Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆன்லைனில் ரயில் டிக்கெட் வேகமாக புக் செய்ய உதவும் இணையதளங்கள்:


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
ஆன்லைனில் ரயில் டிக்கெட் வேகமாக புக் செய்ய உதவும் இணையதளங்கள்:
Permalink   
 




இந்தியாவின் மிகப...்பெரிய தொழில் துறையான ரயில்வே துறையின் பிரத்யேக இணையதளமான IRCTC மூலம் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் டிக்கெட்டுகளைப் புக் செய்து பயணிக்கின்றனர். தட்கல் முறையிலான டிக்கெட்டுகளை எடுக்க இந்த இணையதளம் பெரும் உதவியாக இருக்கும். ஆனால் இந்த இணையதளத்தின் மிகப்பெரிய குறைபாடுகளான மிக மெதுவாக லோடிங் ஆவது, சர்வர் தொக்கி நின்று விடுவது போன்றவற்றால் இணையதளத்தில் புக் செய்வது சில நேரங்களில் எரிச்சலை உண்டாக்கும். ஏனெனில் ஒரே நேரத்தில் பல பேர் இதனை அணுகுவதாலே ஆகும். கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் Service Unavailabale என்று வந்து விடும். இதற்கு மாற்றாக இருக்கும் சில இணையதளங்களைப் பார்ப்போம்.

1.ClearTrip

IRCTC க்கு அடுத்த படியாக அதிகம் பேர் புக் செய்யும் தளம். மிக எளிதான வழியில் மூன்றே கிளிக்கில் டிக்கெட்டைப் புக் செய்யலாம். டிக்கெட் புக் செய்த பின்னர் மின்னஞ்சலில் பெற்றுக் கொள்ள முடியும். இதிலும் SMS Alert வசதியிருக்கிறது. டிக்கெட்டை ரத்து செய்வதும் எளிதாகவே இருக்கிறது. மிக்குறைந்த கட்டணத்தையே இந்த இணையதளம் எடுத்துக் கொள்ளும். இதில் டிக்கெட்டைப் புக் செய்ய கணக்கு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும்.

2.Yatra.Com/Trains

3.MakeMyTrip.Com/Railways

4.http://www.railticketonline.com/SearchTrains.aspx

5.http://www.ezeego1.co.in/rails/index.php

6.Thomas Cook.Co.In/IndianRail

ERail.in

இந்த இணையதளம் மூலம் மிக விரைவாக ரயில்களின் நேரம், தொலைவு, கட்டணம், பயணிக்கும் ஸ்டேசன்கள், சீட் இருக்கிறதா (Seat Availablity) போன்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம். உங்களின் PNR Status மிக விரைவாக அறிய முடியும். புதியதாக டிக்கெட் புக் செய்ய சேவை இதில் இல்லையென்றாலும் வேகமாக தகவல் அறிய உதவியாக இருக்கும்.

முக்கிய குறிப்புகள் :

• இந்த இணையதளங்கள் அனைத்துமே IRCTC இணையதளத்துடன் பார்ட்னர்ஷிப் முறையில் செயல்படுகின்றன. நீங்கள் டிக்கெட் புக் செய்யும் போதும் கேன்சல் செய்தாலும் எல்லாமே IRCTC இன் தகவல்தளத்திலும் சேர்ந்துவிடும். அதனால் பயப்படத் தேவையில்லை.
• நீங்கள் எடுக்கும் ரயில் டிக்கெட்டுகளுக்கு Train Class, Train Type, Tatkal போன்ற சேவைகளைப் பொறுத்து 10 முதல் 50 ருபாய் வரை கமிசனாகப் பிடிக்கபடும்.
• இவை எல்லாமே IRCTC ன் தகவல்தளத்தை வைத்தே செயல்படுவதால் நம்பகத்தன்மையில் பிரச்சினையில்லை. இந்த தளங்கள் அனைத்துமே IRCTC தளத்தை விட வேகமாக செயல்படுகின்றன.

S.m. Arif Maricar
via - ஃபேஸ்புக் பரண்



__________________

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard