உன் மார்பில் விழி மூடி உறங்குகிறேன் இது ஒரு கனவு . . . எனும் அழகான தமிழ் பாடலின் நினைவை மறந்த எவரேனும் உள்ளாரோ?அதுபோல் தான் என் கதையும் உன் மார்பில் விழி மூடி சாய்ந்திடுவேன்- இது ஒரு கனவு.
நகர வாழ்க்கை வாழ்ந்து அலுத்து கொள்ளும் நகர மக்களிடையே தினம் தினம் புதிதாக வெவ்வேறு ஊர்களில் இருந்தும், கிராமப்புறங்களில் இருந்தும் வரும் மக்கள் நகர வாழ்க்கைக்கு பழக நரக வேதனை பட்டுதான் போகின்றனர்இந்த சென்னை பட்டினத்தில்.அதிலும் ஒண்டி கட்டையாய் வரும் இளைஞர் பட்டாளம் படும் வேதனையே ரொம்ப அதிகம்.எட்டுக்கு எட்டு அல்லது பத்துக்கு பத்து அறையில் ரெண்டு அல்லது நாலு பேரோடு பங்கிட்டு கொள்ளும் வாழ்க்கை இனிதினும் கசப்பே மிஞ்சும். அதிலும் வெவ்வேறு உணர்வுகளும் பழக்க வழக்கங்களும் கொண்டிருந்து விட்டால் கேட்கவும் வேண்டுமோ?
அருணுக்கு காலையிலே புறப்பட வேண்டிய நிலை. காரணம் அவன் பணி நிமித்தம் அப்படி பட்டது. தனியார் இயந்திர கம்பெனியில் பாதுகாப்பு பணியாளர் வேலை. அவர்தான் பணிக்கு முன்னரே சென்று பொருட்களை சரிபார்க்க வேண்டிய கட்டாயம்.பத்துக்குபத்து அறையில் நான்கில் ஒருவராக இருந்து கொண்டு வாழும் இந்நிலை இந்த இரண்டு நாட்களாகதான். பின்னே வேலைக்கு சேர்ந்து ரெண்டு நாள்தானே ஆவுது.அதுவும் இந்த அறைக்கு மூவாயிரம் என்பது கொஞ்சம் அதிகம் . . . இல்லை இல்லை மிக அதிகம். என்னதான் அறையை நாலு பேர் பங்கிட்டாலும் காசு என்ன மரத்திலா காய்க்குது?!... தூங்கி எழும் இந்த ஆறடி மண்ணுக்கு குடுக்கும் மாத விலை யப்பா...! நினைத்தாலே வயிறு முடியெல்லாம் தீய்ந்து விடுகிறது. எது நடந்தால் என்ன என் குடும்பம் இன்று சிரிக்கிறது என்பதற்காக நான் எதுவும் செய்ய தயார் எனும் அருண் போன்ற இளைஞர் பட்டாளம் இன்றைய கால சூழலில் ரொம்பவே அதிகம்.
எவ்வளவுதான் தன் குடும்பம் நல்லா இருக்க பாடுபட்டாலும் தன் மன வாழ்க்கை விஷயத்தில் ரொம்பவே பிடிவாதம் கொள்வர்.அருணும் அப்படியே! சாதாரண மனிதர்களை போல் அல்லாமல் சற்று மாறுபட்டு இன்னொரு ஆணை நேசிக்கும் பக்குவம் கொண்டவன். என்னதான் பார்க்கும் அண்களை எல்லாம் கண்களால் மேய்ந்தாலும் தனக்கென ஒருவன் தேடும் எண்ணம் அவன் மனதில் நிறைவாய் படிந்திருந்தது.
இன்று வேகமாய் கிளம்ப, எதிரிலிருக்கும் குளியலறைக்கு ஓட வீட்டு உரிமையாளர் மகன் கண்ணில் பட்டான். மன்னிக்கணும் கண்ணில் பட்டார். நம்ம அருண் வெறும் இருபத்தி ஐந்து வயது ஆண். அவரோ முப்பதை தாண்டி இருப்பார் போல. பார்த்த மாத்திரத்திலேயே ஒருமின்னல் வெட்டியது. வெட்டிய மின்னல் அருணுக்கு தானே தவிர அவருக்கு இல்லை.பணி நிமித்தம் காரணமாக சரியாக கண்டு கொள்ளாமல் சென்று விட்டான். ஆனால் அவர் நினைவு அவனை யோசிக்க வைத்தது.
இரவு . . .
சார் . . . ஓனர் வீட்டு கதவை தட்டினான்.
வயதான ஆள் அதாங்க ஓனர் வந்தார்.
“என்னப்பா?”
சார் அது வந்து . . . இழுத்தான் அருண்.
சொல்லுப்பா!
சார் என்னால முழு அட்வான்ஸ் இன்னிக்கே தர முடியல.அதசொல்லதான் . . . மென்று முழுங்க. . .
என்னவோ சொல்றீங்க. வயசு பசங்களா ஆயிட்டீங்க சரி வாடகை தரும்போது சேர்த்து கொடு. யார் யார் பசங்களுக்கோ நான் பரிட்சய படுறேன்.என் பிள்ளைக்கு நல்லது நடக்க மாட்டுது சலித்து கொண்டே போனார்.
என்ன நல்லது? மனதுக்குள் சொல்லி கொண்டே வர எதிரே ஓனர் மகன் வந்தார்.
சார் என் பெயர் அருண் புதுசா குடி வந்துருக்கேன். சொல்ல,
சரி என் பெயர் நீலன், ஓனரோட ஒரே பையன் கடு கடுப்பாய் சொல்லிட்டு போனார்.
அப்பாடா! எங்க பேச மாட்டாரோன்னு நெனைச்சேன் பேர் சொன்னதே பலநாள் தாகம் தீர்ந்தது போல் தேகம் பூரித்தது.
நீலனை பற்றி தெரிந்து கொள்ள ஆசைதான் ஆனால் எப்படி? மனதுக்குள் யோசித்து, நம் அறை பங்கீடு தாரர்களை கேட்கலாம் என்றால் அவர்களும் அவனுடன் பேசியதே இல்லை என வாய் மொழிகிறார்கள். யாரையும் கேட்டு பலனில்லை. அவனிடமே பேச வேண்டியதுதான்.
மறுநாள் . . .
எதேட்சையாக தெருவின் முற்றத்தில் நீலனை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. ஆம் அவன் தன் மோட்டார் வண்டியை தள்ளியவாறு வந்து கொண்டிருந்தான். முழுக்கை சட்டையும் டக் இன் பண்ணியிருக்கும் விதமும் பார்க்கும் அனைவரையும் எளிதில் கவர்ந்திடும் விதத்தில் இருந்தான்.
மங்கிய சூரிய ஒளியில் பிரகாசிக்க போகும் நிலவொளியாய் அவன் வந்து கொண்டிருந்தான்.
வணக்கம் சார் . . . என்ன தள்ளிட்டு வர்றீங்க? நான் கேட்க,
என்னை முறைத்தவர், என்னை பார்க்கும் போது எப்படி தெரியுது. நான் என்ன பொண்ணையா தள்ளிட்டு வரேன், இந்த வண்டிய தானே தள்ளிட்டு வரேன்.
ஐயோ சார்! நான் அந்த ரீதியில் கேட்கல. வண்டிக்கு என்னாச்சு? ஏன் உருட்டிகிட்டு வரீங்கன்னு கேட்டேன்.
ஓ அதுவா பெட்ரோல் இல்லை நீலன் சொன்னார்.
பெட்ரோல் பாங்க்ல இல்லையா? இல்லை வண்டியில் போடவில்லையா? நான் மீண்டும் கேட்க,
உனக்கு என்ன வேண்டும். ஏன் இப்படி மொக்க போடுற? எரிச்சலாய் கேட்டுகொண்டே பைக்கை வேகமாக உருட்ட . . . ,
சாரி சார்! எதோ ஆர்வத்துல அப்படி பேசிட்டேன். நீங்க வேற எதிலன்னு சரியா சொல்லல அதான். குடுங்க நான் தள்ளுறேன். வலுகட்டாயமாக வாங்கி தள்ளினேன்.
சார் பெட்ரோல் எங்க தீர்ந்து போச்சு? நான் கேட்க,
அவர் பட்டென பைக் ல தான்.
சொன்ன மாத்திரத்திலேயே என்னால் சிரிப்பை அடக்க முடியல அவரும் சேர்ந்தே சிரித்தார்.
பரவால்லை சார் நீங்க கூட நல்லாகலாய்க்குறீங்க? நான் சிரித்து கொண்டே சொல்ல, ம்! நானும் உன் வயசுதானே நீலன் சொன்னார்.
என்ன என் வயசா? உங்களுக்கா? நான் ஷாக் ஆகி வண்டியை நிறுத்த . . . ,
ஏன் நின்னுட்ட? திரும்பினார் நீலன்.
சார் என் வயசு வெறும் இருபத்தி ஐந்து நீங்க குறைஞ்சது முப்பத்தைன்தாவது இருக்காது நான் கேட்க,
அப்படில்லாம் இல்லடா! எனக்கு முப்பத்தி ரெண்டுதான் பார்க்க கொஞ்சம் வயசு அதிகமா தெரியுறேன். அவர் வருத்தம் கலந்த தொனியில் பேசினார்.
பரவால சார் நான் சும்மா தான் சொன்னேன். நீங்க என்ன “டா” போட்டு சொன்னது அன்யோன்யமா இருக்கு இனி அப்படியே பேசுங்க நான் சொல்ல,
சரிடா! ரொம்ப நாளுக்கு பிறகு என்னை சிரிக்க வைச்ச நான் வரேன். சிரித்து கொண்டே பைக்கை வீட்டுக்குள் தள்ளினார்.
ச்சே அதுக்குள்ள வீடு வந்துருச்சே! மனதை வருத்திகொண்டே ரூமை நோக்கி நடக்க தம்பி நில்லு . . . ! யாரோ சொல்ல, திரும்பினேன்.
‘ஓனர்!’ சொல்லுங்க சார் . . . !
தம்பி அது வந்து, இழுத்தார்.
என்ன சார் அதான் சொன்னேனே என்னால இப்ப அட்வான்ஸ் தர முடியல சார் நான் சொல்ல,
அது இல்ல தம்பி! என் பையன் உன் கூட எப்படிபேசினான்? ஏற்கெனவே உன்னை தெரியுமா? அவனை எப்படி சிரிக்க வெச்ச? கேள்விகளை அடுக்க . . . ,
அட என்ன சார் நீங்க! உங்களுக்கு அவரே பரவாயில்லை போல இத்தனை கேள்வி கேக்குறீங்க? நான் சலித்தேன்.
அது இல்ல தம்பி ரொம்ப நாளைக்கு பிறகு என் மகன் முகத்துல சந்தோசத்தை பார்த்தேன் அதான். எப்படியோ அவன் சிரிப்பை பார்த்துட்டேன். உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.அவர் கை கூப்ப . . . ,
எனக்கு அதிர்ச்சி! சார் . . . அவர் கையை தாழ்த்தினேன். என்ன சார் நீங்க அவர் கிட்ட நான் இயல்பா பேசுனேன் அவர் சிரிச்சார். இதுக்கு போய் நான் சொல்ல,
அது இல்ல தம்பி அவன் நிலை உனக்கு தெரியாது. எதோ சொல்ல வர,
“அப்பா!” அழுத்தமாக உள்ளிருந்து ஜன்னல் வழியாக நீலனின் குரல்.
அவர் பார்க்க நானும் உடன் சேர்ந்து நோக்கினேன். உள்ளே வாங்க? நீலன் முறைக்க, அவர் பூனையாய் உள்ளே போனார். அவர் மீதிருந்த கோபமோ என்னவோ அவர் மீது பதிந்த முறைப்பு என்னை தாக்க நான் அந்நெருப்பில் இருந்து தப்பிக்க திரும்பி நடந்தேன்.
ஓனர் என்ன சொல்ல வந்தார் மண்டையை குடைந்து கொண்டே ரூமில் வந்து படுத்தேன்.
பணியிலிருந்து வர காலதாமதம் ஆனதால் வழக்கமான பேருந்து என்னை விலக்கிவிட்டு போய்விட்டது. தொடர்ந்து மூணு நாட்கள் சரியாக பிடித்த எனக்கு இன்று நிற்காமல் சென்று விட்டது.அது சரி என் பாட்டி சொன்ன விஷயம் தான் இன்றும் நினைவில் நிற்கிறது. டேய் நீ வர வரைக்கும் நிற்க அது என்ன உன்அப்பன் வீட்டு பஸ்ஸா!. முதல்ல ஒரு பைக் வாங்கணும் மனதில் நினைத்தேன்.
கால் கடுக்க நின்றேன் காலம் அரை மணித்துளிகளை கடந்தும் வேறு எந்த பஸ்சும் தென்படவில்லை. வேறு வழி இன்று நடராஜா சர்வீஸோ இல்லை உதவி கேட்டு அடுத்தவருடன் செல்லும் நோகாப் பயணமோ தான். அதற்கும் வழி இல்லை. ஒரு மோட்டார் சைக்கில் கூட கண்ணில் படவில்லை.என் கூடாரத்திற்கு மன்னிச்சுகுங்க அதாங்க என் ரூமுக்கு போகணும்னா எட்டு கிலோ மீட்டர் போகணும். ஆட்டோ பிடித்தால் காசு எகிறிடும். எதுவும் செய்ய முடியாமல் தவித்தேன்.
மனம் யோசனையில் மூழ்க ஆரம்பித்தது. எதுக்கு வீட்டு ஓனர் அவர் மகனை பற்றி அவ்வளவு கவலைபடுறார். ஒருவேளை வயசாகியும் கல்யாணம் ஆகலை என்றா? வேறேதும் காரணமா?. யார் கிட்டயும் நீலன் பேசியது இல்லைன்னு சொன்னார். என்கிட்டே எப்படி பேசுனார். மனதின் கேள்விக்கு உள்ளத்தில் பதில் இல்லை. மாறாக அது நீலனிடமே இருக்கு.சரி அவரிடம் பேச முடிந்தால் பேசுவோம்.மனதை தேற்ற . . . ஒரு பைக் என் முன்னால் வந்து நின்றது.
யாரது? நினைவை கலைக்க, அது நீலன்.சார் நீங்க எங்க இங்க? நான் வியப்பாய் கேட்டேன்.
அத நான் கேக்கணும் டா! நேற்று தெரு முற்றத்தில் இருந்த! இன்று நான் வர பஸ் ஸ்டான்ட் வழில நிக்குற என்ன? என்ன இதெல்லாம்? கோபமாய் கேட்க,
சார் அது வந்து நான் இங்கதான் ஒர்க் பண்றேன். நேற்று நான் வீட்டு ஸ்டான்ல இருந்து இறங்கி நடந்து வந்தப்போ உங்களை பார்த்தேன். இன்னிக்கு பஸ் மிஸ் பண்ணிட்டேன். வேற எதுவும் இல்லை சார். நான் பவ்யமாக சொல்ல,
அடடே அப்படியா! சாரி நான் அதுக்குள்ள எதேதோ பேசிட்டேன்.நீலன் தன் தலையை தட்டி கொண்டார்.
பரவால்லை சார் அருண் மழுப்ப,
சரி சரி! நான் கிளம்புறேன் வீட்டுக்கு வந்துடு. நீலன் புறப்பட எத்தணிக்க,
சார் என்னையும் கூட்டி போங்க! வண்டி எதுவும் வரல நான் சொன்னேன்.
சரி போலாம் ஆனால் இதுவே கடைசி.அப்புறம் தினமும் வரன்னு சொல்ல கூடாது. நீலன் கண்டிப்போடு சொல்ல,
சரிங்க பஸ்ஸ விட்டுட்டேன். வேற வழி இல்லை ப்ளீஸ்! அருண் கெஞ்ச,
பைக் சாலையில் உருண்டு பயணப் பட்டது.
அப்பப்பா இருந்தாலும் இதெல்லாம் ரொம்பவே அதிகம். ஒரு தடவை பைக்ல ஏற்றுவதற்கு இவ்வளோ பேச்சா! அருணுக்கு எரிச்சலாய் இருந்தது.
என்ன அருண் நேற்று அவ்ளோ பேசுன! இப்போ அமைதியா வர! நீலன் பேச்சு கொடுக்க, எனக்கு ஆர்வமே இல்லை பேசுவதற்கு.பின்னே நம்மை ஒருவர் சிரமத்திற்கு ஆளாக்கி பின் பயணபடுத்தும் போது கடுப்பு வரதானே செய்யும்.
என்ன மௌன விரதமா? நீலன் மறுபடியும் . . .
இல்லை சார்! நானொன்னு கேக்கலாமா?
கேளு.
நீங்க ஏன் யார்கிட்டயும் பேச மாட்றீங்க? இது அருண்.
பத்து நிமிட அமைதி பயணம்.
வண்டி நின்றது. நேற்று நேற்று அவன் பைக் தள்ளி கொண்டு வந்த அதே இடம்.
இல்லை நீ எப்போதும் போல் பஸ்ஸில் வரமாறி வா! சொல்லிட்டு போய்ட்டார்.
சரியான லூசு! நடந்தேன்.
விடியல் மீண்டும் அடுத்த நாளை வெளிப்படுத்தியது. இன்று சனிக்கிழமை. வேலைக்கு தமதமா போகலாம். இன்று அருணின் பணிகள் தொய்வோடவே நடந்தது. அனைத்தும் முடித்து பஸ் ஸ்டாண்டில் நின்றான்.பஸ் இன்றும் இல்லை. எதோ லோக்கல் பந்த் என சொல்கிறார்கள்.மனம் பதைக்க ஆரம்பித்தது. இன்று வேலை அவ்வளவுதானா? ஒருநாள் சம்பளம் போச்சே! மனம் வெதும்ப ஆரம்பித்தது. வாங்குற சம்பளமே கொஞ்சம் இதுல லீவ் வேறயா? கண்கள் கலங்க ஆரம்பித்தது.
நீலன் வரும் வாடை அருணுக்கு தெரியவர சற்று பஸ் ஸ்டான்ட் உள் ஒடுங்கினான். பின்னே நேற்றே லிப்ட் கேட்டதுக்கு அந்த பேச்சு பேசுனாரு! இன்னிக்கும் கேட்டா அவ்வளவுதான் வீட்டையே காலி பண்ண சொன்னாலும் ஆச்சர்யப்பட ஒண்ணுமில்லை.
பைக் நின்றது. அருண் வா! நான் உன்னை கொண்டு போய் விடுறேன். இன்னைக்கு பந்த். நீலன் அழைக்க எனக்கு புரியவே இல்லை. நீலனா இப்படி!.
நான் வெளிப்பட, வா! அவனிடம் வர கண்களை அசைத்து கையை காட்டினான். அவனை புரியாமல் புரிந்து கொள்ளாமல் பைக்கில் ஏறினேன்.
சந்திப்போம்...
-- Edited by nilavazhagan on Monday 16th of December 2013 03:03:28 PM
பைக் சாலையில் போக பின்னால் டயர் புழுதியை கிளப்பி விட்டு கொண்டிருந்தது. இன்றும் மௌனம் நீடித்ததே தவிர இருவருமே பேசல. இன்றும் நீலனே பேச்சை ஆரம்பித்தான். என்னப்பா இன்னைக்கும் பேச மாட்டியா?
எது அப்பாவா? என்ன சார் நீங்க? “டா” போட்டு கூப்பிட்டது போக இப்போ அப்பான்னு சொல்லிட்டிங்க! அருண் பதறுவதுபோல் நடிக்க,
அது சரி! காலையிலேயே மூட்ல இருக்க போல ரொம்பவே கலாய்க்குற! நீலன் சிரிக்க . . .,
சார் முதல் நாள் சிரிச்சீங்க! ரெண்டாம் நாள் முறைச்சீங்க! இப்போ சிரிக்குறீங்க அப்புறம் நான் எதாவது கேட்டால் அவ்வளவுதான் வண்டிய விட்டு இறங்குன்னு சொல்லிடிவீங்க! எனக்கு வேறு வேலைக்கு டைம் ஆகுது. நேற்று மாறி நடுவழில இறங்க சொன்னா இன்னிக்கு வேலையும் போய்டும் கூலியும் போய்டும். அதுக்குதான் பேசல. நான் எப்பவுமே இப்படிதான். பேசலனாலும் வம்படியா பேசுவேன். அதேநேரத்துல தப்புனாலும் சொல்லிடுவேன். ஆனால் அதுக்குதான் நீங்க கோச்சுகிறீங்களே! அருண் ஆதங்கமாய் பேசினான்.
சாரி! அருண். நான் முன்னல்லாம் அப்படி இல்ல.இப்போதான் ஒரு ரெண்டு வருசமா? அதுவும் நீ என்கிட்டே பேச ஆரம்பிச்சதிலிருந்து நான் கொஞ்சம் இல்ல ரொம்பவே மாரி போய்ட்டேன். நீலன் அதற்கு மேல் பேசலை.
ஏன் சார் நிறுத்திட்டீங்க பேசுங்க! உங்க ஆதங்கத்த கொட்டிடுங்க அப்பதான் உங்களுக்கு ரிலாக்ஸ் கிடைக்கும். எனக்கும் மண்டைய குடையுற அந்த உங்களை பற்றிய ரகசியம் தெரியும்! அருண் வாயடக்கம் செய்யாமல் உளற!
நான் என்ன கதையா சொல்றேன்? கேலி செய்யும் விதமா பேசுற? இறங்கு! வண்டியை நிறுத்தினான் நீலன்.
ஐயோ சார் இனிமே நான் உங்க கூட வரவே மாட்டேன்! தயவு செஞ்சி என்னை கம்பனில இறக்கி விட்டுடுங்க உங்களுக்கு புண்ணியமா போகும்! என் சம்பளத்துக்கு உலை வெச்சிடாதீங்க! அழ ஆரம்பித்தான் அருண்.
அருண் அழாத நான் சும்மா சொன்னேன். வண்டி நகர . . . கண்களை இருக்கி அழுத அருண் மெல்ல ஒருகண்ணை திறந்து வண்டி நகர்கிறாதா?! என பார்த்து இரு கண்களையும் திறந்தான்.
வண்டி மீண்டும் நிற்க, பார்த்தால் அருண் கம்பனி. யப்பா! நீலன் சார் உங்களுக்கு ஒரு கும்புடு உங்க வண்டிக்கு ஒரு கும்புடு! ஒரு மனுஷன் ஓசியில வந்ததுக்கு இவ்வளோ கஷ்டமா? சொல்லிகொண்டே இறங்கி ஓடினான் அருண்.
என்னவோ தெரியல அருண், உன் வெள்ளந்தியான பேச்சும், உன் பாவமும் என்னை முன்னால் நடந்த சம்பவத்தை அப்படியே நேர் கோடிட்டு காட்டுது. அதனால தானோ என்னவோ நீ என்னை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணுற! உன்னோட ஒவ்வொரு ஆக்டிவிட்டியும் என்னை பூஸ்ட் பண்ணுது. உன்னோடு நான் நெருங்க கூடாது. ஏற்கெனவே நடந்தது போதும்னு நான் நினைக்குறேன். ஆனால் நீ அதை கலைக்கும் விதமா என் முன்னால் வர! பார்ப்போம் நமக்குள் இருக்கும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வருமா? இல்லை முடிந்திடுமா? என. நீலன் தன் மைண்ட் வாய்ஸ் ஓடவிட்டுகொண்டு தன் பைக்கையும் ஓட்டினான்.
இரவு . . .
ஓனர் சார் இந்தாங்க அட்வான்ஸ் அருண் நீட்ட. . . ,
என்னப்பா அவசரம் பொறுமையாவே தா! அவர் அருண் கையை மடிக்க, இருக்கட்டும் சார் நான் பிழைக்க வந்தேன். நீங்க இருக்க இடம் தர்றீங்க! அதுக்கு நான் வாடகை தரனும் இல்ல . . . , அவர் கையில் திணித்தான்.
சார் எனக்கு ஒரு சந்தேகம் . . . ,
உங்க பையன பத்தி எதோ சொல்ல வந்தீங்க? அது என்னன்னு சொல்லுங்களேன்.
ஏன் தம்பி அத கேக்குற? அது . . . அத சொன்னால் வாய்தான் வலிக்கும். என்னன்னு சொல்ல ஐந்து வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் பேசினோம். அவனும் சரின்னான்.
பெண்ணை பார்த்தோம். பிடித்தது. தேதியும் குறித்தோம். ஆனால் நீலன் முகத்தில் பிரகாசமே இல்லை. நான் எவ்வளவோ கேட்டேன் என்ன பிரச்சனைன்னு அவன் சொல்லவே இல்லை.
ஒருநாள் இரவு . . .
எனக்கு கல்யாணம் வேணாம். எல்லாத்தையும் நிறுத்துங்க அப்படின்னான்.
அவர் அழ எனக்கும் அதிர்ச்சிதான் என்ன காரணம் நான் யோசிக்க ஆரம்பித்தேன்.
எனக்கு கல்யாணம் வேணாம். எல்லாத்தையும் நிறுத்துங்க அப்படின்னான். அவர் அழ எனக்கும் அதிர்ச்சிதான் என்ன காரணம் நான் யோசிக்கஆரம்பித்தேன்.அழுகையை அடக்கியவர் பேசஆரம்பித்தார்.அதிர்ச்சி இருந்தாலும் அடக்கின்னு கேட்டேன். என்னாச்சு பா! சொல்லு! ஏன்? தீடீர்னு இப்படி சொல்ற! நான் அழுதேன். ஓனர் விசும்ப ஆரம்பித்தார். இல்லப்பா! அந்த பொண்ணு சரியில்ல நிறுத்துனான். சரி! மகனுக்கு பிடிக்கலையே வேணாம் அப்படின்னு நிறுத்தினேன்.அப்புறம் இன்னொரு பொண்ணு. கலரு இல்ல வேனாம்னான். அடுத்து அதிகமா படிச்சிருக்கு. அதற்கடுத்து நிறைய சம்பளம் வாங்குது அப்படின்னான். சரி என்னடா இவன் ஒவ்வொன்னா தட்டி கழிக்கிறான். என்ன பிரச்சனை அவனையே கேட்டேன்.
எனக்கு எந்த பொண்ணுமே பிடிக்கல. வேற மாதிரி புதுசா வேணும். அழகா! கிராமபுறமா பாருங்க! சொன்னான்.
எனக்கு அதிர்ச்சி! சரி அவன் விருப்ப படுறான். சம்மதிச்சேன். அவன் நினைச்ச மாதிரி பொன்னையும் காமிச்சேன். முதல்ல புடிச்சிருக்கு சொன்னான். அப்புறம் நிச்சயம் பண்ணும்போது இந்த பொண்ணு சரி இல்ல எனக்கு வேணாம் வேற நல்ல இடமா? பாருன்னான்.எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டேன். அவனும்தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நான் அவனை கல்யாணம் பண்ண சொல்லி கேக்கல. வற்புறுத்தல! ஆனால் அப்படியும் ஒரு பொண்ணு பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணுங்க சொன்னான்.எனக்கும் பிடிச்சிருந்தது சம்மதிச்சேன். ஆனால் ஒருநாள் அந்த பெண் உங்க பையன் ஆண்மை இல்லாதவன் எனக்கு கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டா?! இத்தனை நாள் இவன் கல்யாணம் வேணாம் சொன்னான், ஆனால் இவன் சம்மதிச்சும் அவள் வேணாம் சொல்லிட்டாள்.
ஒருநாள் அவள் சொன்னது உண்மையா? நான் கேட்டேன்.ஆமாம் என்னால் குடும்ப உறவில் ஈடுபட முடியாது.முகட்டில் அடிச்சது போல் சொல்லிட்டு போய்ட்டான். அன்னைல இருந்து இதே மூர்க்க நிலைதான் என் குடும்பத்தில்! பெரிய விசும்பலோடு முடித்தார்.
அவர் சொன்னது இடியாய் இருந்தாலும், எனக்கு சந்தேகம் தீர்ந்த பாடில்லை இப்போதுதான் சந்தேகம் அதிகமாகி இருக்கு.என்ன இருந்தாலும் சற்று நீலனை பற்றி தெரிந்தது அவனை விட்டு சற்று விலகி இருக்க உதவியாய் இருக்கும். யாருக்கு தெரியும்! அவன் நல்லவனா? இல்லையா? என்று.பொறுத்திருந்தால் தெரியும். அவன் வில்லனா? இல்லை பரிதாப படும் இளகிய மனம் உள்ளவனா? என்று.
இன்று ஞாயிறு...
வந்து ஒருவாரம் ஆகி விட்டது.
கம்பனி இல்ல! எங்கயாவது போலாம் என்றால் வழியும் தெரியாது! வாய்க்காலும் தெரியாது! எங்கிருந்து போக இந்த புதிய ஊரில் . . . இதுவே என் ஊர்னா சொல்லவா வேணும். ஊர் சுற்ற!விசனத்தோடு உட்கார்ந்திருக்க நீலன் வந்தான்.
என்ன இவன் நேற்று இவன் அப்பா ஒருமாறி சொன்னார். இன்று இவன் என்ன ஊர் சுற்ற வா ன்னு கேக்குறான். அவன் அப்பா இவனுக்கு இல்லற இன்பமே இல்லன்னு சொல்றார் அனால் இவன் இன்னைக்கு என்ன ஜாலியா போலாம் வா அப்படின்னு சொல்றான். இவன் லூசா இல்ல நடிக்கிறானா? ஒருவேளை அவனால் பெண்ணோடு இருக்க முடியாது என்பதால் ஆண்களோடு பொழுதடிக்க நினைக்கிறானா? இவன் போதைக்கு நான் ஊறுகாயாக மாட்டி இருக்கனா? மனதுக்குள் குழம்பி கொண்டே அவனை ஏறிட! என்னடா? எதுவுமே சொல்லாம என்ன பார்த்து எதோ யோசிக்கிற! நீலன் பேச்சில் கோபம் தெரித்தது.
அட கடவுளே! உறுதியா இவன் லூசுதான். இவன் கூட . . . இல்லை இல்லை . . . இவன் இருக்கும் திசை கூட தலை வெச்சி படுக்க கூடாது. எழுந்து உள்ளே போக,
அருண் சாரி! நான் அப்படி கோவ பட்டிருக்க கூடாது, வா! போலாம் சிரித்த முகமாக கூப்பிட எனக்கு புரியவே இல்லை. எப்படி இவன் மாரி மாரி பண்றான்.நான் தான் இவனை ஓரின காதலுக்கு நினைத்தேன்.அவனும் அப்படி நினைக்கிறானா?இல்லை என்னை ‘அந்த’ உறவுக்கு மட்டும் என நினைக்கிறானா? உண்மையிலேயே இவன் ஓரின விரும்பிதானா? மனம் சிதைவடைய ஆரம்பித்தது.
அருண் வா! மறுபடியும் அழைக்க நான் செல்ல முடிவெடுத்தேன்.
பைக் புறப்பட்டது.
சாலை இரண்டு கடந்ததுமே காக்கி உடைகள் தென்பட சார் போலிஸ் நான் கத்த! அதுக்கு ஏன் பயப்படற நீலன் சமதானப்படுத்த,
அது இல்ல சார் சின்ன வயசுல இருந்தே போலிஸ்னா ரெண்டடி தள்ளி நிக்க சொல்லியே வளர்த்துடாங்க! அது எங்க ஊரு பழக்கம்.அதான் சற்று நெர்வஸ் ஆயிட்டேன்.
தெரு முக்கில் போலிஸ் வண்டிகளை நிறுத்தி எதோ செய்ய, நீலன் வேகமாய் போய்கொண்டிருந்தவர் வண்டியை நிறுத்த ?! காரணம் கேட்டேன்.
லைசன்ஸ் கொண்டு வரல! இன்சுரன்ஸ் கட்டி மாசம் ஆராகுது அவர் சிரித்து கொண்டே சொல்ல, சார் என்ன சொல்றீங்க? அய்யோ இது தெரியாம உங்க வண்டில எறிட்டேனே? அடப்பாவி மனுசா இதெல்லாம் முதல்லையே சொல்ல மாட்டியா? வசமா மாட்டி விட்டுட்டியே நான் அழுது புலம்ப!
அடச்சீ நிறுத்து இது ஒரு மேட்டர்னு அழுற! பைக்கை எடுத்தவர் கர்சீப்பை முகத்தில் கட்டி வண்டியை எடுத்தார். சார் வேணாம் என்ன பண்ண போறீங்க? நான் கேட்க காதில் வாங்காமால் பைக்கை வேகமாக எடுத்து சென்று போலீஸ் கை காட்டியும் நிற்காமல் போனார். நான் திரும்பி போலிசை பார்க்க அவர்கள் ஏய் நிறுத்து சொல்லிகொண்டே பைக் நம்பரை நோட் பண்ணினர்.
என்ன சார் இப்படி பண்ணிடீங்க போலிஸ் என்னை பார்திருக்குமே! பேசிக்கொண்டே நீலன் அப்பா சொன்ன எல்லா விசயத்தையும் அவனிடம் சொன்னேன். பைக்கை நிறுத்தினான். அவன் இயற்கை உபாதை கழிக்க மரத்தினிடையே ஒதுங்க நான் பைக்கின் அருகிலேயே நின்றேன்.திரும்பினான்.
பைக் எடுக்க எத்தனிக்க நான் தடுத்தேன். சொல்லுங்க சார்! என்ன பிரச்சனை? நான் விடாப்பிடியாக கேட்க அவன் சொல்ல ஆரம்பித்தான்.
பைக் எடுக்க எத்தனிக்க நான் தடுத்தேன். சொல்லுங்க சார்! என்ன பிரச்சனை? நான் விடாப்பிடியாக கேட்க அவன் சொல்ல ஆரம்பித்தான். நான் ஏற்கனவே ஒரு லவ் பண்ணி தோற்றுட்டேன்.அதோட வலிகள்தான் என் செயல்பாடாய் இப்போது உள்ளது.அவன் என்னை நோக்கினான்.
புரியல?
அருண் நீ இவ்வளோ கேக்குறதனால சொல்றேன். ஆனால் நான் சொன்ன பிறகு நீ என்னோடு பேச கூட மாட்டாய் ஏன்னா நான் எல்லாரையும் போல சராசரி வாழ்க்கைக்கு உட்பட்டவன் இல்லை. நான் ஓரின விரும்பி. நீலன் விசும்ப ஆரம்பித்தான். நான் நீலனை உற்றுநோக்கினேன்.(அப்படி வா வழிக்கு. எனக்கு தெரியும் நீயும் என்ன போலதான்னு.மனதுக்குள் நினைத்து கொண்டே!) மேல சொல்லுங்க!
நான் முதலில் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை. அருண்னு ஒருத்தன் வர வரையில். நீலன் முடிக்க எனக்கு ஷாக். நீலனை ஏறிட்டேன்.
என்ன சொல்ற? மரியாதை காற்றில் போயிருந்தது.
இல் . . . லை நான் . . . அருண்னு சொன்னது உன்ன இல்லை வேற! வேற ஒருத்தன்.
அப்படியா! நான்சற்று ரிலாக்ஸ் ஆனேன்.
சொல்லு!
அருண் என்கூட படிச்சான். முதலில் நட்பாய் தொடங்கிய பூ காதலாய் மலர்ந்தது.எனக்கு அருண்! அவனுக்கு நீலன். என இணைபிரியா உயிராய் இருந்தோம்.ஆணும் பெண்ணும் எப்படியெல்லாம் இருப்பார்களோ அதையும் தாண்டி எங்களுக்குள் ஒரு உறவு பலப்பட்டது.
பேசிட்டு இருந்தவன் நிறுத்திவிட்டு பைக்கை ஸ்டார்ட் பண்ண நான் பேசாமல் உட்கார்ந்தேன். நேரம் கடந்தது. மேலும் அவன் சொல்வது போல் தெரியல! சொல்லுங்க! மேலே எதுவுமே சொல்லல... நான் கேட்டேன்.
அருண் அதை எதுவுமே கேக்காத! விட்டுடேன். நீலன் பதற்றமானான்.
என்ன சொல்றீங்க? மெதுவா சொல்ல ஆரம்பிச்சீங்க அப்புறம் என்ன?
இல்லை அருண்! நான் ஒன்னு கேக்குறேன் நீ என்ன சொல்ற?
முதல்ல கேளுங்க! அப்புறம்தான் நான் சொல்ல முடியும்.
நான் உன்னை விரும்புறேன். நீ என்ன சொல்ற? நீலன் கேட்க,
நீலனின் தீடீர் பேச்சு என்னை சற்று பயத்தை ஏற்படுத்தியது. என்ன சொல்றீங்க சார்! நீங்க மட்டுமில்ல என் வெள்ளந்தியான பேச்சுக்கு எல்லாருமே விருபுவாங்க நீ விதிவிலக்கா! நான் வலிய சிரிக்க,
அருண் ஸ்டாப் இட் ஜோகிங்! நான் விரும்புறதா சொல்றது உன்ன லவ் பண்றன்னு. நீலன் டென்சன் ஆனான்.
என்ன சார் நீங்க? எப்படி ஆணும் ஆணும்! லவ் பண்ண முடியும். காமெடி பண்ணாதீங்க! நான் சிரிக்க,
நீலனின் கோபம் எகிறி கொண்டிருந்தது. பின்னே என்ன பிரண்ட்ஸ் முதல்லையே லவ்வுக்கு ஓகே சொன்ன அப்புறம் நீலன் என்ன டாமினேட் பண்ணுவான்ல அதான் அவன சுத்தல்ல விட்டு கலாய்க்குறேன்.
சார் நீங்க பேசுறது எனக்கு சிரிப்பா வருது! நான் பொண்ணு இல்ல அத முதல்ல நினைவில் வைங்க! நான் மீண்டும் சிரிக்க!
அருண் போதும் நிறுத்து! என்ன நீ வேணும்னே டீஸ் பண்ற! அதனால இந்த பேச்ச இதோடு நிறுத்து. நீ என்ன விரும்புற தானே? நீலன் ஓபனாக கேட்டார்.
அது வந்து சார்!அப்படிலாம் எதுவுமில்ல நான் அவசரமாய் மறுத்தேன்.
பொய் அருண் அனைத்தும் பொய். நீயும் ஓரின விரும்பி மறுக்காதே! நீலன் கத்த அந்த அலறல் என்னை ஆட்டிபோட்டது.
சார்....! நான் இழுக்க!
சொல்லு என்ன லவ் பன்றதான! சொல்லு சொல்லு உண்மைய சொல்லு! இங்க பாரு ப்ளீஸ் லவ் பண்றன்னு சொல்லு!
சொல்லு...........! கத்தினான்.
நான் முகத்தை திருப்ப, என் முகத்தை அவன்கையால் திருப்பி என் தவடையில் தட்டி கொண்டே..., ஹேய்ய்! இங்க பாரு... பாரு... சொல்லு லவ் பண்றன்னு சொல்லு.... நான் டென்சன் ஆகுறேன். உண்மையை சொல்லு ப்ளீஸ் சொல்லு லவ் பண்றீயா? இல்லையா?......................கத்தினான்.
என் உடல் நடுங்கியது. ரோட்டில் உதவிக்கு யாரும் இல்லை. நீலனை சமாளிக்க முடியாமல் பதறினேன்.லவ் பண்றனு சொன்னால் எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியல! மனமும் உடலும் பதைக்க,
சார் கூல் டவுன் ப்ளீஸ்! நான் அவர் தோள்களை பற்றி அழுத்த!
தொடாதே! நீ லவ் பண்றனு சொல்லு அவன் கண்ணில் நீர் வர,
சார் என்னாச்சு! என்ன பண்ணுது? நான் அவர் தோள்களை இருக்க பற்றினேன்.
சொல்லு சொல்லு! வாய் இழுக்க உடலும் ஒரு பக்கமாக இழுத்து கேவிகொண்டிருந்தார்.
சார் சார் . . . நான் பதற,
நீலன் கீழே சரிய ஆரம்பித்தார். என் பிடி தளர அவர் தரையில் விழுந்து விலுக்க ஆரம்பித்தார்.மூக்கில் ரத்தம் வடிய ஆரம்பித்தது.
ஒருகணம் மைண்ட் ப்ளாக் ஆக! நான் ஸ்தம்பித்தேன்...
நினைவு சுழல, சார் சார் என்ன பண்ணுது! சொல்லுங்க! நான் அவரை இழுத்தேன். ஒருகணம் நினைக்க பைக் சாவியை அவர் கையில் திணித்தேன். அவர் இழுப்பு நிற்க, எனக்கு படபடப்பு குறைந்தது. ஆனால் அவர் எழவே இல்லை.
நிமிடங்கள் கரைய அம்புலன்ஸ் அதற்கே உரிய சத்தத்தோடு அலறிக்கொண்டு முன்னேற எனக்கும் நீலனுக்கும் நடந்த கடைசி நிமிட நினைவுகள் என்னை அலையடித்து கொண்டிருந்தது. வார்த்தைகள் வெளிப்படாமல் வாய் வெதும்ப கண்கள் தண்ணீரை தாரைதாரையாய் ஊற்றி கொண்டிருந்தது.
அம்புலன்ஸ் ஆஸ்பிட்டலினுள் நுழைய, மனம் நீலனோடு இருந்த ஒருவார கதையை நியாபக படுத்தியது.
அவன் உள்ளே எடுத்து செல்லப்பட நான் திராணியற்று சேரில் சாய்ந்தேன். கண்களை மூட கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது.
நீலன் என்னோடு சந்தோஷ பட்ட தருணம் இரண்டு எனில் கோப பட்டதோ நாலு.நேற்று கூட பாணி பூரி கடையில் நடந்தது இன்றும் நினைவிலிருந்து அகல மறுக்கிறது. ஆமாம் நான் உங்ககிட்ட அத மறைச்சிட்டேன்.
நேற்றே அவனிடம் கேட்க நினைத்து தோற்றேன் அவன் அப்பா சொன்னதை.
சம்பவம் 1
நேற்று...,
அருண் இந்த கடை வேணாம்.நல்ல இருக்காது.நாம பக்கத்துல இருக்குற கடைக்கு போலாம் சொன்னான். நானும் கூடவே போனேன். அங்கே அவனுக்கு ஒரு சிக்னலும் கொடுத்துட்டேன். அதன் விளைவோ என்னவோ இன்று நீலன் என்னை லவ் பண்ண சொல்லி கேட்டது.
சார் கடை மட்டும்தான் நல்லா இருக்கணும்னு நினைப்பிங்களா இல்லை எல்லா விசயத்திலுமா? நான் கொக்கியை போட,
போடா! எப்பவும் கிண்டல் பண்ணிட்டு நீலன் சிரிக்க,
சார் ஒன்னு மட்டும் போடவா? இல்லை ரெண்டு பேருக்கும் போடவா? பானிபூரி கடைக்காரன் கேட்க,
எது நான் அவனை ஏறிட நீலன் என்னை பார்த்து சிரித்தார்.
நானும் மேலும் பானிபூரி கடைக்காரனை சீண்டினேன். என்ன அண்ணே நல்லா போடுவீங்களா?
ஆமாம் தம்பி சூப்பரா போடுவேன்.
அண்ணே கழுவிட்டா இல்லை அப்படியேவா? கேட்க,
என்ன தம்பி ஸ்பெசல் கஸ்டமர் நீங்க! உங்களுக்கு கழுவி தான் போடுவேன் பதிலுக்கு அவர்.
சூடா இருக்குமான்னே?
கண்டிப்பா!
டேய் என்ன நடக்குது இங்க? நீலன் என்னை பார்த்து சிரிக்க,
என்ன சார் பாணி பூரி நல்லா போடுவிங்கலான்னு கேட்டேன் அருண் சொல்ல,
அப்போ கழுவிட்டு . . . நீலன் இழுக்க,
பிளேட்டே நல்லா கழுவி போட சொல்லி . . . நீங்க என்ன நினைச்சீங்க? நான் திருப்ப இல்லை இல்லை சொல்லிகொண்டே நீலன் என்னை விட்டு விலகி திரும்பினான்.
பானிபூரி கடைக்காரன் சிரித்த சிரிப்பு இருக்கே அப்பப்பா! அவன் கிட்ட இருந்து எஸ்கேப்.
டேய் அருண் பாவண்டா! அந்த கடைக்காரன். இந்த வாறு வாருற! அப்பா என்னால முடியாது, நீலன் விழுந்து விழுந்து சிரிக்க,
என்ன சார்! நீங்களுமா? நான் செல்லமாய் கோபித்தேன்.
அமாமாமா! நானும்தான் என்னால கூட முடியாது. உன்கூட . . . ஜோக் அடிக்க
பாத்தீங்களா? நீங்களும் சமயத்துல இரட்டைஅர்த்த வசனம் பேசிட்டீங்க நான் வழியிலிருந்து விலக,
சாரி சாரி! இனி பேசல முடிக்க, மீண்டும் உடலை குறுக்கி சிரித்தான்.
சம்பவம் 2
இருவரும் சிறுவர்கள் டியுசன் படிக்கும் இடம் செல்ல நேர்ந்தது. நான் அவரை சந்திக்க வேண்டும் அதனால் பானிபூரி நிகழ்ச்சி மறந்து டியுசனுள் புறப்பட்டோம்.
அருண் சின்ன பசங்க ஏதும் அறியாம? ரொம்ப ஜாலியா இருக்காங்கல்ல நீலன் என்னை பார்த்து கிசு கிசுக்க . . . ,
என்ன சார் பேச்சு ரொம்ப மோசமா இருக்கு. நான் கேட்க,
அதில்லடா அவர் பேச ஆரம்பிக்க,
நிறுத்துங்க நான் வந்த வேலையை பார்க்க, அந்த வாத்தியார் ஒரு பையனை கேள்வி வாசிக்க சொன்னார் மற்ற பசங்களை பின்பற்ற சொல்லி விட்டு என்னை பார்த்து விசயத்தை பேச ஆரம்பித்தார்.முடியும் தருவாய்!
ஒரு பையன் படிக்க அனைவரும் எழுதி கொண்டிருந்தனர்.
ஒரு செல் உயிரிக்கு எடுத்து காட்டு?.
இருவாழ்விக்கு ஒரு எடுத்து காட்டு?
அந்த பையன் சொல்லி கொண்டிருக்க,
டேய் அதான் சொல்றான் இல்ல எடுத்து காட்டுங்களேன்டா? நீலன் கத்தி சொல்ல,பசங்க சிரிசிட்டாங்க! எனக்கு அவமானமா போச்சு! நாகரீகம் இல்லாம இவர் பண்ணது.
நினைவு மீள, ஐ சி யு கண்ணாடியை பார்த்தேன். டாக்டர்கள் என்னவோ செய்து கொண்டிருந்தனர் நீலனை.
****************************
சார் நம்ம நிறுத்தி நிக்கமா போன பைக் ஆலமரம் பக்கம் யாருமில்லாமல் இருக்காம். கான்ஸ்ட்ரபில் சொல்ல, விரைந்தது போலிஸ்.
சம்பவம் நடந்த இடம் . . .
பைக் மட்டும் இருக்கு ஆள் இல்ல சுத்தி பாருங்க யாராவது இருக்காங்களா? என்று சப் இன்ஸ்பெக்டர் ஏவ இருவர் ஆளாக ஒருபுறம் போயினர்,
சார் இவங்க அவங்களா இருக்கும்னு நினைக்கிறீன்களா? ஏட்டு கேட்க,
எனக்கு அப்படிதான் தோனுது. ஒருவேளை அவன்கதான்னா பிரச்சனை முடிஞ்சது.சப் இன்ஸ்பெக்டர் முன்னால் ஒரு step வைக்க ரத்த துளிகள் அவரை நிறுத்தியது.
காய்ந்த துளிகள் கைப்பற்ற பட,
ஏன்யா ஏட்டு ஒருவேளை பின்னால் உட்கார்ந்த பையனை பார்த்திருப்போம்னு எதாவது பண்ணி இருப்பானோ பைக் ஓட்டி போனவன்! கேட்க,
இருக்கும் சார்! தலைஅசைத்தார் ஏட்டு.
சார்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு ஆம்புலன்ஸ் இந்த பக்கம் போனதா இந்த விவசாயி சொல்றான் கான்ஸ்ட்ரபில் சொல்ல,
இன்ஸ்பெக்டர் எதோ இமயம் போன்ற ஒரு கேஸ் கிடைத்திருப்பது போல விறைப்பாய் நின்றார்.
சொல்ல வார்த்தை இல்லை என் பள்ளி கால நண்பன் என்னை என் நண்பர்களை அவன் குடும்பத்தை விட்டு தூரம் சென்றுவிட்டான். கடவுள் அவனை சமாதான படுத்தட்டும். அவன் ஆன்மா சாந்தம் அடையட்டும்.
கதை தொடர முடியவில்லை மன்னிக்கவும் பிறகு தொடர்கிறேன்.
சார் அவர் என்கிட்டே இல்ல இல்ல அவர்கிட்ட . . . அய்யோ... அவர் லவர் கிட்ட லவ் சொன்னார் ஏத்துக்கல! அதான் ஒருவாறு சொல்லி முடிக்க,
அப்படியா? இவர்க்கு இதுக்கு முன்ன இப்படி ஆயிருக்கா? மீண்டும் கேள்வி கேட்க,
(அதே! அடே மண்டையா எனக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டனா சிக்கல்ல மாட்டி விட்டுட்டு அவன் பெட்ல தூங்குறான். ஒன்னும் தெரியாம நான் எண்ணத்த சொல்றது!) மண்டைக்குள் குடைய,
சரி அவங்க வீட்ல இருந்து யாராவது வரசொல்லுங்க டாக்டர் சொல்ல,
டாக்டர் அவசியம் இல்ல நான் எனக்கு ட்ரீட்மென்ட் தர டாக்டர போய் கன்சல் பண்ணிக்குறேன்.டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க நீலன் பின்னாலிருந்து சொல்ல, அப்போதான் எனக்கு மூச்சே வந்தது.
வீடு . . .
ரொம்ப நன்றி தம்பி! ஓனர் குழைய
என்ன சார்! நான் சிணுங்கினேன்.
நீலன் சார் ரெஸ்ட் எடுத்துக்குங்க! நான் வரேன்.
எங்க போற? இது நீலன்,
பைக் எடுக்க வேணாமா?
மறு பேச்சு இல்லை.
பைக்கை காணோம். நிறுத்திய இடத்தில் பைக் இல்லை.ஏமாற்றத்தோடு திரும்பினேன்.
தம்பி! ஒருவேளை யாரும் திருடி இருப்பாங்களோ? ஓனர் கேட்க,
இருக்கும் சார் நான் ஆமோதித்தேன்.
கம்பளைன்ட் தரலாமா? அவர் கேட்க, சார் இவர் இன்சுரன்ஸ் கட்டல. கம்ப்ளைன்ட் குடுத்தா ரிவர்ஸ் ஆய்டும். நான் சொல்ல,
சரி நாளைக்கு போய் இன்சுரன்ஸ் கட்டிட்டு அப்புறம் குடுக்கலாம் ஓனர் சொல்ல சரின்னு பட்டது.
மறுநாள் . . .
தம்பி இன்சுரன்ஸ் டேட் முஞ்சு போச்சு. பெனால்டி போடனும் பைக்க பாக்காம போட முடியாது. எல்லாம் ரெடி பண்ணிட்டு சொல்லுங்க! எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. அதிகாரி சொல்ல,
வண்டியா? அதுக்கு நான் எங்க போக, மனதுக்குள் பொரும,
என்ன இருக்கா? அதிகாரி ஏறிட்டார்.
இருக்கு சார் நான் வாய் தவறி உளறிட்டேன்.
சரி பணத்த கட்டு நான் பில் போடுறேன் அப்படியே வண்டிய பாக்கலாம் வா! அவர் வர,
நான் பார்க்கிங்கு அவருடன் போனேன்.வண்டி எப்படி இருக்கும்? என்ன நடக்க போகுதோ? மனதுக்குள் சங்கட பட,
எங்கப்பா வண்டி? அவர் கேட்க,
சார் பிரன்ட் வெளியே எடுத்து போய்டான் இருங்க கால் பண்றேன் !? சமாளிக்க,
சீக்கிரம் வர சொல்லு,
நான் கேட் அருகே போனேன், கடவுளே நல்லா மாட்னேன். என்ன நடக்க போகுதோ? சரி அவன் வர லேட் ஆகும் இன்சுரன்ஸ் பிரிமியம் போற்ற சொல்லி பார்ப்போம் மனம் சொல்ல செயல் படுத்தினேன்.
சார் நான் கூப்பிட,
என்னப்பா வந்தாச்சா? அவர் வெளியே பார்க்க,
சார் அது வந்து! நான் இழுக்க
அட என்னப்பா! பைக் வெளிய இருக்குன்னு சொல்ல வேண்டியதுதான அதுக்கு போய் இழுக்குற? அவர் சொல்ல
எனக்கு ஒண்ணுமே புரியல? பைக் எப்படி வெளியில! நான் பார்க்க பைக் மற்றும் போலிஸ் பக்கத்தில் இருந்தார்.
தம்பி சப் இன்ஸ் உங்க பிரண்ட்னு சொல்ல வேண்டியது தான! அதிகாரி சொல்லிவிட்டு உள்ளே போய் இன்சுரன்ஸ் பேப்பரை கொண்டு வந்து கொடுத்தார்.
வாங்கிய எனக்கு கையும் ஓடல காலும் ஓடல பைக்கையே பார்த்துட்டு இருந்தேன். சாவி அதில் இருந்தது. போலிஸ் ஹோட்டல் உள் நுழைய, பைக் வா வா ன்னு சொல்வது போல் இருந்தது. பைக்கை எடுக்க முடிவு செய்தேன்.
பைக்கை ஸ்டார்ட் பண்ண இன்ஸ் உள்ளே இருந்து வரவும் சரியாக இருந்தது. ஹே நில்லு அவர் கத்த, நான் வண்டியை மூவ் பண்ணேன். அருகிலிருந்தவர்கள் என்னை பிடிக்க நான் திமிறினேன். இன்ஸ் கிட்டே நெருங்கினார் நான் தூண்டிலில் சிக்கிய மீனாய் துடித்தேன்.
பைக் ரைஸ் ஆகி பறக்க நான் அவரிடமிருந்து தப்பித்தேன்.
டேய் அருண் என்ன காரியம்டா பண்ணிட்டு வந்து நிக்குற? உனக்கு பயமா இல்ல போலீஸ்கிட்ட இருந்தே பைக் திருடி இருக்க, அதுவும் முகத்த கூட மறைக்காம? நீலன் அதிர்ந்து பேச, அப்போதுதான் எனக்கு புரிந்தது நான் எவ்ளோ பெரிய சிக்கலில் இழுத்து வந்து விட்டிருக்கேன்னு.
அய்யோ சார் என்ன இது என்னென்னமோ சொல்றீங்க? எனக்கு பயமா இருக்கு! நான் அழ ஆரம்பிக்க போதும் நிறுத்துடா பண்றதெல்லாம் பண்ணிட்டு அழற! நீலன் சூடேற!
நான் அய்யோயோ மறுபடியும் பிக்ஸ் ஆ ஒரு தடவைக்கே இவ்ளோ ப்ராப்ளம்! என் ரூமுக்கு ஓடினேன்.
ஆனாலும் முகத்தை மறைக்க சொல்லும் நீலன் செய்கை சற்று வித்தியாசமாகவே பட்டது அருணுக்கு.
காவல் நிலையம் . . .
என்ன நடக்குது அந்த ரெண்டு பெரும் எதோ குறிவச்சு செயல் படுவது போல் இருக்கு! நாம ரொம்ப டிலே பண்றோம் சீக்கிரம் கண்டுபிடிக்கணும். இன்ஸ் கத்த,
சார் அடுவந்து ஏட்டு பின்னாலேயே வந்து குழைந்தார்.
ஒரு அட்ரஸ் கண்டு பிடிக்க ரண்டு நாளா?
சார் நேற்று லீவ் இன்னிக்கு வாங்கிடலாம்.
சரி ஹாஸ்பிடல அட்ரஸ் கேட்டியா?
சார் இல்ல!
சார் அந்த வண்டி அட்ரஸ் இதோ! கன்ஸ்ட்ரபில் நீட்ட,
ஜீப் நீலன் வீட்டை நெருங்கியது.
போலிஸ் ஜீப்பை கண்ட அருண் வேகமாய் நீலன் வீட்டில் போய் ஒளிந்தான்.
இன்ஸ் நீலனை ஏறிட்டார்.
நீலன் இன்சை முறைக்க, அருண் புரியாதவனாய் இருவரையும் பார்த்தான்.
என்ன விஷயம்? காரமாய் கேட்டான் நீலன்.
நீ! ஆரம்பித்த இன்ஸ் பைக் யாரோடது?
என்னுடையது.
நேற்று என்கிருந்தது?
என் வீட்ல!
ஏன் கேக்குற? நீலன் ஒருமையில் கேட்க, ம்! கனைத்து விட்டு ஏன் கேக்குறீங்க?
இல்ல பைக் நேற்று போலிஸ் ஸ்டேசன்ல இருந்தது.
பொய்! இருக்கவே முடியாது. நேற்று கூட என் வீட்லதான் இருந்தது.
உங்க r c புக் இன்சுரன்ஸ் பாக்கலாமா? இன்ஸ் கனைக்க,
நீலன் நீட்டினான்.
பைக்கை போய் இன்ஸ் பார்க்க ஒன்றும் புரியாமல் நீலனை நோக்கினார்.
என்ன? நீலன் புருவத்தை உயர்த்த,
சரி நான் இப்போ போறேன். ஆதாரம் கிடைத்தால் திரும்பவும் கூப்பிடுவேன்.
ம்! நீலன் தலை அசைக்க
நீலன் வீட்டை நோட்டமிட்டுவிட்டு கிளம்பினார்.
என்ன சார் பைக் அங்க இருந்தும் அரெஸ்ட் பண்ணாம விட்டுடீங்க ஏட்டு கேட்க
விடுய்யா எங்க போய்டுவான். பிடுசுக்கலாம். இருக்கு ஒருநாளைக்கு அவனுக்கு சொல்லி விட்டு வண்டியில் ஏறினார்.
என்ன நடக்குது இங்க? இவ்ளோ ரப்பா பேசிறிங்க? நான் பயந்துட்டேன்.அருண் சொல்ல
விடுடா இப்படி பேசுனா அவர் போய்டுவார் அதான்.
எது இப்படி பேசுன்னா போய்டுவாரா? நான் கேட்க!
நீலன் சிரித்துவிட்டு போனான்.
ஆஹா! இங்கயும் மர்மமா? பல கேள்விக்கு விடை தெரியாமலே பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.
இரவு . . .
நீலனோடு இரண்டாவது இரவாக உறங்க நேர்ந்தது.
டேய் நீலா? எனக்கு தெரியுண்டா? நீ என்ன பழிவாங்க தானே திட்டம் போடுற? குரல் கேட்க அலறி எழுந்தான் நீலன்.
பயத்தோடவே அருணை ஏறிட்டவன் மன பிரம்மை பிடித்தவன் போல் எழுந்து சென்றான்.கதவை திறக்க லைட் தன்னால் எறிந்தது. ஜில்லென காற்று வீச சிறுநீர் கழித்து விட்டு திரும்பியவன் ஷாக்காகி அருணை எழுப்பினான்.
நீலன் சார் ப்ளீஸ் சொல்லுங்க உங்க பிராப்ளம் என்னனு சொன்னாதான் நான் எதையுமே யோசிக்க முடியும். நீங்க என்னோட இருக்க ஆச படுறீங்க! தப்பில்ல ஆனால் நான் உங்களோட இருக்கணும்னா உங்களுக்கு ஏன் பிக்ஸ் வருது தெரியனும் சொல்லுங்க! நீலனை பார்க்க,
அவன் என்னை உள்ளூர பார்த்தான்.
சரி நான் சொல்றேன்.
(நண்பர்களே இந்த கதையில் வரும் நிகழ்வு கதா பாத்திரம் அருண் மற்றும் பிளாஸ்பேக் பாத்திரம் இரண்டும் வேறு குழப்பம் வராமலிருக்க கலர் இங்க் எழுத்துகள் பிளாஸ்பேக் அருண் நியாபகம் வைத்து கொள்ளுங்கள்.)
உன்னோடு உள்ளம் உறவாட . . .
கண்களில் கனவுகள் மெய்பட . . .
தினம் தினம் என் மனம் உன்னையே நினைத்துருக . . .
காதலனே உண்கண்களால் என்னை கைது செய்ய காத்திருக்கிறேன் . . .
இனி வரும் பொழுதெல்லாம் உன்னோடுதான் . . .
யார் என்ன சொன்னாலும் மாறாது என் மனம் . . .
உன் பரந்த மார்புக்குள் தவழும் குழந்தையாய் படுத்து கொள்ள
பக்குவமாய் அழைத்து கொண்டு காதல் பாசைகளை காற்று தர காத்திருக்கிறேன் . . .
அன்போடு இனிவரும் நாட்களில் . . . !
இதுதான் அருண் எனக்கு தந்த காதல் சங்கீதம்.அவன் என்னை காதலித்தான். நான் அவனை உயிரினும் உயிராய் நினைத்தேன். ஆனால் விதி எங்களை பிரித்து விட்டது.
ஏன் சார்! அவன் !? சாரி அவர் அப்புறம் உங்களை விட்டு போய்ட்டாரா? நான் கேட்க,
இல்லை இல்லை! தினம் தினம் எங்கள் சந்தோசம் கூடி கொண்டே போனது. நாங்கள் காதலில் மட்டும் மூழ்கவில்லை காமத்திலும்தான். அப்படி நாட்கள் நகர அந்த நாள் எங்களிருவருக்கும் இடியாய் அமைந்தது.
கிழக்கு கடற்கரை சாலை ஓரம் அமைந்த ஒரு காடு.
இருவரும் அங்கே சென்றோம். ஏற்கெனவே ஓரிரு முறையும் சென்றிருக்கிறோம்.அப்படி இன்று சென்றது எங்களிருவரையும் பிரிக்கும்னு கனவிலும் நினைக்கவில்லை.
டேய் அழகா! நீ கிடைத்தது என் பக்கியம்டா! நீலன் சொல்ல!
சரி அதுகென்ன?
நான் எவ்ளோ ரொமாண்டிக்கா சொல்றேன் அதுக்குன்னு கேக்குற இரு இரு! உன்னை சொல்லிகொண்டே அவனை பார்த்தேன்.
சரி போலாம் ஆனால் நான் சொன்னதுக்கு நீ எதுவுமே சொல்லல? நீலன் அருணை பார்க்க,
நான் என்ன சொல்லனும்னு நினைக்கிற? அப்படி நான் எதாவது என் வீட்டில் சொன்னால் வெட்டுகுத்து ஆகிபோய்டும். அதுவும் என் போலிஸ் அண்ணன் சொல்லவே தேவயில்ல போடா நான் இதெல்லாம் என் வீட்ல சொல்ல முடியாது. அருண் கிளம்ப,
நில்லு!
முடியாது...,
நீலன் அருன்கையை பிடித்து இழுக்க அருண் மணலில் பொத்துன்னு விழுந்தான்.
என்னடா உன் பிரச்சனை? புரிஞ்சுக்க நீலன் சில விசயங்களை வெளிப்படையா பேச முடியாது. நாம மேலைநாடுகளில் இல்லை நாம வாழும் இந்திய சமுதாயம் இன்னும் மரபு பழக்க வழக்கதிலிருந்தும் மூட நம்பிக்கையிலும் இருந்து மீள வில்லை. இந்நிலையில் நாம ரெண்டு பேரும் நாம ஓரின பிரியர்கள்னு சொன்னால் அதன் பிறகு வரும் பிரச்சனைகளை சமாளிப்பது கஷ்டம்.நாம இருக்கும் வரை மறைமுகமாக ஒன்றாக வாழ்வோம். அருண் பேச,
அப்படின்னா? சரி நான் எதுவும் பேசல! நீலன் முறைக்க,
மௌனம் நீடித்தது.
உன் மனதை குளிர்விப்பதற்காக
எழுதப்படும் என் கவிதை வரிகள்
தடுமாறி உன்னை வெப்பமாக்கும்போது
விழிகள் தெப்பமாகின்றன . . .!
சொன்ன அருணின் விழிகளில் நீர் கசிந்து கொண்டிருந்தது.
ஹேய்!என் அழுகுற !விடு நான் நாம சந்தோசமா இருக்கதான் உன் வீட்ல பேச சொன்னேன். அதுக்குபோய் . . . விடு ப்ளீஸ்! நீலன் சமாதான படுத்தி கொண்டிருந்தான்.
தன் மனதுக்கு பிடித்தவன் தன்னை ரசிக்கிறான் என்பது தெரிய வரும்போது அருணுக்கு தன்னை தானே ரொம்பவே நேசிக்க ஆரம்பித்தான்.
இருவரின் உள்ளமும் ஒன்றர கலக்க நிமிடங்கள் பல அலைகளில் சங்கமித்தது.
அருண் நான் உனக்காக ஒரு கிப்ட் வாங்கிருக்கேன் நீலன் நீட்ட,
அருண் ஒன்றும் புரியாமல் ஏறிட்டான்.
என்னது இது! அருன்கேட்க,
ரிங்! பிரேஸ்லட்!
எதுக்கு? அருண் ஏறிட!
நாம உடலால் இணைந்தோம் ஆனால் உறவால்? அதுக்கு தான். நமக்குள் ஒரு உறவு வேண்டும். அதுக்குதான் இது!
நாம இந்த ரிங்கை ஒருவர் மாற்றி ஒருவர் போட்டுக்குவோம். நமக்குள் இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்து கொண்டிருக்கும் ஒரு நினைவு பொருளாக இது இருக்கும் நீலன் சொல்ல அமோதித்தான் அருண்.
இருவரும் கடலலை சத்தத்தில் தங்கள் உறவை பலபடுத்த மோதிரம் மாற்றிக்கொள்ள அது மிகபெரும் வைபவமாக அவர்களிருவருக்கும் இருந்தது. காமத்தில் திளைத்த நாட்களில் கூட ஏற்படாத ஒரு அனுபவம் இதில் அவர்களிருவருக்கும் இருந்தது.
மனம் ஒருங்கே சங்கமிக்க அவனுக்காக வாங்கிய பிரேஸ்லட்டை கையில் அணிவித்தான். என்னதான் ஆணானாலும் பெண்ணானாலும் இம்மாதிரியான நிகழ்வுகள் சற்று வெட்கமடைய தான் செய்கிறது. உள்ள பூரிப்பில் அருண் உட்கார்ந்திருந்த நீலன் தோளில் சாய மௌன மொழிகளில் இருவரும் நேரத்தை கடத்தி கொண்டிருந்தனர்.
நேரம் பின்னிரவை கடந்தும் நிலைமை மாறவில்லை புதிதாய் இணைந்த நாளாயிற்றே! பின்னே விலக முடியுமா? இல்லை பிரியதான் மனம் வருமா?
மச்சி சீக்கிரம் வா! ரெண்டு பேர் இருக்காங்க ஆமாம்! சைலண்ட்டா வா! போனில் ஒருவன் இவர்கள் இருவர் அருகே பேச, புரியாத நீலன் செல்போன் காரனை ஏறிட்டான்.பார்த்தவனுக்கு தூக்கி வாரி போட்டது.
அருண் எழுந்திரு! சீக்கிரம். ஒரு பதற்றம் அங்கே தொற்றி கொண்டது.
அடே! நகையை கழட்டுங்க! அதற்குள் போன் பண்ணி வரசொன்னவனும் கூட சேர்ந்து கொள்ள
மச்சி பத்து சவரன் தேருண்டா! சொல்லிகொண்டே
கழட்டு டா தா! முறுக்கு மீசைக்காரன் சொல்ல நீலன் பேசமால் ரிங்கை கழற்றி தர அருண் நீலனை ஏறிட்டான்.
அடப்பாவி கல்யாணம் காதல் காமம்னு சொல்லிட்டு ஆப்ட்ரால் ஒரு திருடன் நகையை கேட்டதுக்கு நாம ரெண்டு பெரும் இணைந்த உறவுன்னு சொல்லி போட்ட மோதிரத்தை எந்த எதிர்ப்பும் சொல்லாமல் கழற்றி தர அருண் கோபமாய் நீலனை முறைக்க,
ஏய்ய்! அங்க என்ன அவனை முறைக்கிற கழற்று! ம்~! முறைத்தான் திருடன்.
அருண் முடியாது முரண்டு பிடிக்க,
டேய்ய் என்ன பற்றி தெரியாது உனக்கு கழற்று மரியாதையாக கத்தியை நீட்ட
என்ன? கத்தியை காட்டுனா பயன்திருவனா? அருண் எகிற
மாமு இவன் சரி வரமாட்டான் போட்டுரு! கூட வந்தவன் சொல்ல,
என்னடா! பத்து சவரனுக்கு போயி கழற்றுரா? பளீர்னு ஒரு அடி அருண் கன்னத்தை பதம் பார்க்க,
அருண் குடுத்துடு போகட்டும்! நீலன் சொல்ல
டேய் நீ பேசாத! இவன் நகையை கேட்டான்னு ஈஸியா கழற்றி தந்துட்ட! நீயெல்லாம் அப்புறம் எதுக்குடா? அருண் நீலனை பார்த்து கோபமாய் கேட்க
ஒடி வந்த அருண் ஒரு புதரில் மறைய பின்னல் துரத்தி வந்தவன் அவன் போன தடம் தெரியாமல் தேடினான்.
அருண் ? அருண்! எங்க இருக்க நீலன் மீண்டும் கத்த!
திருடர்கள் இருவரும் நீலனை பிடித்தனர்.
ஹலோ அண்ணா நான் இங்க இருக்கன் காட்டுல ஆமாம் ரெண்டு திருடன் என்னை துரத்துறாங்க சீக்கிரம் வாங்க அருண் போனில் அவன் போலிஸ் அண்ணனுக்கு தகவல் தெரிவிக்க அவர் கிளம்பினார்.
டேய் இங்க பாரு உன் கூட இருந்தவன் இப்போ எங்க கஸ்டடியில் இருக்கான். ஒழுங்கா நகைஎல்லாம் கழற்றி கொடுத்துவிட்டு போய்டு இல்ல இவன் சாவுதான் உனக்கு பரிசு உனக்கும் அதேதான் திருடர்களில் ஒருவன் சொல்ல,
அய்யோ நீலா அப்படியே தப்பிச்சு போக வேண்டியது தானே ஏண்டா பின்னாடி வந்த! கடவுளே அண்ணன் வர வரை எதுவும் நடக்க கூடாது.அருண் வேண்டிக்கொள்ள,
வெளிய வாடா? கோபமாய் நீலனின் வயிற்றில் ஒரு குத்து விட நீலண் கதறினான்,
அவன் அலறல் அருணை கலக்கமைடைய செய்தது. மீண்டு மீண்டும் தொடர, அருணால் பொருக்க முடியாமல் புதரிலிருந்து வெளிபட்டான்.
நீலனை விட்டவர்கள் அருணை பிடித்தனர். அருண் நகைகளை வலுகட்டாயமாக கழுட்ட அருண் ஏதும் செய்ய இயலாமல் நின்றான்,
ரிங்கை கழற்ற முற்பட அருண் தடுத்தான்.
திருடன் கத்தியை எடுத்து டேய் ஓடு நிலனை மிரட்ட,
நீலன் ஓட ஆரம்பித்தான். அருண் நிலை குலைந்தான். அடே உனக்காக நான் வந்தேன் நீ எனக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும் போறியே? கண்களில் நீர் கசிய மோதிரத்தை கழற்றுவதில் குறியாய் இருந்தான் திருடன்.
நீலன் கீழிருந்த கட்டையை எடுத்து கொண்டு ஓடிவர அருண் கையிலிருந்த மோதிரத்தை வெட்டி எடுத்தான். ஒருவன்.
கட்டையை திருடனின் பின் மண்டையில் அடிக்க அவன் சரிந்தான் இன்னொரு திருடன் அவனை முதுகில் எட்டி உடைக்க கீழே சரிந்தான் நீலன்.
விசிலடித்து கொண்டு போலிஸ் வரும் சத்தம் கேட்டது.
திருடன் நீலனின் இன உறுப்பில் எட்டி உதைக்க நீலன் மயங்கி சரிந்தான்.
கீழே மயன்கிருந்த திருடனை இன்னொரு திருடனை எழுப்ப இருவரும் ஓட நீலன் அவர்களை காலை பிடித்தான் நகைகள் கீழே விழ அவர்களை போலிஸ் நெருங்க நகையை எடுக்காமல் ஓடினர்.
நகையை நீலன் எடுக்க, நீலன் ஓடு போலிஸ்! போலிஸ் உன்னை சந்தேகப்படும் போ! அருண் சொல்ல நீலன் நகைகளை எடுத்து கொண்டு ஓடினான்.
பிடி அவனை பிடி போலிஸ் கத்த அவன் பின்னால் இருவர் ஓடினர்.
இன்ஸ் லத்தி கட்டையை சுழற்றி வீச நீலனின் கால்களில் போய் பட்டது. நீலன் தடுமாற நகை கீழே விழுந்தது, நீலன் சரிவில் புரள ஆரம்பித்தான்.
டேய் அருண் அருண் யாருடா அவன் நீ எப்படி இங்க? அய்யோ இன்ஸ் கத்த,
அண்ணா! அழுதான் அருண்.
அண்ணா நீலன் அண்ணா
என்னடா சொல்ற ?
அண்ணா நீலன் ஒன்னும் பண்ணாத அவன் தான் கூட்டி வந்தான்.
அவனை ஒன்னும் பண்ணாத இழுத்து பேசிய அருண் மூச்சை உள்ளிழுத்து நிற்க நிலைகுத்தி நின்றான் கண்கள் சிலையாய் ஆனது.
உன்னை பலி வாங்குவேன்.என் தம்பி ஆத்மாவாலும் அதை தடுக்க முடியாது. உன் மரணம் என் கையில் தான். அழுதார் இன்ஸ்.
அப்புறம் எத்தனையோ முறை என்னை இன்ஸ் கேட்டார் அந்த ரிங் பற்றியும் பிரேஸ்லெட் பத்தியும் நான் சொல்லவே இல்லை. ஏனோ உன்கிட்ட சொல்ல தோணுச்சி. மனசு ரிலாக்ஸ் ஆன மாரி இருக்கு.
நீலன் நடந்ததை விவரித்து முடித்தான்.
அது ஓகே உங்களுக்கு பிக்ஸ் ?
அதுவா அன்னைக்கு நைட் அவன் இறந்த நினைவிலேயே இருந்தேன். அப்போது தான் முதல்முறையா பிக்ஸ் வந்துச்சு. அப்புறம் எங்க அம்மா இறந்தப்போ! கடைசியா உன்கிட்ட நான் லவ் சொன்னப்போ! கண்களில் கண்ணீர் சொட்டியது.
ச்சே ! அருண் உங்களை எவ்ளோ லவ் பண்ணிருக்கார். நீங்கதான் அவரை ஹர்ட் பண்ணிருக்க நான் கனத்த இதயத்தோடு சொன்னேன்.
ஆமாம் நான் அவனை ஏமாத்திட்டேன். அந்த ஏக்கமோ இல்லை அன்று அந்த திருடன் உதைத்த அடியோ தெரியல அன்றிலிருந்து என் ஆண்மை எழும்பவில்லை.நீலன் சொல்ல,
ச்சே அப்படி இருக்காதுன்னு நினைக்குறேன்.
நீங்க குற்ற உணர்ச்சில இருக்குறீங்க அதான்.
சரி அந்த போலிஸ் இன்ஸ் இப்போ இன்னைக்கு பேசினீங்களே அவர் தானே? ஆமாம் அவர் தான்.நீலன் என் தோளில் சாய நான் அணைத்தேன் அவனுக்குள் எதோ ஒரு மின்னல் வெட்டியது.புரியாத ஓர் உணர்வு அவனை ஆட்கொண்டது.
சரி நீ கேட்ட நான் சொல்லிட்டேன். உன் டிசிசன் என்ன? நீலன் கேட்க,
நாளைக்கு ரெடியா இருங்க சொல்றேன்.
******
விடியல் சூரியனை தூசு தட்டி பிரகாசிக்க செய்து கொண்டிருந்தது.
பிரபல மருத்துவமனை...
அங்கே இன்ஸ் நிற்க எனக்கு பதற்றமாய் இருந்தது.ஒருவேளை என்னை கண்கநிக்கிராரோ சந்தேகம் எழவே செய்தது. ஒன்னும் புரியல நீலனை சந்தித்தது முதல் எல்லாமே என்னை சுற்றி வட்டமிடுவது போல் இருந்தது.இன்ஸ் இடம் முகம் காட்டாமல் மறைத்து கொண்டு உள்ளே போனேன். இன்ஸ் நிட்சயம் நீலனை பழிவாங்க காத்திருக்கிறார் என்றே தோனுகிறது. அதை தடுக்கணும். நீலன் சார் போலாமா? அருண் கேட்க,
இங்கெல்லாம் ஏன்? நீலன் கேட்க,
நீங்க தீவிர டிப்ரசன்ல இருக்கீங்க தவிர செக்ஸ் ஆகிடிவிட்டியும் ஒழுங்கா இல்லை அப்புறம் எப்படி? அதான் இங்க கூட்டி வந்தேன் கடுகடுபாய் சொல்ல நீலன் முகம் கோணியது.
உள்ளே . . . ,
டாக்டர் இவர் பேர் நீலன் இவர்க்கு சில ப்ராப்ளம் இருக்கு.
சொல்லுங்க டாக்டர் சொல்ல,
நீலன் என்னை ஏறிட்டான்.
சார் இவர் ஒரு பொன்னை லவ் பண்ணார் அவள் இறந்துட்டா!? அவள் சாவுக்கு இவர் காரணம் நினைக்கிறார். இதனால் அவர் ஆண்மை எழும்பவில்லை நான் மறைத்து திரித்து கூறினேன்.
சார் இவர் ஒரு பொன்னை லவ் பண்ணார் அவள் இறந்துட்டா!? அவள் சாவுக்கு இவர் காரணம் நினைக்கிறார். இதனால் அவர் ஆண்மை எழும்பவில்லை நான் மறைத்து திரித்து கூறினேன்.
அவர் நீலனிடம் எதேதோ கேட்க அவனும் சொன்னான்.
இட்ஸ் சிம்பிள் அருண், அவர் ஸ்ட்ரெஸ் மற்றும் டிப்ரசன்ல இருக்காரு தவிர அவருக்கு அந்த இடத்துல அடி பட்டதா சொல்றார். பிசிகல் பிராப்ளம் ரொம்ப ஈஸி. கிளியர் பண்ணிடலாம் பட் மனசுக்கு மருந்து அவர்கிட்டையும் சுத்தி இருக்குறவங்க அக்கறையும் தான் மருந்து. ரெண்டு மூணு கவுன்சிலங் போதும்னு நினைக்கிறேன். அவர் தெளிவாயிட்டா எல்லா பிராப்ளமும் முடிஞ்சுது.
சரி அவர் திடிர்னு பயபுடுற மாறி நடந்துகுறாரா? மேலும் கவன குறைவாக நடந்துகுறாரா? டாக்டர் கேட்க,
ஆமாம் சார் தீடீர்னு தூக்கத்திலிருந்து எழுந்து அலறுறார். கவன குறைவா பாத்ரும்னு பிரிட்ஜ்ல ஒன்னுக்கு போறார்.
திடீர்னு கோப படுறார். அப்புறம் கூலா பேசுறார்.
பிக்ஸ் வருது. நான் அடுக்கி கொண்டே போக
அருண் ஒரு விஷயம் கவனிச்சிங்களா? அவர் எல்லாமே ஒரு சீரியல் ஆக்டிவிட்டி மட்டுமே இருக்கு அவர் அவங்க லவர் இறந்ததை மட்டுமே நினைக்கிறார்.அவங்களை தான் கொன்னதாக நினைக்கிறார். அவங்க அண்ணன் சும்மா விட மாட்டன்னு சொன்ன விஷயம் அவரை திரும்ப திரும்ப நினைக்க வைக்குது.தூக்கத்திலும் தான் அதனால் தான் நீலன் அலறி எழுகிறார்.
கண்ணு முன்னால் நடந்த கொலை தான் அவரை இப்படி மாற்றி இருக்கு யார்கிட்டயும் பேசாம தனியா? இருந்து இப்படி மாரி இருக்கார்.
நீலன் என்னிடம் பேச ஆரம்பித்தான்.
நன்றி அருண் மனம் பிரியா இருக்குற மாறி இருக்கு.
இறைவன் தாங்க முடியாத எதையும் நமக்கு தருவதில்லை. எல்லா மனிதர்களும் வெளியே சொல்ல முடியாத சில கருப்பு பக்கங்களும் இருக்க கூடும் அதுபோலதான் உங்களுக்கும்.பிரியா விடுங்க அருண் சொல்ல
இல்ல அருண் என் துயரம் எனக்குள்ள இருக்கட்டும்னு நினைச்சேன்.
ஒற்றி எடுக்கும் துயரம் எனில் நான் வாங்கிகொள்வேன்.தேற்ற முடியாத துயரம் எனில் நான் தாங்கி கொள்வேன். இனி எதையும் பூட்டி வைக்காதீங்க மறைக்காம பேசுங்க!
மழைக்காலம் வெயில்காலம் என் எந்த காலம் மாறினாலும் மனிதனின் நினைவு காலமும் நடந்ததை நினைத்து பார்க்கும் காலமும் மாறுவதே இல்லை. அப்படிதான் நானும் நீலன் சொல்லி பெருமூச்சு விட,
நான் அவனை பார்த்தேன்.
அவன் என்னை ஏற்க மாட்டாயா? என்பது போல் பார்த்தான்.
இருவாரம் கழிந்தது
மூன்று கவுன்சலிங் முடிந்த நிலையில் டாக்டர் அழைத்திருந்தார்.
போலிஸ் ஜீப் எதிரே வர இருவரும் பார்த்தோம். இன்ஸ் வண்டியிலிருந்து இறங்க பயத்தோடு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தோம்.
இந்த இரண்டு வார இதை பட்ட காலத்தில் இன்சை நேருக்கு நேர் பார்க்காமல் தவிர்த்தேன் இன்று நேராக மாடி கொண்டேன், ஒருவேளை ஆதாரங்களை திரட்டி வந்திருப்பாரோ சந்தேகத்தை கிளப்பியது.
நீலன் சார் நீங்க ஏதும் பேசாதிங்க நான் கேக்குறேன். அவரை பார்த்து சொன்னேன்.சார் இன்சை ஏறிட,
மனதுக்குள் பயமிருந்தாலும் தைரியமாய் அவரை பார்த்தேன்.
மனதுக்குள் எண்ணற்ற கேள்விகள் துளைத்தது. ஒருவேளை அன்று பைக்கில் நிற்காமல் சென்றது தெரிந்திருக்குமோ? இல்லை நான் பைக்கை அவரிடமிருந்து திருடியது தெரிந்திருக்குமோ? அதுவும் இல்லைனா ஏற்கெனவே நீலனுக்கு முன் பகை அதுவா? இருக்குமோ? யாருக்கு டார்கெட் வச்சிருக்கான்னு தெரியலையே? நான் சார் இழுத்தேன்.
அருண் உன்னை அரெஸ்ட் பண்றேன். பைக் எடுத்தற்காக? இன்ஸ் சொல்ல
சரிதான் இன்ஸ் இன் டார்கெட் நான்தான். என்னவேச்சு நீலனுக்கு ரூட் போடுறார்.மறுபடியும் நான் பலிகடா! நடக்கட்டும். சார்! நீலன் சார்!
நீலன் சார்! நான் அழுத வண்ணம் பார்க்க நீலன் தலையை குனிந்தான்.
சாரி அருண்! நீலன் ஏறிட
அடப்பாவி அன்னைக்கு அந்த அருணை திருடன் கையில் பலி கொடுத்த இப்போ போலிஸ் கைல என்னை பலி கொடுக்குற உனக்கு போய் எல்லாத்தையும் செஞ்சேன் பாரு நான் அவனை பார்த்து கத்தினேன்.
ம்! அவன் எப்படி காப்பாற்றுவான்! என் தம்பி கதிதான் உனக்கும் என்ன சின்ன ட்விஸ்ட் என் தம்பி ரவடி கையால் செத்தான். நீ போலிஸ் கையால்! உன்ன அடிக்கிற அடி அவனை ஆட்டிபோடனும்! இன்ஸ் சொல்லிகொண்டே என்னை நெருங்கினார்.
சார் நீங்க நினைக்குற மாதிரி இல்லை எனக்கு அழுகை பீறிட்டது. எல்லாம் முடிந்தது போல் இருந்தது.
போலிஸ் என்னை அழைத்து செல்ல, நீலன் என்னை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. இன்ஸ் என்னை ஸ்டேசனுக்கு அழைத்த போது பேசாமல் மரமாய் நின்றார்.
போலாமா வரீயா? நெருங்கி வந்து அருணை பார்த்து இன்ஸ் கேட்க,
சார் அதுவந்து. . . அருண் இழுக்க
இங்க பாரு எனக்கு டைம் இல்ல நீயா வந்தால் போலாம் இல்ல அடித்து கூப்பிட்டு போவேன் மிரட்டும் தொனியில் பேச
போலாம். அருண் இன்ஸ் அருகே சென்றான்.
போலிஸ் பாளார்னு ஒரு அறைவிட அதிர்ச்சியில் மயங்கி விழுந்தான் அருண்.
தண்ணீர் தெளித்து எழுப்ப அருண் அழுகையில் கத்தி கொண்டிருந்தான். வா தர தர வென இழுத்து செல்ல,
ஒருநிமிஷம் . . . குரல் கேட்டு இருவரும் நீலனை பார்த்தனர்.
இன்ஸ் நீலனை முறைக்க நீலன் என்னை பார்த்தான்.
சார் நான்தான் உங்க தம்பியை கொன்றேன். இவனுக்கு சம்பந்தம் இல்லை நான் வரேன் இவனை விட்ருங்க.
சபாஷ்! எங்க இருந்து இந்த வீரம் வந்துச்சு. வெல்டன் இன்ஸ் சிரிக்க நீலன் வெறுப்பானான்.
சார் அதெல்லாம் இல்லை பைக் நான்தான் எடுத்தேன். வாங்க ஸ்டேசன் போலாம் அருண் சொல்ல,
போதும் நிறுத்து றீங்களா? நான்தான் வரன் சொல்றன் இல்ல அப்புறம் என்ன நீலன் கேட்டான்.
நீ பேசாத நீ ஒன்னும் என்ன காப்பாற்ற தேவையில்ல! அருண் கத்தினான்.
ரெண்டு பெரும் நிறுத்துங்க! இன்ஸ் கத்த, டேய் நீலன் அன்னைக்கு நீமட்டும் என் தம்பியை காப்பற்றி இருந்தா நான் சந்தோஷ பட்டிருப்பேன் இன்னைக்கு நீ இந்த அருன்க்காக பழி ஏற்கிற அன்னைக்கு உன்ன காப்பாத்த வந்த என் தம்பியை அநியாயமா பலி வாங்கிட்ட நியாயமா?
அன்னிக்கு உயிர் போகும் வேளையில் உன்னை ஒன்னும் பண்ண கூடாதுன்னு அவன் சொன்னதால தான் நான் உன்ன ஒன்னும் பன்னல நீ தான் அவனை கொன்னதா நினைச்சேன். ஆனால் நீ பார்க்ல இந்த அருண் கிட்ட பேசும்போது எல்லாத்தையும் கேட்டேன்.
என் தம்பியின் பெயர் இந்த அருணுக்கு இருப்பதாலோ என்னவோ மீண்டும் நீ இவனை விரும்புற அவன் நினைவு இவனிடத்தில் பிரதி பலிப்பதாக நீ நினைக்குற தப்பில்ல. அதுதான் உன்னை மாற்றி இருக்கும்னு நினைக்குறேன். ஒருவேளை என் தம்பியின் சாவுக்கு முன்னேயும் நீ டிப்ப்ரசன்ல இருந்திருக்கலாம் ஓரின உணர்வு சட்டபடி குற்றம் அதை நாம் செய்றோம் அப்படின்னு நீ நினைச்சிருக்கலாம் அது கூட உன்னை இப்படி சோர்வடைய செய்திருக்கும். சட்டப்படி ஓரின உணர்வு தவறு ஆனால் என் மன சாட்சி படிஇது சரி சட்டமும் ஒரு நாள் ஏற்கும். எது எப்படியோ என் தம்பி திரும்ப போவதில்ல ஆனால் என் இன்னொரு தம்பி இந்த அருண் உனக்குதான் உன் மனச உன் ஓரின உணர்வ நான் புரிஞ்சுக்கிறேன் மதிக்கிறேன். நீ எப்போ இன்னொருவனுக்காக பழி ஏற்க துணிந்தாயோ அப்பவே நீ மாறிட்ட திருந்திட்ட சும்மா போட்டு வாங்குனேன். நீங்க சந்தோசமா இருங்க! சி யு இன்ஸ் கிளம்ப ஹாஸ்பிட்டலினுள் நுழைந்தனர்.
வாங்க டாக்டர பாக்க போலாம். அருண் கூட்டி போக, டாக்டர் வரவேற்றார்.
நீலன், மன அழுத்தம் ஏற்படுத்தும் சில சூழல்கள் வீட்டிற்கு வெளியில் இருந்துதான்ஏற்படுகிறது. அதனை அப்படியே வெளியே விட்டு விட வேண்டும். வீட்டிற்குள்கொண்டு வந்து தேவையில்லாமல் அதை விவாதிக்க கூடாது.மன அழுத்தம் ஏற்படுத்தும் சூழல்களை சமாளிக்கப் பழகவேண்டும். தேவையில்லாமல் காட்டு கத்தல் கத்தி இருப்பவர்களை அச்சுறுத்தக்கூடாது.தேவையற்ற விவாதம் வேண்டாம் புரியுதா நீலன், டாக்டர் கேட்க.
ம்! தலையாட்டினான் நீலன்.
தனிமையை நாடுங்கள்.மனஅழுத்தமான சூழலில் தனிமையை நாடுவது நல்லது. அது தேவையற்ற பிரச்சினைகள்ஏற்படுவதை தடுக்கும். உங்கள் சுற்றி உள்ளவர்களுக்கும் நீங்கள் ஏன் டிஸ்டென்ஸ்மெய்ன்டெய்ன் செய்கிறீர்கள் என்று தெரியும்.வார இறுதிகள், விடுமுறை நாட்களைமிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது எனமனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.உங்கள் உறவுகளுடன் இனிய சூழலை கடைபிடியுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை உறவுகள் மீது திணிக்காதீர்கள். உங்களின் மன அழுத்தம்உறவுகளுக்கும் பாதிப்பபை ஏற்படுத்தும் எனவே மனதை லேசாக்கி உறவுகளைஉற்சாகப்படுத்துங்கள். மன அழுத்தமான சூழ்நிலையில் உங்களின் நடவடிக்கைகள்உங்கள் உறவுகளை எவ்வாறு பாதிக்கிறது என்று கேளுங்கள் டாக்டர் சொல்லி கொண்டிருக்க, நீலன் டாக்டரை வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.
கவலைதான் மன அழுத்தத்தின் ஊற்றுக்கண். எனவே கவலைக்கு கட்டுப்பாடுபோடுங்கள். கவலை ஏற்படுவதை கட்டுப்படுத்துவது உங்கள் கையில்தான்இருக்கிறது. மனச்சோர்வை தவிர்க்க வேலைகளை தொடர்ச்சியாக செய்யாமல் இடையிடையே ஓய்வு எடுத்தல் போன்ற செயல்களை செய்யுங்கள் டாக்டர் நிறுத்தாமல் சொல்லிமுடிக்க நீலன் ஒரு பெரு மூச்சை விட்டான். எல்லாம் புரியுது டாக்டர் கோபம் வந்தா கட்டு படுத்தவே முடியல அதுதான் பெரிய பிரச்சனை நீலன் சிணுங்க,
உங்களுக்கு தாங்க முடியாத கோபம் ஏற்பட்டால் வாயால் சொல்லாதீர்கள்.அதையெல்லாம் ஒன்றுவிடாமல் எழுதுங்கள். மணல் பரப்பில் எழுதுங்கள். அதுவும்அலைகள் வந்து மோதுகின்ற கடலோர மணல் பரப்பில் எழுதுங்கள் அப்படின்னு நெப்போலியன் ஹில்லும், மனதில் அமைதி இருந்தால் அவ்வாழ்க்கையே சொர்க்கம். மனதில் அழுத்தம் இருந்தால் அதுவே நரகம். என்று - ஷேக்ஸ்பியரும் சொல்லி இருக்கார் அதுபோல உங்களை நீங்களே மாற்றிக்க முயற்சியுங்கள் Top of ForBottom of Form
உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். அது தானாக உங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.எதற்குமே வளைந்து கொடுக்காமல் இருப்பதுதான் மன அழுத்தத்திற்கு காரணமாககூறப்படுகிறது. ஒரு சில விசயங்களில் நாணலைப்போல வளைந்து கொடுத்தால் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை. இது உங்கள் லவர் விசயத்துக்கு ரொம்பவே பொருந்தும். என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்துபிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள். மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள். டாக்டர் சொல்லி முடிக்க ஒரு நிம்மதியுடன் வெளியேறினான் நீலன்.
அருண் அவர் குனமாயிட்டார் திரும்பவும் அவருக்கு தனிமை மன அழுத்தம் ஏற்படும் நிலைகளை குடுக்காதீங்க! நலமா பார்துக்குங்க. இன்னும் மூணு கவுன்சிலிங் வாராவாரம் ரெகுலரா வாங்க பிசிகல் பிராப்ளம் சால்வ் பண்ணிடலாம். அப்புறம் மாசம் ஒருமுறை கூடிவாங்க ரெகுலர் மன்த்லி செக்கப் ஒரு வருஷம் பார்த்தால் அவர் ஸ்டேடஸ் தெரியும். போயிட்டு வாங்க! டாகடர் சொல்ல நிம்மதி அடைந்தேன்.
அருணுக்கு நிம்மதி பெருமூச்சுடன் மிடுக்கு நடையுடன் வெளிவர அருணின் தோளில் வந்து நீலன் சாய்ந்தான். ரொம்ப தேங்கஸ்! அருண் நீ எனக்கு கிடைக்க நான் புண்ணியம் பண்ணி இருக்கணும்.ஐ லவ் யு சோ மச். நீலன் விசும்ப நீலனின் பாரம் தாளாமல் அருண் சுவரில் சாய டேய் இது ஆஸ்பிட்டல் நான் சொல்ல நீலன் வெறித்தான்.
ஐ டூ லவ் யு நான் சொல்ல, நீலன் அதுக்கு ஹே எனக்கு குனமாயிடுச்சி அருண் லவ் சொல்லிட்டான் கத்தி கொண்டே ஓட! அடப்பாவி அப்போ சீரியஸ் ஆ மெண்டல் இப்போ சந்தோசத்துல மென்டலா! நான் சிரித்து கொண்டே ஓடி போய் அவன் கையை பிடித்தேன்.
மீண்டும் ஐ லவ் யு அருண்! நீலன் என் தோளில் சாய்ந்தான். நான் அவனோடு சாய நினைத்து இப்போது அவன் என்னோடு சாய்கிறான்.சந்தோசத்தில் அவனோடு இருகினேன்.
நண்பர்களே இன்றைய சூழல் நீலனை போன்றுதான். சட்ட அங்கீகாரம் கிடைக்காத நிலையில் வாழும் வாழ்க்கை ஒருபுறம் இருக்க சமுதாய பயம் மறுபுறம்.
அதோடு நம்மிடையே ஏமாற்றும் சூழல் அரங்கேறும் அவல நிலை.நிமிட காமத்துக்காக ஏமாற்றும் கயவத்தனம். முதல் காதலில் ஏமாறும் நிலை. அல்லறு துணையை பறிகொடுக்கும் நிலை. இன்னும் பல சூழல்கள் நார்மல் வாழ்க்கையில் இருந்து நம்மை இருட்டுக்குள் தள்ளுகிறது. இதனால் மன பாதிப்புகளுக்கு நம்மையும் அறியாமல் தள்ள படுகிறோம்.
இந்த கதை படிக்கும் வாசகர்கள் உண்மை நிலை புரிந்து வாழ்க்கையை ஆரம்பித்தால் எனக்கு மகிழ்ச்சி. முதல் காதல் தோற்றுதான் மறு காதல் வாழும் என்றில்லை. முதல் காதலும் வெற்றி பெறலாம் சரியான தெரிவிருந்தால்!. முதலில் காதலித்த அருண் தன் துணையை சரியாக தெரிவு செய்யல. இரண்டாவது அருணும் அப்படிதான். ஆனால் ஒரு சின்ன மாறுதல், இரண்டாவது அருண் நீலனை திருந்த செய்து ஏற்றுகொண்டடுதான்.
அருமையாக இருக்கு நண்பா...சில இடங்கள் அனைவரும் சந்தித்த நிகழ்வாக இருப்பதால் கதையில் லயிக்க முடிகிறது...முக்கியமா happy ending நல்லாருக்கு...நீங்கள் சொல்லும் depression sexuala மட்டுமின்றி நம் தன்னம்பிக்கையை குறைக்கும்...so நீங்கள் சொல்ல வந்த msg உடன் "கொஞ்சம் control in emotion கொஞ்சம் self dependant ஆக இருக்கனும் என்ற thinking" சேர்த்தோம் என்றால் all is well ....உங்களின் கதை முடிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....இது போல் இன்னும் நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள்...
நன்றி மடல்
கமென்ட் அளித்த அனைத்து நபர்கள் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் வாசித்த நபர்களுக்கும் நன்றி.
cutenellaimdu செக்மென்ட் புதுசுன்னு சொன்னிங்க ரொம்ப நன்றி ஹா ஹா ன்னு நீங்க போட்டதிலேயே தெரியுது நிச்சயம் என் ஸ்டோரில இருக்குற காமெடி உங்களுக்கு புடிசிருக்கு.
just for fun ஆரம்பத்திலிருந்தே உங்க கமென்ட் உங்க எதிர்பார்ப்ப நீங்க கமென்ட் வழியா சொன்னீங்க முழு ஆதரவு தந்தற்கு நன்றி மேலும் என் கதை பற்றிய முழு ஒபினியன் சொன்னால் நான் சந்தோஷ படுவேன்.
samram உங்கள் கமேண்ட் இம்ப்ரேசிவ் ன்னு தான் சொல்லணும் ஒவ்வொருமுறை உங்கள் கமேட் பார்க்கும்போதும் நீங்கள் என் கதையை ரொம்பவே வரிசை படுத்தியது. நன்றி..
tirupurbabu கதை ஜாலி விறுவிறுப்பு அருமைன்னு ரொம்பவே கவர் பண்ணிடிங்க ரொம்ப நன்றிங்க.
anbaithedi இவருக்கு நான் நன்றி சொல்லியே ஆகணும் ஏன்னா இவர் இல்லனா கதை பிரசுரம் ஆகி இருக்காது. அதுக்கும் மேல என்ன ரொம்பவே கவர் பண்ணி கமேன்ட்லாம் போட்டு என்னையும் ஒரு கதை எழுதுரவனா மாத்திட்டாரு. நன்றிங்க. உங்களுக்கு என்கிட்ட வேற “கதை” எதிர்பார்ப்பு இருந்தா சொல்லுங்க ப்ளீஸ் ட்ரை பண்றேன்.
shivakutty நான் எழுதிய டபுள் மீனிங்க ரொம்ப ரசிச்சிருக்கீங்க மேலும் கதைக்கு கமென்ட் போட்டு கதையை ஊக்கு விச்சிசீங்க நன்றி.
thiva தொடர்ந்து rock பண்ண சொன்னீங்க பண்ணனான்னு தெரியல பட் ரொம்ப தேங்க்ஸ்
Prabhujp பிளாஸ்பேக் தெரிஞ்சிக்க நீங்க ஆசைப்பட்டது என்ன ரொம்பவே யோசிக்க வெச்சது ரொம்ப நன்றி.
jo ஸ்டார்டிங் மட்டும் நல்லா இருக்கு சொல்லிட்டு அப்புறம் ஆளையே காணோம் உங்களை தனியா பாராட்டுறேன் நன்றி.
KUZHAGAN ஜோடி புதுமைன்னு சர்டிபிகட் தந்தற்கு நன்றி.
yugan லாஸ்ட் ஆ வந்து கமன்ட் பண்ணினிங்க நன்றி.
ரொம்ப சந்தோஷமான முடிவு ஆனால் நீலன் காரெக்டர் என் வெறுப்பை சம்பாதித்தது நிஜம் ஒரு தருணத்தில்.....ஒரு வழியாக அருண்களின் புண்ணியத்தில் அவரை மன்னிக்க வேண்டியதா போச்சு...
அருண் போல எந்த சுழலிலும் விட்டு கொடுக்காத தோள் கொடுக்க ஒருவன் கிடைத்தால் எல்லோர் வாழ்வும் சுகமே.....
உங்கள் போன்றோரின் நட்பும் ஆதரவும் மேலும் நீங்கள் தரும் அழகான பின்னூட்டமும் என்னை ரொம்பவே யோசிக்க வைத்தது. தொடரும் உங்கள் ஆதரவும் என்னை மகிழ்ச்சி ஆக்குகிறது. final opinion க்கு நன்றி.