மகி , அன்பின் முதுகை பார்த்தார் போல் படுத்திருந்தான், அன்புவை அணைத்த படியே....... எப்போது தான் மகி தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது. காலை ஏழு மணி இருக்கும், மகியின் நண்பன், மகியை அடித்து எழுப்பினான், என்னடா இன்னைக்கு இவ்வளவு நேரம் தூங்குற என்று எழுப்பினான், ஆனால் எழுப்பிய மகியின் நண்பனுக்கு தெரியாது, அவன் நேற்று இரவு முழுவதும் உறங்கவில்லை என்பது. மகிக்கும் அன்று தெரியாது , தனக்கு இனிமேல் நிம்மதியான உறக்கம் கிடையாது என்று மகிக்கும் தெரியாது.மகி முழித்து பார்த்தான். அவன் பக்கத்தில் அன்பு இல்லை. மகி தன் நண்பனிடம் கேட்டான், அதற்கு மகியின் நண்பன் சொன்னான், அன்பு காலையிலேயே அவங்க வீட்டுக்கு போயிட்டானே என்றான். மகி மனதுக்குள் நினைத்துக்கொண்டான், ஏன் இவன் என்னிடம் சொல்லாமல் போனான், என்று யோசித்துக்கொண்டே இருந்தான்.மகியும் அவன் வீட்டுக்கு போய் இருந்துவிட்டு, சாப்பிட்டு விட்டு, காலை 11மணிக்கு வேக வேகமாக வந்தான். மகி உள்ளே வந்தான், நண்பர்கள் அங்கு இருந்தனர், ஆனால் மகியின் கண்கள் அலைபாய்ந்தது. ஆம் மகியின் கண்கள் அன்புவை தேடியது. அப்போது மகியின் " தேடலின் விடை வெறுமையை தந்தது". மகிக்கு அன்பு இல்லாத தனிமையை தாங்கிக்கொள்ள முடியவில்லை. மகி தன் நண்பனிடமே கேட்டான், அன்பு எங்கடா என்று........... அவனோ தெரியலைடா என்றான் ஒரு வரியில். அடுத்த நாள் எக்ஸாம் ஆனால் அவனின் எண்ணம் எல்லாம் அன்புவை சுற்றியே இருந்தது. மகியே படிக்க வேண்டும் என்று புத்தகத்தை திறந்தாலும், அவன் மனது அதற்கு ஒத்துழைக்கவில்லை. மகிக்குள் அப்படி ஒரு போராட்டம், அவன் மனதில் இருப்பதையும், அவன் அந்த நிமிடம் எதிர் பார்ப்பதையும், தேடுவதையும் யாரிடமும் சொல்லவும் முடியாது, சொல்லவும் தெரியவில்லை. அப்போது என்ன செய்வது என்றும் மகிக்கு தெரியவில்லை. அபோது மகிக்கு தெரிந்த கண்ணுக்கு புலப்பட்ட ஒரே விஷயம் அன்பு......... அன்பு..........அன்பு........ அன்பு மட்டுமே.இரவு அன்புடன் தனக்கு நடந்ததை நினைத்து நினைத்து தனக்குள்ளே சிரித்துக்கொண்டான் மகி. மகி தனக்குள்ளே சிரிப்பதை பார்த்து மகியின் நண்பர்கள், மகியை கிண்டல் செய்தனர். டேய் மகி " எவகிட்டடா மாட்டிகிட்ட......... லவ்வா ஓகே ஓகே என்ஜாய் என்றான்" அதற்கும் எதுவும் சொல்லாமல் சிரித்தான் மகி. மகி சிரிப்பதை பார்த்து புரிந்து கொண்ட நண்பர்கள் என்னடா யாரு அது சொல்லு என்று கேட்டனர். அதற்கு மகி சொன்ன பதில் நேரம் வரும் போது நானே சொல்கிறேன் என்றான் மகி. மகியின் நண்பர்களோ சரி மகி இப்பலாம் உனக்கு இந்த பாட்டு தானே பிடிக்கும்......என்று பாட ஆரம்பித்தனர் " அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக" இன்னொருவன், " தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று " என்று கேலி செய்தனர். இவர்கள் பேசுவதை எல்லாம் மிகவும் ரசித்தான் மகி. மகி இதையெல்லாம் ரசித்தாலும், அன்புவை எப்போது பார்ப்போம், என்ன பேசலாம் என்ற யோசனையிலே இருந்தான். மகிக்கு தெரியாமாலையே "மகி கொஞ்சம் கொஞ்சமாய் அன்புவிடம் அடிமை(அடிக்ட் ) ஆகிறோம் "என்று அவனுக்கு தெரியவில்லை.மாலை வீட்டுக்கு போனான் மகி, போகும் வழியெல்லாம் " அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக" , " தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று " என்று நண்பர்கள் சொன்ன பாடலையே பாடிக்கொண்டு போனான். மாலை 7 மணிக்கு மறுபடியும் படிப்பதற்காக வந்தான் அப்போதும், அங்கு அன்பு இல்லை. அடுத்த நாள் எக்ஸ்சாமிற்கு மகியால் படிக்கவே முடியவில்லை. மகியால் என்ன செய்வதென்றே தெரியவில்லை , இப்படி ஒரு சமயத்தில் அழுதாலாவது கொஞ்சம் பாரம் குறையும் என்பது கூட மகிக்கு தெரியவில்லை. அவன் முழுதும் அன்பு என்னும் ஒரு சக்தியால் அடைக்க பட்டிருந்தான். இரவு 9அணி வரைக்கும் பார்த்தான், அன்பு வரவே இல்லை. மகி அன்று இரவு வீட்டுக்கு வந்தான். படிக்காமல் போய் படுத்துவிட்டான். அவன் நியாபகம் முழுவதும் முந்தைய நாள் நடந்தது மட்டும் அவன் கண்ணில் திரையாய் ஓடிக்கொண்டு இருந்தது.மகி புரளுகிறான். நெளிகிறான் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எழுந்து உட்கார்ந்தான், கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் படுத்தான், அவனுக்கு தூக்கம் வரவே இல்லை." எவன் ஒருவனால் தன் மனதை கட்டுப்படுத்த முடிகிறதோ அவனால் தான் , தன் உணர்சிகளையும் கட்டுபடுத்த முடியும்". தன் மனதில் உள்ள அன்புவையும் அவனால் கட்டுபடுத்த முடியவில்லை, அன்பு துண்டிவிட்ட மகியின் உணர்வுகளையும் மகியால் கட்டு படுத்தமுடியவில்லை. "துடுப்பில்லா படகு கடலில் மூழ்குவது போல், அன்பு இல்லாமல் மகியின் மனது, மகியின் உணர்வுகளும் மகியை கொஞ்சம் கொஞ்சமாய் சாகடித்தது. மகி என்ன செய்வதென்று தெரியாமல் முகத்தை கழுவினான், தண்ணீர் குடித்தான் எதுவும் அவனுக்கு கை கொடுக்கவில்லை.மகி வெகு நேரம் புழுவாய் துடித்தான், நேற்றைய இரவு அன்பு தொட்ட இடத்தை எல்லாம் தடவி பார்த்து ரசித்தான். நேற்றைய இரவு மகி, அன்பு இருவருக்குள் நடந்ததை எல்லாம் இன்று அன்பு மட்டுமே தனிமையில் மன இறுக்கத்தில் , அன்பு இல்லாத வெறுமையில் அவனே செய்தான், அன்பு செய்த ஒவ்வொன்றையும் கண்ணுக்குள் கொண்டு வந்து நிறுத்தி ரசித்தான், மெய் சிலிர்த்து போனான். வெகு நேர அவன் கற்பனைகள் அதிகமாக அதிகமாக அவன் உணர்சிகளின் வீரியம் அவன் ஆணுறுப்பில் தெரிந்தது.அவனின் உணர்ச்சி வெளிப்பாடாய் அவனின் விந்து வெளியானது, அதனுடன் சேர்ந்து அவன் கண்ணில் இருந்து கண்ணீர்த் துளிகளும் வந்தது.இது சந்தோஷத்தில் வந்த கண்ணீர் இல்லை, அவன் இந்த ஒரு இரவு தனிமையில் அவன் அனுபவித்த ரணங்களின் , காயங்களின் வெளிப்பாடு. ஆம் அன்று தொடங்கிய கண்ணீர் மகிக்கு இன்று வரை "வற்றாத ஜீவ நதியாய்" அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது அவன் கடந்த கால வாழ்கையை திரும்பி பார்க்கும் போது.
காலை 7.30மணி வரை துங்கிக்கொண்டே இருந்தான் மகி. அவன் அம்மா தட்டி மகியை எழுப்பினார், எழ்ந்திரிப்பா!!!!!!!! என்றார். மகி எழுந்து பார்த்தான் , அய்யோ டைம் ஆகிடுச்சி என்று அவசர அவசரமாக கிளம்பினான், மகியின் அம்மா திட்டினார், எதுக்கு அவ்வளவு நேரம் நேற்று படிக்கிறது. அதான் இப்ப தூங்கிட்ட என்று சொன்னார். மகிக்கு உள் மனது நறுக்கென்று குத்தினார் போல இருந்தது.சரியாக எக்ஸாம் அறைக்கு போய் சேர்ந்தான், நன்றாக படிக்கிற மாணவன் என்பதால் நன்றாகவே தேர்வு எழுதினான்.தேர்வு முடிந்து வெளியில் வந்தான் .மாணவர்கள் கூட்டத்தை உடைத்துக்கொண்டு பள்ளியை விட்டு வெளியில் வந்து நின்றான். மகி நின்றதற்கு காரணம் , எப்படியும் அன்பு தேர்விற்கு வந்திருப்பான், அவனை இங்கு சந்திக்கலாம் என்று காத்திருந்தான். அப்போது மகியின் நண்பன் தான் வந்தான், என்னடா தேர்வு எப்படி எழுதினாய் என்றான், ஹ்ம் நல்லா எழுதினேன், என்று தன் பார்வையால் அன்பு வரும் பாதையை நோக்கி தேடினான். என்னடா யாரை தேடுகிறாய் என்றான் அவன் நண்பன்.;இல்லடா உன் நண்பன் அன்புவிடம் இங்கிலீஷ் 2பேப்பர் நோட்ஸ் கொடுத்து இருந்தேன் அதை வாங்குவதற்கு தான் அன்புவை தேடுகிறேன் என்றான் மகி. மகியின் நண்பனோ அதிர்ச்சி விலாகாமல் டேய்...... அந்த அன்பு இதனால்தான் உன்னை பற்றி பேசினதும் கண்டுக்காம போய்ட்டான் என்றான் மகியின் நண்பன் . மகிக்கு ஒரே அதிர்ச்சி, என்னை பற்றி என்னடா பேசினாய் என்றான் மகி. இல்லடா மச்சி, நீ அன்புவை பற்றி கேட்டாய், "ஏன் படிக்க வரலன்னு மகி கேட்டானு அன்புவிடம் சொன்னேன்", அதுக்கு அவன் என்ன சொன்ன தெரியுமா???????????? என்று இழுத்தான் மகியின் நண்பன். பிளிஸ் என்ன சொன்னான் சொல்லு என்றான் மகி. இல்லடா நான் அன்பு உன்னை மகி கேட்டான்னு சொன்னதுக்கு தான் , "அவன் கெடக்குறான் லூசு " உன்கிட்ட அன்புவை பார்த்தேன் அப்பிடின்னு சொல்ல வேண்டாம் என்று சொன்னான்" என்றான் மகியின் நண்பன். மகிக்கு , அன்பு ஏன் இப்படி சொன்னான்? என்று நினைக்கும் போதே தலையாய் சுற்றுவது போல் இருந்தது. மகி தன் மனதை தேற்றிக்கொண்டு, இப்ப அன்பு எங்க இருப்பான் என்றான் மகி. மகியின் நண்பன் தயங்கிக்கொண்டே , மகி இப்ப அவன் "R .K SHOP-ல "(இந்த கடை மகியின் பள்ளி இருக்கும் தெருவில் இருந்து 5வது கடை) இருப்பான் என்றான். மகி அந்த கடையை நோக்கி வேக வேகமாக நடந்தான், அங்கு அன்பு இருந்தான், அவனுடன் இன்னொருவனும் இருந்தான் .இருவரும் கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிட்டுகொண்டு இருந்தனர். அங்கு கண்ட காட்சியை பார்த்ததும் மகிக்கு வாந்தியே வருவது போல் இருந்தது. ஆம் அன்பு தன்னுடன் இருப்பவனின் பின் புஜத்தை தடவிக்கொண்டு இருந்தான். ஆம், அந்த இடத்தில் அவன் செய்து கொண்டிருப்பது மற்றவர்கள் யாருக்கும் தெரியாது. அன்புவின் செயலை உற்றுப் பார்பவர்களுக்கு மட்டுமே தெரியும். மகி அன்புவை உற்று மட்டுமா பார்க்கிறான் தனக்குள் உள்வாங்கி தானே அன்புவை பார்க்கிறான், அப்படி இருக்கும் போது மகிக்கு அங்கு நடப்பதும், அன்பு அவன் பக்கத்தில் இருப்பவனை என்ன நோக்கத்தில் தடவுகிறான் என்பதும் மகிக்கு நன்றாக புரிந்தது. அதை பார்த்ததும் மகியின் கண்ணிலிருந்து அந்த வற்றாத ஜீவ நதி, ஆம் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. அந்த நிமிடம் வரை அன்பு, மகி அங்கு நிற்பதை பார்க்கவே இல்லை. அப்போது அங்கு அம்மா!!!!!!! என்று ஒரு பெரிய அலறல் சத்தம் ஒன்று கேட்டது. அப்போது தான் திரும்பி பார்த்தான் அன்பு. அந்த காட்சியை பார்த்ததும் அன்பு பாய்ந்து ஓடினான். அங்கு ரோட்டில் வீழ்ந்து கிடந்தான் மகி......அந்த அலறல் சத்தமும் மகியுடையது தான்.......மகிகிகிகி .......... என்று கத்திக்கொண்டே மகி வீழ்ந்து கிடந்த இடத்தை நோக்கி ஓடினான் அன்பு .....