நான் சேர்த்து வைத்த செல்வமெல்லாம் என்னைவிட்டு போக வேண்டும்! ஏக்கம் இல்லாமல் எல்லாம் கிடைத்துவிடும் நிலை மாற வேண்டும் வாழ்க்கையின் பொருளுக்காக ஏங்கி தவிக்க வேண்டும் வறுமைகோட்டுக்குக் கீழே நானும் மனிதன் போல் வாழ! வேண்டும்.
ரியல் எஸ்டேட் விற்றது போக பாரதி கேட்ட காணி நிலமும் மீதம் வேண்டும்! மழைக்காக ஏங்க வீண்டும் மனம் குளிர நனைய வேண்டும்! நானே உழ வேண்டும் தானே எழ வேண்டும் விதைத்தவை எல்லாம் மண்ணை முட்டி முட்டி முளைக்கும் ரகசியம் ரசிக்க வேண்டும்!
கொழுப்புக்காக விடுத்து உழைப்புக்காக ஓட வீண்டும்!
ஓடி ஓடி உழைக்க வேண்டும் வியர்வை வழிய வேண்டும் வியர்வை வாடையில் என் முன்னோர் வாசனை வீச வேண்டும்!
ஆளுக்கொரு அறை இருக்கும் அடிக்குமாடி தேவையில்லை! அனைவரும் பேசி சலித்து தூங்க வசதியாக அறையில்லா ஒரு வீடு போதும் குறைவில்லாமல் நான் வாழ!
ஜன்னல் சிறைகள் தாண்டி வெட்ட வெளியில் கட்டாந்தரையில் நிலவை ரசிக்க வேண்டும்!
உடம்பு வலிக்கனும் வயிறு பசிக்கனும் முகம் சிரிக்கனும் நா ருசிக்கணும் அனைத்தும் நான் ரசிக்கணும் ஐம்புலன்கள் எல்லாம் ஆயுள்வரை வாழனும்! கனவொன்றும் இல்லை நன்றாக தூங்கவேண்டும் என்பதை தவிற!
பிரிஜ் எனும் மார்ச்சுரியில் பதப்படுத்திய நேற்றைக்கு இறந்த தேங்கா சட்னி தேவையில்லை! பழையதே ஆனாலும் சுடச்சுட ருசிக்கும் சுகம் வேண்டும்!
ஏர் கன்டிஷன் உறிஞ்சது போக மிச்சம் வீசும் எச்சம் வேண்டாம்! நான் விதைத்த மரத்துக்கடியில் எனக்கான ஆக்சிஜன் ருசிக்க வேண்டும்!
கார்ப்பரேட் கணிணிக்கு அடிமை மறந்து என் கன்னிக்கு மட்டுமே அடிமையாக வாழ்க்கை மகிழ வேண்டும்!
தினமும் அவளோடு தூங்க வேண்டும் மனமும் ஆவாலாக ஏங்க வேண்டும்!
பிரிஜ் எனும் மார்ச்சுரியில் பதப்படுத்திய
நேற்றைக்கு இறந்த தேங்கா சட்னி தேவையில்லை!
பழையதே ஆனாலும்
சுடச்சுட ருசிக்கும் சுகம் வேண்டும்!
....இதெல்லாம் இப்போ சகஜம்தான் என்றாலும்கூட மனம் ஏங்கும் முக்கியமான ஏக்கங்கள் அனைத்தும் சரியாக சொல்லிருக்கிங்க....