“பிரச்சனைகளை அறிவுடனும், தன்னம்பிக்கையுடனும் சந்திக்கும் போது துணிவு ஏற்படும். அதுவே எல்லா செயல்களிலும் வெற்றிபெற உதவி செய்யும்” என்கிறார் அறிஞர் ஹார்வே.
எப்படி செயல்பட்டால் குறிக்கோளை அடையலாம் என்பதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு இருக்க வேண்டும். அந்த சிந்தனையே செயல்பட வைத்து வெற்றி பெற வழிவகுக்கும்.
வாழ்க்கையில் எதையும் துணிவுடன் செய்யாமல் இருந்தால் நாம் விரும்பும் எந்தக் காரியமும் வெற்றியுடன் அமையாது. பயன்தரும் பெரிய மரமாக நம்மை வளர்த்துக் கொள்வது நல்லது. முட்புதராக இருக்கக்கூடாது. கால் தவறி முட்புதரில் விழுந்துவிட்டால் காயம் ஏற்படும்.
நம்மை மற்றவர்கள் மாற்றும்படியாக இருந்துவிடக் கூடாது. நம்மை நாமே மாற்றிக்கொண்டு செயல்பட்டால் தான் வெற்றியைப் பெற முடியும். நம்முடைய சக்திக்கு ஏற்றபடி ஆசைப்பட்டால் நிச்சயம் கிடைக்கும். சக்தியை மீறி ஆசைப்பட்டால் நடக்காமல் போவதுடன் வாழ்க்கையே மாறிவிடும்.
புரியரது புரியாது.. புரியாதது புரியாது.. புரியரது புரியாம இருக்கும் போது புரியாததும் புரியாது.. புரியாம இருக்குறது புரியும் போது புரியாததும் புரியாது.. இப்ப நான் என்ன சொன்னேன் உங்களுக்கும் புரியாது எனக்கும் புரியாது.. அட போங்கய்யா..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
நம்மை மற்றவர்கள் மாற்றும்படியாக இருந்துவிடக் கூடாது. நம்மை நாமே மாற்றிக்கொண்டு செயல்பட்டால் தான் வெற்றியைப் பெற முடியும்..... இந்த வார்த்தைகள் ரொம்ப நல்லா இருக்கு தமிழன்...