தினமும் வழக்கமாக அந்த பஸ்ஸில் வரும் அந்த வயதான பெண்மணி அந்த பஸ்சின் கண்டக்டருக்கு பாதாம், முந்திரி போன்றவைகளைத் தருவாள். நெகிழ்ந்து போன கண்டக்டர் "தினமும் எனக்கு இவைகளைத் தருகிறீர்களே நன்றி அம்மா...ஏன் நீங்களே இவற்றைச் சாப்பிடக் கூடாது?" "இல்லை மகனே...எனக்குப் பற்கள் இல்லாததால் அவற்றைக் கடிக்க முடிவதில்லை..." "அப்புறம் ஏன் இவற்றை வாங்குகிறீர்கள் பாட்டி?" "ஏன் என்றால் இவற்றைச் சுற்றியுள்ள சாக்லேட் எனக்கு ரொம்பப் பிடிக்கிறது மகனே..."