உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சையால் மட்டுமே அது முடியும். நிரந்தரமாக உங்கள் குறியை பெரிதாக்குவதாக சொல்லும் மாத்திரைகள், களிம்புகள், ஆயுர்வேதம், சிறப்பு உடற்பயிற்சி, பெரிதாக்கும் கருவிகள் மற்றுமுள்ள தொழில் நுட்பங்கள் எதுவும் பயன் அளிக்கக் கூடியவை அல்ல. உங்கள் குறியை பெரிதாக்குவதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகலாம். மற்ற அறுவை சிகிச்சைகளைப் போலவே, இதற்கான அறுவை சிகிச்சையும் அபாயகரமானது மற்றும் சிக்கலானது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். உங்கள் குறி மிக மிகச் சிறியதாக இருந்தால் மட்டுமே அநேக மருத்துவர்கள் உங்களை சிகிச்சைக்கு அனுமதிப்பார்கள்.
நிரந்தர வடு, உணர்ச்சியற்றுப் போதல், செயலிழத்தல் அல்லது அளவில் மாற்றம் ஏற்படாமல் மனதில் ஏற்படும் ஏமாற்றம் இவற்றில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதே இந்த அறுவை சிகிச்சையின் சிக்கல். பெரும்பாலான ஆண்கள் தங்கள் குறியின் அளவு குறித்து வருந்துகிறார்கள். மேலும் குறியின் அளவு இன்னும் நீளமாகவோ, தடிமனாகவோ இருந்தால் தங்கள் இணையை மேலும் திருப்திப்படுத்தலாம் என்றும் நினைக்கிறார்கள். இதில் உண்மை இருப்பது போல் தோன்றினும், எப்போதும் குறியின் அளவுக்கும் இன்பத்தின் அளவிற்கும் தொடர்பு இல்லை என்பதே உண்மை.
முதலில் ஆண்குறிகளின் அளவு குறித்து சில உண்மைகளை நாம் பார்ப்போம். விறைத்த ஆண் குறிகளில் 90% 12-17 செ.மீ (5-7இன்ச்) நீளமும், 2.5-5 செ.மீ (1-2 இன்ச்) தடிமனும் உடையதாய் இருக்கிறது. நீளமான அல்லது தடிமனான குறியினால் மட்டும் உங்கள் இணையை திருப்திப்படுத்திவிட முடியாது என்பதே உணமை. உங்கள் இணையின் தேவை அறிந்து, உங்கள் இணையின் உடல் அறிந்து செய்யும் சேவைகளே முழு திருப்தி தருவதாக பெரும்பாலான பெண்கள் ஒரு கணக்கெடுப்பில் சொல்லியிருக்கிறார்கள்.
கண்ணால் கண்ட ஒரு விஷயத்தை சொல்கிறேன். (எப்படி, எங்கு என்கிற ஆராய்ச்சியெல்லாம் வேண்டாம்.. அது patient's right violation ஆகிவிடும்)
சிறுநீரகவியல் அறுவை மேற்கொள்ள வந்த ஒருவரின் உறுப்பு உருளைக்கிழங்கு வடிவத்தில் இருந்தது பேரதிர்ச்சியாக இருந்தது. அந்த மருத்துவர் சிடுமூஞ்சி ஆசாமியல்ல. அதைப்பற்றி அவரிடம் கேட்டபொழுது அவர் சொன்ன விஷயங்கள் ஆச்சரியமாக இருந்தன. அந்த நபர் தன்னுடைய குறியைப் பெரிதாக்கிக் கொள்ள அவருடைய நாட்டில் ஏதோ ஒரு மருத்துவரிடம் silicone சிகிச்சையைப் பெற்றிருக்கிறார். அது ஏடாகூடமாகி வடிவமே மாறிவிட்டது..
முதலுக்கு மோசம் நேர்ந்ததும்.. அடித்து பிடித்து மேற்படி சிறுநீரகவியல் அறுவை நிபுணரின் உதவியை நாடி பறந்து வந்தார்.
கர்ண கொடூரமாக இருந்தது அந்த அறுவை. அதை நேர் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது அந்த மருத்துவருக்கு.
அறுவையினூடே அவர் சொன்ன ஒரு கருத்து... குறியைப் பெருதாக்குவதென்பது more or less a myth!
ho so sad... But most of the people have this attitude like they want to have theirs with the big size... but medically min size is enough to have pleasure i think....