Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Adavangudi...


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Adavangudi...
Permalink   
 


குளிர் தளிர்க்கும் வெளிர் பச்சையில் இளங்கொடி

படர்ந்திருக்கும் அடர் பச்சையில் ஆயிரம் கதிரடி

காலச் சதிரில் முதிர் இலை கொஞ்சம் உதிர்ந்தபடி

பச்சை பசுமை பெற்றிங்கே பாதையெங்கும் பாயுதடி...

 

ஆவணியில் அதிர்ந்துருகிய மேக மடி

வெட்டாற்றில் பாயும் குறு வெள்ளமடி

அணைக்கருகே அமைந்த படி

அதில் நானும் அமர்ந்த படி

 

உடல் கூறின் உயிர்ப் பெருக்க

உஷ்ணக் கூறின் கருவறுக்க

ஊறும் குளிர் ஓடையடி

 

உருகும் வெப்பத்தில் என்னுயிரும் உறையுதடி

அசையும் தெப்பத்தில் என் காலில் மீன்கடி

 

உள்ளங்கால் ஊறலில்

என் உச்சந் தலைமுடி 

நட்டு நிக்குதடி...

 

இது ஓடை சூழ்ந்த காடுகளா..¡

மனித வாடை இல்லா வீடுகளா..¡

ஊரடங்கு உத்தரவாய்

நிலவும் நிசப்தங்களா...¡

இடை இடையே இடைஞ்சலாய்

இது என்ன..?

பூ மலரும் சப்தங்களா...¡

வளி வழியெங்கும்

இழுத்து வரும் சருகுகளா..¡

இல்லை 

விட்டு விட்டு கிடைக்கும்

தொலைத் தொடர்பின்

அலை பேசியின் அழைப்புகளா...¡

 

அமைதி என்னும் ஆளுமை அழகாக ஆடுதடி

ஆறோட ஓடைத் தண்ணீர் வீதி வழி ஓடுதடி

வாய்ப்பு ஒன்று இருந்துவிட்டால் 

வந்திங்கே கூடுமடி..¡

 

என்னைத் 

தோண்டிப் புதைத்தாலும்–தீ

தீண்டி எரித்தாலும்

அது இவ்வூரா இருக்க மனம் வேண்டுமடி....

 

இது இயற்கை அடவுகட்டி

ஆடும் அழகான அடவங்குடி....¡

 

நன்றி

 

உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்....



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wow...எவ்ளோ நாளாச்சு ramnav ....miss ur கவிதை வரிகள் frnd....வழக்கம் போல் கலகுறீங்க...பிடித்த வரிகள்...
அணைக்கருகே அமைந்த படி

அதில் நானும் அமர்ந்த படி...very simple nd different...

உருகும் வெப்பத்தில் என்னுயிரும் உறையுதடி

அசையும் தெப்பத்தில் என் காலில் மீன்கடி....really feel the வெப்பத்தில் உறையும் அதிசயம் nd the மீன்கடி...சினிமா பாடல் போல இருக்கு...keep rocking...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

Nandri samram..
Ungal aatharave en palam..

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

neenda naatkalukku pin en thozhanin varugai migundha urchagathai tharugiradhu..! kavidhai varigal miga arumai..!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

Kandha kanna..!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

நிஜமாவே ரொம்ப நல்லா இருக்கு....படிக்கும் போது நல்ல feel கொடுக்குது உங்கள் கவிதை. வாழ்த்துக்கள்.

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

Nandri nanbare.. Mr. Jst fr fun

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

ரொம்ப நாளைக்குப் பிறகு வந்திருக்கிங்க..........

கவிதை அருமை...........

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
Permalink   
 

Superb friend!

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard