Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பனித்துளியில் சில மலர்கள் - 35


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
பனித்துளியில் சில மலர்கள் - 35
Permalink   
 


அன்று ஆபீசுக்கு வந்ததும், திவாகர் தன் அறைக்கு வரும்படி கதிரவனை அழைத்தான்.

கதிரவன் வந்ததும், "குட் மார்னிங் கதிரவன்.   உங்க திறமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.  மை ஹார்ட்டி கங்க்ராட்ஸ் கதிர்."-   என்றான் திவாகர்.

"எதுக்கு திவாகர்?  நான் அப்படி என்ன சாதிச்சிட்டேன்?" - என்றான் கதிரவன் புதிருடன்.

"எதுக்கா?  எஸ். சி. எண்டெர்ப்ரைசெஸ் கம்பெனி அக்கவுன்ட்சை சக்செஸ்புல்லா முடிச்சுக் கொடுத்திருக்கீங்களே. அதுக்குத்தான்" என்ற திவாகர்,"ஆமா நீங்க எம்.எஸ். சி. ன்னு தானே உங்க ரெஸ்யூம்லெ பார்த்த ஞாபகம்.  அக்கவுண்ட்ஸ்லெ எப்படி இப்படி பெர்பார்ம் பண்ணி இருக்கீங்க?" என்றான் திவாகர்.

லேசாக சிரித்தான் கதிரவன்.

"ஏன் சிரிக்கறீங்க கதிரவன்?" - என்று கேட்டான் திவாகர்.

"சிபாரிசுலே வேலைக்கு சேர்ந்தா இப்படித்தான்  ஆகும் திவாகர்." என்றான் கதிரவன்.

"என்ன சொல்லறீங்க கதிரவன்?" - என்றான் திவாகர் புருவம் சுருங்க.

"அல்ரெடி முதலாளியோட சிபாரிசுலே நான் வந்ததாலே என் பயோடேட்டாவ நீங்க மேலோட்டமா பார்த்துட்டு வச்சிருக்கீங்க.  இதுவே நான் முறையா மனுப்போட்டு வந்திருந்தா இப்படி எல்லாம் சந்தேகமே வராத அளவுக்கு நீங்க அதை முழுக்க படிச்சு இருப்பீங்களே." என்ற கதிரவன் தொடர்ந்து,"நான் எம்.எஸ். சி. தான்.  அதே நேரம் அக்கவுண்டன்சியும் எவனிங் பார்ட் டைமா படிச்சேன்.  அது மட்டும் இல்லே.  டாலி கூட நான் கம்ப்ளீட் பண்ணி இருக்கேன் திவாகர்.  படிப்பை முடிச்சதும் இங்கே வரதுக்கு முன்னாலே சென்னையிலேயே தற்காலிகமா சில வேலைகளை செய்தேன்.  அங்கே எல்லாம் அக்கவுண்ட்ஸ் பிரிவிலே தான் வேலை பார்த்தேன்.  அந்த அனுபவம் எல்லாமே கை கொடுத்துச்சு. " என்றான் கதிரவன்.

அவனையே வியப்புடன் பார்த்தான் திவாகர்.

"கதிர்.  உங்களை உயர்த்திக்க கல்வி ஒன்று தான் வழி என்று அதை எந்த எந்த விதத்திலெல்லாம் கற்றுக்கொள்ள முடியுமோ அப்படி ரொம்ப உழைச்சு இருக்கீங்களே.  உங்களைப் பார்க்க எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு." என்றான் திவாகர்.

கதிரவன் எதுவும் பேசவில்லை.

திவாகரே தொடர்ந்தான்.

"உண்மைய சொல்லப்போனா எனக்கு இந்த சந்தேகமே இப்போ தான் வந்துச்சு.  அன்னிக்கு உங்க கிட்டே கேட்டப்போ கூட அக்கவுண்ட்ஸ் பார்க்க உங்களை என் அப்பா செலெக்ட் பண்ணினப்போ எனக்கு உங்க கல்வித் தகுதியே மறந்து போயிருச்சு.  நீங்க எம்.காம் என்றே நினைச்சுட்டே உங்க கிட்டே பேசினேன்.  அப்போ இருந்த குழப்பத்துலே எனக்கு எதுவுமே நினைவுக்கு வரலே.  இன்னிக்கு தான் சடனா ஸ்ட்ரைக் ஆச்சு.  அதான் கேட்டேன். " என்ற திவாகர்,

"உங்களுக்கு அரை நாள் லீவ் தரேன்.   இப்போ கிளம்பி எங்க அப்பாவோட கம்பெனிக்கு போய்  அவங்களுக்கு சில சந்தேகங்கள் இருக்கு.  அதை எல்லாம் கிளியர் பண்ணிட்டு உங்களுக்கான பேமென்டையும் வாங்கிகிட்டு வந்துடுங்க." என்றான் திவாகர்.

"ரொம்ப தாங்க்ஸ் திவாகர்." என்றான் கதிரவன்.

"கதிரவன்.   அக்கவுண்டண்ட் சாரதி ரொம்ப வருஷமா வேலையிலே இருக்கிறவர்.  அவர் பணத்தை கையாடல் பண்ணினதா சொல்லி இருக்கீங்களே.  அதை நீங்க ப்ரூவ் பண்ண வேண்டி வரும்." - என்றான் திவாகர்.

"நான் ஒன்னும் வேணும்னு சொல்லவில்லை சார்.  ரெக்கார்ட்ஸ் படி என்ன காட்டி இருக்கோ அதை தான் ரிப்போர்ட்டா கொடுத்திருக்கேன்.  மற்றபடி நான் அவரை முன்னே பின்னே பார்த்தது கூட கிடையாதே." என்றான் கதிரவன்.

"ஒக்கே.  உங்களுக்கு இன்னொரு சந்தோஷமான நியூஸ் சொல்லலாம்னு இருக்கேன்." - என்றான் திவாகர்.

"என்ன சொல்லப்போறீங்க திவாகர்" - என்றான் கதிரவன்.

"உங்களுக்கு நல்ல க்வாலிபிகேஷன் இருக்கு.  திறமையும் இருக்கு.  உங்களை கஸ்டமர் கேர்லே வச்சுகிட்டு இருக்கிறதுக்கு பதிலா என் கூடவே என்னோட பி.ஏ.வா வச்சுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்." - என்றான் திவாகர்.  "என் கூடவே" என்ற வார்த்தைக்கு கூடுதலாக அழுத்தம் கொடுத்து அவன் பேசியதை கதிரவன் கவனிக்கத் தவறவில்லை.

"உங்க பி. ஏ. வாகவா?  அல்ரெடி ஸ்ரீதர் சார் தான் இருக்காரே திவாகர்.  அவரை ஓவர்கம் பண்ணிட்டு நான் வருவது அவ்வளவு நன்றாக இருக்குமா?" - என்றான் கதிரவன்.

"உங்களுக்கு விஷயம் தெரியாதா? ஸ்ரீதர் இந்த மாசத்தோட ரிலீவ்  ஆகிறார்.  ஹீ ஹாஸ் காட் பெட்டெர் ஆப்பர்சூனிட்டி இன் யூ. எஸ்.  அப்ராட் போறதுக்காக ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தான்.  அவனோட அட்டெம்ப்ட் சக்செஸ் ஆயிடுச்சு.  அதனாலே இனிமே நீங்கதான் எனக்கு எல்லாம்." - என்று சிரித்தான் திவாகர்.

கதிரவனுக்கு ஆகாயத்தில் சஞ்சரிப்பது போல இருந்தது.

"தாங்க்ஸ் திவாகர். " என்ற போது அவன் குரல் நெகிழ்ந்திருந்தது.

அவனிடமிருந்து விடை பெற்று வெளியே சென்று ஆட்டோ ஒன்றைப் பிடித்துக் கொண்டு எஸ். சி. எண்டெர்ப்ரைசெஸ் நிறுவனத்திற்கு பயணிக்க ஆரம்பித்தான் கதிரவன்.

அந்தப் பயணம் பின்னால் நடக்கவிருக்கும் விபரீதங்களுக்கு அஸ்திவாரமாக அமையப்போகிறது என்ற உண்மை பாவம் அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

*******************************

அக்கவுண்டன்ட் சாரதி முகம் குன்றிப்போய் அந்த அறையை விட்டு வெளியேறினார்.

அவர் மனம் குற்ற உணர்ச்சியினாலும் அவமானத்தாலும் துடித்துக்கொண்டிருந்தது.

அவ்வப்போது கையாடும் பணத்தை அந்த மாத இறுதிக்குள் கட்டி கணக்கை நேர் செய்து விடுவார் அவர்.

ஆனால் அவரது போதாத காலம்.   அவர் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்திருந்தார்.  திருமணச் செலவுகளுக்காக பணத்தை ஒரு அட்ஜெஸ் மெண்ட்டுக்காக அவர் எடுத்திருந்தார்.  அவரது போதாத நேரம் அவருக்கு கிடைக்கவிருந்த தொகை கிடைக்காமல் போய்விட்டது.  திருமணச் செலவுக்கே பணம் பற்றாக்குறையாக இருக்கிறது.  இதில் எங்கே என்று கம்பெனி பணத்தைக் கட்டுவது.?

"சரி.. நான் செய்தது தப்புதான்.  அதற்காக இந்த ஸ்தாபனத்துக்காக இத்தனை வருஷம் ஓடாகத் தேய்ந்திருக்கிறேனே.  அந்த நன்றி உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல் என்ன பேச்சு பேசி விட்டார் இந்த சோமசேகர்.  அதுவும் யாரோ ஒரு புதுப் பையனை வைத்துக்கொண்டு. " அவர் மனம் குமுறியது.

அறைக்குள் நடந்தது இதுதான்.

தான் கண்டுபிடித்த தவறுகளை கதிரவன் விளக்கமாகச் சொல்லி சந்தேகத்துக்கிடமில்லாமல் தனது தவறுகளை மறுக்கமுடியாமல் தலை குனிந்து ஏற்றுக்கொள்ள வேண்டியதாகி விட்டது.

அது கூட பரவாயில்லை. 

என்னமோ அவன் தான் வாரிசு மாதிரி தனக்கு என்ன பனிஷ்மெண்ட் கொடுக்கலாம் என்று அவனையே சந்திரசேகர் கேட்டது அவருக்கு அவமானத்தின் உச்சமாகப் போனது.

"சார்.  பெரிய மனுஷன்.  இவ்வளவு வருஷம் உழைச்சிருக்காரு.  அதை எல்லாம் மனசு வச்சுப் பார்த்து நீங்க தான் டிசைட் பண்ணனும்." என்றான் கதிரவன்.

"நீங்க கொஞ்சம் வெளியே இருங்க.  மறுபடி கூப்பிடுறோம்." என்று அவரை அறையை விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள்.

கண்ணாடிக்கதவுக்கு பின்புறம் அவர்கள் தீவிரமாக டிஸ்கஷனில் இருப்பதைப் பார்த்தபோது அவரது மனசு பதைத்துப்போனது.

"ஐயோ.  அத்தனை பணத்தையும் மொத்தமாகக் கட்டச் சொல்வார்களோ?  தவறினால் போலீசுக்கு சொல்லி மோசடி செய்ததற்காக கம்பி என்ன வைத்துவிடுவார்களோ?  மகளின் கல்யாணம் வேறு இருக்கிறதே.  அந்தச் சமயத்தில் என்னை அரெஸ்ட் பண்ணி வைத்தால் கல்யாணமே நின்று கூட விடுமே. என்ன செய்வது?" நிலை கொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தது சாரதியின் இதயம்.

மறுபடி அறைக்குள் அழைக்கும் வரை நெருப்பின் மீது நிற்பது போலத்தான் நின்று கொண்டிருந்தார் அவர்.

உள்ளே சென்றதும், "மிஸ்டர் சாரதி.  எங்களைப் பத்தி உங்களுக்கு நல்லா தெரியும்?  உங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சுகிட்டு இருந்தோம்.  ஆனால்..  நீங்க இப்படி நடந்துகிட்டது எங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியாத்தான் இருக்கு.  எங்களுக்கு ரெண்டே வழிதான் இருக்கு.
இத்தனை வருஷமா இந்த கம்பெனியோட வளர்ச்சிக்காக நீங்க உழைச்ச உழைப்பை நாங்க மறக்க முடியாது.  அதையும் நினைச்சுப் பார்க்க வேண்டியதா இருக்கு.  அதனாலே நீங்களாவே ரிசைன் பண்ணிடுங்க.  உங்களுக்கு சேரவேண்டிய கிராஜுவிட்டி தொகையிலே நீங்க எடுத்த தொகையிலே நீங்க கையாடல் பண்ணின தொகையை ரிக்கவர் பண்ணிக்கிட்டு உங்களை அனுப்பி வைக்கலாம்.  இல்லை நீங்க வேளையிலே கண்டினியூ பண்ணனும் என்றால் எடுத்த பணத்தை ஒரு வாரத்துக்குள்ளே திருப்பி கட்டிடணும்.  என்ன செய்யப்போறீங்க? நீங்களே டிசைட் பண்ணிக்குங்க. " என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினார் சோமசேகர்.

தளர்ந்த நடையுடன் திரும்பினார் சாரதி.  வேறு வழி இல்லாமல் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு திரும்பியவர் மனது கொந்தளித்துக்கொண்டிருந்தது.

எல்லாவற்றுக்கும் காரணம் இந்தக்கதிரவன் தான். - என்று அவரது ஆத்திரம் முழுக்க அவன் மீதே திரும்பியது. 

"எங்கே இருந்து வந்து சேர்ந்தான் இவன்.  துரியோதனன் குடும்பத்துக்கு ஒரு சகுனி வந்து வாய்த்த மாதிரி."

"இவனை விடக்கூடாது.  சரியானபடி பழி வாங்கியே ஆகவேண்டும்." என்று அவர் மனம் கருவியது.

*****************************

"மாரி!  சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கு இல்லே.  அவன் பேரு கதிரவன்.   ரேஸ்கோர்ஸ் ரோட்லே புதுசா இருக்கற ஸ்டார் ஹோட்டல் தெரியுமில்லே.  அங்கே தான் அவன் வேலை பார்க்கிறானாம்.  தங்குறதும் அங்கேயே தானாம்.   காரியத்தைக் கச்சிதமா முடிச்சுடு." என்றார் சாரதி.

"இந்தப் பாரு ஸாரு.  கச்சிதமா முடிச்சுடுன்னா.  பையன் கதையவே முடிச்சிடவா?" என்று கேட்டான் மாரி.

"அது உன் இஷ்டம்.  அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.  போலீஸ்கிட்டெ மாட்டிக்காம விஷயத்தை முடிக்கணும்.  அப்படியே மாட்டிக்கிட்டா சங்க அறுத்தாலும் சரி என்னைய காட்டிக்கொடுத்துடக் கூடாது. " என்றார் சாரதி.

"அட என்ன சார்  இப்படி கேட்டுட்டே.  இந்த மாரிக்கு தொழில் சுத்தம்.  அதே சமயம் நாணயஸ்தன்.  கை நீட்டி காசு வாங்கிட்டா அந்தக் கடவுளே வந்தாலும் காட்டிக்கொடுக்க மாட்டேன்.  நீ தைரியமா போயிட்டு வா சாரு. " - என்றான் மாரி.

"வேலைய முடிச்சுட்டு எனக்கு கால் பண்ணு.  ரொம்ப பேசவேணாம்.  மாட்டரை மட்டும் சொல்லு.  பேசின தொகையிலே மீதியை உடனே நானே வந்து செட்டில் பண்ணிடுறேன்.  ஆனா இங்கே வேணாம்.  அப்புறம் நியாபகமா அந்த சிம்கார்டை தூக்கி கடாசிடு.  வச்சுக்காதே.  என்ன புரிந்ததா?" என்று கேட்டார் சாரதி.

"அப்படியே செய்ஞ்சிடுறேன் சாரு.  விஷயத்தை என்னாண்டே விட்டுட்டே இல்லே.  கவலைப்படாம போங்க சார். " என்று அவருக்கு தைரியம் கொடுத்து அனுப்பினான் மாரி.

"என்னையா அசிங்கப் படவைச்சே.  கதிரவா நீ க்ளோஸ் தாண்டா.  இந்த சாரதியை யாருன்னு நெனைச்சே. " என்று கருவியபடி தனது மாருதி காரை தன்னுடைய வீட்டை நோக்கி செலுத்த ஆரம்பித்தார் சாரதி.

பழிக்கு பழி வாங்க முடிவெடுத்துவிட்ட நிறைவில் அவர் மனக்கொதிப்பு லேசாக அடங்கி விட்டிருந்தது.

(தொடர்ந்து மலரும்..)



__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

wow..!1 excellent move..! really enjoyed alot with more scene sequences..! too happy..! waiting for the next part keenly..!

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Fridger,

Sarathi seithatu maperum Kutram, Senja kutratiku Tandanei anubavika vendiyathai vithuthu Kathiravanei Pali vanguvathu yenbathu sutha Muthal Thanam. Anyways the story
going on Superb. Keep rocking Sir.

Regards

Thiva

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

நல்ல twist...கலக்குறீங்க நண்பா...வாழ்த்துக்கள்....

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

கதிரவன் பாவம்... அடுத்து என்ன நடக்கப் போகுதோ?

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

மீண்டுமொரு எதிர்பாராத திருப்பம்......


எதிர்பாராத திருப்பம் இருக்கணும் என்பதற்காகவே கதையை நெடுந்தொடர் போல கொண்டு செல்கிறீர்களோ எனத் தோன்றுகிறது...

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

rocking with twist always......

__________________


புதியவர்

Status: Offline
Posts: 8
Date:
Permalink   
 

நீண்ட நாளைக்கு பிறகு கதையை படித்தேன் நல்ல வளர்ச்சி...

எதிர்பாராத திருப்பங்கள் நிறைய இருக்கிறது

கதிரவனுக்கு இன்னும் என்னென்ன காத்திருக்கிறது பார்ப்போம்...



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard