Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நாம ஆசையுடன் பேசி நாளாச்சி ...ஆபத்து அங்கே தான் உருவாச்சி .....


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
நாம ஆசையுடன் பேசி நாளாச்சி ...ஆபத்து அங்கே தான் உருவாச்சி .....
Permalink   
 


முதலில் இந்த தளத்தின் போக்கிற்கு ஒரு சபாஷ்confuse . செக்ஸ் இல்லாத கே களம் . அல்லது கொஞ்சம் ஏலம் திராட்ச்சை போல தூவல் .

மருத்துவ படி பட்டை கிராம்பு வாசம் நுகரும்போது பசி அதிகரிக்கும். சோ ஆட்டுக்கறி  பிரியாணி கேட்கும். அது செரிக்கும். ஆனால் நிறைய தளங்களில்  பட்டை கிராம்பு உண்டு ..பிரியாணி நகி .. வயிறு சுரந்து ....( நிஜமாவே வயிறு தான்பா ) வலிக்கும் .

இங்கே ஒரு சமநிலை ...வாழ்த்துக்கள் .. கொஞ்சம் பிசிறு ..

அன்பு காதல் எல்லாமே கூட இந்த பட்டை கிராம்பு வகை போல தான் .. வாசம் இல்லாமல் மணக்காது ..ஆனால் வெறும் பட்டை கிராம்பை சாபிட்டால் செரிக்குமா ? அப்படிதான் எல்லாமும் ..ஒருவருடன் பழகும் போதும் பழகிய பிறகும்  பிரிந்தே விட்டாலும் கூட அவர் நட்பு இனிக்கும் படி நடந்துகொவது நடைமுறையில் கொஞ்சம் கஷ்டம் என்றாலும் ஆன்லைன் நட்பில் நூறு சதம் சாத்தியம்.

இன்றும் கூட ujak என்கிற சென்னை கை உறுப்பினரை நான் நினைத்து கொள்வேன் . அவருடைய ஒரு போஸ்ட் ஒரு புத்தகம் போல ..அவ்வளவு தரம் .clap.gif

சீனி பிடிக்கும் என்பதால் சீனிவாசம் பண்ண முடியுமா ?  இது யாருக்கோ பொடிவைத்து எல்லாம் சொல்லவில்லை ..பொதுவா சொன்னேன் .no



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
RE: நாம ஆசையுடன் பேசி நாளாச்சி ...ஆபத்து அங்கே தான் உருவாச்சி .....
Permalink   
 


boo.gifஅப்புறம் ஒரு முக்கியமான நபரை சொல்ல மறந்துட்டேன் ..நேசன் ..அவருடைய போஸ்ட் பார்க்கும் போது கூட எழுந்து நின்று படிக்கும் அளவுக்கு பிடிக்கும். நாளே வரி .நச்சின்னு ஒரு போஸ்ட் ..இது அவர் பாலிசி .. பவர் பைன்ட் ப்ரெசென்ட் மாதிரி எளிய நட்பு ..



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

ம்ம்.. உண்மை தான்..

நேற்று ஒரு நண்பருடன் கதைத்தேன்.. மேற்படி நண்பர்.. கே தளம் ஒன்றின் மூலமாக அறிமுகமானவர்.. ஆத்மார்த்தமாக நட்பு பாராட்டுபவர்.. அவரை நேரில் பார்த்ததில்லை..

அவர்.. தனக்கு கே தளம் மூலம் அறிமுகமான ஒருவரைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.. உடல் ரீதியான எந்தவிதமான தொடர்பு இல்லை என்ற போதிலும்.. ஐந்தாண்டுகளாக நீடிக்கும் நட்பாம்...!

நண்பரின் திருமணம், வரவேற்பு என எல்லாவற்றிலும்.. முன்னே நின்று நண்பருக்கு அந்த நேரத்தில் இருந்த மன அழுத்தத்தை வெகுவாகக் குறைத்திருக்கிறார்..

அப்படியெல்லாம் உதவிய அந்த நண்பரின் நண்பருக்கு போன வாரம் திருமணமாம்.. தான் சென்று வந்த கதையை அளவளாவிக் கொண்டிருந்தார்..

பேசி முடித்ததும்.. ஒரு நிம்மதி போலும் உணர்ந்தேன்..

ஆச்சர்யமாக... வழக்கமான Hi.. asl pls.. got place? -க்கு நடுவே.. இப்படி நல்ல நட்புகளையும் சம்பாதித்துக் கொடுக்கின்றன கே தளங்கள்..!

நம் “அன்பைத்தேடி” அப்படி ஒரு தளமாகவே தொடர்ந்து நிலைக்க வேண்டுமென்று பேராவல் கொள்ளுகிறேன்!

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

முத்து எப்போ அறுசுவை நடராஜன் ரேஞ்சுக்கு மாறுனாருன்னு தெரியல......
நீங்க எதை கொடுக்குறீங்களோ, அதை நிச்சயம் இந்த ஓரின உலகம் உங்களுக்கு திருப்பி கொடுக்கும்.....
உண்மைக்கு உண்மையை, துரோகத்திற்கு துரோகம், காமத்திற்கு காமம் என்று.....
எனக்கு பல அற்புதமான நண்பர்களை கொடுத்த இந்த உலகம் எப்போதுமே மறக்க முடியாத உலகம்....
எல்லோரும் இங்கு குழந்தைகள் போலத்தான்....
ஒரு சின்ன விஷயத்துக்கு பெரிய ஆர்ப்பாட்டம் செய்வது, வேண்டியது கிடைக்கும்வரை அடம் பிடிப்பது, அடித்தால் அழுவது, விளையாடினால் சிரிப்பது, பிடிவாதம் பிடிப்பது, அனாவசிய உரிமை எடுத்துக்கொள்வது, எளிதில் ஒரு சாக்லேட்டுக்கு எவரையும் நம்புவது என்று ஒரு குழந்தைத்தனம் இங்குள்ள எல்லோருக்கும் இருக்கு.....
அதை நாம் பார்க்கும்போது, ஒரு குழந்தையின் அந்த செயலை ரசிப்பது போல ரசித்தாலே போதும், இது ஒரு இன்பமயமான உலகம்தான்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

உண்மை தான். எம் எஸ் . இங்கு நிறைய குழந்தைகள் . சில மீள்திறன் செல்லங்கள் ..உங்களை போல ரோதீஸ் போல ...சில மாற்று திறன் குழந்தைகள் .. சில பிடிவாதம் காரணமாக குட்டு வாங்கும் என்னை போன்ற வாலுகள் ... ஹா ஹா ..ரொம்பவே நல்ல உலகம். நிறைய மனிதர்கள் நேரில் இடம் பிடிக்க முடியாத என் மனதில் ஆன்லைன் மூலம் சிம்மாசனம் போட்டு அமர்ந்த நண்பர்கள் ...
ஆனால் சில விஷயங்கள் எனக்கு எங்குமே ஒரே மாதிரி நடக்கும். ஒரு உதாரணம் ..professor lecturer வேலை பார்த்தால் முத்துவை எப்போதும் திட்டனும் வெறுக்கணும்..இப்படி தான் எனக்கு கல்லூரியில் நடந்தது ..கே தளத்தில் கூட ஒரு ஆசிரியர் என்னை பெஞ்ச் மேல நிக்க வைக்காத குறையாக செல்ல திட்டு கொடுத்து கொண்டே இருகாரு .. ஆனால் அவரு திட்டலேன்னா எனக்கு செமையா மூடவுட் ஆகிடும்..எதோ என் மேலே கோபமா இருக்காரோன்னு தோணும் ....

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard