நம்ம ஊர்களில் மாட்டு சாணத்தை கொடுத்தால் பணம் கிடைக்கும், ஆட்டு பிளுக்கையை கொடுத்தால் கூட பணம் கிடைக்கும். காரணம் அவை விவசாயத்துக்கு உரமாக பயன்படுத்தக்கூடியவை.
அதே சமயம் நாய் ‘ஆய்’ ஐ கொடுத்தால் என்ன கிடைக்கும்…. செமயா செருப்படி தான் கிடைக்கும்.
ஆனால் மெக்சிகோவில் அமைக்கப்படுள்ள ஓர் இயந்திரம் நாய் ‘ஆய்’ க்கு இலவசமாக WiFi தருகிறது.
ஆச்சர்யமாக இருக்கிறதா…!
உண்மைதான். மெக்சிக்கோ நகரில் உள்ள ஓர் பூங்காவில் இவ் விநோத இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. அண்மை காலமாக அப் பூங்காவிற்கு வாக்கிங் வருபவர்கள் அழைத்து வரும் நாய்கள் ‘அய்’ இருந்து பூங்காவை அசுத்தப் படுத்துவது பிரச்சினையாக காணப்பட்டது. அதை சுத்தம் செய்ய நகராட்சியினரால் பெரும்தொகை பணத்தை செலவிடவேண்டி ஏற்பட்டது.
அப் பிரச்சினைக்கு தீர்வாகவே இவ் ‘ஆய்’ WiFi இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
பூங்காவுக்கு வருவோரின் நாய் கழித்த ‘ஆய்’ ஐ இவ் இயந்திரத்தினுள் அள்ளிப்போட்டால், அவ் ‘ஆய்’ இன் நிறைக்கு ஏற்ப இலவச WiFi இணைய இணைப்பு நிமிடங்கள் கிடைக்கும்.
இவ் இயந்திரம் பொருத்தப்பட்டதில் இருந்து பூங்கா அசுத்தமாவது கணிசமான அளவு குறைந்துள்ளதாம்…!
நம்ம நாட்டில் அப்படி வைத்தால், குப்பை கிடங்குகளில் இருக்கும் நாய் "ஆய்"களை அள்ளி வந்து பூங்கா இயந்திரத்தில் போடுவாங்க....... இருக்குற நிலைமை இன்னும் மோசமாகிடும்..... இலவசம்னா எதுவும் செய்வோம்ல....