Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நாணல் - 3


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
நாணல் - 3
Permalink   
 


 



அது என்ன விஷயமாக இருக்கும் என்ற கற்பனையிலேயே உறைந்திருந்தான் ஜோ. என்னடா ஜோ, இப்பொழுது கூட உன் மனது அது என்னதாக இருக்கும் என்ற கற்பனையில் தானே இருக்கிறாய் என்றான் மகி,. ஜோ அமைதியாக இருந்தான். ஜோ, உனக்கு நான் அட்வைஸ் சொல்கிறேன் என்று தவறாக நினைக்காதே, உன் மனது ரொம்ப பலவினமாக இருக்கிறது, சட்டென்று என்ற விஷயத்தையும் உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு அதனால் தான் இதை சொல்கிறேன். சரிடா நான் உன் முகத்தை பார்த்து நேரடியாகவே கேட்கிறேன் நீ என்னை பற்றி என்ன நினைக்கிறாய், என்னை காதலிக்கிறாயா, என்னுடன் வாழ விரும்புகிறாயா என்று ஜோவிடம் கேட்டான் மகி. ஜோ இப்போது தான் மகியின் முகத்தை பார்த்து பேச ஆரம்பித்தான். மகி, உண்மையிலேயே நான் உன்னை உயிருக்கு உயிராய் விரும்புகிறேன். வாழ்ந்தால் உன்னுடன் தான் வாழ வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். அந்த முடிவை தான் இப்போது நான் எடுத்து இருக்கிறேன். முதல் முதலாய் என் வாழ்கையில் கிடைத்த முதல் பொக்கிஷம் நீ. கடைசி பொக்கிஷமும் நீயாக தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றான் ஜோ . reaally மகி, i like u very much ........ மகி i love u da ............. உன் மீது எனக்கு உள்ள காதல் பரிசுத்தமானது புரிந்து கொள் என்றான் ஜோ. மகி பேச ஆரம்பித்தான், ஜோ என் மீது உனக்கு இருக்கும் , உன்னுடைய அன்பு புனிதமானது, பரிசுத்தமானது என்பதில் எனக்கு துளி கூட ஐயமில்லை , ஆனால் என் மீது உனக்கு இருக்கும், நீ சொல்லும் காதல் ஒருவித மாயையால் வந்துள்ளது. நீ எதிர் பார்த்த, தேடிக்கொண்டு இருந்த ஒரு அன்பு , நெருக்கம், பகிர்வு இதெல்லாம் என்னிடம் இருந்து ஒரு துளி, ஒரு துளிதான் உனக்கு கிடைத்தது , அதற்கே நீ என்னை காதலிப்பதாய் சொல்வது சரியா? என்று கேட்டான் ஜோவிடம் மகி.. மகி கேட்டதற்கு ஜோ வாய் திறந்து எதுவும் பேசவில்லை, ஆனால் அவன் கண்ணில் இருந்து வந்த கண்ணீர் துளிகள் மகி தன்னை அல்ல , தன் மனதை காயப்படுத்துவதை கண்ணீரின் மூலம் மகியிடம் சொன்னான். ஜோவின் கண்ணீல் இருந்து கண்ணீர் வருவதை பார்த்ததும் , ஜோவின் எதிரில் அமர்ந்திருந்த மகியோ , ஜோவின் பக்கத்தில் போய் அமர்ந்து , ஜோவின் கண்ணீரை துடைத்தவாறே , ஜோவை தன் தோளில் சாய்த்துக்கொண்டான் மகி.

"என்னவனின் தோளில் சாய்ந்திருக்கும் போது , இடி ஓசையும் எனக்கு இசை மழையே...........என்னவனின் தோளில் சாய்ந்திருக்கும் போது, என் ரணங்களும் காயங்களும் மறந்து, மறைந்து போகிறது.......
அப்போது என்னவன் பற்றிய கனவுகள் மட்டுமே என் நெஞ்சில்"

என்பது போல் தன்னையே மெய் மறந்து சாய்ந்திருந்தான் மகியின்  மேல் ஜோ. தன் தோளில் சாய்ந்திருந்த ஜோவின் கன்னத்தில் கை வைத்து தடவிக்கொண்டே பேச ஆரம்பித்தான் மகி, ஜோ இந்த ரெஸ்டாரென்ட் மேலேயே ஹோட்டல் இருக்கு, உன்னிடம் நான் நிறைய பேசவேண்டும் ,ரூம் போட்டு பேசுவோமா என்றான் மகி.ஜோ மகியின் தோளில் இருந்த படியே மகியின் முகத்தை பார்த்தான். சிரித்துக்கொண்டே சரி என்றான் ஜோ.அப்போது மாலை 6 மணி, மகி 3 மணி நேரம் அதாவது இரவு 9 மணி வரைக்கும் இருக்கபோவதாக சொல்லி ரூம் போட்டான் மகி.அவர்களுக்கு கொடுக்கப்பட்ட 624 நம்பர் ரூமில் மகி, ஜோ இருவரும் நுழைந்தனர். உள்ளே தயங்கி தயங்கி சென்றான் ஜோ. பின்னால் வந்த மகி கதவை தாள் இட்டுவிட்டு உள்ளே வந்தான். ஜோ பெட்டின் ஒரு ஓரமாய் கீழே விழுந்து விடுவது போல் அமர்ந்திருந்தான். மகி அங்கிருந்த தண்ணீர் பாட்டலை எடுத்து குடித்துவிட்டு ஜோவிடம் நீட்டினான், ஜோவும் குடுத்திவிட்டு கீழே வைத்தான் . இந்த மாதிரி ஹோட்டல் வருவது எத்தனையாவது முறை ஜோ என்று ஜோவிடம் கேட்டான் மகி. மகி கேட்கும் தோரணையை கூட புரிந்து கொள்ளாமல், இதான் முதல் முறை என்றான் ஜோ. மகி சிரித்துக்கொண்டே, தெரிகிறது , ac ரூமிலும் வியர்த்து ஊற்றும் உன் முகமும், நான் கேட்கும் தோரணையை புரிந்து கொள்ளாமல் முதல் முறை என்று சொல்வதில் இருந்தே தெரிகிறது. ஜோ உங்க வீட்டில் உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும் என்றான் மகி. எனக்கு எங்க அப்பாவை ரொம்ப பிடிக்கும், என்னை விட அவருக்கு தான் எனக்கு என்ன தேவை என்று தெரியும்,என் அம்மா என் மீது உயிரையே வைத்திருக்கிறார், என் அண்ணனின் செல்லம், பாசம் , சண்டை இதில் என்னை நனைய வைத்திடுவான்.எங்கள் வீட்டில் எல்லாருக்கும் நான் தான் செல்லம் என்று சந்தோஷமாகவே சொன்னான் ஜோ . மகி சிரித்துக்கொண்டே , இவ்வளவு பேரையும் விட்டுவிட்டு என்னுடன் வந்து விடுவியா என்றான் மகி ஜோவிடம் . ஜோ ஒருவித அதிர்ச்சியோடு இவங்களை எல்லாம் விட்டுவிட்டு எதுக்கு வரணும் என்றான் ஜோ. என்ன சொல்ற ஜோ, நீ தானே என் கூட வாழணும்னு சொன்ன, உன் வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருக்க விரும்புவதை நீ தானே சொன்னாய் என்றான் மகி. ஜோ அமைதியாய் இருந்தான். எனக்கு உன்னுடைய அன்பும் வேணும், என் பெற்றோரின் அன்பும், சகோதரனும் வேணும் என்றான் அப்பாவியாக ஜோ. ஜோ என்ன பேசுற நீ, நீ என்னுடன் வாழ விரும்பும் வாழ்க்கையை உன் குடும்பம் ஏற்றுக்கொள்ளுமா என்றான், அதற்கும் அமைதியாகவே இருந்தான் ஜோ. மகி கேட்டான், ஜோ நீ உன் காதலனை தேடுவதாக சொன்னியே, உன் தேடுதலில் நீ இதையெல்லாம் இழப்பாய் என்று நினைத்தாயா, இல்லை யோசித்து தான் பார்த்தாயா. இந்த சிறு வயதில் உனக்கு எது சரி என்று தெரியுமே தவிர, எந்த அளவுக்கு அது சரி என்று உனக்கு தெரியாது, நீயே சொன்னாயே உன்னை விட உன் அப்பாவுக்கு தான் உனக்கு எது தேவை என்று தெரியும் என்று பிறகு என்ன.ஜோ நான் சொல்வதை புரிந்து கொள் , ஜோ நீ ஒரு காதலனை தேடுவதற்கும், அவனிடம் என்ன எதிர் பார்க்கிறாய் என்பதற்கும் ஒரு பத்து காரணங்கள் சொல்லு என்றான் மகி. ஜோ அதற்கும் முழித்தான் . "உனக்கு என்ன வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்தால்தானே ஆழ்மனதுக்கு அதை சொல்ல முடியும்" உன் பெற்றோருக்கும் புரிய வைக்க முடியும்., நீ செய்த தவறு, ஸாரி தவறு இல்லை அறியாமை,நீ மட்டும் அல்ல காதலனை தேடுகிறோம் என்று சொல்லி தேடிக்கொண்டு இருக்கும் அனைவரும் செய்வது, அது என்று சொல்ல ஆரம்பித்தான் மகி, " ஒருவனை பார்கிரிர்கள், உங்களுக்கு அவனை பிடித்திருக்கிறது, நீங்கள் எதிர் பார்க்கும் சில விஷயங்களும் அவனிடம் இருக்கலாம், அழகு, குணம் இப்படி சில விஷயங்கள் உங்களை ஈர்த்திருக்கலாம், உடனே நீங்கள் அவனிடம் அடிமை ஆகுகிரிர்கள். ஆம் அவனையே நினைப்பது, வாழ்ந்தால் அவனுடன் தான் வாழ்வேன் என்று சொல்வது. ஆனால் அவனுக்கு உன்னை பிடிக்கிறதா என்று யோசிப்பதில்லை. ஒரு சில நட்பு அவனிடம் தொடர்பும் வைத்துக்கொள்ளும், அவனும் நட்பாய் இருப்பான், " உன்னுடைய இந்த காதலின் எண்ணம் கடைசி வரை காதலனாய் கடைசி வரை இருப்பது, ஆனால் அவனுடைய எண்ணம் செக்ஸ்...... செக்ஸ் .... அது மட்டுமே கூறிக்கோளாய் இருப்பான்., ஒரு சிலர் bi -sexual , straight guy இவர்களை காதலனாய் அடைய துடிப்பது "*** இவர்கள் எல்லாம் , காதலனாய் அவர்கள் நினைத்தவரை பிரிந்து, மன வலி, மன காயம் ஏற்பட்ட பிறகு சொல்வது , என்னை ஒருவரும் புரிந்து கொள்ளவில்லை என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிரிர்களே நீங்கள் ஏன் இதுவரை யாரையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை". இங்கு யாராலும் நாம் ஏமாற்றப்படவில்லை, நாமே ஏமாற்றத்தை தேடி செல்கிறோம். ஆம், நாம் காதலனாய் நினைக்கும் ஒருவனுக்கும் இதில் சம்மதம் இருக்கிறதா, சம்மதம் சொன்னாலும் அவன் முழு மனதோடு சொல்கிறானா இல்லையா என்பது அவன் கண்ணை பார்க்கும் போதே தெரியும். ஜோ இப்போது நீ சொல் , நேற்றும் சரி இன்றும் சரி நீ என் கண்ணை பார்த்து ஒரு வார்த்தை பேசினாயா ? என்று கேட்டான் மகி. ஜோ இல்லை என்று தலையாட்டினான். ஜோ முக்கியமாக நீ உன் மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டிய விஷயம், என்னிடம் மட்டும் அல்ல யாரிடமும் கண்ணை பார்த்து பேச கற்றுக்கொள் அது உனக்கு எப்போதும் உதவும். "
எல்லாரையும் நம்புவது ஆபத்து, ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து".
இங்கு எப்போதும் நாம் நாணலாகவே இருக்க பழகிக்கொள்ள வேண்டும் , உன் மனதை நாணல் என்று நினை. ஜோ, இப்படி பேசுற என்னை பார்த்தா உனக்கு வெருப்பா இருக்குல, இந்த நொண்டி பையன் எப்படி பேசுறன் பாருன்னு உன் மனசு சொல்லுது தானே . எனக்கு, அது புரியுது ஜோ, என்றான் மகி. ஜோ எதுவும் பேசவில்லை. ஜோ உனக்கு சின்ன வயசு, இந்த வயசுல நான் இந்த field -ல் நான் அனுபவித்த காயங்கள், சுடர் விட்டு எறியும் நெருப்பில் போட்ட காகிதம் எப்படி சாம்பலாய் போகுமோ அப்படி தான் எனக்குள் இருந்த கனவுகளும் போனது. அது போன்ற மரண வலியை நீ அனுபவிக்க கூடாது, என்பதால் தான் நான் இவ்வளவு பேசுகிறேன். "இரண்டு வருடங்களுக்கு முன்னால்" வரைக்கும் நானும் உன்னை போல், இந்த பறந்து விரிந்திருக்கும் சென்னை சிட்டியில்,அழகாய் காட்சியளிக்கும் இந்த சென்னை சிட்டியில், பல ஆண் மகன்கள், பல ஓரினச்சேர்கையாளர்கள் இருக்கும் இந்த சென்னை சிட்டியில் என் காதலனும், என் தலைவனும் இருப்பான் என்று நம்பிக்கையாய் தேடினேன். இன்று, இப்போது என் தேடல் அடங்கியது, எனக்கும் கிடைத்தது வாழ்க்கை.......... ஆனால் இந்த தேடலில் நான் சந்தித்த மனிதர்கள், அவர்கள் தந்த கனவுகள், அதை விட அதிகமாய் அவர்கள் எனக்கு தந்த காயங்கள் மரண வலிகள் இன்றும் என் நெஞ்சில் அழியாமல் , அழிக்க முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், என்று சொல்லும் போது மகியின் கண்ணில் கண்ணீர் அருவியாய் கொட்டியது. ஜோ முதல் முறையாய் மகி அழுவதை பார்த்தான், மகி இவ்வளவு நேரம் சொல்லிய வார்த்தைகளில், கடைசியாய் மகி சொன்ன வார்த்தை தான் ஜோவை அதிகம் யோசிக்க வைத்தது அது"{இப்போது என் தேடல் அடங்கியது, எனக்கும் கிடைத்தது வாழ்க்கை.......... ...இப்போது என் தேடல் அடங்கியது, எனக்கும் கிடைத்தது வாழ்க்கை....... } இப்போது இருவரின் கண்களிலும் கண்ணீர்..... ஆம் மகியின் கண்ணில் இருக்கும் கண்ணீர் அவன் பழைய வாழ்கையில் ஏற்பட்ட காயங்களால் வருவது அது சரி........ ஜோவின் கண்ணீல் இருந்து ஏன் கண்ணீர் வருகிறது?........ {இப்போது என் தேடல் அடங்கியது, எனக்கும் கிடைத்தது வாழ்க்கை} இது மகி சொல்லியது அப்படியெனில் .. நம் தேடலில் கிடைத்துவிட்டதாக நினைத்த என் தலைவன் இந்த மகி இல்லையா என்ற ஏமாற்றம் ஜோவின் கண்ணீல் கண்ணீராக ...............

(நாணல் வளையும்)


__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

எல்லாரையும் நம்புவது ஆபத்து, ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து/////
இந்த வரிகள் ரொம்ப உண்மை......

அழகான காதலும், அதைவிட அதிக அக்கறையும் இருவருக்கும் இடையில் நிழலாடுகிறது.....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u vijay



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard