அன்பைத்தேடி நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என் பெயர் நரேஷ்ஜி. நான் இந்த தளத்திற்கு வந்து பல நாட்கள் ஆகிறது. அதற்கு அன்பைத்தேடி நடத்துனர் என்னை மன்னிக்கவும். இனி தொடர்ந்து இந்த தளத்திற்கு வர முயற்சிக்கிறேன். என்னை தெரிந்து கொள்ள விரும்பினால் , அன்பைத்தேடி ஆரம்பத்தில் நான் எழுதிய கதை, கவிதைகள் இருக்கும், பார்த்துக்கொள்ளவும். இப்போது இங்கு இருக்கும் அனைவருமே புதியதாய் இருக்கின்றனர், நன்றி நண்பர்களே, வாழ்த்துக்கள். "பொக்கிஷம்", "நாணல்", "சிப்பிக்குள் முத்து (புதைக்கப்பட்ட என் காதல்)", "இருவர் (இது கதையல்ல நிஜம்), "சென்னையில் ஒரு (கே)வலமான காதல்", இந்த சிறு கதைகளுக்கு பிறகு கதை எழுதாமல் இருந்த நான் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒரு கதையுடன் உங்களை சந்திக்கவே இங்கு வந்தேன்.
விரைவில் ஒரு சிந்திக்க கூடிய , இந்த காலக்கட்டத்திற்கு நமக்கு தேவையான தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலோடு என் கதையை சொல்ல ஆரம்பிக்கிறேன்.
விரைவில் உங்களை என் கதையின் முதல் பாகத்தோடு சந்திக்கிறேன் . நன்றி நண்பர்களே....