அன்பைத்தேடி என்பது ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான தமிழ்த் தளம்,ஆனால் (உடலுறவுக்காக)இணை தேடும் தளமல்ல.
1. பயனர் பெயர் :
-> அன்பைத்தேடியில் இணைவதற்கான பயனர் பெயர் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம்.
-> பயனர் பெயர் நாகரீகமாக இருக்கவேண்டும்..
-> மின்னஞ்சல் முகவரிகள், இணையதள முகவரிகள், எண்கள், குறியீடுகள் போன்றவற்றை பயனர் பெயராக வைக்கக் கூடாது.
-> முதல் முறை நீங்கள் பதிந்த பயனர் பெயரை மாற்ற விரும்பினால் தள நிர்வாகிகள் மாற்றி தருவார்கள்.
2. பதிவுகள் :
->பதிவுகள் முறையான தமிழ்(proper thamizh) அல்லது முறையான ஆங்கிலத்தில்(proper english) இருக்க வேண்டும், தமிங்கிலத்தில்(thanglish) பதியக்கூடாது.
-> பதிவுகளுக்கு ஏற்ற தலைப்புகள் இட வேண்டும். தலைப்புகள் முழுப் பொருளுடன், சுருக்கமாக இருக்க வேண்டும்.
-> அனைத்து தலைப்புகள் மற்றும் பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.
-> இணையதள முகவரிகள், கணினி சார்பான சொற்கள் போன்றவை ஆங்கிலத்தில் இடம்பெறலாம்..
-> உங்களுடைய ஆக்கங்களை பொருத்தமான தலைப்பின் கீழ் பதிய வேண்டும்.
-> வேறு தளத்தில் இருந்து பெறப்பட்ட பதிவுகளாக இருப்பின் தகவல் எங்கிருந்து பெறப்பட்டதோ அந்த தளத்தின் இணைய முகவரி அல்லது எழுதியவர் பெயர் போன்றவற்றை கண்டிப்பாக இணைக்க வேண்டும்..
-> வன்முறை மற்றும் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பதிவுகள் இடம்பெறக் கூடாது.
-> சிறிய கவிதைகள், தகவல்களுக்காக தனி திரி துவங்கக் கூடாது. பல சிறிய கவிதைகள் அல்லது தகவல்களை ஒன்றிணைத்து பதியலாம்.
-> உங்கள் சொந்த தளத்தின் பதிவுகள் இடம்பெறலாம். ஆனால் உங்கள் தளத்துக்கு அழைப்பது போன்ற பதிவுகள் கண்டிப்பாக இடம்பெறக்கூடாது.
-> காப்புரிமை மீறல் பதிவுகள், சட்டத்திற்கு புறம்பான தரவிறக்க லிங்குகளை பதிய கூடாது.
3. பின்னூட்டங்கள் :
-> அன்பைத்தேடியில் பதியப்பட்டுள்ள பதிவுகளுக்கு ஏற்ற வகையில் பின்னூட்டங்கள் / பதில்கள் பண்பான மற்றும் கண்ணியமான முறையில் இடம்பெறவேண்டும்..
-> தனி நபர் தாக்குதல், பதிவாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குதல் கூடாது.
-> சொந்தமாக பதியப்பட்ட ஆக்கங்களை தேவையின்றி குறை சொல்லவதை தவிர்க்க வேண்டும்.
-> இனம், மதம், மாற்றுத் திறனாளிகள் போன்றவற்றை விமர்சிக்கக் கூடாது.
-> உறுப்பினர்களின் அனுமதியின்றி அவர்களை வா, போ என்று ஒருமையில் அழைத்தல் கூடாது..
4. புகைப்படங்கள்:
-> பதிவுகளில் பதிவுகளுக்கு தொடர்புடைய நிழற்படங்களை இணைக்கலாம். நிழற்படங்களை பாலியல் உணர்வுகள் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் இடம்பெறக்கூடாது.
-> உங்கள் நண்பர்களின் நிழற்படங்களை இணைக்கும் போது அவர்களின் முன் அனுமதியை பெற வேண்டும்
-> வேறு தளத்தில் எடுக்கப்பட்ட படமாக இருந்தால் அந்த தளத்தின் முகவரியை இணைக்க வேண்டும்.
5. தனிமடல் சேவை:
-> அன்பைத்தேடியின் உறுப்பினர்களோடு தனிப்பட்ட முறையில் நட்புப் பாராட்ட தனிமடல் சேவையினை பயன்படுத்தலாம்.
-> தனிமடல் சேவையை தவறான முறையில் ஆபாசமாக அனுப்பக்கூடாது.
-> உங்கள் தள விளம்பரங்களுக்காக தனி மடல் சேவையை பயன்படுத்தக்கூடாது.
-> உங்களுக்கு அனுப்பப்படும் தனிமடல்களை தள நிர்வாகிகள் தவிர்த்து வேறு யாரிடமும் பகிரங்கப் படுத்துவதோ , பொது பகுதியில் பதிவதோ கூடாது.
6. நிர்வாகம்:
->தவறான , விதி முறைகளை மீறிய பதிவுகளை திருத்தவோ, அழிக்கவோ நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.
-> நிர்வாகிகளை எதிர்த்து வாதம் செய்ய கூடாது.
குறிப்பு:
-> இங்கு பதியப்படும் கருத்துக்கள் அனைத்தும் உறுப்பினர்களுடைய சொந்த கருத்துக்கள் ஆகும். அதற்கு நிர்வாகம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது.
-> காப்புரிமை மீறல்கள் இருந்தால் நிர்வாகத்திற்கு அறிய தரலாம்.
-> மேற்காணும் விதிகளை மாற்றம் செய்ய நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு