எங்கள் கதைக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள் , இப்போது உங்களை பற்றி சொல்லுங்கள் மணி, என்றான் சந்துரு.மணி சிரித்துவிட்டு, செழியனை பார்த்தான், மௌனமாய் தலை குனிந்திருந்தான் செழியன் . மணியோ தீபக், சந்துருவை பார்த்து பேச ஆரம்பித்தான். நானும் சென்னை தான் , பெங்களூர் குப்பம் இங்க தான் வொர்க் பண்றேன் என்றான். இவ்ளோ தானா , நீங்க பெருசா சொல்லுவிங்கன்னு நெனச்சேன். நீங்களும் "கே " தானே, நீங்க "கே"வா இருந்தா உங்கள கேக்காமலே உங்க தொடையில டைரி வெச்சான். இப்ப கரெக்ட் பண்ண தெரியாம இருக்க செழியன நீங்க தான் கரெக்ட் பண்ணனும் என்றான் , பழைய கதை எதுவும் தெரியாத தீபக். மணி என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தான். செழியனோ மெல்லிய குரலில் எனக்கு இவர(மணி) முன்னாடியே தெரியும் என்றான். தீபக் சந்துரு இருவரும் ஒன்றும் புரியாமல் எப்படி என்றனர். சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டு , இப்போது நீங்கள் எப்படியோ அப்படி தான் முன்பு நாங்கள் இருந்தோம் என்றான். மணி குறுக்கிட்டு உங்களா மாதிரி செழியன் மட்டும் தான் சின்சியரா லவ் பண்ணான். ஆனால் நான் அவனை லவ் பண்ணவே இல்லை என்று மணி சொல்லி முடிப்பதற்குள் செழியன் அழ ஆரம்பித்து விட்டான். செழியன் அழுவதை பார்த்து மணியால் ஒன்றுமே செய்ய முடியவில்லை, அமைதியாய் இருந்தான். தீபக்கும் சந்துருவும் மட்டுமே அழாதே என்று சமாதானம் செய்தனர்.செழியன் அழுவதை நிறுத்தி மூக்கை இழுத்துக்கொண்டு இருந்தான். அப்போது தீபக்கும் சந்துருவும் ஒருமித்த குரலில் செழியன் ஸாரிடா என்றனர். எதற்கு நீங்க ஸாரி சொல்றிங்க என்று கேட்டான். தீபக் சொன்னான் உனக்குள்ளும் இப்படி ஒரு வலியுடனான காதல் ஒன்னு இருக்குனு எங்களுக்கு தெரியல, நீ என்னிடம் நடந்து கொண்ட விதம் , வந்ததும் மணி தொடையில் டைரியை வைத்தது இதை எல்லாம் பார்க்கும் போது உன் எதிர் பார்ப்பு மொத்தமும் செக்ஸ், செக்ஸ், இது தான் செழியன் என்று நினைத்து விட்டோம் ஸாரிடா என்றான் தீபக்.செழியனோ அமைதியாய் நீ, சந்துரு மட்டும் இல்ல என்ன பார்க்கிறவர்கள் எல்லாம் அப்படி தான் நினைக்கிறாங்க. என்ன பொருத்தவரைக்கும் என்னுடைய எதிர்பார்ப்பு , காதல் எப்படினா, அதில் caring , sharing affection , with sex இது தான் காதல், இத தான் நான் எதிர் பார்த்து இந்த field -குள்ள வந்தேன். ஆனால் என்னுடைய முதல் காதலே , (இதை சொல்லும் போது செழியன் மணியை பார்த்தான்).எனக்கு ஒரு பெரிய வலியை தான் தந்தது. அந்த முதல் காதல் தந்த வலியை என்னால் மறக்க முடியாது என்றாலும் , மறைத்தேன். அடுத்த ஒரு வாழ்க்கை நமக்காக இருக்கிறது என்று எதிர் பார்ப்போடு இருந்தேன் .ஆனால் அதன் பிறகு நான் சந்தித்தது எல்லாம் வலிகளே தவிர சுகங்கள் அல்ல. என்னிடம் பழகியவர் எல்லாம் என் இளமையையும் , செச்சையும் மட்டுமே பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டனர். அப்போதும் நம்பிக்கையாய் இருந்தேன், ஒரு முடிவும் செய்தேன் , அது தான் என்னை இந்த பெங்களூர் வரைக்கும் என்னை அழைத்துக்கொண்டு வந்து சேர்த்துள்ளது. அது, அவர்கள் எதிர்பார்ப்பது செக்ஸ் , அந்த செக்சை அவர்களுக்கு அதிகப்படியாய் தந்தாள் , நாம் எதிர் பார்க்கும் caring , sharing affection இது போன்ற அன்பை எனக்கு தருவார்கள் என்று நினைத்தேன். ஆனால் நடந்ததோ , என்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் நண்பருக்கு நான் அதிக சுகத்தை தந்ததால், அவர்கள் எனக்கு தந்தது நான் விரும்பிய அன்பை அல்ல, செழியா நீ நன்றாக கம்பெனி குடுக்குரடா, உன்னை அடிசிக்க ஆளே இல்ல, நான் இந்த அளவுக்கு யாரிடமும் என்ஜாய் பண்ணதில்லை, உன்னை அடுத்த முறையும் வரச் சொல்கிறேன் என்று தான் சொல்லிவிட்டு செல்கின்றனர்.இப்போது நீங்கள் பார்க்கும் செழியனோ , இப்போதும் எதிர்பார்ப்போடு தான் இருக்கிறேன் எனக்கான வாழ்கை எங்கோ இருக்கிறது என்ற நம்பிக்கையில், ஒருவனுக்கு முடிவு என்று ஒன்று உண்டு அது நல்லதோ கேட்டதோ எதுவென்றாலும் பார்த்து விடலாம் என்ற முடிவில் இப்போது இருக்கும் இந்த செழியன் என்று கண்ணீல் இருந்த கண்ணீரை துடைத்தான் செழியன்.பக்கத்தில் இருந்த மணியோ என்னை மன்னித்து விடு செழியா என்றான். அன்று நீ உன்னுடைய காதல் வலியை எனக்கு புரிய வைக்கவில்லை, அன்று புரிந்து கொள்ளும் நிலைமையில் நானும் இல்லை. ஆனால் இன்று இன்னொரு ஒருவன் எனக்கு உன் காதலின் வலியையும் , எனக்கும் என் காதலின் வலியையும் புரிய வைத்துவிட்டான் என்று கூறி அழுதான். தீபக், சந்துரு, செழியன் மூவரும் மணியே பார்த்தனர். மணி சொல்ல ஆரம்பித்தான், (மச்சி கோவபடாதிங்க மணி லவ் ஸ்டோரிய மூனு வரியிலேயே முடிச்சிடுறேன்) பெங்களூர் வேலைக்கு வந்த இடத்தில் எனக்கும் யாரையுமே தெரியாது, என் உணர்சிகளையும் அடக்க முடியல, அப்ப தான் அவன பாத்தேன். அவனும் தமிழ் பய்யன் தான்.அவன மட்டும் தான் எனக்கு தெரியும் அப்டிங்கராதாள அவன் மேல எனக்கு காதல் வந்துச்சி அவன் என் கூட மட்டும் தான் இருக்கணும் அப்டின்னு எல்லாம் அவனுக்கு கண்டிஷன் போட்டேன். அவனும் சரின்னு சொல்லிட்டு , என்னிடம் எவ்வளவு பணம் கறக்க முடியுமோ அவ்ளோ கறந்துட்டு , என் காதலையும் தூக்கி எறிஞ்சிட்டு போய்ட்டான். அந்த நிமிஷம் என் மனசே வெடிச்சிடும் போல இருந்தது, அப்ப தான் நீ!!!!!! எவ்ளோ கஷ்ட பட்டிருப்பனு எனக்கு புரிஞ்சுது, அந்த பையன் ஒரு callboy அப்டிங்கருதும் எனக்கு இப்ப தான் தெரிஞ்சுது. நான் சென்னை அவசர அவசரமா கேளம்புனதும் உன்னை பார்த்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதற்காகவும் தான் என்றான் மணி. அதுவும் ட்ரெயின்லையே உன்னை பாப்போம் அப்டின்னு நான் நெனைக்கவே இல்லை என்றான் மணி . செழியா என்னை மன்னித்து விடு என்று கூறினான் மணி. செழியனோ , சரி விடு எல்லாம் அந்த அந்த நேரத்துல அவங்க அவங்க பண்ற தப்பு என்றான். செழியன் கொஞ்சம் சத்தமாய், சரி இந்த கதையெல்லாம் இருக்கட்டும் தீபக் நீங்க சொல்லுங்க உங்க கல்யாணம் என்ன ஆனது என்றான். செழியன் இப்படி கேட்டதும் சந்துருவின் முகம் மாறியது. தீபக் சந்துருவின் கையை அழித்திக்கொண்டே சொல்ல ஆரம்பித்தான். அம்மாவின் முடிவை என்னால் தட்ட முடியவில்லை, எனக்காகவே , எனக்காக மட்டுமே வாழ்பவர் என் அம்மா. என் அம்மாவிற்கோ நீண்ட நாள் ஆசை என் மூலமாக ஒரு பேரக்குழந்தையை பார்க்க வேண்டும் என்பது தான் அந்த ஆசை./// என் வீடு சந்துருவிற்கு தெரியாது,, ஆனால் அவன் நண்பன் ஜானுக்கு என் வீடு தெரியும். அன்று ஜானை அழைத்துக்கொண்டு சந்துரு என் வீட்டிற்கு வந்திருந்தான். சந்துரு வாசலிலே தீபக்கை பார்த்துவிட்டான். சந்துரு ஓடிப்போய் தீபக்கிடம் என்னடா மாப்புள்ள மாதிரி வெள்ளை சட்டை, பர்மல்ஸ் டிரஸ்ல இருக்க என்ன என்றான். தீபக் ஒன்றும் பதில் சொல்லவில்லை, சரி அதைவிடு நீ எதுக்கு ரெண்டு நாள் காலேஜ் வரல , அதன் வீட்டுக்கே வந்துட்டேன். பாவி ஒருநாளாவது வீட்டுக்கு என்னை வர வைக்கவில்லை ஆனால் நானே வந்துட்டேன் பார்த்தாயா என்றான் அதற்கும் தீபக் ஒன்றும் பேசவே இல்லை.இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே தீபக்கின் அம்மா வெளியில் வந்தார், தீபக் யாரிது என்றார் சந்துருவையும், ஜானையும் பார்த்து. அடுத்த நிமிடமே சந்துரு சத்தமாக நான் தான் சந்துரு , தீபக்கோட பெஸ்ட் பிரெண்ட் , தீபக் சொல்லி இருப்பானே என்றான். தீபக்கின் அம்மாவோ அப்படியெல்லாம் யாரை பற்றியும் அவன் சொன்னதே இல்லை என்றார். சந்துருவிற்கோ முகமே வாடிப்போனது தீபக்கின் அம்மா சொன்னதை கேட்டதும். தீபக் பொன்னு வீட்டுகாரங்க உன்னை தான் மாப்பிள்ளை எங்க மாப்பிள்ளை எங்கனு கேக்குறாங்க , சீக்கிரம் இவங்கள அனுப்பி வைத்துவிட்டு உள்ளே வா என்று சொல்லிவிட்டு சென்றார் தீபக்கின் அம்மா. சந்துருவிற்கு ஒன்றும் புரியவில்லை. இந்த நேரத்தை பயன்படுத்தி ஜான் தன் வேலையே காட்ட ஆரம்பித்தான்.என்னடா சந்துரு, இங்க நடக்குறத பார்த்தால் தீபக் தன் மாப்பிள்ளையா அதுவும் உன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் என்று எரிகிற தீயில் என்னை உற்றினான் ஜான். தீபக் சத்தமாக, ஜான் உன் வாயை மூடு என்றான். தீபக் சந்துருவின் கையை பிடித்து அவன் விட்டை விட்டு தெருவிற்கு அழைத்து வந்து , இப்போது நீ இங்க இருந்து போ , நான் வந்து எல்லாவற்றையும் உன்னிடம் சொல்கிறேன் என்றான். சந்துரு , தீபக் பிடித்திருந்த தன் கையை உதறி விட்டு , உங்கள் அம்மா சொன்ன மாதிரியே நீயும் என்ன வெளிய கொண்டு வந்து விட்டுட சந்தோஷம். ஆனால் வயசானாலும் உங்க அம்மாவுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல என்றான் செழியன். செழியா அம்மாவை பற்றி தப்பா பேசாத என்றான் கோவமாக தீபக். ஏன் பேசகூடாது, வெளிய கழுத்த புடுச்சி தள்ளாத குறையா , அனுப்புன்னு சொல்றாங்க , என்ன ஜென்மமோ ச்சா என்றான் சந்துரு. தீபக் பளார் பளார் என்று கன்னம் வீங்கி போகும் அளவுக்கு அறைந்தான் சந்துருவை. இதை பார்த்ததும் ஜான் அரண்டு போனான். தீபக் கோவமாக சந்துருவிடம் , உனக்கு நான் ரெண்டு நாள் எதுக்கு காலேஜ் வரல என்னனு தெரியனும் அவ்ளோ தானே, சொல்றேன். எனக்கு கல்யாணம் ஆகா போகிறது. நேற்று பெண்ணை போய் பார்த்துவிட்டு வந்தோம். இன்று அவர்கள் எங்கள் வீட்டில் கை நினைக்கிறார்கள். அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் , அடுத்த நாளே கல்யாணம் என்று சொல்லி பெருமூச்சி விட்டான் தீபக். அவன் சொல்லி முடித்த அடுத்த நிமிடம் சந்துரு மெல்ல நடக்க கூட சக்தி இல்லாமல் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான். அவன் பின்னால் ஜான் வந்து கொண்டிருந்தான். தீபக் சொன்னது எல்லாம் இடியே தன் மீது விழ்ந்தது போல் இருந்தது, தீபக் ஏன் இதுவரை என்னை அவன் வீட்டிற்கே அழைத்து போகவில்லை அதற்கு என்ன காரணம், தன் அம்மாவிடம் கூட தன்னை பற்றி சொல்லாததற்கு என்ன காரணம் , தன்னை தீபக்கின் அம்மா இவ்வளவு கேவலமாக நடத்தியதற்கு என்ன காரணம் , தன் திருமணத்தை தீபக் மறைப்பதற்கு என்ன காரணம் என்று ஒன்றும் புரியாமல் யோசித்துக்கொண்டே அழுதவாறு நடந்து சென்றான் சந்துரு. சந்துரு செல்வதையே பின்னால் நின்று பார்த்துக்கொண்டே இருந்தான் , ஒன்றும் பேச முடியாத செய்ய முடியாத சிலையாய் தீபக். .இந்த ஒருவாரத்தை பயன்படுத்தி தீபக் சந்துரு இருவரையும் ஒரேடியாக பிரிக்க வேண்டும் என்று முடிவுடன் இருந்தான் ஜான். இந்த ஒரு வாரத்தில் நடந்தது தான் அந்த பரிதாபம்.