எப்போதும் எல்லோரும் என்னை கேட்க்கும் ஒரு கேள்வி எதற்கு கணக்கிலிருந்து வெளியேறினீர்கள் .பின்பு வேறு பெயரில் வருகிறீர்கள் ...எதோ ஒரு குழப்பம் . எப்போதும் ஒரு புதிர் .அல்லது ஒரு குற்றம் இருக்கிறதோ ...என்பது தான்.
இப்போது நிறைய பேர் என்னிடம் கேட்டதால் என் பதில் ..
ஒன்று கே தளங்களை பொறுத்தவரை உண்மையான பெயரை பதிவு செய்த அடிமுட்டாள் நான் மட்டும் தான் என்று நினைகிறேன்.
முரட்டுகாளை என்று வைத்து கொண்டதே என் பின்பகுதி பெயரான காளை என்பதை இணைத்து தான் . அப்போது என் கை எழுத்தாக முத்து என்று தான் வைத்திருந்தேன். அப்போது நான் அடிபட்டு மருத்துவமனையில் சேர்ந்ததால் வேறு வழியின்று தகவல் தொடர்பில் இருந்து விலக நிறைய பேர் நான் ஏமாற்றிவிட்டதாக நட்பில் களங்கம் செய்வதாக ஓபன் போஸ்ட் செய்து கச்டபடுதினார்கள் .வேறு வழி இன்றி நான் மருத்துவ மனையில் இருக்கும் காட்ச்சிகள் என் உடல் நிலை எல்லாம் படங்களாக வெளியிட்டேன். அதற்கும் எதிர் கருத்து .குடும்ப விமர்சனம். வேறு வழியின்றி வெளியேறினேன்.
இரண்டாவது பெயர் முத்து . அது யாரோ ஒரு நபரால் கைபற்றபட்டது கே தளத்தில் உள்ள ஒர்ராண்டுக்கு முற்பட்டவர்களுக்கு தெரியும்.
அப்புறம் கடலை முத்து . அதில் கூட நான் நீங்க வில்லை ..யாரோ நீக்கி விட்டார்கள் ..யார் என்பது இன்றும் தெரியாது .
அடுத்து அன்பைத்தேடி . இதில் யாரோ ஆரம்பித்த ஒரு நூலுக்கு நான் மனசொப்பி இட்ட பதில்கள் நீக்க பட்டன
எல்லாவற்றிற்கும் மேல ஒரு முதிர்ந்த மன வலிமை உடைய நபர் சந்திக்கும் நிகழ்வுகளுக்கும் என்னை போல ஒரு உளறுவாயன் சந்திக்கும் நிகழ்வுகளும் வேர்பாடானவை . இருபதில் உள்ள உறுப்பினர்கள் வெளிகாட்டி கொள்வது இல்லை. முப்பதில் உள்ள உறுப்பினர்கள் சிக்கல்கள் இல்லாத பதிவுகள் மூலம் தப்பித்து கொள்ள என்னை போன்ற அரைவேக்காடுகள் தான் மாடிகொல்கிறது
ஒரு லாட்ஜில் என்னை சண்டை போடவே சந்தித்த ஒரு நாற்பது வயது பாண்டிச்சேரி நபர் எனக்கு அவ்வளவு அறிவுரை சொன்னார்.
இன்னும் சொல்ல போனால் மிரட்டினார் .. இப்படி சொல்ல முடியாத நிறைய ...நிறையா ... கால்கள் .
நிறைய நம்பர்கள் மாற்றி அது ஒரு சாதனை தனியே ஓடிக்கொண்டு இருக்கிறது.
ஆனால் எந்த பெயரில் வந்தாலும் நான் முத்து , தஞ்சை , தவிர எல்லா தகவலும் சொல்லிவிடுகிறேன் ..யாரையும் ஏமாற்றுவதோ தலைமறைவாய் திரிய வேண்டிய அவசியமோ எனக்கில்லை .
எனக்கு என்ன , புள்ளயா . குட்டியா .. குடும்பமா ....
நான் ஒரு தனிக்கட்டை ..என்ன ..என்னை மூன்று நல்ல உள்ளங்கள் மனசார நேசிக்கிறது . அதுவே நான் வாழ காரணமாய் இருக்கிறது .
வேறெந்த விஷயங்களையும் விட.. நீங்க வாழறதுக்குக் காரணமா இருக்கற அந்த மூன்று நல்ல உள்ளங்களுக்கு மட்டும் நீங்க உண்மையும் உததமமுமா இருங்க.. அது போதும்..
வேற எதுவுமே உங்களுக்கு முக்கியமா இருக்க வேண்டிய அவசியமே இல்ல..
டைம் பாஸ் பண்றதுக்குன்னு ஆரம்பிக்கற அற்ப சொற்பமான விஷயங்கள்.. சில நேரங்கள்ல அதிமுக்கியத்துவம் வாய்ந்ததா மாறி.. வேறு முக்கியமான விஷயங்களை பின்னுக்குத் தள்ளறது உண்டு..
இப்ப அது மாதிரி ஒண்ணு தான் உங்களுக்கு நடக்குதுன்னு நினைக்கறேன்..
இது யாருக்குமே ஏற்பட்ற ஒண்ணு தான்..
ஆனா.. அடிதடி சண்டையா போற அளவுக்கெல்லாமா மாறும்??
For heaven sake, prioritize your priorities dude!!!
முத்து, நானும் உங்கள் வயதை ஒத்தவன்தான்.... நீங்கள் எதை செய்தாலும் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு செய்யுங்க..... அவசர கதியில் யாரையும் எளிதாக நம்புவதும், அவர்களிடம் உரிமையோடு பேசுவதும், அதே வேகத்தில் அவர்களுடன் சண்டை போடுவதும் என்று எல்லாமே உங்கள் அவசரத்தால்தான்..... சி.ஜிக்கு நான் வருவதற்கு முன்பே உங்களை பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன்.... நீங்கள் எதிரியாக நினைக்கும் சிலர்தான் உங்களை பற்றி என்னிடம் பேசினார்கள்.... நம்பினால் நம்புங்கள், அவர்கள் உங்களை பற்றி ஒரு வார்த்தை கூட தவறாக சொல்லவில்லை... "நீங்க அழகா கவிதை எழுதுவீங்க"னு சொன்னாங்க....பயங்கர பாப்புலர் ஆசாமினு சொன்னாங்க..... இப்போவரை உங்களைப்பற்றி என்னிடம் நல்லவிதமாகத்தான் பலரும் பேசுறாங்களே தவிர, யாரும் தப்பா பெசுரதில்லை..... உங்களைப்பற்றி அவர்கள் தவறாக நினைப்பதாக நீங்கள்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.... இங்கு நீங்கள், நான் உட்பட எல்லோருமே மனத;ளவில் பாதிக்கப்பட்டவர்கள்தான்.... ஒருவருக்கொருவர் ஆறுதலாக பேசி, விளையாடி மகிழ்வதை விட்டுவிட்டு எதற்காக மற்ற விஷயங்களை பற்றி கவலைப்பட வேண்டும்..... இனியும் வீண் கவலைகளை விடுங்க முத்து, பழைய வேகத்தோடு சந்தோஷமா இருங்க....
இப்படி இரு அருமையான பதிவுகள் தொடர காரணமாயிருக்கும் என்று நினைக்காமல் வெளியிட்டேன். காலையில் ரூமை விட்டு புறப்படும் முன் ரோதீஸ் பதிலை பார்த்தவுடன் நிஜமாவே ஒரு தெளிவு ..prioritize your priorities இதை நான் என் டைரியில் எழுதி வைத்து கொண்டேன். தேவை இல்லாத தலைவலிகளுக்கு ஒரு மருந்து .இது ரோதீஸ் வடிவில் ஆண்டவன் எனக்கு தரும் கட்டளையாகவே நினைகிறேன். இதை வைத்தே இனி என் ஆன்லைன் வாழ்க்கை இருக்கும்.
மனசு லேசாகி ஒரு வாரத்திற்கு பிறகு குளித்தலை விசிட் செய்து ஓரளவு வெற்றிகரமாக காய் நகர்த்தினேன்.
நான்கு முப்பது இருக்கும் . எதேச்சையாக ஓபன் செய்தால் msvijai பதிவு ..
உண்மையில் என்னை பற்றி எனக்கே ஒரு தெளிவு வந்துவிட்டது
ஆமாம். மூன்று நபர்கள் அல்லது நான்கு பேர் சிக்கல் தந்தாலும் எத்தனை நல்ல மனிதர்கள் இங்கே .
என் எல்லா விஷயங்களிலும் ஆறுதல் சொல்லி என்னை தேற்றி இருக்கிறார்கள் .
தூர இருந்தும் நெருங்கி விட்ட சொந்தங்கள் போல எவ்வளவு நட்புடன் இருக்கிறார்கள் .
அதை எல்லாம் விட்டு விட்டு நான் ஏன் கவலைபடவேண்டும் என்று என்னை தலையில் குட்டி யோசிக்க வைத்த தோழா
உங்கள் இருவருக்கும் நன்றி .
ஒரு வார துக்கம் தொலைத்து இன்று ப்ரீயா பீல் பண்ணுறேன்.
இன்னைக்கு இரவு நிச்சயம் நிமதியா தூங்குவேன். நன்றி நேசங்களே ...
அண்ணா நீங்க சொன்னத கண்குடாக பார்க்கிறேன் //////////"செக்ஸ் உணர்வை வெளிப்படுத்த நிறைய தளங்கள் இருக்கு,ஆனால் நம்மல்ல பல பேருக்கு அவங்க கஷ்டத்த சொல்லவும்,ஆறுதல் படுத்திக்கவும் ஒரு இடம் தேவை ,அதுக்காக இந்த தளம் இருக்கட்டும்..."//////
msvijay சொல்ற மாதிரி.. thamizhan ஒத்துக்கற மாதிரி.. ஒருவருக்கொருவர் ஆறுதலாக பேசி, விளையாடி மகிழ்வதை விட்டுவிட்டு எதற்காக மற்ற விஷயங்களை பற்றி கவலைப்பட வேண்டும்