தீபாவளி வரலாறு தீபாவளி , ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொண்டாடும்ஓர் இந்து பண்டிகையாகும் . இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும் , சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர் . தமிழர்கள் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக கருதுவதில்லை . இருப்பினும் மலேசியா , சிங்கையில் வாழும் தமிழர்கள்தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடச் செய்கின்றனர் . பெயர்க் காரணம் ' தீபம் ' என்றால் ஒளி , விளக்கு .' ஆவளி ' என்றால் வரிசை . வரிசையாய் விளக்கேற்றி , இருள் நீக்கி , ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும் . தீபத்தில் பரமாத்மாவும் , நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம் . ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது . அகங்காரம் , பொறாமை , தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும் . ஒரு தீயகுணத்தை எரித்துவிட வேண்டும் . தோற்ற மரபு இந்துக்களின் தீபாவளி இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை , புராணக் கதைகளின்வழியாகக் கூறுகின்றனர் . *. இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து , நாடு திரும்பும் போதுமக்கள் விளக்கேற்றி வரவேற்றனர் . *. புராணக் கதைகளின் படி , கிருசுணனின் இருமனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருசுணன் வராக ( பன்றி ) அவதாரம் எடுத்திருந்தான் . பிறந்த அசுரனின் பெயர் நரகன் . அந்நரகன் , தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான் . அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி , கிருசுணன் தனதுத்திறமையால் அந்நரகாசுரனை இறக்க வைக்கிறான் . *. கிருஷ்ணர் , நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது , அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது . *. இராமாயண இதிகாசத்தில் , இராமர் , இராவணனை அழித்து விட்டு , தனது வனவாசத்தையும் முடித்து விட்டு , மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை , அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர் . இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது . *. ஸ்கந்தபுராணத்தின் படி , சக்தியின் 21 நாள் கேதார விரதம்முடிவுற்றது இத்தினத்தில் தான் . விரதம் முடிவடைந்த பின்னர் சிவன் , சக்தியை தன்னில்ஒரு பாதியாக ஏற்று ' அர்த்தநாரீஸ்வரர் ' உருவமெடுத்தார் . சீக்கியர்களின் தீபாவளி 1577- இல் இத்தினத்தில் , தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர் . சமணர்களின் தீமாவளி மகாவீரா நிர்வானம் அடைந்ததினத்தை நினைவு கூர்ந்து , இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர் . கொண்டாடும் முறை தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர் . இல்லத்தின் மூத்தஉறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு ( மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை ) இட்டுமகிழ்வர் . பின் எண்ணெய்க் குளியல் ( கங்கா குளியல் ) செய்வர் . நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம் . மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர் . பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர் . அன்று அநேக பெண்கள் புடவையும் ( குறிப்பாக பட்டுப்புடவை ) ஆண்கள் வேட்டியும் உடுப்பர் . தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும் . அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர் . பரிசுகள் தந்து மகிழ்வர் . பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர் . தீபாவளி இலேகியம் ( செரிமானத்திற்கு உகந்தது ) அருந்துவதும் மரபு . தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம் , அன்றைய தினம் , அதிகாலையில் எல்லா இடங்களிலும் , தண்ணீரில் கங்கையும் , எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் , குங்குமத்தில் கௌரியும் , சந்தனத்தில் பூமாதேவியும் , புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும் . அந்த நீராடலைத்தான் " கங்கா ஸ்நானம் ஆச்சா " என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர் . அன்றைய தினம் , எல்லா நதிகள் , ஏரிகள் , குளங்கள் , கிணறுகளிலும் , நீர்நிலைகளும் " கங்கா தேவி " வியாபித்து இருப்பதாக ஐதீகம் . அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும் , சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.
திருடிய பொருளுக்குத்தான் சுவை அதிகம் நண்பா,நன்றி............
//////////////////ஸ்கந்தபுராணத்தின் படி , சக்தியின் 21 நாள் கேதார விரதம்முடிவுற்றது இத்தினத்தில் தான் . விரதம் முடிவடைந்த பின்னர் சிவன் , சக்தியை தன்னில்ஒரு பாதியாக ஏற்று ' அர்த்தநாரீஸ்வரர் ' உருவமெடுத்தார் . சீக்கியர்களின் தீபாவளி 1577- இல் இத்தினத்தில் , தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர் . சமணர்களின் தீமாவளி மகாவீரா நிர்வானம் அடைந்ததினத்தை நினைவு கூர்ந்து , இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர் . கொண்டாடும் முறை/////////////////இவையெல்லாம் நான் அறிந்திராத தகவல்கள்