைச்சனா..” எனக்கு உள்ளூர கோபம்..

“இல்ல தீனா.. நாங்க ரெண்டு பேருமே வருவோம்..”

“தேங்க்ஸ் அண்ணா.. வர்றேன்..” புறப்பட்டான்..

 

ஆட்டோ பிடித்து போனோம்.. என்னை பின்னால் தள்ளிவிட்டு.. கிச்சா முன்பக்கமாக டிரைவருடன் சீட்டை பகிர்ந்து கொண்டான்.. பல்லைக் கடித்துக் கொண்டேன்..

பஸ் புறப்பட அரை மணிநேரம் போலிருந்தது.. கிச்சா அது எடுத்துட்டியா.. இது எடுத்துட்டியா.. என்று.. பஸ் ஸ்டாண்ட் போன பிறகு ரொம்ப அக்கறையாக விசாரித்தான்.. எனக்கு அவன் செய்கை செயற்கையாகப் பட்டது.. “இவனுக்கு என்ன ஆச்சு..? ஒருவேள நாம் இங்க இருக்கறதால உளர்றானா..?” 

“தீனா.. வா.. நாம வாட்டர் பாட்டில், ஸ்நாக்ஸ் எதாவது வாங்கி வருவோம்..” நான் நகர முற்பட.. 

கிச்சா.. “இல்லடா..  நான் போறேன்.. வாடா தீனா..” என்று அல்மோஸ்ட் ஓடினான்..

நடப்பதொன்றும் புரியவில்லை.. தீனா அருகிலிருந்த கடையை கைகாட்ட.. இவன் அவனை இழுத்துக் கொண்டு சற்று தொலைவாக சென்றான்.. புருவத்தை நெரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன்..

“ஸ்ரீநிவாஸ்”

என்ன ராகினி?”

“உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல.. ஐ திங்க் அம் இன் லவ் வித் யூ..”

எனக்கு தலைசுற்றியது..

அவள் தொடர்ந்தாள்.. “நேர்ல சொல்ல பயம்.. கிருஷ்ணா மூலமா ப்ரோபஸ் பண்ணினேன்.. இது நாள் வரைக்கும் நீங்க ரிப்ளை பண்ணலன்னு சொன்னார்.. இஃப்  நாட் நவ் தென் நெவர்னு தோணுச்சு.. அதான்...”

“ஐ அம் சாரி ராகினி.. ஐ அம் டேக்கன்” நான் தொடர விரும்பவில்லை..

அவள் முகம் வாடிப் போனது.. 

மேற்கொண்டு என்ன பேசுவதேன்றேத் தெரியவில்லை... இந்த லூஸுப் பையன் கிச்சா.. தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.. தீனாவை வேறு எங்களைப் பார்க்காதவாறு நிறுத்தியிருந்தான்..

“என்ன நினைத்திருப்பான்..? வீ ஆர் இன் லவ்.. என்று கத்திக் கொண்டே ஃப்ரெஞ்ச் கிஸ் அடிப்பேன் என்றா..?”

“சாரி ராகினி.. ஐ திங்க் வீ ஆர் காட் இன் அ வெரி அன்பிளசண்ட், எம்பரஸிங் சிச்சுவேஷன்.. லெட் மீ புஷ் ஆஃப் நவ்.. விஷ் யூ ஆல் தி பெஸ்ட்.. மீட் யூ அகைய்ன் சம் அதர் டே.. இன் அ ஹோப்ஃபுலி பெட்டர் சிச்சுவேஷன்.. பை” 

அவள் ஒப்புக்கு லேசாக சிரித்தாள்.. 

நான் தனியாக வீடு வந்து சேர்ந்தேன்..



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 22
Permalink   
 


வீட்டினுள் வந்ததும் ஹாலிலேயே உட்கார்ந்து கொண்டேன்..சந்தோஷமாக.. துக்கமாக.. இரண்டும் கலந்த கலவையாக உணர்ந்தேன்..

ஒரு மணி நேரம் கழித்து பம்மியபடியே வந்தான்..  அவசரமாக உள்ளே ஓட எத்தனித்தான்..

“எங்கடா போற..?”

“அர்ஜெண்டா வர்றது.. தோ வந்துட்றேனே”

“அத விட அர்ஜெண்டான விஷயம் பேசணும்.. இப்படி வா..”

“என்ன பேசணும்..?” அருகில் அம்ர்ந்தான்.. வேறு பக்கம் பார்த்தான்..

“இவ்ளோ நடந்துருக்கு.. ஏண்டா எதுவுமே சொல்லல”

“என்ன நடந்தது?”

“சும்மா நடிக்காத.. அவ உன்னாண்ட.. என்ன லவ் பண்றதா சொன்னாளா..?”

“....”

“சொல்லுடா... உன்னத்தான் கேக்கறேன்..?”

“ஆமா சொன்னா.. இப்போ என்ன அதுக்கு...?”

“இப்போ என்ன அதுக்கா..? லவ்டா.. யூ நோ.. லவ்... l.. o.. v.. e.. லவ்.. அத ஏண்டா என்னாண்ட மறைச்ச..”

“தப்புத்தாண்டா.. யாரோடவும் பங்கு போட விரும்பல.. அதான் மறச்சேன்..”

“யார.. ராகினியையா..?”

“சீ.. போடா... நான் உன்ன சொன்னேன்...”

“டேய்.. அன்னிக்கு கண்ணாடி மாதிரி.. நான் உன்ன... மண்டபத்துல சைட் அடிச்சதயெல்லாம் சொன்னியேடா... இந்த விஷயத்துல போய் கோட்ட விட்டுடியேடா..”

அவன் திரும்பி என்னை உற்று பார்த்தபடி உட்கார்ந்தான்..

“அட் லீஸ்ட் அவ லெட்டர் குடுத்தப்பயாவது என்னாண்ட சொல்லியிருக்கலாமேடா..?”

“என்ன லெட்டர்.. அத எப்ப நீ பாத்த..?”

“அண்ணாவோட ஊர்ல இருந்து வந்தப்பவே பாத்துட்டேன்..”

“அப்ப... நீயாவது என்னண்ட கேட்டிருக்கலாமே..?”

“நேக்கென்னடா தெரியும்.. அது நோக்கு வந்த லவ் லெட்டர்னு நான் ரொம்பவே துடிச்சு போய்ட்டேன்..”

“எந்த ஊர்லடா லவ் லெட்டர ஒத்த வரியில எழுதுவா..? நீ அத்திம்பேரோட கிளம்பிப் போன அன்னிக்கே.. நீ போறத பாத்துட்டு.. என்னண்ட வந்து உன்ன கேக்கும்படி சொன்னா.. நான் என்ன சொல்றதுன்னு தெரியாம..  உன்ன கால் பண்றதா சொன்னேன்.. கரெக்டா.. நீ ஊர்ல இருந்து வந்த அன்னிக்கு காலைல என்ன கடைல வச்சு பாத்துட்டு அந்த லெட்டர கைல திணிச்சிட்டுப் போய்டா.. ஐயோ.. தினம் தினம் சித்ரவதடா.. என்ன சொன்னான் என்ன சொன்னான்னு..”

“லூசுடா..”

“யார்.. நானா..?”

“இல்ல.. அவள சொன்னேன்.. உன்ன கேக்கறதுக்கு பதிலா என்ன நேர்லயே கேட்டிருக்கலாம்..”

கிச்சா கவலையானான்.. “அப்படி கேட்டிருந்தா .. என்னடா சொல்லியிருப்ப..?”

“அவளாண்ட இன்னிக்கு சொன்னதையே தான்.. அன்னிக்கும் சொல்லியிருப்பேன்..”

“அப்படி என்னடா.. சொன்ன இன்னிக்கு?”

“ஏன்.. உன்னாண்ட அவ சொல்லலியா..?”

“இல்லடா.. ஏதோ அவசர வேலையா.. நீ போறதா மட்டும் சொன்னா... அழுத்தமான பொண்ணுடா.. தவிர தீனாவும் கூடவே இருந்தான்.. சரி.. அப்படி என்னதாண்டா சொன்ன..?”

“ஐ அம் டேக்கன்னு சொன்னேன்..”

கிச்சா... நெருங்கி வந்தான்.. “யூ மீன்...?”

நான் அவனை நோக்கி கை காட்டினேன்...!

“என் செல்லம்..” கட்டிக் கொள்ள வந்தான்..

நான் அவனைத் தள்ளி விட்டேன்..

“அடச்சீ.. எட்டப் போ... என்ன எப்படியெல்லாம் படுத்தின தெரியுமா இந்த கொஞ்ச நாளா..  நேக்கு இன்னும் கூட என்னென்னவோ பண்றது..”

அவன் ஆதூரமாய்.. “என்னடா பண்றது.... செல்லம்..?”

நான் முறைத்தவாறே... “ம்ம்ம்.. வயித்த வலிக்கறது...”

“இங்கயாடா..?” வயிற்றைத் தொட்டு படு சீரியஸாகக் கேட்டான்..

“இல்ல... இன்னும் கீழ...”

“இங்கயாடா...?”

“இன்னும் கீழடா..”

“இன்னும் கீ... டேய்.. டேய்.. ராஸ்கல்... உன்ன....”

வெகு நாளைக்குப் பிறகு அன்று கூடினோம்... பரஸ்பரம்.. எஸ்.. டூ ஷாட்ஸ் ஃபார் தி ஃபர்ஸ்ட் டைம்..!

(தொடரும்)



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
RE: You Are Cordially Invited
Permalink   
 


wow...கலக்குறீங்க esp. சின்னா,கிச்சா சின்ன சின்ன ஊடல்கள் அருமையா இருக்கு...nd abt the characters like what they studying,thinking which makes the readers to feel closer them...normally this is missing in most initial writers...this is ur first story but u have done it...keep it up...மீன் பெயர் கொண்ட கதை சீக்கிரம் போஸ்ட் பண்ணுங்க...waiting to see ur other face...

@விஜய் ...அண்ணனுக்கு மொத்தம் எத்தன முகம் நண்பா
/////

அது இருக்கு நண்பா நிறைய.... டவுன் பஸ் நிக்குற இடத்திலெல்லாம் அண்ணாச்சி ஒரு காலத்துல "வீடு" கட்டியவர்..... (சின்ன வீடா?னு நீங்க கேட்கக்கூடாது)... அந்த அளவுக்கு அவர் பெரிய பில்டிங் காண்ட்ராக்டர்....
...........இப்போ கதை படிக்கும் போது பல முகம் ஒரே முகமா நல்ல முகமான மாதரி தெரியுது...so அவர்க்கு சின்ன வீடு, காண்ட்ராக்ட் நினைவு படுத்த வேண்டாம்...சீக்கிரம் அவர்க்கு தனி இடம் கொடுக்க வேண்டியது இருக்கும்...பாருங்க வார்த்தைகள் மாற்றிய பிறகும் that feel never change...கண்டிப்பாக அவர் திறமையை பாரட்ட வேண்டும்...


__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
நன்றி!
Permalink   
 


samram

ரொம்ப நன்றி samram.. கமெண்டியதோட நிக்காம... எனக்கு வக்காலத்தும் வாங்கியிருக்கீங்க...

அந்த மனுஷன் சொல்ற மாதிரியெல்லாம்... நான் வீடு, பில்டிஙெல்லாம் கட்டினதில்லீங்கோ......

மீன் கதைய.. சீக்கிரமே போஸ்ட் பண்ண முயற்சிக்கறேன்..



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 23
Permalink   
 


அடுத்து வந்த நாட்களில் எனக்கும் கல்லூரி ஆரம்பமானது.. 

அண்ணாவின் அலுவலகம் கார் ஒன்றைக் கொடுத்ததால்.. அவன் பைக் எங்களிடம் வந்தது.. கிச்சாவுக்கு 4.30 வரை.. எனக்கு 5.00 வரை.. சோ.. அவனே என்னை தினமும் பிக் அப் செய்வதாக முடிவு செய்தோம்.. 

இந்த பன்னாடை... ஊர் மேய்ந்து விட்டு சாவகாசமாக 5.30 மணிக்கு வந்து என்னைக் கூட்டிச் செல்லும்..

“டேய்.. ராகிங்.. பண்ணுவாங்கடா.. நான் தனியா மாட்டிப்பேண்டா..”..  எவ்வளவு கெஞ்சியும்.. புண்ணியமில்லை.. அதே 5.30 மணி தான்..

காலேஜ் சேர்ந்த இரண்டாவது வாரம் அப்படி ஒரு சோதனை வந்தது.. சீனியர் ரூபத்தில்.. 

அவன்... ஜோபி குரியகோஸ்.. NRI Quota-வில் சேர்ந்தவன்.. பையனூர் பையன்.. வட கேரளத்தவன்.. தென் கேரளத்தவர் போலல்லாமல் தமிழ் அவ்வளவு எளிதாக வசப்பட்டிருக்கவில்லை.. அரைகுறையாக வந்தது..  ஹோஸ்டலில் தங்காமல்.. வெளியே வீடெடுத்து தங்கி வந்தான்.. என்னை பார்த்ததும்.. பைக்கை என்னருகில் நிறுத்தினான்.. 

“எந்தாடா.. இங்க வெயிட் பண்ணிக்கிட்டிருக்கு”

“ஃபிரண்ட் வருவாண்ணா.. பிக் அப்.. பண்ணிக்கறதுக்கு.. அதான்...”

“சரி.. வா.. போலாம்...”

“இல்லண்ணா... பரவாயில்ல... நான் அவனோடவே போய்க்கிறேன்..”

“ஏடோ... வாடா..” அவன் கையை வைத்ததும் வெலவெலத்தேன்.. ரோட்டையே பார்த்தேன்.. “டேய் கிச்சா.. வந்து தொலையேண்டா .. சனியனே..”

அவன் வருவதற்கான அறிகுறியேயில்லை..! 

“எந்தாடா பாக்கு.. வாடா..” கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு போய் வண்டியில் ஏற்றினான்.. வேற வழியில்லாததால் அவனோடு போனேன்.. அவனது வீட்டினுள் அழைத்துச் சென்று கதவையடைத்தான்.. எனக்கு வியர்த்து விட்டிருந்தது... 

“ஒண்ணு நிமிஷம் டைம் தரும்.. எல்லாம் கழட்டிக் கொடுக்கு....” 

“அண்ணா... ப்ளீஸ் அண்ணா..”

கையை ஓங்கியபடி வந்தான்..

நான்.. ஷர்ட் கழற்றினேன்... 

“ம்”

பனியனை விடுவித்தேன்.. 

“ம்”

பேண்ட் தளர்ந்தது.. 

“ம்”

“ப்ளீஸ் அண்ணா..” 

அவன் நெருங்கி வந்தான்.. மேலிருந்து கீழாகப் பார்த்தான்..  பக்கத்து ரூமுக்குள் சென்று ஒரு jam பாட்டில் எடுத்து வந்தான்.. அதில் கொஞ்சம் எடுத்து என் நெஞ்சில் தடவினான்.. படபடப்பாக இருந்தது... கண்ணீர் பெருகியிருந்தது...  நிதானமாக நக்கி சாப்பிட்டான்.. அருவருப்பாக இருந்தது.. 

முடிந்ததும்... “போ” என்றான்..

நான் தப்பித்தோம் பிழைத்தோம் என்று.. வந்தேன்.. மணி 6.. ஆட்டோ பிடித்து வீடு வந்தேன்.. ஹாலில் டி வி பார்த்துக் கொண்டிருந்தான்.. 

அவன் முந்திக் கொண்டான்.. “எங்கடா.. போய்த்தொ.....”

பளார் என்று அறை விட்டு.. பேசின் பக்கம் ஓடினேன்.. 



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 24
Permalink   
 


கலவரமாக பின்னாலேயே ஓடி வந்தான்..

நான் ஷர்ட், பனியனை கழற்றி அவன் முகத்தில் வீசினேன்.. 

சோப்பைத் தடவி.. நெஞ்சை கழுவினேன்.. 

அவன் வித்தியாசமான அந்த வாசனையை நுகர்ந்திருக்க வேண்டும்.. பனியனை மூக்கினருகே கொண்டு சென்றான்.. பின் அதைப் பிரித்து பார்த்தான்.. jam கறையாய் படிந்திருந்தது.. 

“என்ன எழவுடா இது.. என்னடா நடந்தது..”

“உன்னால ஒரு பெர்வர்ட் கிட்ட மாட்டிண்டேண்டா..” நான் அழ ஆரம்பித்தேன்..

அணைத்துக் கொண்டான்.. “அழாதடா.. யாருடா அவன்... என்னடா பண்ணினான்.. சொல்லுடா.. ப்ளீஸ்..”

“சீனியர்டா.. என் நிப்பிள்ஸ்ல jam தடவி சாப்டாண்டா... நீ எங்கடா போய்த் தொலஞ்ச.. நீ வந்துட மாட்டியான்னு ரோட்டையே பாத்துண்டிருந்தேண்டா.. எல்லாம் உன்னால தாண்டா..” அழுகை குறையவேயில்லை..

“ஐயோ.. நீயேண்டா அவனோட போன..”

“வலுக்கட்டாயமா இழுத்தாண்டா.. எத்தன முறை சொன்னேன்.. ராகிங் பண்ணுவாடா.. சீக்கிரம் வந்துட்றான்னு.. எல்லாம் உன்னால தான்”

“ஐயோ.. தப்பு பண்ணிட்டேண்டா.. சாரிடா..”

கையை முதுகிலிருந்து கீழாக நகர்த்தினான்... “வேற ஒண்ணும்..?”

அவனை நெட்டித் தள்ளினேன்.. “அதையும் கிழிச்சிருந்தா.. நோக்கு சந்தோஷமா..?” சத்தமாக அழுதேன்..“தயவு செஞ்சு டவல் எடுத்தாடா.. நான் ஸ்நானம் பண்ணனும்.. நேக்கே என்ன அருவருப்பா இருக்குடா..”

வேகமாக எடுத்து வந்து.. பாத்ரூமுக்குள் என்னை நகர்த்தி.. அவனே முழுக்காட்டினான்..

ஈர பேண்ட், ஜட்டி, ஷர்ட், பனியன் இத்யாதிகளை அங்கேயே விட்டுவிட்டு என்னை மேலே கூட்டிச் சென்றான்..

அன்றும் அவனே தான் ஊட்டி விட்டான்.. அருகிலேயே இருந்தான்.. அவன் மடி மீது தலை வைத்திருந்தேன்..

நாங்கள் பேசிக்கொள்ளவில்லை..

தீவிர யோசனையாய் இருந்தான்..

எனது அன்றைய தினத்தின் மாலைப் பொழுது.. ஜோபியால் அல்லோகலப்பட்டிருந்தது..

ஏன் எப்போதும்... ஒரு நாளைப் போல மற்றொன்று இருப்பதில்லை..?!

(தொடரும்)



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 26
Permalink   
 


கல்லூரி நாட்கள்.. ஜோபியால் ஒரு சின்ன ஸ்டார்டிங் டிரபுளுக்குப் பின் இனிதே ஆரம்பமாயின...  

இதற்கிடையே.. மன்னி பிள்ளை பெற்று வீடு வந்தாள்.. பெண் குழந்தை.. ஈவினிங் நானும் கிச்சாவும் குழந்தையைப் பார்த்துக் கொள்வதால்.. மன்னியே சமையலை பொறுப்பேற்றாள்.. 

குழந்தை பிறந்த சந்தோஷத்தில் அண்ணா எனக்கும் கிச்சாவுக்குமாக செல்ஃபோன் வாங்கிக் கொடுத்திருந்தான்..

எங்களுக்கான syllabus சில இடங்களில் ஒத்திருந்ததால்.. knowledge sharing தூள் பறந்தது.. கூடவே “அது”வும் தான்.. காரணம்.. மேல் மாடி முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டில்..!

 

எனது செகண்ட் செமஸ்டரின் போது.. students மத்தியில் ஒரு புது gossip.. Biochem lab i/c ஒரு கே-ன்னு.. 

அவரைப் பார்த்தால் வித்தியாசமாக ஒன்றும் தோன்றாது.. நடுத்தர வயதில் இருந்தார்.. அவர் சாதாரணமாக அருகில் வந்தாலே.. மாணவர்கள் நகர்ந்து கொள்வார்கள்.. அது அவரை சங்கடப்படுத்திற்றோ இல்லையோ.. என்னை ரொம்பவே படுத்திற்று.. அன்று வண்டியில் அவனுடன் வீடு திரும்பும்போது மெதுவாக ஆரம்பித்தேன்... 

“கிச்சா..எங்க பயோகெம் லேப்ல ____ தெரியுமோல்லியோ...”

“ஆங் தெரியுமே.. எங்க லேப் இன் சார்ஜ்ஜோட ஃபிரண்ட் டா..  என்ன internal marks-அ சொல்லி மிரட்டுராறா..”

“அதில்லடா.. அவர்.. ஒரு கேயாண்டா..”

அவன் பதிலேதும் சொல்லவில்லை...

வீட்டிலும் அப்போது சூழ்நிலை உகந்ததாக இல்லையாதலால்.. இரவில் பேசிக் கொள்ளலாமென்று முடிவு செய்தேன்...

நைட்.. அவனாகவே ஆரம்பித்தான்... 

“வண்டியில வரும்போது என்ன சொல்லிண்டிருந்த... _____ ஒரு கேன்னு தான...?”

“ஆமா...”

“நேக்கு ஏற்கனவேத் தெரியும்.. எங்க i/c தான் சொன்னார்....”

“ஏதோ அவருக்கு இவர் ஃபிரண்ட்ன்னு சொன்ன.. அவர் எப்படிடா சொன்னார் அப்படி..”

“ஆமா ஃபிரண்ட் தான்.. அப்படித்தான் உங்க i/c நம்பறார்.. but our guy likes to backbite... பாவம்டா உங்க i/c.. எனிவே.. வீ வில் ஸ்கிப் தட்.. தட்ஸ் நன் ஆஃப் அவர் பிஸ்னெஸ்.."

“நோ கிச்சா.. அம் நாட் கன்வின்ஸ்ட்.. நாம யாருடா..”

“நாம... கிச்சாவும்.. சின்னாவும்...”

முறைத்தேன்...

“தப்புன்றியா..? கிருஷ்ணாவும், ஸ்ரீநிவாஸும்”

“ப்ளீஸ்.. சொல்லுடா.. நாமளும் gays தானடா..”

“ஆர் வீ?.... இப்ப என்ன தான் உன் பிரச்சினை..?”

“நாளைக்கு நம்மளையும் இப்படித் தானடா யாராவது backbite பண்ணுவா..”

“யார்டா..”

“யாராவது.. நம்மள இப்படின்னு தெரிஞ்சவா..”

“இப்ப யாருக்கு நாம் இப்படின்னு தெரியும்...?”

“யாருக்கும் தெரியாது தான்... ஆனா..”

“அப்ப ஏண்டா வொரி பண்ற... Come on baby.. its time to sleep.. " நெருங்கி அணைத்தான்..

நான் விடுவதாக இல்லை.. “சொல்லுடா... why do men become gays?"

“ஓ.. அதுவா.. கிட்ட வா சொல்றேன்..”

ஒண்டினேன்.. கன்னத்தில் முத்தமிட்டான்.. பின் என் கீழுதட்டை திருகியவாறே... “இப்போ.. லௌகீகமா யோசிச்சிப் பாரேன்.. ஒரு sexual intercourse-க்கு என்ன வேணும்... ஒரு ____ அதாவது.. ஒரு protrusion.. அப்புறம் ஒரு _____ அதாவது ஒரு depression or indentation.. இப்போ.. male body-யோட anatomy யோசிச்சி பாரு.. இது ரெண்டுமே ஒருசேர இருக்கும்.. probably this makes a guy.... a gay!"

நான் வெறியோடு அவன் மேலே பாய்ந்தேன்..

“உன்ன செருப்பால அடிக்கணும்டா.. உன்ன கேட்டேன் பார்.. என்னையும் அடிக்கணும்.. ரொம்ப சீரியஸா மூஞ்ச வச்சிண்டு இப்படியா சொல்லுவ... புறம்போக்கு”

கடைசி வரை என் கேள்விக்கு விடை சொல்லவேயில்லை.. 

அன்று.. அவன் சொல்லாத விடையை.. எனது நாலாவது செமெஸ்டர் பிரேக்கில் தஞ்சாவூர் வந்த கிச்சாவின் கஸின்.. பக்கம் பக்கமாக விவரித்தான்..!

அவன்.. முரளி..!

(தொடரும்)



-- Edited by Rotheiss on Sunday 30th of June 2013 10:12:27 PM

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 25
Permalink   
 


தக்கார், தகவிலார் பாராமல் பழகியதால்..  பரவியிருந்த கிச்சாவின் நட்பு வட்டம் இந்த பிரச்சினையில் ரொம்பவே உதவியது.. யாரைப் பார்த்தான்.. யாரிடம் பேசினான்.. என்ன செய்தான்.. எதுவும் எனக்கு இந்நாள் வரை தெரியாது.. 

இது நடந்த மூன்றாம் நாள்.. office staff ஒருவருடன்.. ஜோபி எங்கள் lecture room வந்தான்.. என்னைத் தவிர இன்னும் இரண்டு பேர் எங்கள் batch students அழைக்கப்பட்டோம்.. தான் பின் விளைவு பாராமல் செய்தது பெரிய தவறு தான் என்றும்.. அதற்கு மனம் வருந்தி மன்னிப்பு கோருவதாகவும் ஜோபி எழுதியதாக ஒரு லெட்டர் காட்டப்பட்டது.. நானும் என் வகுப்பு மாணவர்களும் அதில் ஆட்சேபணையில்லை என்று கையெழுத்திட்டோம்.. கையெடுத்து கும்பிட்டு புறப்பட்டான்.. பின்பு தான் தெரிந்தது.. அவர்கள் இருவரும் எனக்கு முன்பாகவே ஜோபியிடம் jam therapy எடுத்திருந்தார்கள் என்று.. நாங்கள் மூவரும் சிரித்துக் கொண்டோம்.. மானங்கெட்ட வயது..!

ஃபைனல் இயர் போவதற்குள்ளாக ஜோபி குரியகோஸ், jammy குரியகோஸ் என்று கல்லூரியில் பெயர் மாற்றம் பெற்றிருந்தது வேறு கதை..! பின்னாளில், அவர்களது farewell அன்று கூட என்னுடன் கைகுலுக்க மறுத்து விட்டான்..!

 

அன்று காலேஜில் நடந்ததை கிச்சாவிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தேன்..

கிச்சா என்னிடம்.. “ஏண்டா.. கோபப்படாம கேளு.. நான் பண்றத விட அதிகமாக ஒண்ணும் அந்த பையன் பண்ணலயே.. பின்ன ஏண்டா அவ்வளவு ஆர்ப்பாட்டம்.. அழுகை..?”

நான் துணுக்குற்றேன்.. “இப்போ நீ என்ன சொல்ல வர்ற.. பொறுத்து போயிருக்க வேண்டியது தானேன்னு கேக்கறியா..?

“நான் அப்படி மீன் பண்ணலடா.. நானும் உன்னண்ட அதையே தான பண்றேன்.. என்ன.. நான் jam போட்டுக்கறதில்ல.. அப்படியே சாப்டுட்றேன்.. அவ்ளோ தான் வித்தியாசம்..”

“இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு நேக்குமே புரியலடா.. அவன் ஆள் நல்லா தான் இருக்கறான்.. ஆனா மனசு ஒத்துப்போனுமேடா.. என் மனசுக்குப் புடிச்சிருந்து நான் பண்றது..  இல்ல.. அனுமதிக்கறதுன்றது வேற.. விஷயம்.. we are resonating with each other-da.. But this is not the case with Joby, no matter how charm his physique is.. ம்ம்ம்.. இப்பத்தாண்டா நேக்கே ஒண்ணு தோண்றது.. நீ அடிக்கடி சொல்ற மாதிரி.. நாம அடுத்தக்கட்டம்னு ஒண்ண நோக்கிப் போயிண்டிருக்கமோ.. என்னவோ?”

அவன் சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு.. “ஆனா.. இதெல்லாம் எத்தன நாளைக்குடா..”

“ச்சூ.. கொஞ்சம் நிறுத்தறியா.. இந்த நிமிஷம் நிஜம்... நம்ம கண் முன்னே.. இருக்கர்து.. தெரியாதத பத்தி நேக்குக் கவலையில்ல.. போறும்.. ரொம்ப போரடிக்காம.. எதனா... பாடு..” நேக்கே அலட்டலாகப் பட்டது.. மூணு நாள் முன்னே.. அழுமூஞ்சி சின்னாவா இருந்தத மறந்துட்டேன்..!

“மானச.. சஞ்சரரே... ப்ரஹ்மணீ மானச சஞ்சரரே”

நான் என் நெற்றியை கைவைத்து அழுத்தினேன்..

“என்னடா..? இது வேணாண்றியா.. வேற என்ன பாட... ம்ம்ம்.. இது புடிக்கும் பாரேன்..” தொண்டையை செருமி.. 

“மஹா கணபதிம்..

ஸ்ரீ மஹா கணபதிம்

ஸ்ரீ மஹா கணபதிம்- மனஸா ஸ்மராமி”

“அப்பா.. போறுண்டா சாமி... வேற எதனா பாடு... படுத்தாத.. ப்ளீஸ்..”

சிறிது நேர யோசிப்புக்குப் பின்.. சரணத்திலிருந்து ஆரம்பித்தான்..

“மனசு தடுமாறும்.. அது நினைச்சா நெறம் மாறும்...”

“அட.. சிச்சுவேஷன் சாங்கா..?”

அவன் என் வாயில் விரல் வைத்து அமைதி காக்க சொல்லி தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தான்..



__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: You Are Cordially Invited
Permalink   
 


Funny explanation for gay..! Story is in a cute way..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

very interesting to read...esp the conversation between that pair is awesome...good narration...keep it up...

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
நன்றி!!
Permalink   
 


Thank you samram & Butterfly for your comments!! :)



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 27
Permalink   
 


“முரளி!!! .... ஒரு polyseme போல spoilt brat மற்றும் shrewd.. இரண்டுக்குமே இலக்கணமாக இருந்தான்.. கிச்சாவின் அம்மாஞ்சி.. அதாவது மாமா பையன்..  KG பருவத்திலேயே.. அவனது குடும்பம் போபாலுக்கு குடி பெயர்ந்திருந்தது.. தற்போதைய ஜாகை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் san diego (Not to be confused with the other San diego in California!) .. க்ரீன் கார்ட் ஹோல்டர்... குடியுரிமை இன்னும் பெறாமலே அப்படி ஒரு அமெரிக்க தேசாபிமானி... கிச்சாவை விட எட்டு வயது பெரியவன்.. 

அவன் பேசிய தமிழ் தமிழாக இல்லை.. வெரி சாரி அபௌட் தட்.. அவன் பேசியே ஹிந்தியும்.. heavily influenced by urdu vocabulary.. பட் நன்னா தான் இருந்தது.. அவன் பேசிய ஆங்கிலத்தில் thick accent மறைந்து american accent தலைகாட்டத் தவறவில்லை..  

கிச்சாவை அவன் கொஞ்சம் புறக்கணிப்பதாகப் பட்டது.. என்னிடம் அதிகம் ஒட்டினான்.. அதை நான் அவ்வளவாக ரசிக்கவில்லை.. கிச்சாவும் அவனிடம் அதிகம் ஒட்டவில்லை.. அதற்கான காரணம் நேக்குத் தெரியும்.. என் வாசனை நுகராமல் அந்த ஒரு வாரம் தூங்க வேண்டியிருந்தது அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.. 

வந்த ரெண்டாவது நாளே... அவன் அப்படி ஒரு கேள்வியை கேட்பானென்று நான் கனவிலும் நினைக்கவில்லை... 

“ஆர் யூ கைஸ் gays?"

நேக்கு மூச்சேயில்லை...

வழக்கமாக இந்த டாபிக் எடுத்தால் பேச்சை மாற்றும் கிச்சா... “எப்படி முரளி... கண்டுபிடிச்ச... ரொம்ப ப்ரில்லியண்ட் டா நீ”

“ஜஸ்ட் கிட்டிங் டா.. என்னமோ உங்கள பாத்தா அப்படித் தோணித்து... எனிவே.. நோ ஹார்ம்.. அப்படி ஒரு வேள நீங்க gays-ஆ இருந்தாலும்.. ஐ டோண்ட் ரியலி கேர் அபௌட் திஸ்... இன்ஃபக்ட் அம் ஜெலஸ்... ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப கேரிங்கா இருக்கேள்... இப்படி ஒரு பார்ட்னர் கிடைச்சா.. நான் கூட மாறிடுவேன்... பட்.. அம் நாட் ஸோ... அட் லீஸ்ட் ஃபார் த மொமெண்ட்...”

கிச்சா கடுப்பானான்.. “இப்போ நீ என்ன தாண்டா சொல்ல வர்ற.. ஒண்ணுமே புரியல..”

“நோக்கு புரியாது பேபி.. நாம மனோரா கிளம்பலாம்னு சொல்ல வர்றேன்..”

போய் வந்தோம்.. வளைத்து வளைத்து ஃபோட்டோ எடுத்தான்.. Napoleon Bonaparte -இன் ஃப்ரெஞ்ச் படையை வெற்றிகரமாக மேற்கொண்ட ஆங்கிலேயரை கௌரவிக்க தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் Serfoji II கட்டிய கோட்டை அது! வங்காள விரிகுடாவை நோக்கியவாறு எட்டு அடுக்குகளுடன் அறுங்கோண வடிவத்தில்... அவ்வளவு பாந்தமாக இருந்தது.. முரளி குதூகலித்தான்.

பல விஷயங்கள் சொன்னான்.. கல்யாணம் பற்றியெல்லாம் எந்த அபிப்பிராயமுமில்லை என்றான்.. ஆனால் பெண்களை ரொம்வும் பிடிக்குமாம்.. அதிலும் latin girls என்றால் கொள்ளைப் பிரியமாம்.. “what a lovely complexion”டா.. அதிகம் சிலாகித்தான்.. நான் நினைத்துக் கொண்டேன்... அவன் இருக்குமிடம் காரணமாக இருக்கலாமென்று...

அதிர்ச்சியெல்லாம் கொடுத்தான்.. “யூ கைஸ் வோண்ட் பிலீவ்.. ஒன்ஸ் ஐ ஹட் என் என்கௌண்டர் வித் அ டி-கேர்ள்..” (T Girl - Male to Female Transgender)

கிச்சா அதற்கு அதிகம் ரியாக்ஷன் கொடுத்ததாகப் பட்டது.. “அ டி-கேர்ள்..?!” 

“எஸ்.. இன்ஃபக்ட்.. நேக்கு அது தெரியாம தான் அவளோட படுத்துண்டேன்.. டிரஸ் மாட்டிக்கும் போது தான்.. தவறி விழுந்த அவள் ஐ.சி கார்ட் பாத்தேண்டா.. நம்பவே முடியலடா.. பேசினதுக்கு மேல எக்ஸ்ட்ரா கேஷ் டாப் அப் பண்ணி.. மறுபடி டிரஸ் எல்லாம் கழட்ட சொன்னேண்டா.. வாவ்.. அப்படி ஒரு ப்ரொஃபஷனலிஸம் தெரிஞ்சதுடா.. ப்ரேசிலியன் டாக்டர்ஸாம்.. மார்வெலஸ் ஜாப்.. ஒரு சின்ன ஸ்கார் கூடத் தெரியாம... எவ்வளவு அழகா அவள செதுக்கியிருந்தா தெரியுமா... அந்தப் பொண்ணு.. ஒரு colombian.. இருபது வயசுல ஓபரேஷன் (Sex reassignment surgery, a transgender surgical procedure) பண்ணிண்டாளாம்.. காரணம் என்னத் தெரியுமா.. Unemployment-ன்றா.. நேக்கு சிரிக்கறதா.. அழறதான்னே தெரியல...  custom made-ன்றதுனாலயோ என்னவோ.. சர்வலக்ஷணமும் பொருந்தியிருந்தா.. ”

 

அந்த ஒரு வாரமும் நெய்வாசல், மதுக்கூர் தவிர மேலும் பல இடங்களுக்கும் சென்று வந்தோம்... அப்படி ஒரு முறை.. கிச்சா இல்லாமல்.. முரளியும் நானும் மட்டும் திருச்சி வரை சென்று வரும் சந்தர்ப்பம் வாய்த்தது..

நான் முடிவு பண்ணிவிட்டேன்.. என்ன ஆனாலும் சரி.... I must open my heart to him...!



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 28
Permalink   
 


திருச்சியின் அந்த “F" hotel லாபியில் காத்திருந்தோம்.. என்னுடைய செல் மூலமாக யாரிடமோ பேசி.. நாங்கள் காத்திருப்பதைப் பற்றியும்.. வந்தால் சந்திக்கலாமென்றும் சொன்னான்..  அவரும் வந்து சேர்ந்தார்.. late 50's இல்லிருந்தார்.. உயர் நடுத்தரம் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.. முகத்தில அப்படி ஒரு சோகத்தை அப்பியிருந்தார்.. அவர் அருகில் வந்ததும்... எனக்கு அறிமுகப் படுத்தி விட்டு.. பின்... “ஸ்ரீநிவாஸ்... இஃப் யூ டோண்ட் மைண்ட்...” என்று நாசூக்காக என்னைக் கழற்றி விட்டான்.. 

“சே..” ஒரு அரைமணி நேரம் ரோட்டில் பராக்கு பாத்துக் கொண்டிருந்தது.. கடுப்படித்தது..

அவர் இடம் பெயர்ந்ததும்... முரளியிடம் சென்றேன்.. அவர் அவனது முகத்திலும் கொஞ்சம் சோகத்தை விட்டு சென்றிருந்தார்.. 

“என்னாச்சு முரளி.. எனிதிங் சீரியஸ்..?”

“நாட் ரியலி... பட் அம் சட்... இப்ப போனாரில்லயா... அவர் பையன் US-la நேக்கு அறிமுகம்டா.. ஒரு 2 hours flight journey தூரத்துல இருக்கறான்.. மூணு வருஷமா இங்க வரவேயில்ல.. நான் தஞ்சாவூர் போறேன்னு சொன்னதும்.. இவர காண்டக்ட் பண்ண சொல்லி.. இவர் நம்பர் கொடுத்தான்.. ஏன் வரல.. என்னாச்சு.. எப்படி இருக்கறான்னு ரொம்ப பரிதபிக்கறார்டா... கல்யாணம் பண்ணி பாக்கணும்னு.. அழறார்டா.. ஐ வாஸ் டங் டைட்..”

“ஏண்டா.. அவனுக்கு எதாவது.. அக்சி...”

“நோ.. நோ.. அவன் நன்னாயிருக்கான்.. கல்யாணம் கூட ஆயிடுத்து...”

“ஓ.. வெள்ளக்காரிய பண்ணிண்டானாக்கும்.. அதான் இங்க வரதுக்கு வெட்கப்படறான் போல..”

“நீ சொன்னதுல பாதி உண்மை.. அவன் வெட்கப்பட்றான்.. சரி.. ஆனா பண்ணிண்டது வெள்ளக்காரியயில்ல.. காரன...”

“டேய்...” நான் அதிர்ந்தேன்..

“இப்ப சொல்லுடா.. நான் இத எப்படிடா இவரண்ட சொல்றது.. இவர் பாவம்னா.. அந்த பையன் ஐயோ பாவம்”

“ஏண்டா.. வாஸ் ஹி டிசீவ்ட்...?”

“சே.. சே.. அவனோட பார்ட்னர்... இஸ் அ சச் அ கேரிங் கை.. அவா ரெண்டு பேரும் ஏதோ... Sauna-ல மீட் பண்ணிண்டா போல... பத்திண்டுடுத்து.. என்னண்ட ஃபோன் பண்ணி.. அவன பண்ணிக்கலான்னு இருக்கேன்.. நீங்க என்ன நினைக்கறீங்கன்னு கேட்டான்.. silly guy.. நான் தெளிவா சொல்லிட்டேன்.. அம்பி.. இது உன் வாழ்க்கைடாப்பா... நோக்கு சரின்னு படறத பண்ணு.. என்னோட அபிப்பிராயம் மட்டுமில்லாம... வேற யாராண்டயும் இது மாதிரி கேட்காதன்னு சொல்லிண்டேன்.. ”

நான் விழி விரிய.. வாய் மூடாமல் கேட்டேன்... 

“அந்த கல்யாணத்துல வந்தவாள்ல.. அவன தவிர்த்து நான் மட்டும் தான் இண்டியன்.. ரெஜிஸ்டிரேஷன் முடிஞ்சதும்.. அவங்க கல்ச்சர் படி.. அவன் இவன ஃப்ரெஞ்ச் கிஸ் பண்ணினதும்.. இவனுக்கு ரொம்ப வெட்கமாயிடுத்து.. அதுவும்.. என் கண்ணப் பார்த்து பேசவே அவனால முடியல... நேக்கு அவன் நிலைமை புரிஞ்சது.. அவன் ஒரே சமயத்துல இண்டியனாவும் இல்லாம.. அமெரிக்கனாவும் இல்லாம ரொம்ப அவஸ்தப்பட்டான்... பாவம்டா.. அது ஒரு மாதிரி identity crisis...  அவனுக்கே அவன யார்னு தெரியல... யூ நோ சம்திங்.. அமெரிக்கான்ன உடனே.. இதெல்லாம் சகஜம்னு எடுத்துக்கப்படாது.. இந்த மாதிரி gays-க்கு அங்க ஒண்ணும் red carpet.. இல்லை.. வேணா.. இங்க கம்பேர் பண்ணும்போது.. அங்க கொஞ்சம் பரவாயில்ல.. அவ்வளவு தான்...”

நான் என்னையும் அறியாமல் அதேப் போன்றதொரு கல்யாணக் கனவை மனக்கண்ணில் கண்டு.. மூழ்கினேன்..

“டேய் ஸ்ரீநிவாஸ்... ஸ்ரீநிவாஸ்.. வேர் ஆர் யூ மேன்...?”

“ஒண்ணுமில்லடா... ம்ம்.. பாவம்டா.. இப்ப என்னடா பண்றான் அவன்..?”

“ஐயோ... அவன் அப்பா கூட இப்படி பதறலைனு தோணறது.. நோக்கென்ன ஆச்சு?”

“ப்சு... ப்ளீஸ்.. சொல்லுடா...”

“அவனுக்கென்ன... பார்ட்னர் அங்கத்தி சிட்டிசன்... இப்போ.. இவனும் பேப்பர்ஸ் சப்மிட் பண்ணியிருக்கான்.. ஹோப்ஃபுலி கிடைச்சுடும்.... பிகாஸ்... அவன் இருக்கற ஸ்டேட்டோட லா.. இஸ் இன் ஹிஸ் ஃபேவர்.... நேக்கு அவாள பாத்தா ரொம்ப பொறாமையா இருக்கும்டா.. ஹிஸ் பார்ட்னர்.. இஸ் ஸோ affectionate...! ஆனா.. இவன் தான்... புதுசா கல்யாணம் பண்ணி புக்காத்துக்கு வந்த மாட்டுப் பொண்ணு மாதிரி... உம்முன்னு இருப்பான்..  அப்பப்போ.. என்னண்ட ஃபோன் பண்ணி அழுவான்.... ஒரு மாதிரி திரிசங்கு நெலம.. போயேன்.. எனிவே.. நாம புறப்படலாம்... கமான்...”

“இல்ல.. எதாவது.. ஜூஸ் ஆர்டர் பண்ணலாம்... ஐ வாண சே சம்திங்”

லாபியிலேயே காத்திருந்தோம்...!

(தொடரும்)



__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: You Are Cordially Invited
Permalink   
 


//அப்படி ஒரு வேள நீங்க gays-ஆ இருந்தாலும்.. ஐ டோண்ட் ரியலி கேர் அபௌட் திஸ்... இன்ஃபக்ட் அம்ஜெலஸ்... ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப கேரிங்கா இருக்கேள்... இப்படி ஒரு பார்ட்னர் கிடைச்சா..நான் கூட மாறிடுவேன்... பட்.. அம் நாட் ஸோ... அட் லீஸ்ட் ஃபார் த மொமெண்ட்...”// american culture la valarndha pullaiyaandaanu appattama theriyaradhu pongo..!
//அமெரிக்கான்ன உடனே..இதெல்லாம் சகஜம்னு எடுத்துக்கப்படாது.. இந்த மாதிரி gays-க்கு அங்க ஒண்ணும் red carpet.. இல்லை.. வேணா.. இங்க கம்பேர் பண்ணும்போது.. அங்க கொஞ்சம் பரவாயில்ல.. அவ்வளவு தான்...”// enga ponalum ivaala odhukka pattavaala thaan paakaraa..!! :(

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

இவர் பாவம்னா.. அந்த பையன் ஐயோ பாவம்”...nd butterfly சொன்ன வாசகம் really awesome...இவ்ளோ திறமை வச்சிக்கிட்டா...ரஸ்தாளி,பழம்னு எழுதுனீங்க...உங்கள ....100 தடவை அந்த மாதிரி எழுத மாட்டேன்னு ...எழுத வைக்கணும்...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Samram@ lust is an another part of love..! So there's nothing to worry about that..!

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
நன்றி!!
Permalink   
 


Butterfly

நீங்க சொல்றது உண்மை தான்.. உலகத்தின் எல்லா மூலைலயும்.. எதாவது ஒரு வகைல.. நம்மவர்கள் ஒதுக்கப்படறது வருத்தமளிக்கும் விஷயம்... 

உச்சக்கட்டமா... சில நாடுகள்ல.. Capital Punishment-ம் தரப்படுது... நல்ல வேளையா.. உயிர ஒரே அடியா எடுக்க மாட்டாங்க.. ஆனா.. கொல்லாம கொல்லுவாங்க.. :(

samram

Imposition-னாலே எனக்கு அலெர்ஜிங்க... கண்டுக்காம விட்ருங்க...! என்ன பண்றது... It's all in the ga(y)me... winkbiggrin



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 29
Permalink   
 


எனக்கு காலியாகவேயில்லை.. ஸ்ட்ராவை விட்டு வாயினுள் நகரவே மறுத்தது.. அவன் அவதாரம் எடுத்ததே ஜூஸ் குடிப்பதற்காக என்பது போல பாதியை காலி செய்திருந்தான்.. 

“ம்.. என்னடா..?”

எப்படி ஆரம்பிப்பதென்றேத் தெரியவில்லை... “முரளி.. நீ சொன்ன அந்த பையன் மாதிரியான நிலைமைல தான் நானிருக்கேண்டா.. நான்னா.. நான் மட்டுமில்ல.. அவனும் தான்.. நானும் கிச்சாவும்...”

“சே.. எப்படிடா.. இதக் குடிக்கறேள்...” அப்படி அவன் கேட்ட போது அவனது கோப்பை.. முக்கால்வாசி தீர்ந்திருந்தது..

“இதுல போய் யாராவது சர்க்கரையை கலப்பாளா...? என்ன கஸ்டமர் சர்வீஸோ... அமெரிக்கால.. ஆர்டர் பண்ணினதும்.. நம்ம கிட்டயே கேட்பான்.. ஃபிரஷ்ஷா வேணுமா.. ஹனி ஊத்தணுமா.. ஐஸ் போடணுமான்னு... அவனுக்கு தித்திப்பு போடறதாயிருந்தா கூட நேச்சுரல் ஹனி தான்... இப்படியா.. சர்க்கரைய போட்டு... ஏன் இண்டியா ஒரு “diabetic nation"ஆ இருக்குன்னு இப்ப புரியறதா..?”

நேக்கு பத்திண்டு வந்தது.. இவன் வேணும்னு என்ன கடுப்படிக்கறானா.... இல்ல.. ஒரு வேள நான் சொன்னதுல அவனுக்கு உடன்பாடில்லாம பேச்ச மாத்தறானா... இல்ல... ஊருக்குத் தாண்டாப்பா உபதேசம்.. என் அத்தை பையன அப்படி ஒரு நிலைமைல வச்சு பாக்க முடியலன்னு சொல்லாம சொல்றானா... எனக்கு மேற்கொண்டு என்ன பேசுவதென்றே புரியவில்லை... 

அவனது கோப்பை காலியானது...

எனக்கு உள்ளுக்குள் உதறியது.. “ஐயோ... அவசரப்பட்டு.. உளறிட்டனே... கொஞ்ச முன்ன வரைக்கும் மூணாவதா ஒருத்தனுக்கு தெரியாம இருந்தது... இப்படி லூஸ் டாக்ல மாட்டிப்பேனா... சின்னா.. மடையண்டா நீ... பிரம்மஹத்தி...”

அவன் சாய்ந்து உட்கார்ந்தான்..

“சோ.. நீங்க லவ் பண்றேளாக்கும்... நேக்கு வந்த அன்னிக்கேப் பட்டது... கபாப் மேன் ஹட்டியா.. வந்துட்டமோன்னு... கிச்சா ரொம்ப சாமர்த்தியமா பேசறதா நினச்சு என்ன சமாளிச்சான்... இட்ஸ் ஒகே... இப்போ என்ன விஷயமா என்கிட்ட சொல்றடா...”

“இது லவ்வான்னெல்லாம் நேக்குத் தெரியலை..  யாராண்டையாவது கொட்டணும் போல தோணித்து... கிச்சா இந்த பேச்ச எடுத்தாலே.. மூட் ஆஃப் ஆயிட்றான்...”

அவன் சிரித்தான்... “என்ன பாத்ததும்.. வந்துட்டாண்டா.. அமெரிக்காலேர்ந்து அர டிரவுசர மாட்டிண்டு... இவனாண்ட கொட்டிடலாம்னு தோணித்தாக்கும்...?”

நான் சற்று பின்னடைந்ததும்.. அவனே... என் தோளைத் தட்டி... “யூ நோ... யூ ஹவ் சச் அ லாங் வே டு டிராவல்... ஐ திங் இட்ஸ் டூ இயர்லி டு கன்க்லூட்...”

“இல்ல முரளி.. நேக்கு இது என்ன மாதிரி ரிலேஷன்ஷிப்னு தெரியலை... சரியா தப்பான்னும் தெரியலை.. அவன் ஆயுசுக்கும் வேணும்னு தோணறது..”

“ஸ்ரீநிவாஸ்.. வில் யூ ப்ளீஸ் ஸ்டாப்... லுக்.. நான் இதுக்கு எதிரானவனில்ல... பட்.. நீ முடிவெடுக்கறதுக்கான சமயம் இது இல்லன்னு சொல்வேன்.. இப்ப என்ன செகண்ட் இயரா... தேர்ட் இயரா.. ?”

“செகண்ட் இயர் முடிச்சு.. தேர்ட் இயர் போறேன்..”

“பார்... நான் கேட்ட ஒரு சாதாரணமான கேள்விக்கு கூட.. தலைய சுத்தி மூக்கத் தொடற மாதிரி ஒரு பதில் தர்ற... செகண்ட் இயர் அரியர்ஸ் வச்சிருக்கியா...?”

“இல்லயே... நான் தான் டாப் ஸ்கோரர்..” நான் பதட்டமாய் மறுத்தேன்....

“கூல் மேன்... அப்ப நீ ஒரே பதிலா தேர்ட் இயர் போறேன்னு சொல்லியிருக்கலாமே... ப்ளீஸ் டோண்ட் திங்க் தட்.. அம் மேக்கிங் ஃபன் ஆஃப் யூ.. நீ இன்னும் தெளிவா இல்லன்னு சொல்ல வர்றேன்... தவிர.. நீ கிச்சாவ இன்னும் முழுசா புரிஞ்சிக்கலியோண்ணும் படறது... உங்க ரெண்டு பேர்ல அவன் ரொம்ப தெளிவா இருக்கறான்... ஒண்ணு மட்டும் சொல்வேண்டா... நீ முடிவெடுக்க வேண்டிய தருணம்னு ஒண்ணு வரும்... அப்ப கண்ண மூடிண்டு... கிச்சா சொல்றதுக்கு ஒத்துக்கோ... இத.. அவன் என் அப்பாவோட தங்கை பையன்றதுனால மட்டும் சொல்லலை... அவன் நிஜமாவே... ஒரு gem... நோக்கு வேணா.. நான் அவன உதாசீனப்படுத்தறதாப் படும்... ஆனா அப்படியில்லை... அவன லேசுல அப்படியெல்லாம் அணுகிடப்படாதுன்னு கொஞ்சம் தள்ளி நிக்கறேன்.. நீ நிஜமாவே லக்கி தெரியுமா... எங்க ஆத்துல நாங்கள்லாம் கொண்டாட்ற ஒருத்தன்.. உன்ன கொண்டாட்றான் பார்.. ரியல்லி.. யூ ஆர் லக்கி...”

என்னால் மேற்கொண்டு எதுவுமே பேச முடியவில்லை... ! 



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 30
Permalink   
 


“நேக்கு ஒரு சந்தேகம்... நாங்க ஏன் இப்படி இருக்கறோம்.... மத்தவா மாதிரி... இல்லாம... எங்க கூட படிக்கறவா மாதிரியெல்லாமில்லாம.... வித்தியாசமா..”

“ஏண்டா இவ்வளவு பீடிகை... நாங்க ஏன் கே-ஸ் ஆ இருக்கோம்னு கேக்க வர்ற.. சரியா...?”

நான் வெட்கத்துடன் ஆமோதித்தேன்..

“விக்ருதி ஏவம் ப்ரக்ருதி {Vikriti Evam Prakriti (Sanskrit: विकृतिः एवम्‌ प्रकृतिः ।) (what seems un-natural is also natural)}-ன்னு நீ கேள்விப்பட்டதில்லையா...? இயற்கைக்கு முரணான.. அப்படின்னெல்லாம் ஒண்ணுமில்லடாப்பா.. எல்லாமே இயற்கை தான்னு சொல்றது...”

“ஆனா சொசைட்டி ஒத்துக்கணுமே?”

“புடலங்கா சொசைட்டி... நோக்கு.. கிச்சா ஆயுசுக்கும் வேணும்னு கொஞ்ச முன்னே சொன்ன... இப்ப என்ன இப்படி ஒரு கவலை?”

நான் மௌனமானேன்..

“இது தாண்டா ஸ்ரீநிவாஸ்.. உன் பிரச்சினை... அஸ் ஐ டோல்ட் யூ இயர்லியர்... நீ.. நீயா இரு... வீணா குழப்பிக்காத.. வா... டைம் ஆயிடுத்து பார்... ஆம்ல தேடுவா... புறப்பட்லாம்..”

 

வழியிலும் விடாமல் நச்சரித்தேன்... 

“டேய்... ஒரு மனுஷன் இன்ன ரீஸ்ன்னால தான் கே ஆயிடறான்னு “n” number of reasons சொல்றான்... ஆனா நத்திங் இஸ் ப்ரூவன்... ஒரு study இப்படி சொல்றது... இன்னொன்னு இப்படி சொல்றதுன்னு நம்மள முட்டாளாக்கறான்...

ட்வின்ஸ்ஸா பொறந்தா அதுல ஒண்ணு கே ஆயிடும்னு சொல்றான்... அதுலயும்.. பொண் குழந்தயோட சேர்ந்து பொறந்துடுத்துன்னு வச்சிக்கோ... அது கே ஆறதுக்கான வாய்ப்பு ஜாஸ்தின்றான்... பொண் குழந்தேள் நிறைய இருந்து ஒரு ஆண் குழந்தையா பொறந்தா கே ஆயிடுவான்றான்... தலைப்பிள்ளை கே ஆகறதுக்கு வாய்ப்பு அதிகம்னு சொல்றான்.. வீட்டின் கடைக்குட்டிகள் கே ஆகறதுக்கும் வாய்ப்பு இருக்குன்னும் சொல்றான்...

நீ நன்னா யோசிச்சுப் பாத்தா... நோக்கு தலையே சுத்தும்... அதான் பொறந்துடுத்தே... விட்டுத் தள்ளுவானா... எதுக்கு இத்தனை ஆராய்ச்சிகள்... 

எது எப்படியோ... எல்லாருக்கும் லோகம் பொதுவாயிட்றது.. மத்தவாளுக்கு தோஷமில்லாம வாழ்ந்தாப் போறும்னு நேக்குப் பட்றதுடா... அதனால தானோ என்னவோ... நேக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னெல்லாம் தோணவே மாட்டேண்றது... பட்.. தட்ஸ் ஜஸ்ட் மை டெசிஷன்... நீ பண்ணிக்கறத பத்தி நேக்கு ஒண்ணும் அக்கறையில்லை... அது கிச்சாவா இருந்தாலும் சரி... கிரிஜாவா இருந்தாலும் சரி...” 

அப்போதைக்கு எனக்குமே அதற்கு மேல் கேட்பது சரியில்லையென்றே பட்டது...

வீடு வந்து சேர்ந்தோம்...

 

“ஆங்.... அப்புறம்... ஸ்ரீநிவாஸ்... என்னோட டிஸ்கஸ் பண்ணினது பத்தியெல்லாம்.. கிச்சாவாண்ட சொல்ல வேணாம்... தேவையேயில்லாம.. ஒரு friction வந்துடும்...”

நான்... “ரோஜர்!”

(தொடரும்)



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
RE: You Are Cordially Invited
Permalink   
 


மத்தவாளுக்கு தோஷமில்லாம வாழ்ந்தாப் போறும்னு நேக்குப் பட்றதுடா...well said rotheiss...I like this murali character...very open talk...nd ur green colour words are really acceptable nd the way you narrated is awesome...rocking rotheiss...keep it up...

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
நன்றி!
Permalink   
 


வாசித்ததோடு நின்று விடாமல் கருத்தும் பதிந்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி!!!



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 31
Permalink   
 


மாடியறையில் கிச்சா ஏதோ எழுதிக் கொண்டிருந்தான்.. தலையைத் திருப்பாமல் கேட்டான்..

“என்னடா இத்தன நாழி ஆயிடுத்து... சாப்டேளாடா..?”

“நீ வேற.. முரளிக்கு நம்ம ஊர் ஜூஸே ஒத்துக்கலை.. ஆயிரம் குறை சொல்றான்.. அதான் நேரா ஆத்துக்கு வந்துட்டோம்..”

“மணி நாலரைடா... சாப்பிடமா இருந்தா அல்சர்ல கொண்டு விட்ரும்டா.. ஏண்டா படுத்தற”

எங்கள் சம்பாஷணையை முரளி ரசித்துக் கொண்டிருக்க.. எனக்கு ஒரே நேரத்தில் பெருமிதமாகவும், வெட்கமாகவும், தர்ம சங்கடமாகவும் இருந்தது..

“ஒரு நேரம் அப்படியிருந்தா ஒண்ணுமாயிடாது.. நான் காபி எடுத்தாறேன்..” கீழே வந்து மூவருக்குமாக காபி கலந்து டபராவில் ஊற்றி ஒரு தட்டில் வைத்து எடுத்துச் சென்றேன்..

குடிக்கும் போதும் முரளி விடவில்லை... குடித்தபடியே கேட்டான்..

“இதுவும் ஒரு வகைல விஷம்னு தெரிஞ்சும் எப்படிடா இதக் குடிக்கறேள்..”

“ஐயோ முரளி.. கொஞ்சம் நிறுத்தறியா..” கிச்சா பதறினான்.. “ரமா காதுல விழுந்தது.. உன்ன குதறிடுவோ.. ரமா மட்டுமில்ல... இந்தப் பக்கத்து பொம்மனாட்டிகளுக்கு சாதா காபியோ.. ஃபில்டர் காபியோ.. இந்த விஷத்துல தான் அவா ஜீவனே அடங்கியிருக்கு.. அன்ன ஆகாரம் இல்லாம கூட இருந்திடுவா.. இது ஒருநாள் இல்லை..  ஆம்படையான் பாடு திண்டாட்டம் தான்.. ஏதோ.. விஸ்கி, பிராண்டின்னெல்லாம் போகாம இந்த வரைக்கும் நிறுத்திக்கறாளேன்னு அவா அவா ஆத்துக்காராளும் இதை கண்டுக்கறதில்லை...”

முரளி வாய் விட்டு சிரித்தான்..

“நான் மேல போய்.. என் டிரெஸ்ஸெல்லாம் காய்ஞ்சுடுத்தான்னு பாத்து எடுத்துட்டு வந்துட்றேன்.. இல்ல.. நாளைக்கு புறப்பட்ற நேரம்... ஹங்காமா ஹோ ஜாயேகா...” முரளி மொட்டை மாடிக்கு நகர முற்பட்டான்.. 

நான் காலி டபராக்களை தட்டில் வைத்து கீழே கொண்டு போக எத்தனித்தேன்..

“நீ எங்கடா போற...?”

“இத வச்சுட்டு வந்துட்றேண்டா..”

“இன்னியோட ஆறு நாள் ஆச்சு.. நான் ஒருத்தன் இருக்கறதாவது ஞாபகம் இருக்கா இல்லியா..?”

“ச்சு.. லூஸு மாதிரி பேசாத.. “அதிதி தேவோ பவ...” இப்போதைக்கு முரளி ஃபர்ஸ்ட்.. யூ நெக்ஸ்ட்..”

“டேய்.. அவன் நேக்குத் தாண்டா அம்மாஞ்சி.. நோக்கில்லை.. தவிர ஆத்துல ரமா இருக்கா.. உன் அண்ணா.. லீவுல தான் இருக்கார்.. அவாள்லாம் பாத்துக்க மாட்டாளா.. நீ தான் மாஞ்சு மாஞ்சு பாத்துக்கணுமா..?”

நான் பொய்க் கோபத்துடன் கேட்டேன்.. “இப்ப நோக்கு என்ன வேணும்?”

“ம்.. ஒரு முத்தம் வேணும்...” வேகமாக எழுந்து என்னை இழுத்து கட்டிலில் கிடத்த.. என் கையிலிருந்த டபரா நாலா பக்கமும் சிதறியது.. 

கீழே தூங்கிக் கொண்டிருந்த குழந்தை சத்தம் கேட்டு.. வீறிட்டு அழுதது.. 

நான் கட்டிலில் மல்லாந்தபடி இருக்க.. நான் எழுந்து கொள்வதற்குள்.. மாடியிலிருந்து தப தப வென் இறங்கி வந்தான்.. முரளி..

“என்னடா ஆச்சு..?”

கிச்சா அவசர அவசரமாக... சேருக்கு மாறி... தான் அந்த ஆட்டத்திலேயே இல்லாதது போல மும்முரமாக எழுதுவது போல் நடித்தான்..

குழந்தையை தூக்கிக் கொண்டு மன்னி மேலே வந்தாள்..

ஸ்ரீதர்.. தூக்கம் பாழான எரிச்சலுடன் மேலே வந்தான்.. 

மன்னி... “என்ன முரளி சத்தம்.. சண்டையாயிடுத்தா?.. ஒருத்தர ஒருத்தர் தாக்கிண்டாளா?..”

“கிட்டத்தட்ட.. ஆனா தாக்குதல் ஆரம்பிக்கறதுக்குள்ள நான் வந்துட்டேனா.. நின்னுடுத்து ரமா.. இல்லடா கிச்சா..?”

முரளி முகத்தில் குறும்பு.. புரிந்து கொண்டான் போலும்..!

“எ.. ன்ன.. என்ன சத்தம்.. என்ன தாக்குதல்.. ஒண்ணுமில்லயே.. நான் அசைன்மெண்ட் எழுதணும்.. கொஞ்சம் கிளம்பறேளா..” கிச்சா விரட்டினான்..

“இவனா விழுந்தா அதுக்கும் நான் தான் பொறுப்பா..?”

எனக்கு வெட்கத்தால் முகம் சிவந்திருந்தது.. “ஐயோ.. முரளி பாத்திருப்பானோ..? கிண்டலா சிரிச்சானே..?!”

தன்னிலை விளக்கம் கொடுக்க.. மொட்டைமாடி விரைந்தேன்..!



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 32
Permalink   
 


துணிகள் நாலா பக்கமும் பறந்திருந்தன.. அவன் தனியாக சிரித்துக் கொண்டே.. சேகரித்துக் கொண்டிருந்தான்.. நான் வருவேன் என எதிர்பார்த்திருப்பான் போலும்.. என்னைக் கண்டதும் அடக்க முடியாமல் சிரித்தான்.. 

“வெரி சாரிடா... அவனாண்ட சொல்லிடறாப்பா... நான் நாளைக்கு போபால் போற வரை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா போறும்னு.. ப்ளீஸ்..”

“ஐயோ முரளி.. அப்படியெல்லாம் இல்ல..”

அவன் நெருங்கி வந்து.. ஸ்நேகமாய்.. என் தோளைத் தட்டினான்..

“ஸோ.. க்யூட் டா.. உங்க ரெண்டு பேரையும் பாக்கறச்ச.. நேக்கே கல்யாணம் பண்ணிண்டா.. என்னன்னு தோணறது... வாழ்க்கைய ரசனையா வாழறேள்.. ஆனா.. எது பண்ணினாலும்.. மத்தவாளுக்கு இம்மியளவு கூட சந்தேகம் வராம பாத்துக்கோங்கோடா...”

நான் கொடியில் கிடந்த துணிகளை எடுக்க ஆரம்பித்தேன்...

“ஆமாண்டா.. உங்க ரெண்டு பேர்ல.. யார் active.. யார் passive.. தப்பா எடுத்துக்காத.. I ask this.. just out of curiosity.."

“ம்ம்.. புரியறது.. யார் டாப்.. யார் பாட்டம்னு கேக்கற.. சரியா?.. அப்படி ஒண்ணும் இல்ல முரளி.. வீ டேக் டர்ன்ஸ்.. தட்ஸ் இட்.. நேக்கென்னமோ.. டாப், பாட்டம்னு சொல்லும் போது.. அதுல ஏதோ ஒண்ணு பரஸ்பரம் இல்லையோன்ற மாதிரி தோணுது.. தவிர.. ஒருத்தர் dominant.. மத்தவா submissive- ன்னு சொல்றச்ச.. ஒரு வித ஏற்றத் தாழ்வு வந்துட்டா மாதிரி.. தோணல...?”

“இல்ல ஸ்ரீநிவாஸ்.. இது உன் point of view.. There are guys who happily proclaim so.. நேக்கொரு முறை.. ஒருத்தன் chat-la.. தான் ஒரு sugar daddy-அ தேடிண்டிருக்கறதா சொன்னான்... நம்ம தமிழ் பையன்.. நேக்கு இது விநோதமா பட்டது.. அவனாண்ட கேட்டா ..சொல்றான்.. அவனோட சின்ன வயசுல அப்பான்னா ரொம்ப இஷ்டமாம்.. வளந்து நிக்கும் போதும்.. அதே அன்பு தேவைப்படறதாம்.. ஆனா.. “வேற” விதத்துல... இவன நன்னா கொஞ்சணுமாம்.. இத போய் நான் எப்படி என் அப்பாவாண்ட கேக்கறது.. அதான் நெட்ல தேடறேன்றான்.. நீங்க எப்படின்னு என்னை கேட்டான்.. ஆள விட்றாப்பா சாமின்னு.. லாக் ஆஃப் பண்ணிண்டேன்...”

“அது சரி... அவா அவா பிரச்சனை அவா அவாளுக்கு..”

“அத்தோடயா போச்சு.. அவனுக்கு இப்ப இருக்கற.. அப்பா, மாமா, நாட்டாண்மை characters பண்றாளே.. film artists.. அவாளெல்லாம் ரொம்ப புடிக்கும்னு வேற சொன்னான்.. அவாள பாத்தால மூட் ஆயிடுது.. அவாள நினச்சி தான்... நான்.. ____ன்றான்..  இத்தனைக்கும் அவன் வயசு.. இயர்லி 20’s”

“Quite interesting"

“இங்க நம்மவாளோட தேடுதல் இப்படியிருக்கு... ஆயுள் முழுக்க பார்டனர் தேடறான்.. அது ஆணா இருந்தாலும் சரி, பொண்ணா இருந்தாலும் சரி.. அப்படியே கிடைச்சாலும்.. அத அனுபவிக்க கொடுப்பினை இல்லாம.. அது இதுன்னு ஆயிரம் குறைகள் சொல்றான்.. அமெரிக்கால... multiple partners வச்சிண்டு லஜ்ஜையேயில்லாம sausage party, skin party, foam party, strip tease.. இன்னும் என்ன எழவெல்லாமோ பண்றான்... இன்னும் ஒரு படி மேல போய்.. infected person-ன்னு தெரிஞ்சே unprotected sex வச்சிக்கற கொடுமையும் அங்க நடக்கறது.. அவனோட மெண்டாலிட்டி... ஸிந்தகி ஜீனே கே லியே... வாழ்க்கை.. வாழ்வதற்கே...”

“ஹே.. முரளி.. முதன்முறையா.. அமெரிக்கா பத்தி தப்பா பேசிட்ட..” நான் சிரித்துக் கொண்டே சீண்டினேன்.. 

“தப்பா ஒண்ணும் சொல்லலடா.. லோகத்துல மனுஷா என்னென்ன விதமா இருக்கா பார்ன்னு சொல்ல வர்றேன்... தவிர அங்கயும் சின்சியர் ஆசாமிகளும் உண்டு..”

ஆளுக்கு கொஞ்சம் துணிகளை வைத்துக் கொண்டு.. மொட்டை மாடியிலேயே பேசிக் கொண்டிருந்தோம்..

கிச்சா.. சிடுசிடுத்தவாறே மேலே வந்தான்..

“அடிக்கற வெயில் கொஞ்சமேணும் தோல்ல உரைக்கறதா இல்லயா..?”

“வந்துட்டாண்டா.. ட்ரில் மாஸ்டர்.. நான் ஜூட்..” முரளி வேகமாக கீழே இறங்கினான்...

நான் அவனைக் கடந்து.. பின் நின்று.. திரும்பி.. மாடியின் மறைவான அந்த சின்ன இடத்தில்.. பெரிய மனதுடன்.. அவனுக்கொரு “இச்” வைத்தேன்..

பாவம்! ரொம்பவே காஞ்சு போய்ட்டான்.. என் செல்ல கிச்சா..!

(தொடரும்)



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 33
Permalink   
 


அன்று இரவு நாங்கள் மூவரும் தூங்கவேயில்லை.. விடிய விடிய களை கட்டியது அந்தாக்ஷரி.. மன்னியும், ஸ்ரீதரும் ஏக கோபத்தில் இருந்தார்கள்.. கிச்சா.. மிகவும் சந்தோஷமாக இருந்தான்.. எனக்குத் தான் கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது..!

காலையில் கிளம்பி சென்னை சென்று.. பின் அங்கிருந்து போபால் சென்று அதன் பின் அடுத்த வாரத்தில் மும்பை வழியாக அமெரிக்கா செல்வதாக ஏற்பாடு..

பஸ் ஸ்டாண்டில்.. முரளி.. கண் கலங்கினான்..

“Am gonna miss you guys.. ரெண்டு பேரும் மெயில் பண்ணுங்கோடா.. என்னடா கிச்சா.. உம் மூஞ்சியில ஒரு ரியாக்ஷனுமில்ல.. நான் உன் அம்மாஞ்சிடா.. ஸ்ரீநிவாஸ பார்.. எப்ப அழப்போறானோன்னு நேக்கு பயமா இருக்கு.. நீ என்னடான்னா.. அபே.. சல்.. ஹவா ஆனே தே..ன்ற மாதிரி இருக்கே?..”

“ப்ச்சு.. முரளி.. இவன் கொஞ்சம் கோபமா பேசினாலே.. கண்ல ஜலம் வச்சுடுவான்.. ரொம்பவே சென்சிட்டிவ்.. Am really sad டா..  நேக்கு மட்டும் நீ ஊருக்குப் போறது  சந்தோஷமா என்ன..?

சம்பிரதாய பேச்சுகளுக்குப் பின்.. விடை பெற... பஸ் புறப்பட்டது.. வீடு வந்தோம்..

அன்று கிச்சா.. மட்டம் போட்டிருந்தான்.. வரும் வழியெல்லாம் பாட்டு...

“மாடத்திலே கன்னி மாடத்திலே..”.. இதில் என் முகத்தை பார்த்து.. “மத்யான நேரம் பாய் போட சொன்னா மாட்டேன்னு சொல்லுவியோ..” பாடலூடே கேள்வி வேறு..

ஆனால் வீட்டில்.. மன்னி.. எங்களை சாம்பார் பொடி அரைக்க, ரேஷன் கடை, மளிகை வாங்கி வர என சகல வேலைக்கும் அனுப்பி விட்டாள்.. எரிச்சலுடன்.. இரவு வரை அவன் காத்திருந்ததை.. நான் அதிகம் ரசித்தேன்..

 
அருகருகே ஒருகளித்துப் படுத்திருந்தோம்.. என் முகத்தையே பார்த்த வண்ணம் இருந்தான்.. அந்த அறைக்குள் ஜன்னல் வழியே கசிந்த மெல்லிய நிலவொளி மட்டுமே அப்போதைக்கு வெளிச்சத்தின் ஆதாரம்..

அது என்னவோ தெரியவில்லை.. ஆயிரம் ஸ்பரிசம், ஆயிரம் முத்தம், ஆயிரம் கூடல் சொல்லாத விஷயத்தை க்ஷணப்பொழுது பார்க்கும் தீர்க்கமான, தீட்சண்யமான பார்வை சொல்லி விடும்.. என்னால அவன் பார்வையின் கூர்மையை தாங்கிக் கொள்ள முடியாமல் கேட்டேன்.. “என்னடா.. நேத்தெல்லாம்.. கடிக்கற மாதிரி பாத்த.. இப்ப பக்கத்துலயே இருக்கேன்.. சும்மா பாத்துண்டிருக்கே?”

“ஒண்ணுமில்லடா.. ஒரு வாரம் கூட தாங்கிக்க முடியாதபடி படுத்தறதே... அது அப்படி எங்க தான் இருக்கர்றது.. உம் முகத்துலன்னு தேடிண்டிருக்கேன்..”

“கிடைச்சுடுத்தா?”

“மேம்போக்கா பாத்தா கிடைக்காதுன்னு படறது.. ஆழ்ந்து தேடணும்..”

நெருங்கி வந்தான்..

நாவால் தீண்டினோம்.. உதட்டில் அழுத்தமாக முத்தம் பதித்தான்.. பின் உதடு பிரித்து கவ்விக்கொண்டோம்.. மேலுதடு, கீழுதடு என சாறு பருகினோம்..

முதுகு வருடி, தலை கோதினான்.. நான் அவன் இடுப்பின் பக்கமாக கைபோட்டு தழுவிக் கொண்டேன்..

வேகம் கூடியது.. மெல்ல முனகலும்..

திடீரென.. எழுந்து தலை மாற்றிப் படுத்தான்.. எனக்குப் புரிந்தது.. சீன தத்துவம் பயிலப் போகிறோமென்று..

யின் யாங்கை விழுங்க முயற்சித்தது.. யாங் யின்னை விழுங்கப் பார்த்தது..

முடியாது என்ற போதிலும் முயற்சி முடங்கவில்லை..!

வெகு நேரம் வரை.. நடுவே பொத்தலாகிப் போன தேசிய தொலைக்காட்சியின் லோகோ போலிருந்தோம்..!


ஆம்.. எங்களது பள்ளியறையில் அன்றைய பாடம் எண் கணித சாஸ்திரத்தில்.. 69 ;)



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 34
Permalink   
 


டைம் அண்ட் டைட் வெயிட்ஸ் ஃபார் நோ மேன்..!!! 

கஜகர்ணம் அடித்தாலும்.. கால வெள்ளத்தில் எதிர்நீச்சல் சாத்தியமேயில்லை..!

கிச்சா அடுத்த வருடத்தில் படிப்பை முடித்து தஞ்சையிலேயே ஒரு blood bank cum lab-ல் வேலைக்குச் சேர்ந்தான்..

நானும் degree முடித்து.. masters படிக்க சென்னை வந்தேன்..

அண்ணா திருச்சிக்கு குடிபெயர்ந்தான்..

அவனைத் தொடர்ந்து கிச்சாவும் திருச்சியின் அந்த “K” மருத்துவமனையில் சேர்ந்து அண்ணா வீட்டோடு வந்து விட்டான்.. எவ்வளவு வற்புறுத்தியும் என்னோடு சென்னை வர மறுத்து விட்டான்.. நான் சொன்னேன் என்ற ஒரே காரணத்துக்காக திருச்சியிலேயே Part time degree மட்டும் சேர்ந்திருந்தான்..

நான் அவ்வப்போது திருச்சி செல்லும் போது கச்சேரி களை கட்டும்.. ஆனாலும் இந்த வீட்டில் மேல் மாடி இல்லையாதலால் சற்று அடக்கியே வாசித்தோம்.. ஒவ்வொரு முறை சென்னை திரும்பும் போது மனம் கனத்து போகும்.. மீண்டும் திருச்சி செல்லும் நேரங்களில் Rockfort, Pallavan எல்லாம் இறக்கை முளைத்து இன்னும் சீக்கிரமாக செல்லாதா என ஆதங்கப்பட்ட நேரங்கள் உண்டு..

அவன் என்னருகில் இல்லையே தவிர அவன் நினைவுகள் என்னை அதிகம் தேற்றியிருக்கின்றன.. நான் அந்நிறுவனத்தின் சென்னை கிளையில் வேலை சேர்ந்து அன்றோடு மூன்று வருடம் ஆகியிருந்தது..

அண்ணாவும் கிச்சாவும் அதிசயமாய் சென்னை வந்திருந்தார்கள்.. அது என் திருமண விஷ(ய)மாய்... நான் அது நாள் வரை அப்படி ஒன்றை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை...

என்னென்னவோ சொல்லியும் அண்ணா பிடிவாதமாக இருந்தான்.. கிச்சா வாயே திறக்கவில்லை..

தவிர.. என் பார்வையைத் தவிர்த்து வேறு பக்கமாகவே பார்த்தான்..

 
ஒரு கட்டத்தில் கோபமாகி.. அண்ணா சட்டையை மாட்டிக் கொண்டான்.. “திரும்ப திரும்ப சொன்னதயே சொல்லிண்டிருக்காத.. வயசெல்லாம் ஒரு காரணமேயில்லை.. அதான் government சொல்ற பிரகாரம் major ஆயாச்சோன்னோ... இன்னும் சொல்லப்போனா.. யூ ஆர் வெல் அஹெட் ஆஃப் தட் ஏஜ்.. சரி.. நீ மறுக்கறத கூட நான் ஏத்துக்கறேன்.. என்ன காரணம்னு மட்டுமாவது சொல்லிடு...”

நான் கிச்சாவைப் பார்த்தேன்.. அவன் தரையிலிருந்து தன் பார்வையைத் திருப்புவதாக இல்லை..

“நான் லஸ் வர போய்ட்டு ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு வர்றேன்.. நேக்கு நீ காரணம் சொல்லியாகணும்.. வா கிச்சா..”

“இல்ல அத்திம்பேர்.. நீங்க போங்கோ.. நான் வரலை.. நான் இவனாண்ட பேசிப் பாக்கறேனே...”

எனக்கு கிச்சாவின் மீது எரிச்சல் பொங்கியது..

“என்ன பண்ணுவேளோ.. ஏது பண்ணுவேளோ... நேக்கு காரணம் சொல்லியாகணும்..”  அண்ணா கிளம்பினான்..


கதவைத் தாழிட்டு என்னிடமாய் நெருங்கி வந்தான்.. நான் சொல்ல முடியாத வேதனையோடு சேரில் அமர்ந்திருந்தேன்..

என் முகத்தை வயிற்றோடு சேர்த்துக் கொண்டான்.. நான் அவனைத் தள்ளி விட்டேன்..

“நோக்கெப்படிடா மனசு வந்தது.. நீயே நேக்கு எமனா வந்துட்ட.. காரணம் சொல்லு.. காரணம் சொல்லுன்றான் உன் அத்திம்பேர்.. சொல்லவாடா.. நேக்கு கிச்சா மட்டும் தான் வேணும்னுட்டு...” அழுகை பீறிட்டது..

அவன் பதிலிறுக்கவில்லை.. அருகில் வந்து கையை பிடித்தான்.. உதறினேன்.. வலுக்கட்டாயமாக என்னை அணைத்துக் கொண்டான்..

அவன் நெஞ்சில் முகம் புதைத்து அழுதேன்..

“இதுக்கு என்னால ஒத்துக்க முடியாது கிச்சா.. நான் செத்தாலும் சாவேனே ஒழிய.. இது முடியாதுடா..”

“அப்படியெல்லாம் அச்சான்யமா பேசப்படாது..” அவன் குரல் பிசிறிற்று.. “என் செல்லம்.. நான் உன் பக்கத்துலேயே தானடா இருக்கப் போறேன்..”

“அப்போ.. நீ பண்ணிக்கறது தானடா.. என்ன விடப் பெரியவன் தானே நீ..”

“அததுக்குக் காலம் வரணும்டா.. தோ பார்.. இப்ப நோக்கு வந்துடுத்து.. நேக்கு வரும்போது பாத்துக்கலாம்..”

“ப்ளீஸ் கிச்சா.. என்னால முடியாதுடா.. நீ இல்லாத வாழ்க்கை நேக்கு வேணாம்டா.. அண்ணா கிட்ட பேசுடா.. நீ சொன்னா கேப்பாண்டா.. ப்ளீஸ்டா..”

அவன் தரையில் அமர்ந்து கொள்ள, அவன் மடியில் தலை வைத்து படுத்தேன்.. அழுகை நின்றபாடில்லை.. தலையைக் கோதினான்..

“என்ன காரணம் சொன்னா அத்திம்பேர் ஒத்துக்குவார்னு நினைக்கிற..?”


ஒன்றும் எனக்குத் தோன்றவில்லை.. எல்லாமே அற்ப சொற்ப காரணங்களாக இருந்தன.. அதற்கு அண்ணா எப்படி பதிலடி கொடுப்பான் என்றும் மனது ஒத்திகைப் பார்த்தது.. என் கையறு நிலை என்னை சுயபச்சாதாபத்திற்கு இட்டுச் சென்றது.. அந்நேரம் அழுவதைத் தவிர வேறு ஒன்றுமேத் தோன்றவில்லை.. 

“ஒண்ணு வேணா.. நீ சொல்லலாம்... கிச்சாவோட தான் இருக்கப் போறேன்னு சொல்லு.. அவர் பதில் பத்திக் கூட நான் வருத்தப்படலை.. நீ சொன்னா மட்டும் போறும்.. நான் நீ எடுக்கற எந்த முடிவுக்கும் கட்டுப்படறேண்டா.. முடியுமா உன்னால..?”

“முடியுமா..?” எனக்கு விடை தெரியவில்லை.. ஒரு நொடி அண்ணா.. மன்னி.. அம்மா.. மாலதி.. அத்திம்பேர்.. மதுக்கூர்.. நெய்வாசல்.. கிச்சா வீடு.. மாமா.. மாமி.. என் அலுவலக நண்பர்கள்.. மனதில் என்னவெல்லாமோ.. தோன்றி மறைந்தன...

“என்ன சுத்தி உள்ளவா.. நேக்கு வேண்டியவா.. என் உறவுக்காரா.. இவா எல்லாரையும் நான் ஒரு சேர பகைச்சிக்க முடியுமா..? இவா மனசையெல்லாம் குத்திக் கிழிக்க முடியுமா?..  நிச்சயமாய் முடியாது.. அப்போ இதுக்குத் தீர்வு தான் என்ன?”

“என்ன சின்னா.. பதிலே இல்ல..?”

“என்ன வெறுப்பேத்தறியாடா..? என்ன பாத்தா நோக்கு பாவமா தோணலை..? அப்படி நான் என்னடா தப்பா ஆச பட்டுடேன்.. நேக்கு அண்ணா மேல கூட கோபமில்லடா.. நீயே ஒரு வகைல இதுக்கு துணை போறியேன்னு தாண்டா நேக்குத் தாள மாட்டேங்கறது..”

நான் எழுந்து உட்கார்ந்தேன்..

“சோ.. நீயும் நேக்கு எதிரா திரும்பிட்டேயில்ல.. எனக்குள்ள இருக்கற மனுஷன் உன் கண்ணுக்குத் தெரியமாட்றானில்ல... இவாள்லாம் சந்தோஷமா இருக்கணும்னா என்ன நான் பலி கொடுக்கணும்னு சொல்ற...”

“ஏண்டா பெரிய வார்த்தையெல்லாம் பேசற... இப்போ யார்டா உன்ன பலி கேட்டது.. யாரும் நோக்கு எதிரா திரும்பிடலடா.. இப்படி வா..” இழுத்துக் கொள்ள முனைந்தான்..

“விடு கிச்சா.. நேக்கு விட்டுப்போயிடுத்து.. சரிடா.. இப்போ அண்ணா வந்ததும் அவன் முன்ன சரின்னு சொல்லி.. நீங்க போனப்புறம் என்ன பண்றதுன்னு நான் பாத்துக்கறேன்..”

“பயமுறுத்தறியாடா?”

“நான் ஏண்டாப்பா பயமுறுத்தணும்.. உள்ளத சொல்றேன்.. அப்படி ஒரு வாழ்க்கை வாழறதா வேணாமான்னு நான் தீர்மானம் பண்ணிக்கப் போறேன்..”

கிச்சா பதில் சொல்லவில்லை.. நெருங்கி வந்தான்.. என் கன்னத்தில் முத்தமிட்டான்..

“போறும்டா.. என்னால தாங்கிக்க முடியலடா..” கதறினான்!!

அவன் அழுவதை முதல் முறையாகப் பார்த்தேன்.. என்ன சொல்லித் தேற்றுவதென்றே தெரியவில்லை.. என் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணங்களையெல்லாம் என்னோடு பங்கிட்டவன்.. என்னுடைய இந்த நிலைக்குத் தான் தான் காரணம் என்கிற குற்ற உணர்வோடு என் முன்னே அழுவது என்னை கஷ்டப்படுத்தியது..

“அழாத கிச்சா.. ப்ளீஸ் கிச்சா.. அழாதடா.. உன்ன இப்படி பாக்க.. என்னால முடியலடா.. யாருக்காக இல்லேன்னாலும்.. உனக்காக... நான் சம்மதிக்கறேண்டா... ப்ளீஸ்டா..”

(தொடரும்)



__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: You Are Cordially Invited
Permalink   
 


Mama copy panni paste panna mudiyadhadhaala niriya points note down panna mudiyala..! So i'm so sorry for that..! But last postinga paduchuttu ennaala azhaama irukka mudiyala..! Pidikaadha oru vishayatha pidichavangalae seiya sonna adha vida kodumai vera edhuvumae illa..! Chinnava ninacha romba paridhaabama irukku..! :(

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
நன்றி!
Permalink   
 


நன்றி வண்ணத்துப்பூச்சி..!

என்ன பண்றது.. இட்ஸ் ஆல் இன் த கேம்-னு சொல்றதா... விதி வலிதுன்னு சொல்றதா... தொடர்ந்து அவதானிப்போம்...!

கருத்துப் பதிந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 35
Permalink   
 


கல்யாண வேலை அனைத்திலும் பம்பரமாய் சுற்றினான்..

சென்னையில் திருமணம் என்று தீர்மானம் ஆயிற்று..

தஞ்சாவூர் சென்று இன்விட்டேஷன் கொடுக்க நானும் அவனுமாக திருச்சியிலிருந்து பைக்கில் சென்றோம்.. அவன் ஓட்டிச் செல்ல நான் பில்லியனில் இருந்தேன்.. நெருக்கமாக உட்கார்ந்தேன்.. வழக்கமாக இத்தகைய பயணம் கிறக்கமாக இருக்கும்.. ம்ம்... இனி இது போன்ற வாய்ப்புகள் எப்போது கிட்டுமோ..?

“என்னடா எதுவுமே பேசாம வர்ற.?”

“ச்சு.. ஒண்ணுமில்ல.. நீ ஒழுங்கா ரோட்ட பாத்து வண்டிய ஓட்டு”

“நோக்கின்னும் என் மேல வருத்தம் தானடா..?”

“இப்போ ஆமான்னு சொன்னா.. என்ன பண்ண போற.. அதான் டிராமா பண்ணி சம்மதிக்க வச்சுட்டியே..”

“ஏண்டா எரிஞ்சு விழற.. டிராமால்லாம் ஒண்ணுமில்ல.. நாமெல்லாம் இன்னும்... இண்டியால.. தமிழ்நாட்ல.. அதுவும் தஞ்சாவூர்க்காராளா தாண்டா இருக்கோம்.... எல்லாம் ஓவர் நைட்ல ஒண்ணும் மாறிடாது.. எதார்த்தம் என்ன உண்டோ.. அத நான் புரிஞ்சிண்டேன்.. நீயும் இப்போ இல்லன்னாலும்.. புரிஞ்சிப்பேன்னு நம்பறேன்..”

“இப்ப புரிஞ்சி என்ன... புரியலன்னா என்ன.. அதான் எல்லாருமா சேந்து முடிவு பண்ணிட்டேளே.. நான் ஒண்ணும் புதுசா சொல்றதுக்கில்லை.. இயல்பா தானிருக்கேன்..”

“இயல்பா தானிருக்கேன்னுட்டு ஏண்டா கைய பின்னால வச்சிண்டு வர்ற... ஒண்ணும் தோஷமாயிடாது.. என் தோள புடிச்சிக்கோ...” 

பிடித்துக்கொண்டு மேலே சாய்ந்தும் வைத்தேன்..

மெல்ல விசும்பினேன்..

“ப்சு.. என்ன பண்ற நீ..? டேய் சின்னா.. நேக்கு மட்டும் நாம நினைக்கறதெல்லாம் நடந்துராதான்னு அடிச்சிக்காதாடா? என்ன பண்றது.. நாம சில நேரம் சுயநலமில்லாமலும் சிந்திக்கத் தெரிஞ்சிக்கணும்.. நம்ம ரெண்டு பேர் சந்தோஷத்துக்காக ஏண்டா மத்தவா மனசக் கொல்லணும்..”

எனக்கு அந்நேரம் முரளி சொன்னது ஞாபகம் வந்தது..

“புரியறதுடா.. அதான் ஒத்துண்டுட்டேனே... இப்ப என்ன சொல்லி என்ன ஆகப்போறது... ?”

“விட்டேத்தியா பேசாதடா.. நீ வேணா பாரேன்.. As we age, priorities change..”

மாறுமா..? தெரியவில்லை... இதற்கு காலம் தான் பதில் சொல்லணும்..!

பல நண்பர்களுக்கும் இன்விட்டேஷன்  கொடுத்தோம்.. ராகினி குடும்பம் திருநெல்வேலிக்கு மாறியிருந்தார்கள்.. கிச்சா நண்பன் “மெடிக்கல் ஷாப்” நாணுவை பார்க்க சென்றோம்.. 

எனக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது.. அவன் நண்பர் வட்டாரத்தில் அவனுக்கு பெயர்.. நான்சென்ஸ் நாணு.. சரியான உளறுவாயன்..

ஆனாலும் அவனுக்கும் இன்விட்டேஷன் கொடுப்பது என்று உறுதியாக இருந்தான் கிச்சா... “நம்ம வாழ்க்கை முழுக்க நமக்கு வேண்டியவா, தெரிஞ்சவா, நல்லவா, தோதுப்பட்டவா மட்டுமே வருவான்னு நினைக்கப்படாதுடா... இவன மாதிரி மனுஷாளும் வேணும்.. இவாளுக்கும் தான் இந்த லோகம் சொந்தம்.. நாணு கொஞ்சம் உளறுவானே ஒழிய.. ரொம்ப நல்லவண்டா..”

ஆனால் அவன் அன்று கொஞ்சம் உளறவில்லை.. ரொம்பவே உளறினான்..

“டேய்.. கிச்சா... எப்படிடா இருக்கே... ஆம்ல எல்லாரும் க்ஷேமமா இருக்காளா...? வா சின்னா... ஆளே மாறிட்ட தெரியுமோ...?”

பரஸ்பரம் குசலம் விசாரித்து.. இன்விட்டேஷன் கொடுத்து புறப்படும் சமயம்.. 

“செத்த நாழி இருங்கோடா.. எவ்வளவு நாள் கழிச்சி வந்திருக்கேள்.. அதுவும்.. சுபகாரியமா.. ஒண்ணுமே சாப்பிடாமப் போறேளே...” கடையை விட்டு வெளியே வந்து சாலையை ஏறிட்டான்... “சே... இந்த டீ கடைக்கார அபிஷ்டூ.. கடைய மூடிண்டு போயிடுத்து... ப்ளீஸ்டா.. செத்த இருங்கோடா...”

கல்லாவின் அருகே இருந்த.. டப்பாக்களை கையில் எடுத்தான்... “மெடிக்கல் ஷாப்ல.. விக்ஸ்.. ஹால்ஸ் தான் இருக்கும்.. என்னடா இது... நேக்கு.. கையும் ஓடலை.. காலும் ஓடலை.. பேச்சு சுவாரஸ்யத்துல.. என்ன சாப்டறேள்னு கேக்காம.. இருந்துண்டேனே...”

“விடு நாணு... நமக்குள்ள எதுக்கு ஃபார்மாலிட்டீஸ்... நாங்க கிளம்பறோம்..”

“நோ கிச்சா... கல்யாண மாப்பிள்ளையோட வந்திருக்க... அதெல்லாம் ஒரு ச்ரமுமில்லை... ஆங்... ஞாபகம் வந்துடுத்து... நேத்து வாங்கினதுல.. ரெண்டு பழம் இருக்கு.. என் திருப்திக்கு அதையாவது.. சாப்பிடுங்கோடா..”

கப்போர்டை தள்ளி.. பழங்களை கையில் எடுத்தான்..

“டேய்... ரஸ்தாளி ஒண்ணு... புள்ளி வாழ ஒண்ணு இருக்கு... யாருக்கு என்ன புடிக்குமோ... எடுத்துக்கோங்கோ...” 

கிச்சா தலைக்கு மேல் கும்பிடு போட்டான்.. 

“போறுண்டாப்பா... புள்ளி வாழ.. ரஸ்தாளி.. ரெண்டையுமே சாப்பிட்றதில்லைன்னு ஒரு சங்கல்பம்..”

நாணு புரியாமல் விழித்தான்..

சத்தியமாக.. எனக்கு அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அடக்க முடியாத சிரிப்பு..!



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 36
Permalink   
 


உண்மையில் நான் அன்று இருந்த இறுக்கமான மனநிலையில்.. என் மனதை கொஞ்சமேனும் லேசாக்கிய சம்பவங்களை மறப்பது கடினம்.. ஆனாலும் இவற்றிற்கெல்லாம் காரணகர்த்தா.. இந்த கிச்சாவை நினைத்தால் தான் எனக்கு அழுவதா சிரிப்பதா என்றேத் தெரியவில்லை.. அவனை மறக்கவும் முடியாமல்.. எனக்கு நடந்து கொண்டிருப்பதை மறுக்கவும் முடியாமல்.. மனது தவியாய்த் தவித்தது.. 

திருமணத்தின் முன்தினம் வரை அவனது அரவணைப்பிலேயே தான் தூங்கினேன்.. என்னுடைய எல்லா அத்துமீறல்களையும்.. கன்னத்தில் முத்தம் பதித்தே முடிவுக் கொண்டு வந்து சைவ இரவுகளாக்கினான்.... முன்னெப்போதும் இல்லாத அளவு அவனது அண்மையை அதிகம் நாடினேன்.. அனுபவித்து உணர்ந்தேன்... அது என்னையும் அறியாமலேயே என்னை திருமணத்துக்கும் தயார் படுத்திற்று.. 

அவ்வப்போது என்னள்ளேயே சொல்லித் தேற்றிக் கொண்டேன்..

“இப்ப என்ன ஆயிடுத்து.. இதோ... கைக்கெட்டற தூரத்துல தானே இருக்கறான்... ஒண்ணும் மாறிடலயே..” 

இது எனக்கு நானே சொல்லிய சமாதானமா.. இல்லை அப்போதைய என் உண்மை மனநிலையும் இது தானா.. இன்று வரையிலும் அறியேன்..

 

ஜானவாசம் புறப்படுவதற்கு கொஞ்சம் முன்பாக அம்மா என் அறைக்குள் வந்தாள்..

“கிச்சா.. எங்க சின்னா?”

“சமையல்காரா ஏதோ கேட்டானுட்டு.. கீழ போய் வந்துட்றேன்னு சொன்னான்.. என்ன விஷயம்மா?”

“இத நான் நோக்குன்னு வாங்கினேன்....” ஒரு சிறு நகைப் பெட்டியைக் காட்டினாள்..  “நேக்கென்னமோ... இத கிச்சாவுக்குத் தரணும்னு தோணித்து.. உன்ன விட பெரியவன்.. அந்த நினைப்பேயில்லாம.. என்னமா சுத்தறான் பார்.. சே.. அவா ஆத்துவாள தப்பா புரிஞ்சிண்டேனோன்னு மனசுல பட்றதுடா சின்னா.. என் நிலைமைல கல்யாண சபைல நின்னு தர முடியாது.. கலயாணம் முடிஞ்சப்புறம் தந்தா.. அது ஏதோ கூலி கொடுத்தா மாதிரி நேக்குப் படறது.. நீயே உன் கைனால இப்பவே என் கண் முன்னால போட்டுடு..”

வாங்கித் திறந்தேன்.. ஒரு மோதிரம்!

கிச்சா வந்து சேர்ந்தான்...  “என்ன மாமி.. எதாவது தேவைப்படறதா..?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லடாப்பா.. செத்த உள்ள வா.. சின்னா அதை போட்டுட்றா...”

கிச்சா மறுத்தான்.. “ஐயோ மாமி.. என்ன இதெல்லாம்.. சின்னாவுக்கு நான் பண்ணாம யார் பண்ணுவோ.. நேக்கென்னவோ.. அந்நியப்படுத்தறேளோன்னு படறது...”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை... நீ வா..” அம்மா.. அவன் கையைப் பிடித்துக் கொள்ள.. நான் அதை அணிவித்தேன்...!

அந்த க்ஷணம்.. மறக்க முடியாத ஒன்று... எங்களிருவர் உள்ளமும்.. சர்வ நிச்சயமாக ஒன்றையே நினைத்திருக்கும்... எங்கள் கண்கள் திரையிட்டு.. அன்பிற்கு அடைக்குந்தாழ் இல்லயென நிரூபித்தன... அந்த அற்ப நிகழ்வு... அளப்பரிய சந்தோஷத்தைத் தந்தது.. அம்மாவுக்கு மானசீகமாக நன்றி நவின்றேன்..

“அம்மா.. சர்வோத்தமமான காரியம் பண்ணியிருக்கேம்மா...”

இனி கவலையில்லை.. சௌம்யாவை கரம் பிடிக்கப் புறப்பட்டுவிட்டேன்..!

(தொடரும்)



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
RE: You Are Cordially Invited
Permalink   
 


அம்மா.. சர்வோத்தமமான காரியம் பண்ணியிருக்கேம்மா...” nice words..always mums do what ever we think except the marriage...nice narration...kitcha is really great...

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
நன்றி!
Permalink   
 


நீங்க சொல்றது.. என் மட்டுல.. ரொம்பவே உண்மை தான்.. samram

கிச்சா பிரஹஸ்பதி அடுத்து என்ன செய்யப் போறார்னு பாக்கலாம்..!



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 37
Permalink   
 


சகல சடங்காச்சாரங்களிலும் ஒன்று என் அருகிலேயே இருந்தான்.. இல்லையெனில் கூப்பிடு தூரத்திலிருந்தான்.. கன்னிகாதானம் முடிந்து மாங்கல்ய தாரணத்தின் போது மனது லேசாய் நெருடிற்று..

முடிந்த பின் பார்த்தேன்.. எதுவும் மாறியதாகத் தோன்றவில்லை... 

நலங்கின் போதும் கிச்சா லூட்டித் தாளவில்லை... எனக்குத்தான் சற்று எரிச்சலாக இருந்தது.. இவன் தெரிந்து செய்கிறானா.. தெரியாமல் செய்கிறானா என்று..

சாந்தி முகூர்த்த நேரம் முன்பதாக மீண்டும் உதறலெடுக்க ஆரம்பித்தது.. 

தனியே அழைத்துச் சென்றான்.. “ஒண்ணும் முழுகிப் போய்டலை.. நீ நிர்மலமான சிந்தையோட உள்ள போ.. அங்கெல்லாமா நான் வர முடியும்.. அசடு..” கன்னத்தில் முத்தமிட்டு வழியனுப்பினான்.. 

நான் உள்ளுக்குள் அடித்துக் கொண்டேன்... “லோகத்துல இப்படி ஒரு அநியாயம் நடக்குமா.. தத்தாரி.. எந்தப் பிரஞையும் இல்லாம வழியனுப்பறது பார்..”

ஆனாலும் வேறு வழியில்லை.. பெருமூச்சுடன்.. திட மனதுடன் அடியெடுத்து வைத்தேன்..

 

காலையில் கண்விழித்த போது சௌம்யா டாய்லெட்டில் இருந்தாள்.. கதவு திறந்து வெளியே வந்தேன்..

எதுவும் மாறியிருப்பதாகத் தோன்றவில்லை...

சற்று தூரத்தில் பிரஷ் செய்து கொண்டிருந்தான்.. முகம் வாடியிருந்தது போல் பட்டது.. இரவெல்லாம் அழுதிருப்பானோ.. நானாக எனக்குள் கேட்ட கேள்விகள்.. அவன் இயல்பாய் எப்போதும் போலிருந்தான்..

என்னைப் பார்த்ததும்.. புருவத்தை ஆட்டி விஜாரித்தான்... 

அந்த கேள்விக்கான பதிலாய்... நானும் கண்ணை மூடி ஆமென்றேன்.. நிம்மதியானான்...! 

ஆனால் ஒரு குற்ற உணர்வுக்குள் ஆட்பட்டுக் கொண்டேன்.. என்னிலைமை சரி... நோக்கு..?

 

இரண்டாவது மாதம் சௌம்யா பிள்ளையாண்டிருந்த செய்தி சொன்னதும் சென்னை வந்து எனக்கு ரகசியமாய் கன்னத்தில் முத்தமிட்டான்.. மிகவும் சந்தோஷமாயிருந்தான்.. மறக்காமல் அவன் விரலில் மோதிரமிருப்பதை உறுதி செய்தேன்..!

“நிம்மதியாயிருக்குடா..”

“நேக்கில்லயே... நீயும் பண்ணிண்டா தான் நேக்கு நிம்மதி”

“பாக்கலாம்.. பண்ணி வைக்காம இவாள்லாம் விட்டுடுவாளா..” சிரித்தான்..

 

அதற்கு அவசியமே இல்லாமல்.. என் திருமணம் முடிந்த ஆறாம் மாதத்தில் அவசரமாக என்னை கிளம்பி வரச் சொன்னான்.. 



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 38
Permalink   
 


ஹோட்டலில் காத்திருந்தோம்.. சற்றைக்கெல்லாம் அந்த பெண் வந்து சேர்ந்தாள்.. 

“சின்னா... இது வளர்மதி..”

“நமஸ்காரம்...” புருவத்தை நெரித்தேன்.. பெயர்.. எதையோ சொல்லாமல் சொன்னது..

“வணக்கம்” 

எதிரில் அமர்ந்து கொண்டாள்.. காபி அருந்தினாள்..  குடும்ப விவரம் சொன்னாள்.. எனக்கு உள்ளுக்குள் உதறியது... தான் பெர்மிஷனில் வந்திருப்பதாக சொல்லி உத்தரவு பெற்றாள்.. 

“என்னடாயிது.. சரியா வருமாடா.. நேக்கென்னமோ பயமாயிருக்குடா.. அரிவாள், மீசையெல்லாம் ஞாபகத்துக்கு வர்றதுடா..”

“ஒண்ணுமாகாது.. அவா அண்ணாவாண்ட பேசிண்டேன்.. அவா அம்மா, அப்பாவாண்ட பேசிண்டேன்.. வேற யார் சம்மதம் வேணும்ன்ற”

“நன்னா கேட்ட போ... அவா அக்கா புருஷன்னு.. ஒருத்தரிருக்கறத மறந்துட்டியா.. திருச்சி முழுக்க போஸ்டரெல்லாம் நீ பாத்ததில்லயா... அவர் அவா ஜாதி சங்கத் தலைவர்டா.. எப்படிடா சமாளிக்கப் போற.. ?”

“அதான் நீ வந்துட்டியே”

நேக்கு நாவறண்டது..

“முதல்ல நம்மாத்துல சொல்லு.. மத்தத அப்புறம் பாக்கலாம்...”

நிஜமாகவே அவன் கூலாக சொன்னான்.. நேக்குத் தான் நிஜார் நனைந்தது..

 

அண்ணா அப்போதே சென்னைக்கு transfer கேட்கப்போவதாக சொன்னான்.. அதிகம் ஆடிப்போயிருந்தான்.. மன்னி அலட்டிக் கொண்டதாகவேப் படவில்லை.. நெய்வாசல் போய் அவாளோடவும் கலந்துக்கலாம் என்றாள்..

 

இதற்கிடையே.. அவன்.. அவள் அடிக்கடி இவன் bloodbank சென்று வந்த கதையையும்.. அவளது bank officer உத்தியோகத்தினிடையே.. அவள் blood coordinate செய்து கொடுப்பதையும், பல rare blood group கேஸ்களில் இவள் அளப்பரிய பங்காற்றிய கதையையும் விவரித்தான்.. உச்சபட்சமாக தாலி ஏறி மறு வீடு செலவதற்குள்ளாக இவளது கணவன் சென்ற வண்டி 7 பேருடன் விபத்துக்குள்ளான கதையையும்... அந்த சூழ்நிலையிலும் இவள் உறுதியாய், மன திடமாய் blood coordinate செய்ததையும், அந்த ஹாஸ்பிட்டலே அதை வேடிக்கை பார்த்த கதையையும், இறுதியில் தாலி பறி போன கதையையும் சொன்னான்..

என்னால் மறுத்து பேச வழியின்றிப் போனது.. அவன் அவனைப் போலவே தெளிவுள்ள வளர்மதியை கைம்பெண் எனத் தெரிந்தும் தெரிவு செய்துள்ளான்.. தப்பில்லை.. முக்கியமாக இதைப் பற்றி வேறெந்த அபிப்பிராயமும் இவனில்லாமல் இருப்பது விந்தையிலும் விந்தை..!

 

நெய்வாசல் சென்றோம்.. மாமாவின் பதிலுக்காக எல்லோரும் கூடத்திலிருந்தோம்.. அவன் வழக்கம் போல ஒன்றுமே நடக்காதது போல இருந்தான்.. எனக்கு சற்று கவலையாயிருந்தது.. 

சிறிது நேரம் தரையை வெறித்துப் பார்த்தவர்.. தலையை உயர்த்தினார்..

“இந்த கல்யாணம் எந்த ஆர்ப்பாட்டமுமில்லாம நடக்கறதுக்கு என்ன வழியுண்டோ அதை இப்போது பேசலாம்”

நிம்மதியானேன்.. தன் பிள்ளையின் விருப்பம் அறிந்த அந்த குடும்பத்தின் மீது மதிப்பு கூடியது..

“சே.. இப்படின்னு தெரிஞ்சிருந்தா முன்னமே இவராண்ட நம்ம விஷயத்த பேசியிருக்கலாமே..” பாழும் மனது அரற்றியது.. “அது சரி.. இனி.. என்ன ஆகப் போறது... அதான்.. பிராப்தம் இல்லைன்னு ஆயிடுத்தே...”

(தொடரும்)



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
RE: You Are Cordially Invited
Permalink   
 


wow...கிச்சா உண்மையில் கலக்றாரு...நிஜமாகவே அவன் கூலாக சொன்னான்.. நேக்குத் தான் நிஜார் நனைந்தது....ஹா ஹா nd முன்னமே இவராண்ட நம்ம விஷயத்த பேசியிருக்கலாமே..” பாழும் மனது அரற்றியது....the way you narrate in different situation is nice.. keep it up

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

True lines..! We didn't 've any chance other than get married a girl..! But the things 're so simple which all're we thought as so hard..!

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - 35 (இறுதி அத்தியாயம்)
Permalink   
 


அடுத்த மூன்று மாதங்களுக்குள் பதிவுத் திருமணம் என்று முடிவானது.. அதற்குள்ளாக வளர்மதி பெங்களூர் மாற்றல் கேட்பதாகவும், கிச்சாவுக்கும் அங்கேயே வேலை ஏற்பாடு செய்வது குறித்தும் பேசினோம்...

அவளது transfer விஷயத்தை அவள் அண்ணன் பொறுப்பேற்றார்..  கிச்சா வேலை விஷயத்தை ஸ்ரீதர் பொறுபேற்றான்.. என்னுடைய வேலையாக.. இவாள சென்னைல இருந்து பெங்களூர் அழைத்துச் சென்று திருமண பதிவை பொறுப்பேற்றேன்..

“என்னடா கிச்சா.. உங்காத்துல நோக்கும் கலாட்டா கல்யாணம் தானா..?” நான் அலுத்துக் கொண்ட போது சிரித்தான்.. 

திருச்சியிலிருந்து சென்னை கிளம்பும் முன்பதாக அவளது அண்ணனும், பெற்றோரும் வந்தார்கள்.. தாங்கள் வர இயலாத நிலையை சொன்னார்கள்.. தங்கள் ஜாதி அபிமானி மருமான் ஒருபோதும் இப்படி ஒரு திருமணத்தை விரும்ப மாட்டார் என்றார்கள்.. எந்த சூழ்நிலையிலும் தங்களது மூத்த பெண்ணின் வாழ்க்கை கெட்டுவிடக்கூடாது என அச்சப்பட்டார்கள்..

வாஸ்தவம்!

அதே சமயம் வளர்மதியின் வாழ்க்கையும் நல்லபடியாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்கள்..

கிச்சாவின் கையைப் பிடித்து அவர்கள் நன்றித் தெரிவித்து தங்களது பெண்ணை அனுப்பி வைத்த போது.. நான் உணர்ச்சி வசப்பட்டு அழுதேன்.. 

சௌம்யா.. என்னை முழங்கையால் இடித்து பிறர் கேட்காத வண்ணம் கடிந்து கொண்டாள்..

“என்ன பண்றேள்.. கண்ணத் தொடைங்கோ.. ப்சு.. கண்ணைத் தொடைங்கோன்னா.. இவா கல்யாணத்த பொறுப்பெடுத்திருக்கேள்ன்ற ஞாபகம் கொஞ்சமேனுமிருக்கா... இப்படியா கண்ண கசக்கிண்டிருக்கறது...?”

அவளை விநோதமாகப் பார்த்தேன்.. “இது.. என்னயிது.. நான் ஒருத்தன் தான் சென்சிட்டிவா இருக்கேனா..? என்ன சுத்தியிருக்கறவாள்லாம் திடமாயிருக்காளே...” அந்த கூட்டத்தில் என்னைத் தவிர்த்து இன்னொரு அசடு என்றால்.. அது என் அண்ணா ஸ்ரீதரை சொல்லலாம்.. ஆனால் இப்போது அவனும் மன்னி புண்ணியத்தில் கொஞ்சம் மாறியிருந்தான்..

மன்னி குடும்பத்து உறவு எனக்கும் கிச்சா மூலமாய்த் தொடர்ந்திருக்கும்.. சே.. வழியாய் வழியாய் இது இப்படித் தான் என கடைப்பிடிக்கப்பட்ட மரபுகளால்.. என் எண்ணம் தவிடுபொடியானது.. நல்ல வேளையாக கொஞ்ச காலமேனும்.. ஏதோ ஒரு வகையில் அவனோடு வாழ்க்கையை நான் விரும்பியே பகிர்ந்து கொண்டிருந்தேன்.. அந்த நினைவுகள் ஒருபோதும் என் உள்ளத்திலிருந்து அகலப் போவதில்லை.. என்னுள் எழும் ஒரு கூக்குரல் ஓயப் போவதுமில்லை..

அதற்காக... இதே தான் கிச்சாவும் நினைக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு என்னில் துளியுமில்லை.. 

 

சென்னை வந்து சேர்ந்தோம்.. பின்னிரவு புறப்பட்டு பெங்களூர் செல்வதாகத் திட்டம்.. அந்த வேனில் தாராளமாகவே இடமிருந்தது.. மாமா, மாமி முன்னால் அமர்ந்து கொள்ள.. அடுத்த வரிசையில் பெண்கள்.. மன்னி, சௌம்யா, வளர்மதி..  அண்ணா குழந்தையைத் தூங்கப் போட்டு ஒரு சீட் முழுவதையும் ஆக்ரமித்திருந்தான்..

நானும் கிச்சாவும் பின் சீட்டில்.. புறப்பட்டு சிறிது நேரம் வரை வெளியே பார்த்த படி இருந்தான்.. அந்த இருட்டிலும் எதை ரசித்தானோ.. திடீரென என் பக்கமாகத் திரும்பி என்னைப் பார்த்து சிரித்தான்.. நான் அவ்வளவு நேரம் அவனையே தான் பார்த்தபடி இருந்தேன்.. என் தோளில் சாய்ந்து என் கன்னத்தில் முத்தம் பதித்து.. மெல்லிய குரலில் எனக்கு மட்டுமே கேட்கும்படி சொன்னான்..

“ஐ லவ் யூடா”

எனக்கு வயிறு குழைந்தது.. இது போன்ற வாக்கியத்தை நாங்கள் ஒரு போதும் பரிமாறிக் கொண்டதேயில்லை.. ஆச்சர்யமாக நான் அழவில்லை.. எங்கள் ஸ்நேகம், எங்கள் அன்பு, எங்கள் காதல் எந்தவிதமான சடங்கு சம்பிரதாயங்களோ.. சட்ட உடன்படிக்கைகளோ இல்லாமல் பூரணப்பட்டிருக்க வேண்டும்.. நானும் அவனை முத்தமிட்டு பதிலிறுத்தேன்.. அவன் தூங்க ஆரம்பித்தான்.. !

 

இதோ.. கிருஷ்ணகிரியை நெருங்கி விட்டோம்.. பெங்களூர் போக விடிந்து விடும்..

பானஷங்கரியில் திருமணப் பதிவு முடித்து.. யஷ்வந்த்பூரில் குடியமர்த்த திட்டம்.. இந்த கலாட்டா கல்யாணத்தில் நாங்கள் குடும்ப உறுப்பினர்கள்னு சொற்பமான எண்ணிக்கையில் தான் உள்ளோம்.. வேறு உறவில்லை..

என்னையும் கிச்சாவையும் நன்னா தெரிஞ்சவான்ற முறைல.. உங்க எல்லாரையும் வந்து வாழ்த்தும்படியா கேட்டுக்கறேன்...

எஸ்.. யூ ஆல் ஆர் கார்டியலி இன்வைடெட்...

வித்தியாசமா யாரும் நினைக்க மாட்டா.. கண்டிப்பா வாங்கோ...

நாங்க எல்லாருமே கிச்சா மாதிரியே சௌஜன்யமா பழகுறவா தான்..!

(முற்றும்)



__________________


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
RE: You Are Cordially Invited
Permalink   
 


superb finishing... I love you solra part sema... rotheisis boss keep writing more stories...

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

எதார்த்தமான முடிவு அண்ணா,கண்டிப்பா வந்துடுறோம்...............

__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
நன்றி!
Permalink   
 


கருத்துப் பதிவிட்ட நண்பர்கள் Azar மற்றும் anbaithedi, கதை நெடுக என்னோடு பயணித்த ஏனைய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!



__________________
«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard