சில மொழி கற்ற என்னை என் தமிழ் மொழி என்னை வழிநடத்துகிறது.நானும் என் தாய் மொழியை எங்கெல்லாம் பயன்படுத்த முடியுமோ அங்கே பயன்படுத்துவேன்.
“திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் மண்ணோடும் மக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழ்” என சிறப்பிக்கிறார் பாவேந்தர் பாரதிசான்.
“யாமறிந்த மொழிகளிலே தமிழை போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார் பாரதியார்.
ஆகையால் தமிழன் என்னும் உணர்வோடு எங்கெல்லாம் தமிழை பயன்படுத்த முடியுமோ உணர்த்த முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு ஒரு அவசியாமான தகவலை இங்கு வைக்கிறேன்.
எனக்கு கதை எழுதுவது பிடிக்கும். என் முதல் கதையை சில நாட்களில் பதிவு செய்கிறேன். அன்பும்ஆதரவும் தாரீர்.