செங்கல்பட்டு சந்திப்பு, தென்னிந்தியாவின் முக்கியமான மற்றும் பிரபலமான தொடர்வண்டி சந்திப்புகளுள் ஒன்றாகவும், தமிழகத்தில் சென்னை மாநகரின் பக்கத்தில் அமைந்துள்ளதுமானஇந்த செங்கல்பட்டு சந்திப்பு இந்திய தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமாக விளங்குகிறது. இந்திய ரயில்வேயின் எளிமை சின்னமாக விளங்குகிறது. செங்கல்பட்டு ரயில் நிலையம் கொலவை ஏரி கரையில் , செங்கல்பட்டு நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இது SH- 58 அமைந்துள்ளது , மற்றும் அதன் முக்கிய நுழைவு எதிர் அருகே உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்து செல்லும் நிலையம் இருக்கிறது.. ரயில் நிலையத்திற்கு வெளியே பெரியார் நினைவாக ஒரு சிலை உள்ளது .விழுப்புரம், அரக்கோணம், சென்னை வரை இதன் பயணம் இருக்கிறது.சென்னை சர்வதேச விமான நிலையம் நகரில் இருந்து சுமார் 42 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. போக்குவரத்து செங்கல்பட்டு சந்திப்பு சென்னை ஒரு மைய புள்ளியாக இருப்பது மற்றும் விழுப்புரம் பாதை என தவிர்க்க முடியாமல் சென்னை இருந்து வரும் ஒவ்வொரு தெற்கு ரயிலும் இந்தியா வரை செல்லும் ரயில்களும் மிகவும் நெரிசலான ரயில் நிலையங்களில் ஒன்றாக மாற்றம் செய்துவிட்டிருக்கிறது. இதனால் செங்கல்பட்டு சந்திப்பு வழியாக பல ரயில்கள் செயல்பட வேண்டி உள்ளது.
இந்த சிறப்புகளை எல்லாம் மீறி அன்றாட மக்களின் போக்குவரத்து நிலையமாக இன்று மாறி இருக்கிறது. விலைவாசி ஏற்றமும் மற்றும் பேருந்து கட்டண உயர்வும் இன்று பலரையும் ரயில்களில் பயணம் செய்ய கட்டாயமாக்கி விட்டிருக்கிறது.
இப்படி ஒவ்வொருவரும் சில பல காரணங்களுக்காக ரயிலை நாட வேண்டி உள்ளது. படிக்கும் மாணவர்கள் அவர்கள் பெற்றோரின் சுமையை குறைக்க சீசன் டிக்கெட் மூலம் ரயிலில் பயணிக்கிறார்கள்.
இதெல்லாம் இருக்கட்டும்... கதை என்னன்னு நீங்க கேக்குறது எனக்கு புரியுது?!.
சந்திப்பு 1
செங்கல்பட்டு ரயில் நிலையம்...
சென்னையிலிருந்து பீச் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மூன்றாவது நடைமேடை முன் வந்து நின்றது.
பயணிகள் தங்கள் உடமைகளுடன் வெளியேற, அதற்குள் ரயிலுக்குள் ஏற காத்திருந்த பயணிகள் முண்டி அடித்தனர். என்னதான் ரயில் பத்து நிமிஷம் நின்னாலும் முதல் ஆளா ஏறதுல நம்ம ஜனங்களுக்கு என்ன சந்தோசமோ தெரியல?.
கிட்டதட்ட பயணிகள் வெளியேறி புதிய பயணிகளும் உள்ளே வந்து விட்டனர்.
ரயில் நிலைய ஒலிபெருக்கி ஒலித்தது.
பயணிகள் கனிவான கவனத்திற்கு, சென்னையிலிருந்து தாம்பரம் விழுப்புரம் விருத்தாசலம் வழியாக செல்லும் வைகை எக்ஸ்ப்ரெஸ் மின்தொடர் வண்டி அடுத்த சிலநிமிடங்களில் ஆறாவது நடைமேடைக்கு வந்து சேரும். மீண்டும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் ஒலித்தது.
பயணிகள் கனிவான கவனத்திற்கு, செங்கல் பட்டிலிருந்து தாம்பரம் வழியாக சென்னை பீச் வரை செல்லும் அடுத்த மின்தொடர் வண்டி மூன்றாவது நடைமேடையிலிருந்து புறப்பட தயாராக உள்ளது. ஒலிபெருக்கியிலிருந்து சத்தம் வர பீச் ட்ரெயினில் உட்கார்ந்த படியே தூங்கி கொண்டிருந்த அவன் ஹா! என அலறியபடி எழுந்தான். பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்த ரயில் நிலையத்தில் அமைதியாய் தூங்கி கொண்டிருந்த அவனுக்கு பதற்றமாய் இருந்தது. சுற்று சூழலோடு ஒன்றிபோக சற்றே தடுமாறி போனான்.
ஏங்க? இது செங்கல் பட்டா? கேட்க,
பக்கத்திலிருந்தவர் ஆமாம்பா! என்றார். சற்று பதற்றம் தனிந்தவன், ரயிலை விட்டு இறங்கினான். அவன் அமர்ந்திருந்த சீட்டு இன்னொருவருக்கு அடைக்கலம் தந்து இருந்தது.
தம்பி! நவுருப்பா! வழியில நிக்காத குரல் வந்த திசையை நோக்கினான்.
கையில் டீ டிரம்மோடு நின்றிருந்தவர் நவுருப்பா சொல்றன்ல வலுகட்டாயமாக அவனை தள்ளிக்கொண்டு முன்னேறினார்.
காப்பி ஆ காப்பி சூடான காப்பி ஆங் சார் சூடான காப்பி கூவ ஆரம்பித்தார்.
சமோசா சமோசா ....! சத்தம் கேட்டது. கண்விழித்து திரும்பி பார்க்க அவர் பத்தடி தூரத்தை தாண்டி இருந்தார்.
பின்னால் வந்த பெருசு தம்பி பீச் வண்டி இருக்கா? கேட்க,
தோ! நிக்குது பார் தத்தா இதான் அங்க போவுது சொன்னான், சரிதம்பி சொல்லி கொண்டே பெருசு வண்டியில் ஏறுச்சு.
ட்ரைன் கிளம்பியது. மச்சான் இதோ கிளம்புதுடா சீக்கிரம் வா! நாலு பேர் கொண்ட ஒரு கேங்க் ஓடிவந்தது. கால் நீட்டி ஒய்யாரமாய் நடைமேடை பெஞ்சில் சாய்ந்திருந்த அவன் கால் மேல் வந்து மோதினான் ஒருவன். மோதிய வேகத்தில் நிலை சரிய தடுமாறி கீழே விழுந்தான். மற்ற மூவரும் ஏறிவிட வாடா! அவர்கள் கை அசைக்க, விழுந்தவன் ஹேய்ய்! முறைக்க இவன் புரியாமல் எழுந்து நின்றான்.
ட்ரைன் புடிக்கும் அவசரத்தில் அவன் ஒடி ஏற சற்று அசதியாய் உட்கார்ந்தான்.
ச்சே பாவம் யாரோ ஒருவன் என்னால் இன்று தடுமாறி விழபோனனே! மன சங்கடத்தோடு கால்களை உள்ளிழுத்து உட்கார்ந்தான்.
தம்பி அய்யா ...! குரல் கேட்க, அழுக்கு ஆடையோடு ஒருவன் நின்றிருந்தான். இவன் கண்விழித்ததுமே சுதாரித்தவன், எதாவது தர்மம் பண்ணுங்க அய்யா! கேட்டான்.
தன் சட்டை பையை துழாவியவன், ஏதும் இல்லாததால், பேக்கை எடுத்தான். பர்சை எடுத்தவன் அதிலிருந்த போட்டோவை பார்த்து முறைத்தான்.
போட்டோவில் அவனை பார்த்ததுமே மனம் கலங்க ஆரம்பித்தது. மனம் சலனப்பட்டு கொண்டே அந்த நாளை முன்னோக்கி கூட்டி சென்றது.
ஞாயிற்று கிழமை. அது ஒரு கோடை காலத்தின் தொடக்கம். வெயில் தகித்தது.சென்னை மாம்பலத்தில் முக்கியமான வேலையாக செல்ல நேர்ந்தது. காலையில் இதமாக இருந்த அந்த நாள் பிற்பகல் வாக்கில் வெயிலின் கடுமையான தாக்கம் அதிகரிகரிக்க தொடங்கியது.
வேலை முடிய மணி நான்கானது. வீக் எண்டு என்பதாலும் மணி நான்கானதாலும் சற்றே பதற்றம் தொற்றியது. இப்போது ரயிலை புடித்தால் தான் வீடு போய் சேர முடியும். இங்கிருந்து செங்கல் பட்டுக்கே ஒன்றரை மணி நேரம் ஆகிவிடும். அப்புறம், அங்கிருந்து ஒருமணிநேரம்.
பதற்றத்தோடு ரயில் நிலையம் வந்த எனக்கு நாலரை மணி செங்கல் பட்டு ரயில் இருப்பது நிம்மதியை தந்தது. ரயிலும் வர ஏறி அமர்ந்தேன்.
கூட்டம் அவ்வளவாக இல்லை எனினும் உட்கார சீட் இல்லாத அளவுக்கு கூட்டம். அடுத்த ஸ்டாப்பிங்கில் கொஞ்சம் பேர் ஏற புட் போர்ட் அடிக்க சில இளவட்டங்கள் வழியை மறைத்தன. அதில் ஒருவன் என்னை கவர அவனை பார்த்தேன். அவனும் என்னை பார்க்க சற்று என் பார்வையை வேறு பக்கம் திருப்பினேன்.
மீண்டும் அவனை பார்க்க அவன் என்னை பார்த்தான். அதன் பின் ஏனோ அவனை பார்க்கும் ஆவலை கைவிட்டு உள்ளே சீட்டருகில் சென்றேன்.
என்னை என்னால் நம்ப முடியவில்லை. எதோ ஒரு வசீகரம் என்னை கிறங்கடித்தது.என்னை அங்கே இழுத்தது.ரயிலின் கூரை கம்பியை பிடித்திருந்த அந்த கையை பார்த்தேன் பார்வை கீழிறங்க அந்த அழகான செவ்விதழ் என்னை கிறுக்குபிடிக்க வைத்து கிறங்கடித்தது, ஒய்யாரமாக நான் நிற்க நினைத்து மனம் அலைபாய ஆரம்பித்தது. அவனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் என்னை ஓரிடத்தில் நிற்க விடாமல் அலைய வைத்தது.
அவன் என்னை திரும்பி பார்க்க ஒரு மின்னல் என்னை வெட்டியது.
பாடல் ஒலித்து கொண்டிருந்தது.
நெஞ்சுக்குள்ள ஓ மா முடிஞ்சிருக்க
நெஞ்சுக்குள்ள ஓ மா முடிஞ்சிருக்க
இங்கே எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கும்
வெள்ள பார்வை வீசிவிட்டீர் முன்னா
டி
அத தாங்காத மனசே தண்ணிபட்ட கண்ணாடி
பார்வையால் என்னை கிறங்கடித்து கொண்டிருக்க நான் அவனை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன்.
முதல்பார்வையிலேயே என்னிடம் ஆயிரம் அர்த்தங்களை அள்ளி தந்தது அந்த பார்வை.
பாடல் நிற்க, ஹலோ? சத்தம் வந்தது, யாரோட போனோ ஒலித்திருக்கிறது. சத்தம் வந்த திசையை பார்த்து விட்டு அவனை பார்க்க, நான் பார்ப்பதை அறிந்தவன் திசையை மாற்றினான்.
கூட்டம் இல்லை. எதிர் திசையில் நின்றால் அவனை பார்க்கலாம். ஆனால் போக பயம். எதாவது எக்குதப்பு ஆகிவிட்டால் என்ன செய
தைரியத்தை வரவழைத்து கொண்டு அவனை முன் நோக்கி போனேன்.
அவன் எதிர் திசையில் கம்பியை பித்து கொண்டு சிட்டிங் ஷேர் கம்பியில் சாய்ந்திருக்க நான் அவனை பார்த்தேன்.
நானும் எதிர் திசையில் அவ்வாறே செய்தேன்.
மனம் ஏனோ புரியாத ஆனந்தத்தில் புரியாத மர்மங்களோடு திளைத்தது.
நான் பார்த்து கொண்டிருந்த தருணங்களில் அவன் வேறொங்கோ பார்க்க, அவனை வெறித்து பார்த்தேன். கால் வலிக்க ஆரம்பித்தது. அரைமணி நேரமாய் நின்று கொண்டிருந்தேன்.அவன் அழகில் நான் அவனிடத்தில் மடிந்து போனேன்.
உன்னோடு வாழந்த காலங்கள் யாவும் வலியோடு உயிர் போகுதே என்னும் வரி நிகழ்கால வாழ்வில் இவனை பார்க்கும் போது ஏற்பட்டது. இவனோடு நிற்கும் ஒவ்வொரு நொடியும் மனதில் பலவருடம் இவனோடு நின்றதைபோல் உணர்ந்தேன்.
நான் பார்ப்பதை அறிந்தவன் என்னை பார்க்க நான் பார்வையை திருப்பினேன்.
ரயில் தாம்பரம் சானடோரியத்தில் நின்றது. சிலரும் உள் ஏற புட்போர்ட் பார்ட்டி என்னை பார்ப்பதை அறிந்தேன். அவனை நான் பார்க்க அவன் பார்வையை என்னிடமிருந்து விலக்கிவிட்டான்.
ரயில் புறப்பட்டது...
ஒவ்வொருமுறையும் நான் பார்க்க அவன் என்னை பார்த்தான்.இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கிறோம் என்பதை அறிந்து பார்வையை விலக்கினோம்.
அடுத்து தாம்பரம் தாண்டி பெருங்களத்தூரில் ரயில் நிற்க, அல்மோஸ்ட் ஸ்டான்டிங் பயணிகள் இறங்கிவிட்டனர். சீட் ஒன்று காலியானது.அவன் அதை பார்க்க நானும் பார்த்தேன். அவனே உட்காரட்டும் நான் நினைத்தேன் ஏனெனில் நான் உட்கார்ந்தால் அவனை பார்க்க முடியாது அதனால் அவனும் அதையே நினைத்தான் போலும். ஆனால் எனக்கு கால் வலி உயிர் போனது.
அதற்குள் சீட் நின்றிருந்த வேறு ஒருவனுக்கு அடைக்கலாமானது.
பார்வை மீண்டும் ஒருவர் மாற்றி ஒருவர் என பதிந்தது.
அடுத்த ஸ்டேசனில் அல்மோஸ்ட் பத்து சீட் காலியானது. நான் நின்றிருந்த சீட் காலியாக அமர்ந்தேன். ஆனால் அவன் என் எதிரிலேயே நின்றான்.
மறைந்து மறைந்து பார்த்த இருவரும் நேருக்கு நேர் பார்த்தோம். நான் பார்வையை விலக்கவில்லை.அவனும்தான்.
ரயில் செங்கல்பட்டில் நின்றது. அவன் இறங்க நான் அவன் இறங்குகிறானே! பரிதவிப்போடு கதவை பார்த்தேன்.
இறங்க காலடி எடுத்து வைத்தவன் ஒருகணம் என் பக்கம் திரும்பினான். எனக்குள் ஆயிரம் வாட் மின்சாரம் பாய்ந்தது. நான் அவன் இறந்குவதைதான் பார்க்கிறேன் என அறிந்தவன் சடக்கென திரும்பி இறங்கினான். அந்த ஒரு கண பார்வை எங்களிருவருக்கும் காதல் உள்ளது என்பதை உணர்த்திவிட்டது.
போனவனிடம் எதோ ஒன்றை குடுத்து விட்டது போன்று இருந்தது. என்னிடமிருந்த எதோ ஒன்று இப்போது இல்லை. அவன் போன திசை இன்னும் மறையாத வடுவாய் அங்கேயே இருந்தது. மீண்டும் பார்க்கமாட்டோமா என்று தோணியது.,
நீர் போன பின்பும் நிழல் மட்டும் போகலையே போகலியே
நெஞ்சுகுழியில் நிழல் வந்து வீழ்ந்திருச்சே!
அப்போ நிமிர்ந்தவன்தான் குனியலையே குனியலையே!
வரிகள் நெஞ்சை நனைத்தது.
செங்கல்பட்டு சந்திப்பில் எங்கள் இருவர் நெஞ்சமும் தடம் மாறி போனது. இதுதான் எங்கள் முதல் சந்திப்பு.
timing பாடலோடு கதை பயணிப்பது அருமை...நேரில் பார்ப்பது போல் எழுதிருக்கீங்க...போனவனிடம் எதோ ஒன்றை குடுத்து விட்டது போன்று இருந்தது...love at first sight feela சரியாக சொல்றீங்க...கலக்குறீங்க...waiting for the next...
தம்பி பர்ஸ் எடுத்துட்டு காசு போடாம என்னமோ யோசிக்கிறீங்களே? பிச்சைகாரன் கேட்க,
ஆங்! எதாவது சாப்புடுறீங்களா?
புண்ணியமா போகும் தம்பி! கையெடுத்து கும்பிட,
அவருக்கு ஒரு பார்சலை வாங்கித்தந்து விட்டு எனக்கும் ஒரு பார்சலை வாங்கிகொண்டு பிளாட்பாரம் சேரில் அமர்ந்தேன்.
பார்சலை பிரித்து ஒரு கவளம் உண்டேன், ஒரு அழகான குட்டிநாய் ஒன்று வாலாட்டி கொண்டு என் முன்னால் வந்து நின்றது.
அச்சச்சோ பசிக்குதா சொல்லிக்கொண்டே அதற்கு ஒரு கைப்பிடி சாதம் வைத்தேன்.அது வாலாட்டி கொண்டே சாப்பிட்டது.
ஆனால் என்னால் சாப்பிட முடியல என்னமோ போல இருந்தது.பார்சலை மூடிவைத்து விட்டு சேரில் சாய்ந்து கண்ணை மூடினேன்.
எதோ ஒரு சலசலப்பு கண்ணை திறக்க நாய் குட்டி சேரில் இருந்த கவரை கீழிழுத்து பிய்த்து சாப்பிட்டு கொண்டிருந்தது.
ம்! உனக்கு கொடுத்துட்டுதானா? நானும் சாப்பிட்டேன். உன்னை நம்பி தான உன்னை பக்கத்தில் உட்கார வெச்சிட்டு நான் கண்ணை மூடினேன். நீ பண்றது நியாயமா? ம்! ஐந்தறிவு உள்ள நீ எங்க புரிஞ்சிக்க போற ஆறறிவு உள்ள மனுசங்களே நம்பிக்கை துரோகம் பண்ணும்போது நீயெல்லாம் என்ன? திட்டிக்கொண்டே கண்ணை மூடினேன்.
ரயிலில் முதல்முதலில் ஒருவனை சைட் அடித்தேன். அவனை நான் விரும்பினேன். எல்லாம் அந்த ஐம்பத்தைந்து நிமிட பிரயாணத்தில் முடிந்து போனது. ஆனால் கடைசி ஒருநொடி என்னை இன்னும் ஆட்டிபோடுகிறது. அவன் பார்வை ஆயிரம் பதில்களை அதில் உதிர்த்து இருந்தது. மீண்டும் ஒருமுறை பார்க்க மாட்டோமா? என மனம் ஏங்கியது.
அடுத்து ஐந்து நாட்கள் அவனுக்காகவே மாலைநேர ரயிலில் பயணம் செய்தேன். ஒருமுறை கூட அவன் சிக்கவில்லை. நம்பர் வாங்காம விட்டுட்டோமே? பரிதவித்தேன். அவன் இல்லாத நாட்கள் என்னை கொல்லாமல் கொன்றது. பசி தூக்கம் மறந்தேன். அவன் நினைவில் நான் மெழுகுவர்த்தியாக உருகினேன். நாட்கள் ஓடியது. அவனை பார்த்ததிலிருந்து இருபத்தி இரண்டாம்நாள் அவனை தாம்பர ரயிலில் சந்தித்தேன்.
வெள்ளரி பிஞ்சு வெள்ளரி பிஞ்சு அஞ்சு ரூவாக்கு வெள்ளரி பிஞ்சு கூடையை வைத்து கொண்டு ரயிலில் ஒருவர் கூவ சிலர் வாங்கினர்
அவரை பார்த்துவிட்டு புட்போர்டில் நின்றேன்.
வாட்டர் பாகிட் அஞ்சிரூவாக்கு ரெண்டு வாட்டர் பாகிட் சொல்ல, அன்றையதினம் என் கேன் காலி. வாட்டர் ரெண்டு நான் கத்தினேன்.
தலையை தூக்கி பார்த்தான்.
தலையை தூக்கியது வாட்டர் பாகிட் வியாபாரி இல்ல, என் பிகர் தான்.
சொல்ல வார்த்தைகளே இல்லை. ஒருகணம் ஸ்தம்பித்தேன். இத்தனை நாளும் பார்க்க மாட்டோமா என ஏங்கிய எனக்கு அவன் தரிசனம் சிங்கப்பூர் முருகனை பழனிமலை உச்சியில் நின்று பார்ப்பதை போன்று இருந்தது. அவன் உட்கார்ந்திருந்தான்.என் ஸ்பரிசம் அவனுக்கு உணர்த்தி இருக்கும் போல! அதான் திரும்பி பார்த்து இருக்கான். எனக்கு உள்ளமெல்லாம் பூரிப்பு. அப்போதான் புரிந்தது என் காதலுக்கு எவ்ளோ மவுசு இருக்குன்னு. நான் அவனை வெறுமென விரும்பலை. அவனை என் உயிரோடு கலக்க நினைக்கிறேன் என்று.
அவன் என் வருகையை எதிர்பார்த்து இருக்க மாட்டான். என்னை கண் கொட்டாமல் பார்த்தான். இழந்ததை எல்லாம் பெற்றதை போன்ற உணர்வு. அவன் கண்ணில் பிரகாசமான ஒளி தெரிந்தது.அவனும் என்னை இத்தனை நாளும் தேடி இருப்பான் போல, அவன் திரும்பி திரும்பி என்னை பார்த்தான். அவன் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி அலையும் குறும்பு கலந்த புன்முறுவலும் எனக்குள் சிரிப்பை ஏற்படுத்தியது.
அவனிடம் பேசலாம் என்றால் பயம். தவறு நடந்துவிட கூடாதே என்ற பயம்.
அவன் உண்மையில் என்னை தேடுவானா? யோசித்தேன். அவனுக்கு இரண்டு வரிசை பின் தள்ளி சீட் காலியாக இருந்தது. அங்கே அமர்ந்தேன்.
மீண்டும் என்னை பார்க்க திரும்பியவனுக்கு அதிர்ச்சி! நான் இல்லாததை கண்டு, கதவை நோக்கினான். நான் இல்லை என்பதை உறுதி செய்தவன் அவன் இருக்கையிலிருந்து எழுந்து திரும்பினான். நான் அவனுக்கு பின் இருக்கையில் அமர்ந்திருப்பதை கண்டு அசடு வழிந்தவாறே உட்கார்ந்தான். அவன் நான் காண வில்லை என்ற போது ஏற்பட்ட பரிதவிப்பு என்னை உலுக்கியது. அவன் என்னை நேசிக்கிறான் என்பதை இதைவிட வேருதருணம் சொல்லிட முடியாது.
என்னை போன்றே அவனும் தேடுகிறான். என்ன இருந்தாலும் காத்திருப்பதில் உள்ள வலி நாம் நினைப்பவர்களை பார்க்கும்போது நொடியில் இளகி கரைந்து விடுகிறது. அவனின் இரண்டாம் சந்திப்பிலேயே ஒரு விதையை என்னில் விதத்துவிட்டான்.
அவனிடம் எப்படி பேசுவது யோசித்தேன். அதற்குள் மச்சி இறங்கலாம்! அவன் பிரன்ட் சொல்ல அவன் எழுந்து என்னை கிராஸ் செய்ய வந்தான்.அவன் பார்வை என் மேல் முழுமையாய் பதிந்து இருந்தது.
டேய் என் நம்பரை சொல்லு முன்னால் சென்ற அவன் பிரண்டை கேட்டான்.
டேய்! ஸ்டேசன் வருது இப்போ போய்! உன் நம்பர் உனக்கு தெரியும்ல.
பரவால்ல சொல்லு!
ப்ச்! 98913322** வா! சொல்ல ரயில் நின்னுருச்சி.
அவன் என்னை பார்த்தான். நான் அவன் நம்பரை நோட் பண்ணல! ஆனால் போன் கையில் இருந்தது. அவன் ஏமாற்றத்தோடு என்னை பார்க்க,
நான் என் போனை எடுத்து ஹலோ நான் செங்கல்பட்டு ரயில் வாசல்ல இருக்கிற பெரியார் சிலைகிட்ட சாயங்காலம் வெய்ட் பண்றேன். சொல்லிவிட்டு போனை கைக்கு கொணர்ந்தேன். அவன் நம்பரை நான் நோட் பண்ணுவன்னு நினைச்சிருப்பான் போல, என் செய்கை அவனுக்கு பெருத்த ஏமாற்றமாக இருக்கும். மேலும் நான் அவனை நேசிக்கலைன்னு கூட நெனச்சிருக்கலாம் வருத்தபட்டிருக்கலாம்.
அவன் என்னை பார்த்தவாறே கீழிறங்க ரயில் கிளம்பியது. அவன் என்னிடம் எதோ ஒன்றை தந்து விட்டு போன உணர்வு வந்தது. ரயில் மெதுவாக முன்னேற அவனோ என்னை பார்த்தான். அவன் கண்கள் கலங்க ஆரம்பித்தது. அவன் என்னைவிட்டு பிரியும்போது அவனிடம் நான் எதையோ கொணர்ந்து மீண்டும் திரும்ப வாங்கியதை போன்ற உணர்வு. மீண்டும் அவனை சந்திப்போமா? மாட்டோமா? தெரியாத பதிலோடு நான் நிற்க, ரயில் மிதவேகத்தோடு முன்னேற அவனும் என்னை பார்த்தவாறே முன்னேறி வந்தான்.
ப்ளீஸ் ரயில் உள்ள ஏறிவா! வா உள்ளே வா! மானசீகமாக எனக்குள் நான் சொல்ல, அவன் ரயில் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியமால் பின்னால் போக ஆரம்பித்தான். அவன் வரணும் அவன் வரணும் மனசு கிடந்து துடித்தது. நான் நினைத்தது போலவே அவன்?!
அவனும் நானும் சந்திப்போமா? எனும் நிலை மாறி இருவரும் சந்தித்து கொண்டோம். எங்களிருவருக்கும் எதோ ஒரு ஈர்ப்பு உள்ளது என்பதை இருவருமே அறிந்து கொண்டோம்.
அவன் போன் நம்பர் தர அதை நான் குறித்து கொள்ளவில்லை அதற்கு மாறாக நான் ஒரு இடத்தை பிக்ஸ் செய்து வர சொல்லி இருக்கேன்.
அவன் இறங்கிவிட ஆனால் அவன் உள்ளே வர வேண்டும் என மானசீகமாக வேண்டினேன்.
ரயில் மெதுவாக இயங்க, அவன் என்னை பார்த்துக்கொண்டே வந்தான். ஒரு கட்டத்தில் முன்னேறியவன் என்னை பார்த்தவாறே ஒருகாலை எடுத்து இரயிலினுள் வைத்தான்.
எனக்குள் ஒரு சந்தோசம் அவன் என்னோடு வரபோகிறான் என்று. ஆனால் அது ஒரு நொடி கூட நிலைக்கவில்லை. அவன் நண்பன் பின்னாலிருந்து அவனை இழுக்க அவன் இறங்கிவிட்டான்.
போய்விட்டான் அவன் போய்ட்டான். இனி அவனைஎங்கே சந்திக்க, மனம் வெறுத்து போய்விட்டது. வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழியை போட்டு உடைத்தது போன்று இருந்தது.என் காரியம்.
ரயில் செங்கல்பட்டை அடைந்தது. ஸ்டேசனுக்கு வெளியே உள்ள சிலை அருகே நின்றேன்.அவன் வருகையை எதிர் பார்த்தேன். மணி இரண்டை கடந்தும் அவன் நிழல் கூட தெரியவில்லை.`
நான் தெளிவாக இல்லை. அவனை நான் தொலைத்துவிட்டு தேடுகிறேன். வழி மீது விழி வைக்க அவன் வாராத நிமிடங்களில் துக்கம் தொண்டையை அடைத்து கொண்டிருந்தது.
தம்பி! தம்பி எழுந்திருப்பா! பெருக்கணும். நினைவு கலைய, ஸ்டேசன் துப்புரவு தொழிலாளி லேடி நின்றிருந்தார்.
நான் எழுந்து அவர் பணி செய்ய விலகி வழி விட்டேன்.
வண்டி எண் 478621 தாம்பரம் சென்னை பீச் வரை செல்லும் திருமால்பூர் பாஸ்ட் மின்தொடர் வண்டி இன்னும் சற்று நேரத்தில் மூன்றாவது நடைமேடைக்கு வந்து சேரும். ஒலிபெருக்கி ஒலிக்க, நான் இருக்கும் பிளாட்பாரம் நம்பரை நோக்கினேன்.
அது நடைமேடை 3.
சிறிது நேரத்தில் ரயிலும் வந்து நின்றது.
எழுந்து நடக்க ஆரம்பித்தேன். சிலை அருகே சென்றேன். அவனுக்காக கால் கடுக்க நின்ற அந்த இடம். ஏன் அவனுக்காக நான் காத்திருந்தேன்?. வெதும்ப கண்களில் கண்ணீர் தெரித்தது.
சிலையை பார்த்தேன். அய்யா! உமக்கு கூடவா தெரில! அவன் என்னை ஏமாத்துறான்னு. எனக்கு புரிய வெச்சிருக்கலாமே! அவரை பார்த்து கேட்டேன்.
சில வழி போக்கர்களின் கவனம் என் மேல் திரும்பியது. அவர்களை பார்த்தேன். அவர்கள் எனக்கு என்ன பட்டம் தரபோகிறார்கள் என உணர்ந்தேன். அங்கிருந்து விலகி நடந்தேன்.
ஹலோ! ஹலோ! நில்லுங்க நடக்க ஆரம்பித்த நான் திரும்பினேன். அவனுக்காக நான் காத்திருந்து நடக்க ஆரம்பித்த போது அவன் வந்து என்னை அழைத்த அந்த நினைவு.
நீங்க்க்... களா? நான் வாய் பிளக்க,
கிட்டே நெருங்கி வந்தான்.
ஹாய்! என் பேர் வினோத்.கையை நீட்ட,
நான் அவனை பார்த்தேன்.
அட என்ன நீங்க கை குடுத்தா? கையை குலுக்கனும். வலுகட்டாயமாக கையை பிடித்து குலுக்கினான்.
உங்க பேர்?!.
நான் ஸாசாசதீஷ் . . .! இழுத்தேன்.
அட சதீஷ்! இத சொல்ல ஏன் இப்படி இழுக்குறீங்க?
சட்டென புரிந்து பட்டென பேசினான்.
இல்ல நான் பேச முடியாமல் தவித்தேன்.
“நீ என் கண்ணுக்குள் இறங்கி இறங்கி
என் நெஞ்சுக்குள் உறங்கி உறங்கி
என் உசிரை பறிக்கிற
என்னை என்ன செய்ய நினைக்குற?” மௌனமாய் கேட்டேன்.
“இரவுகள் நம்மை உறங்க வைத்தாலும் சில நினைவுகள் நம்மை உறங்க விடுவதில்லை” அப்படித்தான் உன் நினைவும் நீ இல்லாத ஒவ்வொரு நொடியும் நான் தூக்கமில்லாமல் தவிக்கிறேன்.
நீ சொல்றது புரியல? நான் கேட்டேன்.
என் போனை பிடுங்கியவன் நம்பரை டயல் செய்து, அவன் போனுக்கு இணைப்பை தந்திருந்தான்.
“ஒரு வாய் சோறு இறங்கலையே!
உள்நாக்கு நனையலையே!
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே!
ஏலே இளங்கிளியே! ஏதோ சொல்ல முடியலையே!
ஓ நெஞ்சுக்குள்ள ஓ மா முடிஞ்சிருக்க”
பாடல் ஒலித்து நின்றது. பாடல் நின்றது.ஆனால் எங்களிருவர் பார்வை நிற்கவில்லை.ஒருவரை ஒருவர் உள்ளூர பார்த்தோம்.
போனை கையில் தந்தவன், “காதில் ஐ லவ் யு” சொல்லிவிட்டு ஓடினான்.
பார்த்தான். . . பேசினான் . . . தன் காதலை வெளிபடுத்திவிட்டு ஓடினான். நான் அவனை பார்த்து கொண்டிருந்தேன்.
wow..உங்கள் கதை நடையில் நல்ல முன்னேற்றம் நிலா...நேரில் பார்ப்பது போல் இருக்கு...train timing announcement makes to feel the place...super...போனை கையில் தந்தவன், “காதில் ஐ லவ் யு” சொல்லிவிட்டு ஓடினான்...sweet shock in the story...waiting for the story
வினோத் என்னிடம் காதலை வெளிபடுத்தியது எனக்கு சர்ப்ரைசாக இருந்தது. அவன் செய்கை எனக்குள் பல பரிமாற்றத்தை உணர்த்தியது. நான் என்னவெல்லாம் நினைக்கிறேனோ அதெல்லாம் அவன் செயலில் கண்டேன். எனக்காக அவன் என தோன்றியது.
நாட்கள் மெல்ல நகர அடுத்தடுத்த செயல்கள், செய்ய ஆரம்பித்தான். ரயில்ல போகும்போது என் இடுப்பை பிடிப்பது கையை என் கைமேல் வைத்து உரசியபடி வருவது என தொடர்ந்தான்.
வாரத்தின் தொடக்கமாகிய திங்கள் கிழமை அன்று,
நான் ரயிலில் காத்திருக்க அவன் வந்து ஏறினான்.
சாரி டார்லிங் லேட் ஆயிடுச்சி. இன்னிக்கு ஆபீஸ்ல ஸ்டேடஸ் சப்மிட் பண்ணனும். நாளைக்கு எங்க கம்பனி லீவ். இதை விடாமல் பேச,
நான் புன்னகைத்துவிட்டு அமைதியானேன்.
என்ன ஒண்ணுமே சொல்லல நாளைக்கு எனக்கு லீவ் நீ வாடா நாம என்ஜாய் பண்லாம். வினோத் கேட்க,
இல்ல வினோத், “இன்னைக்கும் நாளைக்கும் எனக்கு கம்பெனில ஆடிட்டிங் இருக்கு நான் வர முடியாது” பதில் சொல்ல,
என்ன சதீஷ் டார்லிங் நான் எவ்ளோ சொல்றேன். ஆபீஸ் அது இதுன்னு கரணம் சொல்ற? வினோத் கோபிக்க,
நானும் கோபமாக எழுந்து புட்போர்டில் போய் நின்றேன்.
டார்லிங் மெல்லிய குரலில் அழைக்க, நான் அவனை பார்த்தேன். அவன் என்னை உள்ளூர பார்த்தான். நான் அவனையே பார்த்தேன். அந்த ரயில் பெட்டியில் பார்த்தேன் யாருமே என் கண்ணுக்கு தெரியவில்லை. இருப்பவர்கள் எங்கே போனார்களோ தெரியவில்லை. அவன் மட்டும் தெரிந்தான் என்னையே பார்த்து கொண்டிருந்தான்.
இம்முறை அந்த மெல்லிய குரலும் காணாமல் போயிருந்தது. உதடுகள் மட்டும் அசைந்தது,
“டார்லிங் ஐ லவ் யு” உதடுகள் அசைய அதற்கேற்ற வண்ணம் அவன் எக்ஸ்ப்ரேசன் அமைந்தது. அவன் வலது கையை என் முன் நோக்கி அவன் மார்பில் அழுத்தி எடுத்து டார்லிங் நான் உன்னை என என்னை நோக்கி கையை காட்டி லவ் பண்றேன் என தன் இருகைகளை ஒன்றினைத்து இரண்டு ஆள்காட்டி விரலை கொக்கி போல் வளைத்து கட்டை விரலை கீழ் நோக்கி v வடிவத்தில் இணைத்து காட்டினான். அது ஹார்ட் போல அழகாக இருந்தது. அதை அவன் கண்ணருகே கொண்டுவந்து கண்ணடித்து கையை கீழிறக்க என் கண்களில் நீர் கசிந்தது.
நான் கம்பியை பிடித்து கொண்டு ரயிலுக்கு வெளியே பார்க்க அவன் ஓடிவந்து என் பின்புறத்தில் கட்டிகொண்டு நான் பார்த்து கொண்டிருந்த திசையை பார்த்தான்.
அவன் என்னை கட்டிபிடித்த போது அவனிடம் நான் ஒரு நல்ல அரவணைப்பை உணர்ந்தேன்.
அன்றைய தினம் நான் சந்தோசமாக இருந்தேன். மனசு லேசாகி நான் என்னையே பெருமைப்பட்டு கொண்டேன்.
அவனுக்காக எதையும் செய்ய துணிந்தேன். இனி எல்லாமே அவனுக்காக என முடிவெடுத்தேன்.
செவ்வாய் கிழமை . . .
நான் செங்கல்பட்டு ஏரி நீரேற்றம் அருகில் நிக்குறேன். நீ வா! சொன்னான் வினோத்.
டார்லிங் நான் காத்துட்டு இருக்கேன். மெசேஜ் ஒலிக்க,
நான் வரல மறுப்பு செய்தி அனுப்பினேன்.
அனுப்பியது பொய்தான்.ஆடிட்டிங் வொர்க் பைலை சப்மிட் பண்ணிவிட்டு செங்கல்பட்டை நோக்கி ரயிலில் வந்து கொண்டிருந்தேன். ஆனாலும் ரயில் தாமதமாக செங்கல்பட்டை நோக்கி போய்கொன்டிருன்தது.
போன் பண்ணியவன் “ எனக்காக ஒரு நாள் கூட வரமாட்டியா?” ஏங்கியவண்ணம் கேட்டவன், என் பதிலுக்கு காத்திராமல் போனை அணைத்தான்.
நிமிடங்கள் பதினைந்தை கடக்க போனில் மெசேஜ் ஒலித்தது.
படித்தேன், “நீ வரல இன்னும் பத்து நிமிடத்தில் இந்த குலவை ஏரியில் என் உயிர் தத்தளிக்கும்”.
எனக்கு வியர்த்தது. செய்வதறியாமல் திகைத்தேன். செங்கல் பட்டை நெருங்கிய ரயில் சிக்னலுக்காக ஒரு கிலோமீட்டர் முன்னால் நிற்க அங்கிருந்து குதித்து ட்ராக்கில் ஓட ஆரம்பித்தேன்.
இடைவிடாத ஓட்டமும், களைப்பும் எண்னை தடுமாற வைத்தது. அந்த பெரிய கருங்கற்கள் என் பயணத்தை வெகுவாக குறைத்தன. கால்கள் பின்ன அந்த ஜல்லியின் மேல் விழுந்தேன்.
போனை எடுத்து அவன் எண்ணுக்கு அழுத்த, “தங்கள் டயல் செய்த நம்பர் தற்போது அனைத்துவைக்க பட்டுள்ளது பின்னர் மீண்டும் முயற்சிக்கவும்”. பதிவு செய்யப்பட்ட வாசகம் ஒலிக்க, எழுந்து ஓட ஆரம்பித்தேன்.
என் முன் ஒரு ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. கண்கள் சொருக நான் ரயில் முன் முன்னேறி கொண்டிருந்தேன்.
ரயிலின் க்க்க்கக்க்க்கூ என ஹாரன் சத்தம் கேட்டாலும் வினோத் உயிரை காப்பற்ற நான் ரயில் வருவதை கவனிக்காமல் ட்ராக்கில் ஒடி கொண்டிருந்தேன்.
நான் ரயிலின் சத்தம் கேட்டும் ரயில் முன் ஓட நான் ஓடிய தடம் அதிர ரயில் என்னை தாண்டி போய்கொண்டிருந்தது.
அன்றைய தினம் நான் சந்தோசமாக இருந்தேன். மனசு லேசாகி நான் என்னையே பெருமைப்பட்டு கொண்டேன்....wow அருமையாக love feel சொல்லிருக்கீங்க...கடைசி வரிகள் படிப்பவர்கள் பதற வைக்கிறீங்க...வாழ்த்துக்கள் நண்பா...waiting for the next
nilavazhagan story continue panuga
unga story epo varum wait panren
work la
thugi elutha apuram kuda
unga story vanthucha vanthu pakren
unga rasigan
story continue panuga
நண்பர்களே!
ரசிகர்களே!
தளத்தின் மெம்பர்களே!
அனைவருக்கும் வணக்கம்!
கடந்த ஏப்ரல் 26 முதல் மே 27 வரை நான் தளத்தில் இல்லை. இதற்கிடையில் எனக்கு குறுந்தகவல்கள் பலரிடமிருந்து வந்திருக்கிறது. அதில் சிலரும் எங்கே? என கேள்வியோடும் நலமா? உடலுக்கு ஏதும் குறையோ? என கேட்ட வண்ணம் உள்ளனர்.
ஒரு கதை துவங்கி அதை பாதியில் நிறுத்தியிருக்கேன். கதையை முழுமை படுத்திவிட்டு ஒதுங்கியிருக்கலாம். அல்லது கதை நீக்க சொல்லி இருக்கலாம். இரண்டும் இல்லாமல் ரசிகர்களின் மனதை புண் படுத்தியுள்ளேன். மன்னிக்கவும். கதையை கூடிய விரைவில் பதிந்து முற்றுபுள்ளி வைக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.