Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காவியக் காதல்


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
காவியக் காதல்
Permalink   
 


கிபி1885 ம் வருடம் அதிகாலை மூன்றுமணி நிலா ஒளியில் கல்யாண வீட்டின் கொள்ளைப்புற வாசல் வழியே வெளியேறினாள் வள்ளி அவள் மலைக்குறத்தி பஞ்சமியின் மணங்கவர்ந்த கள்ளி எருது பூட்டிய வண்டியில் அவளை ஏற்றிக் கொண்டு வேகமாய் சென்றாள் பஞ்சமி இருவரும் காவிரியில் தலைமுழுகி தமிழக எல்லை கடந்து ஆந்திர தேசத்தில் கால்வைத்தனர் இராஜஸ்தான் உடைகளோடு .இப்போது அவர்களை யாரும் பண்ணையார் மகள் என்றோ மலைக்குறத்தி என்றோ கூறயியலாது. அவர்கள் பிறந்த வீட்டிலே வள்ளி இறந்துவிட்டா என காரியம் நடந்து குறவர்கள் கூட்டத்திலோ அவளை கண்டதும் கொல்ல உத்தரவு இடப்பட்டது

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

இவர்கள் தான் அவர்கள் கண்கான இடத்திற்கு வந்துவிட்டார்களே வள்ளியின் நகைகள் வீடாகவும் விவசாய நிலமாகவும் மாறின நல்லதோர் நாளில் மாலை மாற்றி திருமணமும் முடிந்தது பஞ்சமி தனக்கு சீதனமாய் கொண்டுவந்த கிழங்குகள் பயிராகி நல்ல விளைச்சல் தந்தது ஊர்வாழ் பெண்கள் இவர்களை கேள்விகளால் துழைத்து எடுத்தனர் அதற்கு இருவரும் நித்திய கண்ணியர் என்றும் தங்களோடு சேரும் ஆண் ஓர்இரவு தான்டி உயிர் வாழ முடியாது எனவும் கூறினர் அது அவ்விருவர்கும் பாதுகாப்பளித்தது

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

இனிய இல்லறம் நடந்த போதும் குழந்தையில்லா ஏக்கம் வாட்டியது வேசி ஓருத்தி தான் பெற்ற பிள்ளை ஆண் என்பதால் அதை வளர்க மனமின்றி இவர்கள் வீட்டு வாசலில் வீட்டுச் சென்றாள் அக்குழந்தை இவ்விருவர் வாழ்வுக்கு புது ஓளிதந்தது ஒருநாள் வள்ளியை கயவன் ஒருவன் கெடுக்க முயன்றான் பஞ்சமியின் தாக்குதலுக்கு ஆளான் களவு செய்ய வந்தவனை காமம் கொள்ள செய்தது வள்ளியின் நீண்ட கருங்கூந்தல் என்றே கூறினான் வள்ளி தன் ஆறடி கூந்தலை அறுத்தெரிந்தாள் காலம் ஓடியது

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

பஞ்சமிக்கு உடல் நலம் குன்றியது அவள் உடல் நலம் பெற வள்ளி கோவிலுக்கு சென்றாள் அவளின் துனைக்கு அருமை மகன் பகீரதனை பஞ்சமி அனுப்பி வைத்தாள் ஆனால் விதி வேறுவிதமாய் விளையாடியது அன்று அடிபட்டு போனவன் பழிவாங்க வந்தான் நித்திரை கொண்ட பஞ்சமீயை பச்சிலையால் மயக்கமடைய செய்தான் முதலில் பழிவாங்க புனர்ந்தான் பின் காமம் கண்மூட மாறி மாறி தொடர்ந்தான் பஞ்சமி நெருப்பில் விழுந்த பஞ்சாய் கரைந்தாள் அங்கே பூஜை முடிந்த போது பூஜை தட்டு தவறியது

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

ஏதோ பயம் ஏற்படவே வள்ளி உடனடியாக வீடு திரும்ப மகனுடன் கிளம்பினாள் அங்கே அரவம் கேட்க வேட்டையாடியவன் விரைந்தெழுந்தான் வாயிற்கதவை தாண்டும் முன்னர் பகிரதன் கையில் சிக்கினானே வளர்பு அன்னை நிலையறிந்தே அருமை மகன் விடுவானா உருட்டுகட்டைதனை கையில் எடுத்தே அவன் உச்சிதனை பிளந்து விட்டான் நொடிப்போழுதில் யாவும் நடக்க வள்ளியவள் சிலையானாள் பச்சிலையின் சக்தி குறைய பாவையவள் நிலையறிந்தாள் அருகிலிருந்த கைவாள் ஓங்கி தன் கழுத்தை தான் அருத்து நிம்மதியாய் மாண்டழிந்தாள் வள்ளி கதறவில்லை பதறவில்லை கையிருப்பு அத்தனையும் கழுத்து மனிச்சங்கிலியும் கொடுத்து மாட விளக்கு ஏற்றிவிட்டு கேரளா செல்ல சொன்னாள் மகனே நீ ஆந்திர எல்லயை மிதிக்கவே கூடாது இது என் ஆணை என்றாள்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

தாய் சொல்லுக்கு கட்டுப்பட்ட மகன் புறப்பட்டான் மகன் சென்றவுடன் அவள் சென்று வந்த கோயிலின் திசை நோக்கினாள் தெய்வமே இப் பெண்பிறப்பு இத்தோடு போகட்டும் அடுத்த பிறவியில் என்னை ஆணாக படைத்திடு பஞ்சமியைப் பார்த்து அடுத்த பிறவியில் உனக்காக உன் முன்னே உயிர் கொடுப்பேன் என்றாள் மாடவிளக்கை கூரையில் வீசினாள் அக்கினி அவர்களை அறவனைத்தான்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

காவியக் காதல் தொடரும். . . . . . . . . . . . . . . . .

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

வாவ்.. காவியக் காதல் அருமை!

குறத்தி உண்டு.. குறவஞ்சிப் பாட்டில்லையா?

சமூகக் கட்டுகளை களைந்தெறியும் வள்ளி பஞ்சமியின் காதல் பல முனைகளிலும் முற்போக்கானாது!

இதிலும் ஒரு வில்லன்.. ம்ம்.. ஊழ்வினை போலும்!

அமரவாழ்வெய்திய இந்த காவியக் காதலின் அடுத்த அத்தியாயம் காண ஆவல் அதீதம்!

__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

thanks @Rotheiss

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

ஹ்ம்ம்.... வரலாற்று கதையா?..... கலக்குங்க..... நிறைய எழுத்தாளர்கள் தொடத்தயங்கும் காலம் அது..... பத்தொன்பதாம் நூற்றாண்டு அந்த அளவுக்கு பழைய காலம் இல்லை என்றாலும், நிறைய விஷயங்கள் அதில் சொல்லணும்..... நல்லா போகுது, இன்னும் நல்லா கொண்டு போங்க..... வாழ்த்துக்கள்...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

நன்றி விஜி

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
RE: 29202121252925 2920242825
Permalink   
 


Nice frd! Kathai romba veagama pona mathiri irunthalum romba nallah iruku! Thamizh nadai arumai!

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
RE: காவியக் காதல்
Permalink   
 


தெரிந்தே வேகமாய் போகிறேன் சொல் நயம் மெருகேற்ற நான் விரும்பவில்லை கதையை மெறுகேற்ற எவ்வித வசதியும் இல்லை பொருள் நயம் மட்டுமே பிரதானமாய் எழுதுகிறேன்
நன்றி @Basher

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

அருமை நண்பா .. தெளிவான தமிழுக்கு ஒரு வணக்கம் . ஆனால் கொஞ்சம் விரிவாக சென்றால் சொன்னால் இன்னும் எல்லோரையும் சென்று அடையும் . ஏன் முடியாது என்றும் நீங்கள் சொல்லிவிட்ட நிலையில் வேறு என்ன சொல்வது . வாழ்த்துகள் நண்பா ..!

__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

முத்துக்காளை இனையதள வசதியில்லா நோக்கியோ1209ல் டைப் செய்து நோக்கியாX2க்கு குறுஞ்செய்தியாய் அனுப்பி அதை எடுத்து வெட்டி ஒட்டி பதிவேற்றம் செய்வதற்குள் என் கை கட்டை விரல் வலி உயிர்போகிறது பாமர மக்களுக்கு புரியுமோ புரியாதோ எழுத்தாளர்களுக்கு கட்டாயம் புரியும் புது பரிமானத்துக்கு கூட்டிச்செல்லும்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அருமை நண்பா........................தளத்திற்கு மேலுமொரு எழுத்தாளர் கிடைத்ததில் மகிழ்ச்சி....................தேவையான இடங்களில் நிறுத்தற்குறிகளை பயன்படுத்துங்க...................

வாழ்த்துக்கள்

__________________

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard