செழியன் ரயிலில் ஏறுவதற்கு ஒரு கால் படியில் எடுத்து வைத்தான், அவன் மொபைல் ஒலித்தது , எடுத்து யார் என்று பார்த்தான். ஜான் தான் போன் செய்திருந்தான். எடுத்து பேசினான் , ஹலோ என்றான் , ஜானோ "என்ன செல்லம்!" ஸ்டேஷன் போய்டியா , ட்ரெயின் ஏறிட்டியா, சாப்டியா , என்று பட படவென்று பேசிக்கொண்டே போனான். செழியனோ அமைதியாய் இப்ப தான் ட்ரெயின் ஏறி இருக்கேன் இனிமே தான் எல்லாம் என்று படிக்கட்டில் நின்றுகொண்டே பேசிக்கொண்டு இருந்தான் செழியன் . செழியனின் பின்னால் இருந்து ஒரு ஆண் குரல் "ஹலோ பாஸ் ஒன்னு ஏறிட்டு பேசுங்க இல்ல எறங்கி நின்னு பேசுங்க , என்னையாவது ஏற வழி விடுங்க " என்றது அந்த குரல்.செழியனோ கோவத்தோடு அவனை திட்டுவதற்கு திரும்பினான், திரும்பி அவனை பார்த்த செழியனுக்கோ அவனை திட்டுவதற்கு மனசே வரவில்லை. செழியன் ஒரு நிமிடம் அவனையே ரசித்தான். சுமார் 27 வயது இருக்கும், ஆறடி உயரம், மாநிறம் , ஜிம் பாடி என்று சொல்ல முடியாத அகன்ற தோள்களை கொண்டு ஒரு மன்மதன் போலவே இருந்தான் செழியன் கண்ணுக்கு. செழியன் ஒரு நிமிடம் சிலை போல் அப்படியே நின்றான், போனிலோ ஜான் ஹலோ! ஹலோ! என்று கத்தினான், நேரிலோ எதிரில் நின்றிருந்தவன் ஹலோ என்னங்க அப்டியே நின்னுட்டு இருந்தா எப்புடி.ஓஹோ ! ஓஹோ! தமிழ் தெரியாதா. ஸாரி, I shall let go the வே என்றான். சுதாரித்து கொண்ட செழியனோ நானும் தமிழன் தான், பச்ச தமிழன், என்று ஒரு சிறிய புன்னகையோடு வழிவிட்டான். செழியனோ பதிலுக்கு அவனும் சிரிப்பான் என்று எதிர் பார்த்தான், அவன் சிரிக்கமாலையே சென்று விட்டான். செழியன் போனில் இருந்த ஜானிடம் "தேங்க யு " என்று சொல்லி நான் பிறகு பேசுகிறேன் என்று போனை அணைத்து விட்டான். செழியன் தன் டிக்கெட் நம்பரை பார்த்து அவன் சீட்டிற்கு வந்தான்.ஜன்னலோர சீட் அமர்ந்தான் , அவன் எதிர் சீட்டில் ஒருவன் தன் முகத்தை மறைத்தார் போல் "Love and life in a changing city"-
bob d'costa எழுதிய புத்தகத்தை படித்து கொண்டு இருந்தான். செழியனின் மனதோ எதிரில் இருப்பவன் படிக்கட்டு ஏறும் போது பார்த்தவனாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். சிறிது நேரம் கழித்து யோசித்தான், இல்லையே நாம் ஏறும் போது பார்த்தவன் ரெட் டி- சர்ட் தானே போட்டு இருந்தான் என்று யோசித்து கொண்டே இருந்தான். எதிரில் இருந்தவனோ புத்தகத்தை கீழிறக்கி தன் முகத்தை காட்டுவதாய் தெரியவில்லை. செழியனோ மனதுக்குள் திட்டினான்,கொஞ்ச உன் முகத்த கட்டேண்டா என்று முனங்கிக்கொண்டே சொன்னான் எப்படி நீ இறக்குவ என்ன? மாதிரி லவ் ஸ்டோரி புக் படிக்குற, ச்சா எத்தனை முறை வேண்டுமானாலும் "Love and life in a changing city"- bob d'costa எழுதிய இந்த புத்தகத்தை படிக்கலாம், எப்படி ரசித்து ரசித்து இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார் என்று அந்த புத்தகத்தை பாராட்டினான், இவை எல்லாம் மனதுக்குல்லையே.செழியன் அருகில் யாரோ எதையோ வைப்பது போல் இருந்தது திரும்பி பார்த்தால், ஒரு வாட்டர் பாட்டில் இருந்தது, அதை வைத்தது செழியன் பார்த்த மன்மதன் தான். செழியனுக்கோ மிகவும் மகிழ்ச்சி , வருத்தமும் கூட, வருத்தம் செழியனின் பக்கத்தில் அவன் வைத்த வாட்டர் பாட்டில் மட்டும் தான் இருந்தது. செழியனின் மன்மதனோ , செழியனின் எதிரில் ஒருவன் உட்கார்ந்திருந்தனே அவனுக்கு அருகில் ஒருவர் உட்காரும் அளவுக்கு இடம் விட்டு அவன் அமர்ந்திருந்தான். செழியனுக்கு சென்னை இறங்குவதற்குள் இவனிடம் பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்தான். பிறகு செழியனோ சீ.... சீ........, அவன் மனதிற்குள்ளே செழியா நீ இருக்கும் அழகுக்கு , உன் உதட்டுக்கு , உன் வளைவு நெளிவு உடைய உன் இச்ற்றக்ச்சற்கு எவனையும் கரக்ட் பண்ணலாம் , பண்றேன்.என்று சொல்லிக் கொண்டான் . எதிரில் இருந்தவனோ பார்ப்பான் என்று எவ்வளவு முயற்சி செய்தும் செழியனை அவன் பார்க்கவே இல்லை. செழியனோ என்னடா! இவனுக்கு என்ன எதாவது ஆபரேஷன் பண்ணிட்டாங்களா, இப்படி பட்டவனுக்கா இவ்வளவு நேரம் கனவு கண்டேன் என்று கூட யோசித்து சிரித்தான். செழியன் கொஞ்சம் சத்தமாக சிரிப்பதை என்ன என்பது போல் செழியனின் மன்மதன் பார்த்தான். அவனை பார்த்து செழியன் ஒரு முறை சிரித்தான், அவனும் பதிலுக்கு சிரித்தான். செழியனோ இதான் சந்தர்ப்பம் என்று செழியனே பேச ஆரம்பித்தான். என்னுடைய நண்பன் ஒருவனை பற்றி நினைத்தேன் அதான் சிரிப்பு வந்தது என்றான். அவனும் சரி விடுங்க , நீங்க ஏறும் போது நானும் ரொம்ப அதிகமா , கொஞ்சம் சத்தமாகவும் பேசிட்டேன் ஸாரி என்றான். இட்ஸ் ஓகே என் மேலேயும் தவறு இருக்கு என்று சிரித்து கொண்டே சொன்னான் செழியன். செழியன் மனதுக்குள்ளே "அப்படா பய புள்ள நம்ம வலையில சிக்கிடுச்சி......... சிக்க வேச்சிடுவோம்லே" என்று நினைத்து கொண்டான். செழியனோ எதிரில் புத்தகம் படித்து கொண்டு இருந்தவனை பார்த்தான், முகம் மட்டும் தெரியவில்லை , அவனும் பார்ப்பதற்கு ஒரு 25 வயது தான் இருக்கும் கொஞ்சம் நிறமாகவே இருந்தான். கொஞ்சம் பயம் இருந்தது இவன் நம்ம மன்மதன கரெக்ட் பண்ணிடுவனோ , நான் விட மாட்டேன் இருந்தாலும் ........ செழியன் அவனிடம் நீங்க எங்க போகணும் என்றான், நான் சென்னை தான், என்றான். செழியன் நிறுத்தாமல் வேலை விஷயமா போறிங்களா என்றான். இல்லைங்க நான் வேலை பார்க்கிறது பெங்களூர் தான் என்றான். என்ன விஷயமா???????........ நான் என் நண்பனை பார்த்து விட்டு திரும்புகிறேன், நீங்க கேக்கறதுக்கு முன்பே நான் சொல்லிட்டேன், இப்போது நீங்க சொல்லுங்க என்று சிரித்து கொண்டே செழியன் சொன்னான். உ ர க்ரழிய் மண் , நான்..... நான்.... நா......... எங்கள் பொக்கிஷத்தை தேடிப்போகிறேன் என்றான். செழியன் இதற்கு மேல் வேறொன்றும் கேட்காமல் இவ்ளோ பேசுறோம் எதிர்ல இருக்கிறவர் பேசவே மாட்டாரா , என்று செழியனே எதிரில் இருந்தவனின் புத்தகத்தை கீழிறக்கினான் . செழியன் ஒரு நிமிடம் அதிர்ந்து போனான்........... எதிரில் இருந்தவனின் வலது புற முகம் , கழுத்து , கை எல்லாம் தீ காயம் ஏற்பட்ட தழும்புகளோடு இருந்தது. ஸாரி என்றான் எதிரில் இருந்தவரிடம். அவர் ஒன்றும் பதில் பேசாமல் மறுபடியும் புத்தகம் படிக்க ஆரம்பித்தான். செழியன் சிறிது நேரம் கஷ்டப்பட்டாலும் , வாழ்கையை முழுதும் புரிந்து கொள்ளாத செழியன் சந்தோஷப் பட்டான். அவன் சந்தோஷத்திற்கு காரணம் மன்மதனை தான் அடைவதற்கு இந்த எரிந்து போனவன் குறுக்கே வர முடியாது என்று கர்வம் கொண்டான். திடிரென்று ஒரு வித கோவத்தோடு "காபி சாப்பிடலாம்" வாங்க போகலாம் என்று ப்லட்பாரம் இறங்கினார். செழியன் ரயிலில் இருந்து கேண்டின் செல்வதற்குள் தன் வேலையை காட்ட ஆரம்பித்தான் . மன்மதனை இடிப்பதும், அவன் தள்ளி தள்ளி போவதும் முடிந்தவரை 5 நிமிடத்தில் அவன் எதிர் பார்ப்பதை மன்மதனிடம் புரிய வைத்தான் செழியன் .கேண்டினில் டி வாங்கும் போது தெரியாமல் படுவது போல் மன்மதனின் ஆணுருப்பிலும் கைவைத்தான், அவன் விலகியே சென்றான். காபி வாங்கி விட்டு காபி -க்கு பணம் தர முயன்றான் ,அப்போது செழியனுக்கும் மன்மதனுக்கும் 5 நிமிடம் காபி -க்கு பணம் யார் கொடுப்பது என்ற போட்டிக்கு பின் மன்மதன் பணம் கொடுத்தான்.அப்போது தான் செழியன் இவ்வளவு பேசிட்டோம் ஆனால் உங்கள் பெயர் எனக்கு தெரியாது என் பெயர் உங்களுக்கு தெரியாது என்றான். அவனோ ஐம் தீபக், தீபக் ஆண்டனி என்றான். செழியனோ ஐம் செழியன் என்றான். பேசிக்கொண்டே இருக்கும் போது தான் கவனித்தான் தீபக் 3 காபி வாங்கி இருந்தான் தீபக் . செழியனுக்கோ குழப்பம் , ஆனால் செழியனோ இதை தீபக்கிடம் கேட்கவில்லை, தீபக் ஒன்றை செழியனிடம் தந்துவிட்டு ஒன்றை தன் கையிலேயே எடுத்தான். செழியனோ அந்த கேண்டீனிலே நின்று இருந்தான் ஏனெனில் மற்றொரு காபி அங்கேயே இருந்தது. அந்த ஒன்றை எடுத்துவந்த தீபக் , எதிரில் நின்று கொண்டிருந்த , தான் போக போகிற சென்னை ரயிலில் எதிரில் அமர்ந்திருந்தவனிடம் கொடுத்தான், அவனும் அதை சிரித்துக் கொண்டே வாங்கினான். இதை தூரத்தில் இருந்து பார்த்த செழியனின் கண்கள் மிரண்டு போய் பார்த்தது, அவன் உதடுகள் கூட வெடித்தது போல் தன் உதட்டை கடித்தான், அவனை அடிக்க வேண்டும் போல் இருந்தது செழியனுக்கு .பிறகு செழியன் நம்முடன் ரயில் பயணத்தில் வருபவன் என்பதற்காக வாங்கி தந்திருக்கலாம் என்று நினைப்பதற்குள் , ரயிலில் உட்கார்ந்திருந்த அவனோ காப்பியை கிழே வைத்து விட்டு வாட்டர் பாட்டலில் தண்ணீர் குடித்தான். அவன் தண்ணீர் குடித்த பாட்டில் தீபக் வாங்கி வந்தது. செழியனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்குள் தீபக் கேண்டினில் இருந்த இரண்டாவது காபியை எடுத்துக்கொண்டு, போகலாமா என்றான் செழியனிடம், செழியனும் போகலாம் என்று தலையாட்டினான். அந்த நேரம் ரயில் புறப்பட்டு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. ரயிலில் அமர்திருந்தவனோ ஜன்னல் கம்பி வழியே தலையை நீட்டி தீபக் சீக்கிரம் வா!!!!!!!!!! ட்ரெயின் மூவ் ஆகுது என்று கத்தினான். தீபக் பின்னால் வரும் செழியனை கூட பார்க்காமல் சந்துரு!!!!!!!!!!!!! நீ உள்ள போ நான் வரேன் தலையை உள்ள எடு என்று கத்திக்கொண்டே ஓடினான். அங்கு நடப்பது ஒன்றும் புரியாமல் பின்னால் ஓடி வந்தான் செழியன்.அதற்குள் வண்டியின் வேகம் அதிகரித்தது இதை கவனித்த சந்துரு படிக்கட்டிற்கே ஓடி வந்தான். சந்துரு படிக்கட்டில் வந்தே கை கொடுத்து தீபக்கை ஏற்றினான். பின்னால் ஏறிய செழியனுக்கு இன்னொரு அதிர்ச்சி செழியனுக்கு கை கொடுத்து ஏற்றிவிட்ட சந்துரு செழியனின் அந்த அகன்ற மார்பில் சாய்ந்திருந்தான் . தீபக்கின் கைகளோ சந்துருவின் இடுப்பை வளைத்து பிடித்திருந்தது.செழியனோ இங்கு நடப்பது கனவா, நிஜமா என்ற குழப்பத்தில் குழம்பி இருந்தான்.