Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஓருபால் ஈர்ப்பு - ஒரு விழிப்புணர்வு


உறுப்பினர்

Status: Offline
Posts: 52
Date:
ஓருபால் ஈர்ப்பு - ஒரு விழிப்புணர்வு
Permalink   
 


ஓருபால் ஈர்ப்பு - ஒரு விழிப்புணர்வு

 

முன்னுரை:

இதில் காதல், பாலுறவு, ஓரிணச் சேர்க்கை, ஓரிணச் சேர்க்கைக்கு எதிர்ப்பு ஏன்? போன்ற அடிப்படை விஷயங்களை தெளிவாக விளக்கி இருக்கிறேன். இது எனது அனுபவத்தோடு சேர்ந்த ஆராட்சியில் இருந்து எழுதப்பட்டது. இந்த தொகுப்பு நமது சமூகத்தில் ஓரிணச் சேர்க்கையாளரை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு நல்ல விழிப்புணர்வை தரும் என நம்புகிறேன்.

 

ஆரம்பம்:

நமது வரலாற்றுக் குறிப்புகளை சற்று பின்னோக்கிப் பார்த்தால். இஸ்லாமியர்கள் இந்தியாவை ஆட்சி செய்தவரை ஓரிண புணர்ச்சியை இழிவுப்படுத்துவதோ, தடுப்பதோ என்பது இங்கு இல்லை. அதன்பின் பல குறுநில மன்னர்கள் இந்தியாவை பல பிரிவுகளாக ஆட்சி செய்திருக்கின்றனர். அவர்களும் ஓரிண புணர்ச்சிக்கு எதிராக இல்லை. அந்த சமூக மக்களும் அகற்க்கு எதிராக இல்லை என தெரிகிறது. ஆனால் மேற்கூறிய எல்லா காலங்களிலும் ஓரிண புணர்ச்சி என்பது மக்களிடம் இயல்பாக இருந்தது என்றும் அது தடையற்றதாக அனுமதிக்கப்பட்டதாக இருந்தது என்றும் அடையாள குறிப்புகளைக் கொண்டு வரலாற்று அறிஞ்ஞர்கள் கூறுகின்றனர். இதற்க்குபின் இந்தியாவை தனது ஆட்சியின்கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ் காரர்கள் ஓரிண புணர்ச்சியை தடுத்தும் அதை இழிவுப்படுத்தியும் பேசினர். அதில் ஈடுபடுபவர்களை இழிவாக நடத்தினர். அவர்களுக்கு சிறை தண்டனைகள் கொடுத்தனர். இதற்க்கு காரணம் பிரிட்டன் நாட்டு சட்டத்தை அப்படியே இங்கு அமுல் படுத்தினர். பிரிட்டன் நாட்டு சட்டப்படி ஓரிண புணர்ச்சி தண்டனைக்கு உரியது. ஆனால் இப்பொழுது பிரிட்டன் நாட்டு சட்டம் உலக சமூகத்திற்க்கு ஏற்ப்ப பல மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் நமது நாட்டில் நமது மத்திய ஆட்சியாளர்கள் பிரிட்டிஷ்காரர்கள் விட்டுச்சென்ற அதே சட்டத்தையே தொடர்ந்து நமது சட்டமாக பயன்படுத்தி வருகின்றனர்



__________________

for ct: eds.3333@yahoo.com



உறுப்பினர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink   
 

Post-2

மேலும் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஏறக்குறைய 450 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கின்றனர். 450 ஆண்டு காலமும் அவர்கள் தங்கள் சட்டத்தை நமது நமூக மக்களிடம் புகுத்தி அதற்க்கு அவர்களை கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். 450 ஆண்டுகாலம் என்பது எத்தனை பரம்பரையை மக்கள் கடந்திருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள். பல பரம்பரையாக ஓரிண புணர்ச்சி ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டும் இழிவுபடுத்தப்பட்டும் வந்ததால்தான் அதற்க்கு எதிரான இழிவான எண்ணங்கள் உணர்வுகள் இன்னமும் நமது சமூக மக்களிடம் காணப்படுகிறது. இது பாரம்பரியமாக வந்துக்கொண்டு இருக்கிறது. அதனால்தான் நமது ஆழ்மனதில் அதற்க்கு எதிரான எண்ணங்கள் உணர்வுகள் விரைவில் நீக்கிக்கொள்ள முடியாத அளவிற்க்கு ஊன்றி இருக்கிறது. இந்த எதிர்மறை நமது மனதில் இருந்து நீங்க நாம் பெருமுயற்ச்சி எடுக்கவேண்டி இருக்கிறது. ஆனால் நமது நாட்டின் டில்லி உயர்நீதி மன்றம் ஓரிண புணர்ச்சிக்கு எதிராக தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் புதுமையான ஒரு தீர்ப்பை 2011 ஆண்டில் வழங்கியிருக்கிறது. அதாவது வயதுவந்த (Major) இருவர் அவர்கள் விரும்பி ஓரிண புணர்ச்சியில் ஈடுபடுவது குற்றமாகாது.. என்பதுதான் அந்த தீர்ப்பு.

 

சுகம் என்றால் என்ன ?

உயிராக இருந்த நாம் விருப்பத்தின் காரணமாக உடலோடு மனம் கொண்டு மனிதராக பிறந்திருக்கிறோம். பிறந்த பிறகு உயிர், மனம் மற்றும் உடலாக உலகில் வாழ்கிறோம். உயிருக்கு எப்பொழுதுமே சுக அனுபவங்கள் தேவை. உயிர் எப்பொழுதுமே ஆனந்தத்தில் இருப்பது அதன் இயல்பு. அதனால்தான் மனிதர்களாகிய நாம் எப்பொழுதுமே இந்த உலகில் தொடர்ந்து சுகங்களை அனுபவிக்க போட்டிப் போட்டுக்கொண்டு இருக்கிறோம். அதன் காரணமாகவே இங்கு பலபேர் பணம், சொத்து, புகழ் என்று மேன்மேலும் சேர்த்துக்கொண்டே போகிறார்கள். இந்த முயற்ச்சியின் அடிப்படைகூட தனது உயிரின் இன்பத் தேவையை பூர்த்தி செய்யத்தான். பலபேர் தன் பேராசையின் காரணமாக ஞாயமற்ற முறையிலும் இந்த சேமிப்பை செய்கிறார்கள்.

 

சரி, சுகம் என்றால் என்ன ? நமது உயிரானது உணர்வின் மூலமாகவும், உடலின் மூலமாகவும் வெளியே இருக்கும் விஷயங்களை தொடர்புகொள்வதால் உயிருக்கு சுக அனுபவம் ஏற்படுகிறது. உணர்வு என்பது நமது முளை மற்றும் நரம்புகள் மூலமாக உடல் முழுவதும் பரவி செயல்படக் கூடியது. அது சுக உணர்வாக அல்லது துயர உணர்வாக என இரண்டில் ஒன்றாக இருக்கலாம்.

நீங்கள் விரும்பும் ஒரு சப்தம் அல்லது இசை அல்லது பாடல் உங்கள் காதின் மூலமாக நீங்கள் அடையும் ஒரு சுகம். அதே சப்தம் அல்லது இசை ஒழுங்கற்ற முறையில் ஒரு இரைச்சலாக இருந்தால் உங்கள் காது அந்த சப்தத்தை கேட்க விரும்புவதில்லை. அங்கிருந்து விலகுவீீர்கள். இது எவ்வாறு நடக்கிறது. காது கேட்கும் அந்த சப்தம் மூளையை சென்று அடைகிறது. அந்த உணர்வு நரம்புகள் மூலமாக உடல் முழுவதும் பரவி நமக்கு அனுபவமாகிறது



__________________

for ct: eds.3333@yahoo.com



உறுப்பினர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink   
 

Post-3

இவ்வாரே கண்கள் மூலமாக நீங்கள் ரசிக்கும் வெளி விஷயங்கள் உங்களுக்கு உள்ளே இன்ப உணர்வை உண்டாக்குகிறது. நீங்கள் வெளியே காணும் அந்த விஷயம் உங்கள் உள்ளே நுழைவதில்லை. அது தன் நிலையில் இருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது, அவ்வளவுதான். அதை நீங்கள் பார்த்ததால் உங்கள் உடலில் ஏற்ப்பட்ட உணர்வுதான் உங்களுக்கு சுகத்தை தந்திருக்கிறது.

அதனால்தான் பலபேர் Internet ல் மட்டுமே தான் விரும்பும் காட்சிகளை கண்டும், விரும்பிய ஒலிகளை கேட்டும் தாங்கள் இருக்கும் இடத்திலேயே சுக உணர்வை அனுபவிக்கிறார்கள். இதுவும் சுகம்தான். நீங்கள் கானும் காட்சி அல்லது கேட்கும் சப்தம் உங்களின் உடலில் அதிக உணர்வை தூண்டினால் அதற்க்கு ஏற்ப்ப உங்களின் சுக அனுபவத்தின் அளவு அதிகமாகிறது.

 

இவ்வாறே மூக்கின் மூலமாக விரும்பிய நறுமணங்களை நுகர்ந்து அதனால் இன்ப உணர்வுகளை அடைகிறோம். வாயின் மூலமாக நமக்கு பிடித்த சுவையான உணவுகளை உண்ணும்போது அந்த சுவை நம் நாக்கு மூலமாக உடலிலும் மூளையிலும் சுக உணர்வை உண்டாக்குகிறது. உணவு சுவை இல்லை என்றால் அது உடலுக்கான பொருளாக மட்டும் ஆகிறது. வாயின் மூலமாக உங்களுக்கு பிடித்த சப்தத்தை வெளிப் படுத்தும்போது அல்லது பிடித்த விஷயத்தை பேசும்போது உடலில் சுக உணர்வு ஏற்படுகிறது.

மேலே கூறிய கண், காது, மூக்கு, வாய் ஆகியவைகள் நம் உடலின் பகுதிகளாக இருக்கின்றன.



__________________

for ct: eds.3333@yahoo.com



உறுப்பினர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink   
 

Post-4

பாலுணர்வு :

 

நாம் அதிக ஆர்வத்தோடு, அதாவது மன ஈடுபாட்டோடு நம் கைகளால், நம் கால்களால், உடலால் நமக்கு வெளியே இருக்கும் ஏதாவது ஒரு ஜட பொருளை, ஒரு தாவரத்தைஒரு மிருகத்தை, ஒரு மனிதரை தொடுவதால் நமது உடலில் உணர்வு ஏற்ப்பட்டு அது உடல் முழுவதும் பரவி மூளையை சென்று அடைந்து அந்த உணர்வு மனதில் நிறைகிறது. இது நமக்கு உடலில் மற்றும் மனதில் ஒரு புத்துணர்வையும் இன்பத்தையும் தருகிறது. இங்கு வெளியே இருக்கும் ஒரு ஜடப்பொருள் அது ஒரு பாறையாக, ஒரு சுவராக, ஒரு மரக்கட்டையாக, வெறும் தரையாக என்று எதுவாகவும் இருக்கலாம்.

 

உயிரற்ற உணர்வற்ற இந்த ஜடப்பொருளை ஆர்வத்தோடு தொடுவதாலேயே நமக்கு உடலிலும் மனதிலும் இன்ப உணர்வு ஏற்படுகிறது என்றால் உயிருள்ள உணர்வுள்ள ஒரு மிருகம் அல்லது ஒரு மனிதரை தொடும்போது அதே சுக உணர்வு பல மடங்கு அதிகமாக நம் உடலிலும் மனதிலும் உணர்கிறோம்.

அந்த தொடுதல் மேலும் நெருக்கமானதாக இருக்கமானதாக அழுத்தமானதாக உராய்வுகளை கொண்டதாக ஒருவரை ஒருவர் ஆர்வத்தோடு அணைத்துக் கொள்வதாக இருந்தால் நமது உடலில் பலவிதமான இன்பங்களை தரக்கூடிய உணர்வுகள் உண்டாகி அது உடல் முழுவதும் பரவி மூளையில் நிறைந்து மனதை நிறைத்து நமக்கு மிகப்பெரிய இன்ப அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

இங்கு நீங்கள் ஒன்றை நன்கு புரிந்துக் கொள்ளவேண்டும், நீங்கள் அணைத்துக்கொள்ளும் அந்த நபர் உங்களுக்கு வெளியேதான் இருக்கிறார். ஒருவேளை அவருக்கு உங்களைவிட அதிக இன்ப உணர்வு தூண்டப் பட்டால் அந்த உணர்வு அவரை நீங்கள் தொடுவதால் உங்கள் உடலில் எழும் இன்ப உணர்வும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. அவரை நீங்கள் விழுங்கி விடவில்லை, அவரது உணர்வைதான் பங்கிட்டுக்கொள்கிறீர்கள்.

நீங்கள் ஒரு ஆண் என்றால் நீங்கள் தொட்டு அணைத்துக்கொண்ட அந்த நபர் ஒரு ஆணாக, ஒரு பெண்ணாக, ஒரு மிருகமாக, ஏதோ ஒரு ஜடப்பொருளாக என எதுவாகவும் இருக்கலாம். நம்மில் தூண்டப்படும் இந்த உணர்வுக்குப் பெயர் பாலுணர்வு என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதனால்தான் ஒரு மனிதன் எதை வேண்டுமானாலும் முழுமையாக காதலிக்க முடிகிறது.

 

இந்த ஸ்பரிச தொடு உணர்வு மூலம் பெறும் இன்பத்தை இந்த பூமியில் காணும் புழு, பூச்சி, செடி, கொடி, மரம், சிறிய மற்றும் பெரிய மிருகங்கள், மனிதர்கள் என எல்லா ஜீவன்களும் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறது. இயற்கையில் இது ஒரு இயல்பான நிகழ்வுதான். இந்த அடிப்படை உண்மைதான் ஆண்-ஆண் சேர்க்கைக்கு, பெண்-பெண் சேர்க்கைக்கு, ஆண்-பெண் சேர்க்கைக்கு அல்லது ஒரு மனிதன் வேறு ஏதோ ஒன்றோடு கொள்ளும் உறவுக்கு முக்கிய அடித்தளமாக இருக்கிறது



__________________

for ct: eds.3333@yahoo.com



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அருமையா இருக்கு.........

__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink   
 

Post-5

ஆனால் நம் சமூகம் என்ன சொல்கிறது ஒரு ஆண் பெண்ணிடம்தான் தனது காதலை செலுத்தவேண்டும் என்றும் அவனுக்கு தேவையான எல்லாவிதமான இன்பங்களும் ஒரு பெண்ணிடம்தான் இருக்கிறது என்றும் சொல்லிவந்து சமூகத்தில் இருக்கும் எல்லா ஆண்களையும் முட்டாளாக்குகிறது. இது நமது சமூகத்தின் சுயநலத்திற்காக தொடர்ந்து சொல்லிக் கொண்டுவரும் பொய். உலகிலுள்ள மற்ற எல்லா நாடுகளைக் காட்டிலும் இப்படிப்பட்ட மற்றவர்களை ஏமாற்றக்கூடிய அனேக உண்மைகளை மறைக்கக்கூடிய கொள்கைளைக் கொண்டது நமது சமூகமாக இருக்கிறது. இதனால்தான் உலகில் உள்ள வளர்ந்த நாடுகள் அனைத்திலும் அவர்களின் மக்கள் விரும்பும் எல்லாவிதமான உடல் உறவுகளும் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் நமது சமூகம் மட்டும் அவைகளை கீழ்தரப்படுத்திக் கொண்டும் நமக்கு அவைகளை அனுமதிக்காமலும் தடுத்துக்கொண்டும் இருக்கிறது.

 

ஆனால்Internetஎன்பது நமது பழைய சமூகத்தின் கொள்கைகளை பெருமளவு புதுமையாக மாற்றிக்கொண்டு வருகிறது. தற்பொழுது நமது சமூகத்தில் Internetபயன்படுத்துவது அதிகமாகி இருப்பதால், அது உலக சமூக கொள்கையோடு நமது சமூகத்தை விரைவில் இணைத்துவிடும் என நம்பலாம். அதன்பிறகு நமது சமூக மக்களும் தங்கள் குறுகிய மனப்பான்மையில் இருந்து பரந்த மனம் (Broad Mind)கொண்டவர்களாக மாறிவிடுவார்கள் என நம்புகிறேன். அதன்பிறகு அவர்கள் ஒரிணச் சேர்க்கையாளர்களை தடுக்கமுடியாத நிலையில் ஏற்றுக்கொண்டே தீருவார்கள். அப்போது நமது சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை நாம் பார்ப்போம். இந்த மாற்றத்திற்க்கான ஆரம்பக்காலம் எப்போதோ தொடங்கிவிட்டது.

ஓரிணச் சேர்க்கையாளர்களை கீழ்தரமாக பார்த்துக்கொண்டும், கேவலமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டும், அவர்களின் வாழ்வாதாரங்களை சூரையாடிக்கொண்டும் இருக்கும் இந்த சமூகத்தில் உள்ளவர்கள் அப்பொழுது மாறிவிடுவார்கள்.



__________________

for ct: eds.3333@yahoo.com



உறுப்பினர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink   
 

Post-6

பாலுணர்வு சுகம் :

 

நாம் மேலே கண்ட கண், காது, மூக்கு, வாய் இவைகளின் மூலமாக உணரும் சுகம் காம சுகத்தைவிட சிரியது. இந்த உலகில் மனிதர் அடைந்து அனுபவிக்கக்கூடிய சுக உணர்வுகளில் மிகபெரிய ஒன்றாக இருப்பது பாலுணர்வால் அடையும் சுகம்தான். அதனால்தான் பாலுணர்வு சுகத்தை அடைந்து அனுபவிக்க மனிதர்கள் அனைவரும் எப்பொழுதுமே முயற்ச்சி செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாகவே  உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பல முறைகளில் பல விதங்களில் தனக்கான பாலுணர்வை அனுபவிக்க அவர்களிடம் ஏற்பட்ட உந்துதலால் உலகில் இத்தனை வகையான S.ex கள் ஏற்ப்பட்டிருக்கிறது.

 

காதலில் நாம் செய்த ஒரு அதிகப்படியான ஏற்றம் என்னவென்றால் இயல்பாக மற்றவரின் நெருக்கத்தால் நமக்கு அனுபவமாகும் அந்த இன்ப உணர்வை மேலும் பல மடங்கு அதிகமாக்கிக் கொள்வதற்க்காக நாம் அந்த ஓரிணத்தில் பாலுறவு செயல்களை புகுத்திவிட்டோம். இதுவரைகூட நமது செயல்கள் இயற்க்கைக்கு மாறுப்பட்டது அல்ல. ஏனெனில் பல விலங்குகள் ஒரிணச் சேர்க்கை செய்கின்றன என்றும் விலங்கியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். அவைகளை Video காட்சிகளாக பதிவு செய்து வைத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை அவைகள் நம்மிடம் காட்டாமல் மறைக்கப்படுகின்றன.

 

ஆண்-பெண் பாலுறவில் உள்ள முரண்பாடுகள் :

 

ஒரு பெண்ணுக்கு பாலுறவில் ஈடுபடும் ஆர்வம் என்பது அவளின் மாதவிடாய் நிகழும் காலம் வரைதான். அவளிடம் மாதவிடாய் நின்றபிறகு பாலுறவுக்கான ஆர்வம் ஏற்படுவதில்லை. மாதவிடாய் நிற்க்கும் காலம் சராசரியாக அனைத்து பெண்களுக்கும் 45வயது என மருத்துவர்கள் சொல்கின்றனர். ஆனால் ஒரு ஆணுக்கு பாலுணர்வு ஆர்வம் என்பது 14 வயதில் தொடங்கி அவன் சாகும் நாள் வரை ஒரே விதமாக வெளிப்படுவதாக இருக்கிறது.

 

சாதாரணமாகவே ஒரு ஆண் 45 வயதிற்க்கு உட்பட்ட ஒரு பெண்ணிடம் பாலுறவு கொள்ள முயற்ச்சிக்கும்போது, அவளிடம் எழுச்சி அல்லது பாலுறவு ஆர்வம் என்பது மிகமெதுவாக எழ ஆரம்பிக்கிறது. அகற்க்குள் அந்த ஆண் தனது உச்சக்கட்டத்தையே கடந்து இருப்பான். இருவருக்கும் இடையே இப்படியொரு வேறுபாடு இருக்க ஆண் தனது செயலை செய்து முடிக்கிறான். கருத்தரித்து ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள இந்த பாலுறவு உதவக்கூடியது அவ்வளவுதான்.



__________________

for ct: eds.3333@yahoo.com



உறுப்பினர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink   
 

Post-7

தனக்கு குழந்தை பிறந்துவிட்டால் அந்த பெண், குழந்தை மீது ஆர்வமாகிவிடுகிறாள். அவள் அதுவரை கணவன் மேல் காட்டிய அன்பு இப்போது குழந்தையிடம் காட்ட துவங்கிவிடுகிறாள். அதனால் அவளுக்கு பாலுணர்வு ஆர்வம் குறைந்துவிடுகிறது. எனவே அவள் இப்பொழுது பாலுணர்வில் ஆர்வம் காட்டுவதில்லை. முன்புபோல அவள் தன் கணவனுக்கு ஒத்துழைப்பதில்லை. இரண்டாவது மூன்றாவது என குழந்தைகள் பிறந்துவிட்ட பின் அவள் பாலுணர்வில் முழுவதுமே ஆர்வம் காட்டாதவளாக ஆகிவிடுகிறாள். ஆனால் கணவன் அப்படியேதான் இருக்கிறான். இப்போது அவனுக்கு தனது காம செயல்களுக்கான மீண்டும் அதே பெண் துனை தேவை. ஆனால் பெண்ணோ இப்போது மாறிவிட்டிருக்கிறாள். இப்பொழுது அவன் தனது காமத்திற்க்கு எப்படி வடிகால் தேடுவான்.

 

அவன் வெளியே பணம் கொடுத்து அனுபவிக்க வேறு ஒரு பெண்ணிடம் சென்றால், அவள் அதில் அவனிடம் எந்திரத் தனமாக ஈடுபடுகிறாள். ஏனெனில் காம சுகத்தை பலரோடு அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையோடு எந்த ஒரு பெண்ணும் விபச்சாரியாக ஆவதில்லை. விபச்சாரியாகும் எந்த ஒரு பெண்ணும் பணம் சம்பாதிப்பதற்காகவே அந்த தொழிலுக்கு வருகிறாள். பெண் சுகத்தை விரும்பும் ஒருவன் திருமணம் ஆகியும் இந்த நிலையில் இருக்கிறான்.

 

இப்படியாக தனியாக விடப்பட்ட ஒரு ஆண் ஓரிணச்சேர்க்கை என ஒன்று இருப்பதை தெறிந்து அதற்க்கான ஒருவனோடு இணைந்து அதை அனுபவிக்க துவங்குகிறான். அதன்பிறகு அவனுக்கு S.exதேவை ஏற்படும்போதெல்லாம் தனது ஆண் துணையோடு சேர்ந்து செய்து திருப்தி அடைகிறான். மேலும் ஆண்-பெண் சேர்க்கையில் செய்து அனுபவிக்க முடியாத பலவிதமான இன்ப அனுபவங்கள் ஆண்-ஆண் சேர்க்கையில் இருப்பதை கண்டு அவன் வியப்படைகிறான். அவனது இந்த செயல்முறை எப்படி தவறாகும்.

 

இப்பொழுது நமது மத்திய அரசு பெண்களுக்கு எதிரான பலியல் குற்றங்களுக்கு உள்ள தண்டனையை இரண்டு மடங்கு மேலும் கடுமையாக ஆக்கியிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?. அதாவது தனது பாலியல் இச்சைக்காக ஒரு  பெண்ணை பலவந்தப்படுத்துவது தவறு என்கிறது அந்த சட்டம். அவள் மனைவியாக இருந்தாலும் அவளின் விருப்பத்திற்க்கு உட்பட்டுதான் அவன் பாலியலில் ஈடுபட முடியும். இங்கு குற்றவாளி எப்போதுமே ஒரு ஆண் தான். அவன் என்னவோ ஒரு பெரிய ஐயோக்கியன் போல ஊடகங்களில் காட்டப்படுகிறான். அவன் பாலுணர்வு என்பதோ இயல்பான ஒன்று. அதைதான் அவன் வெளிப்படுத்தினான் அவ்வளவுதான். அதனால்தான் கூறுகிறேன் ஒரு ஆணின் எல்லா பாலியல் தேவைகளுக்கும் ஒரு பெண் மட்டும் போதுமானவள் அல்ல. இருவருக்கும் உடல்கூறு அந்த அளவுக்கு வேறுபட்டிருக்கிறது.



__________________

for ct: eds.3333@yahoo.com



உறுப்பினர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink   
 

Post-8

ஒரு ஆணுக்கு திருமணம் ஆகும்வரை :

 

ஒரு ஆணுக்கு தனது 14ம் வயதிலேயே S.exசெய்வதற்க்கான தகுதியை உடல் பெற்றுவிடுகிறது. ஆனால் அவன் தன் மனதில் அப்போது அதைப்பற்றி எதுவும் தெரியாதவனாக இருக்கிறான். மனதால் அதை அவன் புரிந்துக்கொண்டு தனது S.exசெயல்களை பக்குவப் படுத்திக்கொள்ள காலம் கொஞ்சம் பிடிக்கிறது. ஆனால் அவன் அந்த காலங்களில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவனாக இருக்கிறான். அதன் பிறகு அவன் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்துப் படிக்கிறான். மேல்நிலை கல்வியை முடிக்கும்போது அவனுக்கு 17வயது ஆகிறது. பிறகு கல்லுரியில் மூன்று ஆண்டுகள் இளங்கலை பிறகு இரண்டு ஆண்டுகள் முதுகலை என சரியாக கணக்கிட்டால் அப்போது அவனுக்கு 22 வயது ஆகி இருக்கும். ஆனால் பலவித காரணங்களால் இந்த கால அளவு 2 அல்லது 3 ஆண்டுகள் கூடி 25 என அவனுக்கு வயது ஆகி இருக்கலாம். இதற்க்குமேலும் அவன் சில கூடுதலான கல்வியை கற்க்கவேண்டி இருந்தால் அவனுக்கு மேலும் வயது அகிகமாகித்தான் இருக்கும். ஆனால் நமது சமூகத்தில் ஒரு ஆணுக்கு அவன் தனது அனைத்து கல்வியையும் முடித்து அதற்க்கான ஒரு பணியில் சேர்ந்து அந்த பணி ஒர் நிரந்தரம் ஆன பிறகுதான் அவனுக்கு திருமணத்திற்க்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பிப்பார்கள்.

 

ஆனால் உடல் அளவில் தனது 14 வயதிலேயே அவனுக்கு பாலுணர்வு அவன் உடலை தாக்க ஆரம்பித்துவிட்டது. இது இயற்க்கையின் இயல்பான செயல்பாடு. சரி தனக்கு திருமணம் ஆகும் வரை தனது உடலில் அடிக்கடி வெளிப்பட்டுக்கொண்டிருக்கம் பாலுணர்வின் தாக்கத்தையும், விந்து வெளியேர துடிக்கும் உணர்வையும் அவன் எப்படி சமாளிப்பான். அதற்க்கு அவன் சுயமாக செய்துக்கொள்ளும் ஒரு முறை கை பழக்கம். தனது பாலுணர்வு வெளிப்பாட்டை சமாளிக்க தனக்கு அருகில் ஒரு ஆள் வேண்டும் என முடிவெடுக்காதவர்கள் திருமணம் ஆகும்வரை கை பழக்கத்தையே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

 

வேறு பலர் தனக்கு அருகில் ஒரு ஆள் இருந்தால் தனது பாலுணர்வு வெளிப்பாட்டால் பல மடங்கு சுகத்தை அதிகப்படியாக பெற்று இன்பம் அடையலாம் என முடிவெடுக்கிறார்கள். இதை சமாளிக்க ஒரு பெண் சரியானவளாக இருப்பாள் என முடிவெடுத்து ஒரு பெண்ணை துனையாக தேடுகிறான். ஆனால் இந்த வயதிற்க்குட்பட்ட ஆண்களுக்கு பெண்கள் சுலபத்தில் கிடைப்பதே இல்லை. ஏனெனில் பெண்கள் பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவளாக அவர்களின் குடும்பங்களில் வளர்க்கப்படுகிறார்கள். வேலைக்கு வெளியே வரும் பெண்களும் எல்லா ஆண்களிடமும் தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டே பழகுகிறாள். தான் கல்லூரியில் படிக்கும்போது அங்கு படிக்கும் தனது பெண் நண்பர்களும் அவனிடம் தன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டே பழகுகிறாள். அப்பொழுதெல்லாம் அவன் அந்த பெண்களை பார்கிறான் அவர்களோடு பேசுகிறான். அதற்க்குமேல் அவர்களிடம் இருந்து அவனுக்கு எதுவும் கிடைப்பதில்லை. ஏதோ ஒருசில ஆண்களுக்கு கிடைத்த அந்த பெண் அவனது பாலுணர்வுக்கு உதவுகிறாள். அதிலும் அவள் அவனுக்கு பல கட்டுப்பாடுகளை விதிக்கிறாள். அதற்க்காக அவன் தனது ஏகப்பட்ட சக்தியை பணத்தை செலவழிக்கவேண்டி இருக்கிறது. எப்படி எப்படியோ நடிக்கவேண்டி இருக்கிறது. நிறைய பொய் சொல்லவேண்டி இருக்கிறது. அப்படி இருந்தும் அந்த பெண் அவனின் எல்லா செயல்களையும் அனுமதிப்பாளா என்றாள்.. இல்லை. அதுவும் அளவுக்கு உட்பட்டுதான் அவனை அனுமதிப்பாள். பாவம் அவன்



__________________

for ct: eds.3333@yahoo.com



உறுப்பினர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink   
 

Post-9

மற்ற பெரும்பாலான ஆண்களுக்கு அவன் சந்திக்கும் அந்த பெண்கள் அவனது பாலுணர்வு உந்துதலுக்கு உதவக்கூடியவளாக இல்லை. அவன் விலைமாதிடம் சென்று அனுபவிக்கலாம் என்றால் அதனால் வரும் பிரச்சனைகள் ஏராலம் என்பது அவனுக்கு தெரியும். ஏதோ ஒருசில ஆண்கள் மட்டுமே ஒரு விலைமாதிடம் செல்லும் அளவிற்க்கு தைரியம் கொண்டவர்களாக அவளிடம் அனுபவிக்க செல்கிறார்கள். அதன்பிறகு அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் ஏராலம்.

 

வேண்டிய பெண் துனை கிடைக்காத இந்த நிலையில் அவன் தனது பாலுணர்வுக்காக ஒரு ஆணை தேர்ந்தெடுத்து தனது பாலுணர்வு வெளிப்பாட்டை அவனிடம் அப்படியே காட்டி அவனோடு தனது செயல்களை செய்து திருப்தி அடைகிறான். ஒரு ஆண் மற்ற ஒரு ஆணிண் பாலுணர்வை நன்றாக புரிந்தவனாக இருக்கிறான். ஒரு ஆணுக்கு மற்றொரு ஆண்துனை கிடைப்பது சுலபமாக இருக்கிறது. இந்த ஆண்-ஆண் சேர்க்கை இன்பத்தை பலமடங்கு கூட்டி தருகிறது என்பது உண்மை என்றாலும் இது குழந்தை பெற்றுக்கொள்ள உதவாது என்பதால் நம் சமூகத்தில் இதை பலமாக எதிர்கிறார்கள். உங்களுக்கு குழந்தை வேண்டுமானால் அகற்க்கான அளவு பாலுறவை தன் மனைவியிடம் செய்துவிட்டு மீதமிருக்கும் உங்களின் பாலுணர்வு வெளிப்பாட்டை வேறு ஒரு பெண் கிடைத்தால், அவளோடு செய்யுங்கள். இல்லை என்றால் ஓரிணச் சேர்கையில் ஈடுபட்டு அதில் சுகத்தை அனுபவிப்பதில் என்ன தவறு இருக்கிறது.

 

நம் சமூகத்தில் சுய நல உணர்வும் குறுகிய மனமும் கொண்டவர்களே ஓரிணச் சேர்க்கையை எதிர்கிறார்கள். ஆனால் தூய மனம் கொண்டவர்கள், அதிக விஷயம் தெரிந்தவர்கள், பரந்த மனம் (Broad mind)கொண்டவர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்கள். வெளிநாடுகளுக்கு சென்று வந்த யாராக இருந்தாலும் இதை ஏற்றுக்கொள்வார்கள். ஏனெனில் அங்கெல்லாம் இதற்க்கு எந்த தடையும் இல்லை.



__________________

for ct: eds.3333@yahoo.com



உறுப்பினர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink   
 

Post-10

ஒருபாலில் இருபால் :

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும் அந்த குழந்தை தனது உடல் கூறில் தனது தந்தை மற்றும் தாயின் பண்புகளை கொண்டதாக இருக்கிறது. அதாவது ஒரு ஆண் வெறும் ஆண்தன்மையை மட்டும் கொண்டவன் அல்ல. அவன் பண்பில் மற்றும் உடல் கூறில் மற்றொரு பகுதி பெண்தன்மை கொண்டது. இப்படியேதான் ஒரு பெண்ணின் உடல் கூறும். ஒரு ஆணிடம் பெண்தன்மை வெளிப்படும்போது அவன் குரல் இனிமையாகிவிடும். அவன் நடையில் அழகை பார்க்க முடியும். அவனது ஒவ்வொரு அசைவும் மிகவும் நலினம் கொண்டதாக எந்த ஒருவரையும் ஈர்க்கக்கூடியதாக இருக்கும். ஏன் அழகிய ஒரு பெண் கூட அவனது அந்த வெளிப்பாட்டை கண்டு மயங்கி நிற்ப்பாள் என்றால் எப்படி மற்றொரு ஆணால் (men)அவனை கண்டு மயங்காமலும் அவனை காதலிக்காமலும் இருக்கமுடியும்.

 

ஒரு பெண்ணிடம் ஆண் தன்மை வெளிப்படும்போது குறிப்பிடும்படியாக அங்கு பெறுமளவு சிறப்பு இல்லை. ஆனால் ஒரு ஆணிடம் அவனின் பெண் தன்மை வெளிப்படும்போது அது அனைவரும் விரும்பக்கூடிய அளவிற்க்கு ஈர்ப்புடையதாக இருக்கிறது. இந்த பண்பு எல்லா ஆண்களுக்கும் பொருந்தும்.

 

ஒரு ஆண் பெண்ணை காதலிப்பது இயல்பான ஒன்றுதான் என்றால் ஒரு ஆண் ஒரு ஆணைக் காதலிப்பதும் இயல்பான சாத்தியமான ஒன்றுதான் என்பதை உணரவேண்டும். ஆண்-ஆண் காதல் ஒழுங்கீனமானது என்று யாறும் கூறிவிட முடியாது. இது இயல்பானதுதான். நம்மிடையே இதை நாம் நட்பு என்ற பெயரில் பரவலாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதாவது காதல் என்றால் நீங்கள் ஒன்றை விரும்புதல். உங்களுக்கு குறைந்த சுக உணர்வை தரக்கூடிய ஒன்றை நீங்கள் குறைந்த அளவு அல்லது அதே அளவே விரும்புவீர்கள். உங்கள் உடலிலும் மனதிலும் அதிக சுக உணர்வை தரக்கூடிய ஒன்றை நீங்கள் அதிக அளவிற்க்கு விரும்புவீர்கள்.

 

உதாரணமாக உங்கள் தாயின் உறவால் அல்லது பாசத்தால் உங்கள் உடலிலும் மனதிலும் ஏற்ப்படும் சுக உணர்வின் அளவுக்கு ஏற்ப்ப நீங்கள் உங்கள் தாயை விரும்புவீர்கள். உங்கள் சகோதர அல்லது சகோதரியின் உறவால் உங்கள் உடலிலும் மனதிலும் ஏற்ப்படும் அக உணர்வின் அளவுக்கு ஏற்ப்ப அவர்களை நீங்கள் விரும்புவீர்கள். உங்கள் நெருங்கிய நண்பனின் நட்பால் உங்களின் உள்ளே தூண்டப்படும் சுக உணர்வின் அளவு நீங்கள் அவனை விரும்புவீர்கள். இதுதான் விருப்பத்தின் இலக்கணம். அப்படியானால் காதலின் இலக்கணமும் இதுதான். உங்களுக்கு ஏற்ப்படும் இன்ப உணர்வுகளின் அளவு மாறுபடுகிறது என்பதுதான் இதில் உள்ள வேறுப்பாடு.



__________________

for ct: eds.3333@yahoo.com



உறுப்பினர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink   
 

Post-11

ஓரிணக் காதல் எப்படி ஓரிணச் சேர்க்கை ஆனது ?

உங்கள் உடலிலும் உள்ளத்திலும் அதீதமான சுக உணர்வை தரக்கூடிய ஒரு உறவை நீங்கள் தீவிரமாக காதலிப்பவராக அல்லது தீவிரமாக விரும்புபவராக ஆகிறீர்கள். இந்த காதல் ஒரு ஆண் மற்றோரு ஆண் மீது கொள்வதாக இருக்கலாம் அல்லது ஒரு ஆண் ஒரு பெண்மீது கொள்வதாக இருக்கலாம் அல்லது ஒருவர் ஏதோ ஒன்றின்மீது கொள்வதாகவும் இருக்கலாம்.

 

மன அளவில் ஒருவரின் விருப்பம் என்பது மேலோட்டமானது. ஆனால் உள்மன அல்லது ஆழ்மன அளவில் ஒருவரின் விருப்பம் என்பது தீவிரமானது. உள்மனம் என்பது உணர்வு மனம். நீங்கள் ஒருவரை உங்கள் உள்மன அளவில் விரும்பினால் அவரோடு உடல் அளவிலும் சேர்ந்து இருக்கவே விரும்புவீர்கள். ஏனெனில் உங்கள் உள்மனம் முழுக்க முழுக்க உணர்வு பூர்வமானது. அதாவது அதன் வடிவமே உணர்வுதான்.

அப்படி உடல் அளவில் இணைந்து இருக்கும்போது அவர்மீது இருக்கும் காதலின் காரணமாக உங்களிடையே தொடுதல், சீண்டுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் என அது அதிகமாகிக்கொண்டே சென்று இறுதியில் பாலுணர்வை நிறைவு செய்வதில் போய் நின்றுவிடும். உங்களின் அதே காதல் தான் கீழ் நிலையில் பாலுணர்வாக வெளிப்படுகிறது. பாலுணர்வு என்பது காதலின் ஜட நிலை (Physical State).

  

Byசரண்



__________________

for ct: eds.3333@yahoo.com

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard