Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கண்ணீர் தேசம் - 1


கவி

Status: Offline
Posts: 67
Date:
கண்ணீர் தேசம் - 1
Permalink   
 


கனடாவின் குளிர் அவனை ஒன்றும் செய்யவில்லை .....

காலத்தின் எத்தனையோ மாற்றங்களால் இறுகி போன பாறைப் போல 
 
அவனும் இறுகி இருந்தான் ....
 
எங்கேயோ கேட்கும் அவலக்குரல் ....
 
காற்றில் பாஸ்பரஸ் குண்டின் மணம் ....
 
கண்ணெதிரே தன் உறவுகள் சாகும் காட்சி ....
 
அடுத்த நிமிடம் தான் இருப்போமா ...?
 
தன்னுடன் வருபவர் இருப்பாரா ? எனும் பயம் ...
 
எதுவும் இல்லை இங்கே ....
 
ஆனாலும் அவனால் அங்கே நிம்மதியாக இருக்க முடியவில்லை ....
 
"சமரா ...!"
 
அழைத்தவன் வந்தியன் ...
 
கனடாவின் முக்கியமான தொலைக்காட்சி  ஊடகத்தில் பணிபுரிபவன்..
 
வந்தியன், " சமரா , உன் மனதின் காயங்களை நினைவுகள் என்னும் 
 
ஊசியால் குத்திக் கிளறாதே ....மிஞ்சுவது வலிகள் மட்டுமே ..."
 
"வந்தியா , நடந்து முடிந்த அத்தனையும் என் மனதை 
 
சிதைத்து கிழித்துவிட்டன ...நீ சொன்ன அதே நினைவுகள் என்னும் 
 
ஊசியால் அதை தைத்துக் கொண்டிருக்கிறேன் .....
 
சிறகு வெட்டிய பறவைக்கு எதைக் கொடுத்து ஈடு செய்வாய்....
 
நீ அழைப்பதால்தான் என் பெயர் இன்னும் நினைவில் இருக்கிறது .....
 
இறந்தவனைப்  பொதுவாய் பிணம் என்பது போல 
 
நம்மைப் பொதுவாய்  அழைக்கும் பெயர் "அகதி"  ....
 
இரண்டும் ஏறக்குறைய ஒன்றுதான் ......
 
பிணம் செத்து பரதேசம் (மேலுலகம்) செல்கிறது......
 
அகதி சாகாமல் பரதேசம் (வெளிநாடு) செல்கிறான் ..."
 
"சமரா, நம் இனத்தின் மிச்சமாய் இருக்கும் நாம் வாழ்க்கையின் அடுத்த 
 
கட்டத்துக்கு சென்றுதான் ஆகவேண்டும் ....
 
நம் தலைமுறையை  அடுத்தவர் தேசத்திலா தொடர செய்வது .....
 
சொல்லவேண்டும் எல்லாவற்றையும் சொல்லவேண்டும் ....
 
புலிகளை நயவஞ்சகமாய் தோற்கடித்த நரிகளின் கதையை சொல்லவேண்டும்....."
 
சரி கிளம்பு ... நாம் இன்று நோபலைச் சந்திக்க வேண்டும் "
 
நோபலின் பெயர் கேட்டவுடன் சமரனின் மனதில் உணர்ச்சிக் கொந்தளிப்பு ......
 
இந்த நிமிடம் சமரன் கனடாவில் இருப்பதிற்கு அவன் மட்டுமே முழுக்காரணம்.....
 
அவனை சமரன் முதன்முதலாக சந்தித்தது ஈழத்தில் ...
 
அந்த நிமிடம் ....
 
 
 


-- Edited by srinivasan on Saturday 7th of December 2013 12:40:05 PM

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

பிணம் செத்து பரதேசம் (மேலுலகம்) செல்கிறது......

அகதி சாகாமல் பரதேசம் (வெளிநாடு) செல்கிறான் ..."
//................

கொன்னுட்ட.....

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

காற்றில் பாஸ்பரஸ் குண்டின் மணம்//குண்டு மணக்குமா......அந்த சூழலில்....

__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 93
Date:
Permalink   
 

Good starting......

 



__________________
nada


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Srinivasan,

Welcome back with your new story. Happy to hear your story about Our Brothers and Sisters in Yilangai. I hope your small contribution
may makes a big change for them. Keep Rocking Bro.

my Fav line:-

வந்தியா , நடந்து முடிந்த அத்தனையும் என் மனதை

சிதைத்து கிழித்துவிட்டன ...நீ சொன்ன அதே நினைவுகள் என்னும்

ஊசியால் அதை தைத்துக் கொண்டிருக்கிறேன் .....

சிறகு வெட்டிய பறவைக்கு எதைக் கொடுத்து ஈடு செய்வாய்....

நீ அழைப்பதால்தான் என் பெயர் இன்னும் நினைவில் இருக்கிறது .....

இறந்தவனைப் பொதுவாய் பிணம் என்பது போல

நம்மைப் பொதுவாய் அழைக்கும் பெயர் "அகதி" ....

இரண்டும் ஏறக்குறைய ஒன்றுதான் ......

பிணம் செத்து பரதேசம் (மேலுலகம்) செல்கிறது......

அகதி சாகாமல் பரதேசம் (வெளிநாடு) செல்கிறான்

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

அருமையான நடை...வலிகளை ஒவ்வொரு வார்த்தைகளும் சொல்கிறன...
...நம் இனத்தின் மிச்சமாய் இருக்கும் நாம் வாழ்க்கையின் அடுத்த
கட்டத்துக்கு சென்றுதான் ஆகவேண்டும் ....தன்னம்பிக்கையுடன் உயிர்த்தெழும் வாசகங்கள்...gd keep it up...எண்ணங்கள் தான் பெரிய நிகழ்வுகளக்கான காரணம்...கண்டிப்பாக நல்லது நடக்கும்...வாழ்த்துக்கள் தொடருங்க...

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

cntnue

__________________


புதியவர்

Status: Offline
Posts: 12
Date:
Permalink   
 

eluthu nadai

varthaigalil vali therigirathu!!!!!!


mothathil super da macha

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard