எங்க வீட்டுப்பக்கம் ஒரு பாட்டி இருந்துச்சி அது யாருக்காச்சும் கல்யாண பேச்சு பேசுனா அவங்க கிட்ட போய் அஞ்சாறு வரன காட்டும். அவுக குலப்பெருமையெல்லாம் பேசி தேர்ந்தெடுக்கவைக்கும். அவுக தேர்ந்தெடுத்த அப்புறம் குறையெல்லாம் சொல்லி அந்த வரன அதுவே கழிக்கும். அதுக்கு கூட்டி கழிக்கும் கிழவினு பேரு.
அத மாதிரி நவீன தீண்டாமைய ஒடுக்கப் போறேன் ஒழிக்க போறேன்னு சொல்லி ஊர கூட்டின ஒருத்தர், ரென்டு வருஷம் கள்ளப்பணியாற்றி களைச்சுப் போனாராம். ஒதிங்கி நிற்க போறாராம்.இவருக்கு பெயர் என்ன? இனி நம் கதி என்ன?
போறேன் போறேனு சொல்லி நீங்க இருந்த மனச நீங்களே புண்ணாக்காதீங்க
"தலைவரே"
"தலைவரே" நீங்க கட்சி தலைவர் இல்ல ஒதுங்கி நிற்க, குடும்ப தலைவர் நீங்க
உணர்வீரா என் மன வலியைனு உறக்கச் சொல்லுங்கள் தோழர்களே!
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
அத மாதிரி நவீன தீண்டாமைய ஒடுக்கப் போறேன் ஒழிக்க போறேன்னு சொல்லி ஊர கூட்டின ஒருத்தர், ரென்டு வருஷம் கள்ளப்பணியாற்றி களைச்சுப் போனாராம். ஒதிங்கி நிற்க போறாராம்.இவருக்கு பெயர் என்ன? இனி நம் கதி என்ன?
போறேன் போறேனு சொல்லி நீங்க இருந்த மனச நீங்களே புண்ணாக்காதீங்க "தலைவரே"
"தலைவரே" நீங்க கட்சி தலைவர் இல்ல ஒதுங்கி நிற்க, குடும்ப தலைவர் நீங்க
உணர்வீரா என் மன வலியைனு உறக்கச் சொல்லுங்கள் தோழர்களே!
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
இதென்னங்க வம்பா போச்சு.. அவரோட முடிவுல தனிப்பட்ட விதத்துல எனக்கு வருத்தம் தான்.. ஆனாலும் அவர் என்ன சூழ்நிலைல அப்படி ஒரு முடிவுக்கு வந்தார்னு நமக்குத் தெரியாதில்லையா..
தவிர அவர்.. சற்று ஒதுங்கி நிற்கறதா தான் சொல்லியிருக்காரே ஒழிய.. எங்கயும் போய்ட மாட்டார்..
அவருக்கென்ன மஞ்சத் துண்டு மாதிரி.. தென் தமிழ்நாட்ட பாத்துக்க ஒரு புள்ள.. வட தமிழ்நாட்ட பாத்துக்க ஒரு புள்ளயா இருக்கு.. அப்படி இருந்தா அவர் மாதிரியே.. இவரும் அறிக்கை விடலாம்.. எனக்கப்புறம்.. “இவன்” கட்சிப் பொறுப்ப ஏத்துப்பான்னு..
ஆனாலும் உங்க ஆதங்கம் நல்லாவே புரியுது தினேஷ்..!! Don't worry!!!
இன்று வரை குருடன் கைத்தடியால் உலகை சுற்ற புறப்பட்டது போல் தட்டுத்தடுமாறி இத்தளத்தை உபயோகித்து வருகிறேன் அப்படி கஷ்டப்பட்டுனாலும் கதை எழுதவோ கருத்து சொல்லவோ செய்கிறேன் என்றால் அதற்கு மூல காரணமே அவர்தான் இதெல்லாம் போகட்டும் இனி நான் யார விஜினு கூப்பிடுவன் யாரோட உரிமையா சண்ட போடுவன் பெத்த தாயோட விருப்பத்த மீறி மகன் தன் மனைவியோட தனிக்குடித்தனம் போரப்ப அந்த தாய்கு ஏற்படுமாமே ஒருவலி அதை நான் உணர்கிறேன் துக்கம் தொண்டையடைக்குது இதையெல்லாம் இங்கு கூறவில்லை என்றால் என் கஷ்டத்திற்கு வடிகாலே இருக்காது ரோதிஸ்.
எனக்கு ஆறுதல் சொல்ல முயன்ற ரோதிஸ்க்கு என் நெஞ்சார்ந்த நன்றி
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
நேற்று தானே உங்களிடம் என் காதலனை பார்கலாம் பேசமுடியாது ரசிக்கலாம் பழக முடியாது என்று கூறினேன். இன்று என் ஆசான் நிலை அதைவிட மோசமாகி விட்டதே தமிழா. இவர் சென்று வருகிறேன் என்று கூட கூறவில்லையே விடை பெறுகிறேன் என்றல்லவா கூறுகிறார். இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை இத்தளத்திற்கு வந்து செல்லும் என் கண்ணில் அக் கொடிய செய்தி இப்போது தான் தட்டுப்பட்டது. அவர் பிளாக் ஸ்பாடில் கதைகளை படித்து விட்டு அதற்கு கருத்திட அவரோடு வாதிட எத்தனை ஆசை கொண்டேன் தெரியுமா? அன்பைத்தேடி ஆக்டிவ் போர்டு தான் அதற்கு வழி செய்தது. இப்போது மீண்டும் அவர் பிளாக் ஸ்பாடிற்கே போகிறேன் என்கிறார். அதுவும் அக்கௌன்டை முறித்துக்கொண்டு. பிறவிக்குருடன் பாதியில் கண்பெற்று பாதியில்இழந்தது போல ஆகிவிட்டது என் நிலை.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
என்ன சொல்வதென்று புரியவில்லை..... உங்களையெல்லாம் விட்டுப்பிரிய எனக்கு மட்டும் விருப்பமா என்ன?.... நிச்சயமாக இல்லை.... ஆனாலும், சில பிரிவுகள் சில நேரங்களில் கட்டாயம் தேவைப்படுகிறது.... மீண்டும் எப்போது வருவேன்? என்ற கேள்விக்கு எனக்கு விடைதெரியவில்லை.... எங்கிருந்தாலும் நிச்சயம் நான் எழுதிக்கொண்டுதான் இருப்பேன், இடம் தான் வேறு.... நவீன தீண்டாமையை தீர்க்க என்னாலான களப்பணியை நிச்சயம் நான் செய்துகொண்டுதான் இருப்பேன்..... "விஜய்"க்காக வாழ்ந்தது போதும், இனி "விக்கி"யாக வாழவேண்டுமே?.... விக்கியாக ஒரு சொல்லத்தகுந்த சாதனை ஏதேனும் செய்தபிறகு நிச்சயம் நான் மீண்டும் உங்கள் "விஜய்"யாக பழையபடி வளம்வருவேன்..... உங்கள் வாழ்த்துக்களும், வேண்டுதல்களும் என்னை வழிநடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.....
(இன்னொரு களத்தில் நான் எழுதிய அத்தனை கதைகளையும் "குப்பை" என்று சொன்ன நபரையும் நான் பார்க்கிறேன், உங்களையும் நான் பார்க்கிறேன்.... வாழ்க்கையின் மேடு பள்ளங்களை வெளிச்சம் போட்டு காட்டுது இந்த நிகழ்வுகள்)
உங்களை வழியனுப்பி வைக்க எப்போதும் இயலாது ஆனால் உங்களுக்காக உங்களுக்கான வழியை விட்டு விலகுகிறேன். உங்களுக்காக நீங்கள் விஜயாக திரும்பி வரும் வரையிலோ அல்லது நான் சுய நினைவுடன் இறுக்கும் வரையிலோ நிச்சயம் காத்திருப்பேன்
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
விஜி நான் உன்ன படுத்துன கஷ்டத்துக்கெல்லாம் என்ன மன்னிச்சுடு.விக்கி உன் காதலனுக்கு நன்றி அவன் கூறித்தானே விஜய் அக்கௌன்ட் முடப்படுவதை கூறினாய் நீ மட்டும் கூறாமல் போயிருந்தால் நான் விஜயை தேடி தேடி தவித்திருப்பேன் உன்னவனிடம் உன்னை பத்திரமாக பார்த்துக்கொள்ள நான் வேண்டியதாக கூறு நீ நன்றாக இருந்தால் தான் எங்கள் விஜய் என்னுடைய விஜி நலமாக இருக்க முடியும்.
காத்திருப்பது கஷ்டம்
காக்கவைப்பது சுகம்
காத்திருப்பது காலத்தின் பிடியில் என்று தெரிந்த பின் காத்திருப்பதை தவிர எனக்கு வேறு வழியில்லை
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
! சென்று வா ! சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா கன்று தாயை விட்டு சென்றபின்னும் கன்று தாயை விட்டு சென்றபின்னும் அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா அறிவுலகம் உன்னை அழைக்கின்றது ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது அரண்மனை வாசல் திறக்கின்றது அரண்மனை வாசல் திறக்கின்றது அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன் உன் நிழலிலும் பொருளாக குடியிருப்பேன் தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை - எந்த சபையிலும் உனக்கு நடுக்கமில்லை சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
வெற்றி! வெற்றி! வெற்றி! தமிழனுக்கும், ரோதீஸ்கும் முத்துவிற்கும் மற்றும் விஜீயின் முடிவை மாற்ற முயன்ற அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி விஜீ நீ திரும்பி வரனும்னு கொஞ்சம் ஓவரா பேசிட்டேன் ஆதங்கம் தான் தப்பா நினைக்காதிங்க
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!