Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பனித்துளியில் சில மலர்கள் - 19


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
பனித்துளியில் சில மலர்கள் - 19
Permalink   
 


 
Permalink Reply Quote 
More indicator.png


ராம்சந்தரின் பேச்சைக் கேட்கக் கேட்க கதிரவனின் மனதிற்குள் ஏற்பட்ட பிரமிப்பு அடங்க வெகு நேரம் பிடித்தது.

இதெல்லாம் சாத்தியமா?  அதுவும் நம் நாட்டில்? 

ஒரு ஆணும் ஆணும் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்களா?

அதை அவர்களது பெற்றோர்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டும் இருக்கிறார்களா?

எப்படி?  பாரதப் பண்பாடு, கலாச்சாரம் என்றெல்லாம் பேசுகிறோமே அதற்கு இது முரணாக இல்லையா?

கேள்விகள் - ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் கேள்விகள் அவன் மனத்தைக் குடைய ஆரம்பித்தன.

ராம்சந்தர் பேசிமுடித்ததும் எழுந்த கரவொலி அடங்க வெகு நேரமானது.

ராம் முடித்ததும் லாரன்ஸ் தொடர ஆரம்பித்தான்.

"முதலில் ராமும் நானும் நல்ல நண்பர்களாகவே பழகினோம்.  ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஒருவரின் மனதை மற்றவர் படிக்கும் அளவுக்கு நெருங்கிய பிறகு.. எங்கள் நெருக்கத்தில் எந்தக் காரணத்தைக் கொண்டும் மரணத்தைத் தவிர வேறு எதனாலும் பிரிவு ஏற்படக்கூடாது என்று உறுதியாக நினைக்க ஆரம்பித்தோம்.  மேற்படிப்புக்காக ராம் வெளிநாடு சென்றபோது அவன் வளர்ச்சியில் நானும் என் வளர்ச்சியில் அவனும் அக்கறை கொண்டதால் தவிர்க்க முடியாத அந்தப் பிரிவை உளமார ஏற்றுக்கொண்டோம்.  அன்பும் காதலும் ஒருவரின் உயர்வுக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாகத்தான் இருக்கவேண்டுமே தவிர அதை தடுக்ககூடிய தடுப்புச் சுவராக இருக்கவே கூடாது.  ஆகவே அந்தப் பிரிவை இருவரும் உளமார வரவேற்று ஏற்றுக்கொண்டோம்.  ஆனால் அந்தப் பிரிவின் போது இருவரும் திருமணம் செய்துகொண்டால் என்ன என்ற எண்ணம் என்னுள் தோன்றியது.  ராம் அதைப் பற்றி என்னிடம் பேச்சைத் துவக்கியபோது நான் எவ்வளவு ஆனந்தம் அடைந்திருப்பேன் என்பதை விவரிக்கவே முடியாது.  ராம் சொன்னது போல எங்கள் இருவரின் பெற்றோர்களும் பரந்த மனதுடன் எங்கள் உறவை அங்கீகரித்தது உண்மையிலேயே மிகப் பெரிய விஷயம்.  எங்கள் உறவினர்களும் இதற்காக எங்களை ஒதுக்காமல் நல்ல முறையில் பழகி வருவதையும் நாங்கள் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.  இப்போது ராம் இந்தியாவில் பெயர்சொன்னாலே தரம் விளங்கும் அளவுக்கு ஒரு லீடிங் ஆர்கிடெக்சுரல் நிறுவனம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.  நானும் அதில் ஓர் மானேஜிங் டைரெக்டராக இருந்து வருகிறேன்.  எதற்கு இதை எல்லாம் சொல்கிறோம் என்றால் ஓரினச் சேர்க்கை என்பது வெறும் உடல் சம்பந்தப் பட்டது அல்ல.  மனம் சார்ந்தது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்." - என்று லாரென்ஸ் பேசி முடித்ததும்...

இருவரையும் நோக்கி கேள்விக்கணைகள் பாய ஆரம்பித்தன.

"நீங்கள் சொல்வதெல்லாம் சரி.  உங்களுக்கு வைத்தது போல புரிந்துகொள்ளும் உறவினர்கள்- பெற்றோர் எல்லாருக்கும் அமைவது சாத்தியப்படுமா?"

இந்தக் கேள்விக்கு ராம் அழுத்தமாக, "கண்டிப்பாக சாத்தியப்படும்.  ஆனால்  அதற்கு இன்னும் நாட்களாகலாம்.  மாதங்களாகலாம் .  ஏன்? வருடங்கள் கூட ஆகலாம்.   நாங்கள் சொல்ல வருவது எல்லாம் ஓரினச் சேர்க்கை என்பது தவறான கேவலமான செகஷுவல் கண்ணோட்டத்துடன் மட்டுமே இங்கு பார்க்கப்படுகிறது.  அப்படி பார்க்காதீர்கள் என்பதைத்தான் நாங்கள் சொல்ல வந்திருக்கிறோம்." - என்றான்.

"ஒக்கே. உங்களில் யார் டாப் யார் பாட்டம். ?"- எவனோ ஒருவன் குறும்புத்தனமாக கேட்டபோது ஒரு சிரிப்பலை எழுந்தது.

"அது எங்கள் மனநிலையைப் பொறுத்தது.. " - ராம் லேசான கண்சிமிட்டலுடன்   பதில் சொன்னான்.

"ஒரு இம்பார்ட்டன்ட் க்வெஸ்டின்- நீங்கள் இருவரும் ஓரினத்தம்பதியர்.  ஆனால் ஆரம்பத்தில் ஓரின நண்பர்களாக இருந்த இருவர் திருமணம் செய்து கொண்ட பின்பு-அதாவது இருவரும் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட பிறகு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது மனைவிக்கு துரோகம் செய்ததாக ஆகாதா?" - 

ராம்சந்தர் பதில் சொல்ல ஆரம்பித்தான்:

"கல்யாணம் என்று ஒன்று வந்துவிட்டால் இனிமேல் இந்த மாதிரி தப்பெல்லாம் வேண்டாண்டா என்று சொல்கிறவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்.   அப்படி என்றால் இதுவரை அவர்கள் செய்தது - பழகியது - உறவில் ஈடுபட்டது எல்லாமே தப்புதான் என்று நினைக்கிறார்கள்.  அதை திருமணத்துக்கு முன்னால்  செய்தால் என்ன? பின்னால் செய்தால் என்ன?  தப்பு என்றால் எப்போது செய்தாலும் தப்புதான்.  அப்படிச் சொல்லி தங்கள் மனசாட்சியையும் தங்களையும் ஏமாற்றிக் கொள்கிறவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள்.  அவர்களை விட்டு நாம் ஒதுங்குவதே நல்லது. "  - அழுத்தமாக ஒலித்த ராமின் குரலி இருந்த கம்பீரம் அனைவரையும் கட்டிப்போட்டது.

"அது சரி.. உங்களுக்கு லாரன்சுடன் மட்டுமோ அல்லது லாரன்சுக்கு உங்களுடன் மட்டுமோ தான் உடல்சார்ந்த உறவில் ஈர்ப்பு இருக்கிறதா?" - என்று ஒரு கேள்வி ஒருவரிடம் இருந்து வந்தது.

"இதற்கு நான் பதில் சொல்கிறேன்"-என்று லாரன்ஸ் முன்வந்தான்.

"நண்பர்களே.  எங்களுக்கு மற்ற ஆண்களிடமும் ஈர்ப்பும் உறவும் இருக்கிறது.  இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்கிறோம் என்பதற்காக ஒருவரை ஒருவர் அன்பால் பினைத்துக்கொண்டிருக்கிறோம்.  அதே சமயம் அந்த பிணைப்பு அடுத்தவரின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது இல்லை.  இப்போதும் கூட வியாபார நிமித்தமாக நாங்கள் இருவருமோ அல்லது ஒருவர் மட்டுமோ வெளிநாடுகளுக்கு செல்ல நேர்கிறது.  அங்கு யாராவது ஒரு ஆணிடம் எங்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது என்றால் அந்த நேர உணர்ச்சிக்கு ஒரு வடிகால் ஏற்படுத்திக்கொள்கிறோம்.  சமயத்தில் நாங்கள் இருவருமே மூன்றாவது ஆணுடன் உறவு வைத்துக் கொள்வதும் உண்டு.  இதெல்லாம் கேட்க அசிங்கமாக தோன்றலாம்.  ஆனால் எங்களைப் பொருத்தவரை செக்ஸ் என்பது ஒரு உணர்ச்சி..  தேவை.  அவ்வளவுதான்.   பசி எடுத்தால் சாப்பிடுவது போல - அதை அன்போடும் நட்போடும் சேர்த்துப்பார்த்து கட்டுப்பாடு விதித்துக்கொள்வது என்பது தேவை இல்லாத ஒன்று என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். " - லாரன்சின் தெளிவான பேச்சு அனைவரையும் ஒரு புது உலகத்துக்கு கொண்டுபோனது போல இருந்தது.

அதோடு நிற்காமல் லாரன்ஸ் அடுத்து பேசிய பேச்சு அனைவரையும் பரபரப்புக்குள்ளாக்கியது. 

"அவ்வளவு ஏன்?  இதோ இங்கே இத்தனை பேர் கூடி இருக்கிறோம்.  உங்களில் எங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்த ஆண்மகன் யாராவது இருந்தால் .." என்று சொன்ன லாரன்ஸ் ஒருமுறை அந்த ஹால் முழுவதும் நோட்டம் இட்டான்.  அரங்கம் முழுவதும் சுற்றிச் சுழன்ற அவன் பார்வை ஓரமாக நின்றுகொண்டு கவனித்துக்கொண்டிருந்த கதிரவன் மீது அழுத்தமாக படிந்து நிலைத்தது.

பிறகு மைக்கை மூடிக்கொண்டு அருகில் நின்று கொண்டிருந்த ராம்சந்தரின் காதருகில் குனிந்து ஏதோ சொன்னான்.  அவன் சொன்னதை புரிந்துகொண்ட ராம்சந்தர் அவனிடம் ஆமோதிப்பது போல தலையை அசைத்தான்..

தனது பேச்சை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தான் லாரன்ஸ்.

"யாரவது இருந்தால் என்ன இருந்தால்..?  அதோ அங்கு சுவர் அருகில் நின்று கொண்டு அனைத்தையும் கவனித்துக்கொண்டு அதே நேரம் தன கடமையிலே கண்ணாகவும் இருந்துகொண்டிருக்கிறாரே. இந்த ஹோட்டலைச் சேர்ந்த அந்த நண்பர் அவர் எங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்துவிட்டிருக்கிறார்.  அவர் சம்மதித்தால் அவருடன் இந்த இரவை இனிமையாகக் கழிக்க நாங்கள் இருவருமே தயாராக இருக்கிறோம்.  " - என்றான் லாரன்ஸ்.

அவன் சுட்டிக்காட்டிய திசையில் அனைவரும் பார்வையை ஆவலுடன் செலுத்தினார்கள்.

அங்கே நின்று கொண்டிருந்த கதிரவனுக்கோ அந்த ஏ.சி. அறையிலும் வியர்த்துக்கொட்ட ஆரம்பித்தது.

(தொடர்ந்து மலரும்.) 



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard