Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.
Permalink   
 


அன்பு மலர்களே! 

அனைவருக்கும் வணக்கம்.

ஒரு வித்தியாசமான களத்தோடு ஆரம்பித்த "பனித்துளியில் சில மலர்கள்" தொடரை நீங்கள் எல்லாரும் விரும்புவீர்களோ என்று பயத்தோடுதான் ஆரம்பித்தேன்.

"அன்பைத்தேடி"  எழுத வந்த எனக்கு நீங்கள் அளித்த வரவேற்பும் ஆதரவும் என்னை திக்குமுக்காடவைத்துவிட்டது.

 

பாராட்டுக்கள் வந்து குவிந்த அதே நேரத்தில் கண்டனக்கனைகளும் எழாமல் இல்லை.

 

அது மட்டும் அல்ல.  கதை எங்கெங்கோ பயணித்து எப்படி எல்லாமோ சென்று ....  என்றெல்லாம் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

 

அனைவருக்குமே மனதில் பல குறைகள் பட்டிருக்கலாம்.

 

கருத்திட்ட அன்பு நெஞ்சங்களை இரண்டு பிரிவாக பிரிக்கலாம்.

 

நிறைகளை மட்டுமே கண்டு உற்சாகப் படுத்தி தட்டிக்கொடுத்தவர்கள் ஒரு சாரார்.

 

முதல் முதலாக இந்தத் தளத்தில் எழுத வந்திருக்கிறான்.  அதனால் குறைகளை பெரிது படுத்தாமல் விட்டுவிடலாம் என்று பெரிய மனது பண்ணி என்னை தட்டிக்கொடுத்தவர்கள் இவர்கள்.

 

மற்றொரு பிரிவினரோ "எழுத்தரசர்" என்று சிறப்பித்திருக்கிறோம்.  அதனால் இவரது எழுத்தில் குறைகளை சுட்டிக்காட்டாமல் விட்டால் அதனால் இவர் தன்னை திருத்திக்கொள்ளவே முடியாமல் போய்விடும் என்ற காரணத்தால் குறைகளை கண்டபோதெல்லாம் சுட்டிக்காட்டி குட்டு வைத்தவர்கள்.

இரண்டுமே என் மீது வைத்திருக்கும் அன்பின், அக்கறையின் இருவேறு விதமான வெளிப்பாடுகள் தான்.  

அனைவருக்கும் நன்றி.

முடிந்துவிட்ட ஒரு தொடரில் தென்பட்ட குறைகளை இனிமேல் நிவர்த்தி செய்வது என்பது முடியாத காரியம் என்பதால் அடுத்த படைப்பில் என்னால் இயன்றவரை குறைகளைக் களைந்து அனைத்து தரப்பினரும் விரும்பும் வண்ணம் கொடுப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

என்ன சரிதானே?

மாறாத அன்புடன்..

என்றும் உங்கள் மனதுக்கினிய fridger



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

இயன்றவரை குறைகளைக் களைந்து அனைத்து தரப்பினரும் விரும்பும் வண்ணம் கொடுப்பேன் என்று உறுதி கூறுகிறேன்....இந்த தன்னடக்கம் தான் உங்களை வேறுபடுத்தி உயர வைக்கிறது...வாழ்த்துக்கள் நண்பா...இன்னும் அறிய படைப்புகளை உங்களிடம் எதிர் பார்க்கிறேன்...


__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard